Innovation - An inevitable tool for survival - Tam in Tamil Motivational Stories by c P Hariharan books and stories PDF | Innovation - An inevitable tool for survival - Tam

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

Innovation - An inevitable tool for survival - Tam

வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள தேவையான கருவி - நவீனத்துவம்

Author : C.P.Hariharan

email id. : Cphari_04@yahoo.co.in

இடைவிடாத சிந்தனையின் விளைவே கண்டுபிடிப்பாகும். நாம் அடிக்கடி சிந்தனைகளின் ஊற்றுக்களைப் பற்றிப் பேசுகிறோம். தொழில்நுட்பத்துறையின் ஜாம்பவான்களான டாடா, இன்ஃபோஸிஸ், கோக்னைஸன்ஸ், ஹெச்.சி.எல்., ஹெச்.பி. போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து சுயபரிசோதனையில் ஈடுபடுத்திக்கொள்வதால் போட்டியாளர்கள் நிறைந்த துறையில் தங்கள் இடத்தை அறிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி இந்நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அவர்கள் தங்களது வாடிக்கையாளர்கள், அலுவலர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியவர்களிடமிருந்து பெறும் பின்னூட்டங்களை வைத்து சந்தையில் நிலவும் மாற்றங்களைக் கணித்து அதற்கேதபடி

அவர்களது உற்பத்தியைத் திட்டமிடுகிறார்கள்.

உற்பத்திச் சுழற்சி மிகவும் குறுகிவிட்டது. ஐடி துறையில் நவீனப்படுத்துதல் ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. உற்பத்திகள் அளவுக்கதிகமாகி விட்ட நிலையில் பொருட்களின் தரம் குறைந்துவிட்டது.

எல்லாரும் ஆப்பிள் சாப்பிடுவதை விரும்பினர். ஆனால் யாருமே அது ஏன் மரத்திலிருந்து கீழே விழுந்தது, மேலே ஏன் போகவில்லை என்று நினைக்கவில்லை. ஆனால் நியூட்டனுக்குள் ஒரு புதிய சிந்தனை தோன்றி யதினால் அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். ஆப்பிள் நியூட்டனின் தலை மீது விழுந்தது. ஒருவேளை ஆப்பிள் அவர் தலைமீது விழாமல் போயிருந்தால் அவரால் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அவரிடம் ஒரு சிந்தனைப் பொறி இருந்தது. நாமாக இருந்தால் அவரைப் போல சிந்திக்காமல் ஆப்பிள் விழுந்ததற்காக நம் மீதுதான் இது விழவேண்டுமா என்ற எரிச்சலுடன் வழக்கமாக செய்வதைப் போல அதைச் சாப்பிட்டிருப்போம்.

ஒரு பழமொழி உண்டு, “தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்”

ஒட்டகச்சிவிங்கிக்கு நீளமான கழுத்து இருப்பது அது உயரமான மரக்கிளையிலிருந்து இலைகளைப் பறிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தான். அதைப்போல ஒவ்வொரு கண்டுபிடிப்பும் தேவையைச் சார்ந்ததுதான்.

அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் பென்சிலின் கண்டுபிடிப்பதற்கு முன், நம்பிக்கையையே இழந்துவிட்டார். அதை போலவே எடிசனும் பல சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் பின்னர்தான் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்.

ஜே.ஸி.போஸ் மனிதர்களைப் போலவே தாவரங்களுக்கும் உயிர்ச்சுழல், அதுவும் மனிதர்களை விடவும் அதிகமான அளவில் இருப்பது என்பதைக் கண்டுபிடித்தார்.

நாம் சிந்திக்கும்பொழுது நிறைய புதிய யுத்திகள் தோன்றுகின்றன. ஆனால் புதிய யுத்திகள் சிந்திக்க நேரம் ஒதுக்குபவர்களுக்கே தோன்றுகின்றன. அந்த யுத்திகளை சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தவேண்டும்.

சிந்தனை செய்வர்கள் சிந்திப்பதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள். தனிமையில் நீண்ட நேரம் அமைதி காத்து மனதை இலேசாக்குகிறார்கள். அமைதியான மனமே அற்புதங்களை நிகழ்த்த வல்லவை.

