Oru Devathai Paarkkum Neram Ithu - 50 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 50

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 50

விஷால் தன்னுடைய அலுவலக பணிகளை நிதானமாக முடித்து வைத்தான். அடுத்த வாரம் ஃபேமிலி டூர் போக போகிறோம் அதனால் பிசினஸ் மீட்டிங் எல்லவற்றையும் அட்ஜஸ்ட் செய்யுங்கள் என உத்தரவிட்டான். அதன்படியே அனைத்தையும் முடித்தான். அனன்யாவும் தன்னுடைய அலுவலக வேலைகளை முடித்தாள். அவர்கள் பாண்டிச்சேரி மற்றும் வேளாங்கண்ணி போவதாக முடிவெடுத்து இருந்தார்கள். விஷால் டிராவல் செய்வதற்கு தேவையான உடைகள், மேக்