நமது இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம். நம் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடுவதிலேயே நேரம் கரைந்துவிடுகிறது. பசித்த வயிறு பண்பாடு நோக்காது. அதனாலேயே அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை ஏற்படுத்தியுள்ளந.

பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோரது இன்றியமையாத் தேவைகள் பூர்த்தியாகிவிடுவதால் அவர்களுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கிறது. ஆனாலும் அவர்கள் சமுதாயத்திற்கான தங்களது பங்களிப்பைச் செய்ய நேரம் ஒதுக்காமல் பொழுதை வீண் செய்கிறார்கள்.செயல்திறன் அடிப்படையில் இல்லாமல், வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்களுக்கான பயன்கள் கிடைத்து விடுகின்றன.

புதிய தேடலில் ஆர்வமும் முனைப்பும் உள்ள சிலருக்கு தங்களது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடுவதிலேயே நேரம் நிகழ்கிறது.

கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதற்காக நாம் நிறைய படிக்கவேண்டியுள்ளது. ருஷ்யர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஆனால் இந்தியர்களிடம் படிக்கும் மனப்பான்மை இல்லை. இந்தியர்கள் புத்தகங்களில் முதலீடு செய்வதில்லை.

முந்தைய நிகழ்வுகளை ஆழ்ந்து படிப்பதன்மூலமே முன்னேற்றத்திற்கான வழியைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

கண்டுபிடிப்புகளில் கல்வியின் பங்களிப்பு முக்கியமானது. அதனாலேயே வளர்ந்த நாடுகளின் முன்னேற்றத்தை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

அரசாங்க வேலைகளைப் பெறுவதில் நிலவும் ஒதுக்கீட்டு முறை முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. மிகச்சிறந்த தகுதி பெற்றிருப்பவர்கூட வேலை பெற முடியாத நிலையில், தகுதியின் அடிப்படையில் இல்லாத அவர்கள், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்மட்டும் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. சீரிய முயற்சியினால் பெறும் அறிவும், மக்களின் கற்றலின் மேலுள்ள ஆர்வமும் மட்டுமே எந்தவொரு நாட்டின் முன்னேற்றப்பாதைக்கு மூலாதாரமான கண்டுபிடிப்பை நிகழ சைய்ய முடியுமே தவிர ஒதுக்கீட்டு முறை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஜாதி அடிப்படையில் வாக்களிக்கும் முறையே ஒதுக்கீட்டு முறையை ஆதரிக்கிறது. ஆனால், தற்சமயம் மக்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்ப மறுத்து விழிப்புணர்ச்சியுடன் விரைவான முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஐடி துறைகளிலும் இணையத்திலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்களை வெளி உலகுடன் நெருக்கமடையச் செய்திருக்கின்றன. உலகம் ஒரு கிராமத்துக்குள் அடங்கிவிட்டது.

கண்டுபிடிப்புகள் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. அதிகப் பொறுமை, முயற்சி, ஆராய்ச்சி,தீர்வு ஆகியவை இதற்கு அவசியம். கேள்வி ஞானமும், இரும்பு போன்ற மன உறுதியும் தேவை. கேள்வி ஞானம் பெருகப் பெருக அறிவும் பெருகும்.

கண்டுபிடிப்புகளுக்கான நோக்கம் உள்மனதிலிருந்து பிறக்க வேண்டும். புறத்தூண்டுதல்களால் ஒரு பயனும் இல்லை.

வித்தியாசமாகச் சிந்திக்க நாம் வித்தியாசமாக இருக்கவேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்றுகொண்டிருந்தால் நாம் எங்கும் சென்று சேரமுடியாது. வித்தியாசமான வேலைகள் செய்யாமல், நம் செயல்முறை வித்தியாசமாக இருக்கவேண்டும். அதனால்தான் புற்றீசல் போன்ற கூரியர் சேவைகளுக்கு மத்தியில், புளூ டார்ட் தனித்து நிற்கிறது. எந்த ஒரு வேலையும் சிறப்பாகச் செய்யவேண்டும். MBO போன்ற நிர்வாக உத்திகள் உள்ளன. அந்த உத்திகளை உறுப்போடுவதால் பயனில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சரியான இடத்தில் சரியானபடி ஆணியடித்ததுபோல் நமது செயல்பாடு இருக்கவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெற்ற அறிவைவிட, நாம் அனுபவத்தால் பெற்ற அறிவைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். 3 இடியட்ஸ் என்ற திரைப்படத்தில் இதுவே தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது. உறுப்போட்டுப் பெறும் அறிவால் பயனில்லை.

ஒரு ட்ரக் பாலத்தின் அடியில் சிக்கிவிட்டது. அதை நகர்த்த என்னென்னவோ செய்துகொண்டிருந்தார்கள். அங்கே ஒரு ஐந்து வயது சிறுவன் நின்று பார்த்துக்கொண்டேயிருந்தான். அங்கிருந்து போகச் சொல்லியும் அவன் கேட்கவேயில்லை.அவன் அங்கு நடப்பதைக் கூர்ந்து கவனித்தபடியிருந்தான். அவன் ட்ரக்கின் சக்கரத்திலுள்ள காற்றை எடுத்துவிடும்படி யோசனை சொன்னான். அந்தச் சிறுவனின் யோசனையால் ட்ரக் பாலத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. அதுபோலவேதான், நாம் அதிகமாகச் சிந்திப்பதைவிட, சமயோசிதமாகச் சிந்திப்பதுதான் பயனளிக்கும்.

தில்லியில் சாலை நெரிசலைப் பற்றி எல்லோரும் கவலைப்பட்டுப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் டாக்டர் ஈ.ஸ்ரீதரன் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான யோசனையைச் சொன்னார். யாருமே அதற்குமுன் அதைப்பற்றிக் கனவிலும் நினைத்ததில்லை.

அபரிமிதமான பொருள் உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் குறுகியகால பயன்பாடு மற்றும் கடுமையான போட்டிகள் நிறைந்த உலகில் தொடர்ந்த தேடல் உணர்வு இன்றியமையாதது. விதம் விதமான மாறுதல்களே வாழ்க்கையின் சுவாரசியமாகையால், மக்கள் விதம் விதமான பொருட்களை விரும்புகிறார்கள்.

புதிய யுத்திகளைத் தொகுத்தல், அந்த யுத்திகளை காட்சிப்படுத்தல், கருத்துக்களின் அடுத்தகட்ட நிலை, யுத்திகளுக்கு தகுந்தாற்போல சந்தைப்படுத்தல், வணிகரீதியான அலசல், உற்பத்தித் திறன் மாதிரி சந்தைப்படுத்தல் இறுதியில் விற்பனைக்குக் கொண்டுசெல்லுதல் போன்ற பல படிகளைக் கொண்டது ஒரு புதிய கண்டுபிடிப்பு. எனவே நவீனத்துவம் என்பது விளையாட்டல்ல, ஒரு கடினமான பிரயாசை. அதன் வளர்ச்சிக்காகவும், ஆய்வுக்காகவும் நிறைய முதலீடு செய்யவேண்டும். நவீனப்படுத்தியதை சந்தைப்படுத்தலாமா அல்லது போட்டி நிறுவனங்களின் பொருட்களைப் போலவே பொருட்களை உற்பத்தி செய்யலாமா என்பதை தீர்மானிக்கும் முன் விலை நிர்ணய அலசல் செய்யப்படவேண்டும். இறுதியில் லாப நஷ்டத்தைக் கணக்கில் கொண்டு தீர்மானமான முடிவு எடுக்கப்படவேண்டும்.

நவீனப்படுத்தல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நுகர்வோரின் விருப்பங்கள், அவர்களின் நடவடிக்கைகள், அவர்கள் எதற்கு முக்கியத்வம் கொடுக்கிறார்கள் என்று அவதானித்தல், ஒரு பொருளை விட்டு அடுத்த பொருளை ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை கணித்தல், ஒரு பொருளைப் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்பு, ஒரு பொருளின் அடுத்தடுத்த நிலை, போட்டியாளர்களின் எதிர்வினை போன்ற பல விஷயங்களைச் சுற்றியே நவீனமயமாக்கல் நடக்கும். தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருப்பவர்களே தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமே தவிர மற்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தம்மைப் புதுப்பித்துக் கொள்பவர்களே சந்தையில் தமக்கான பங்கைப் பெறுவார்கள்.

Author : C.P.Hariharan

email id.: cphari_04@yahoo.co.in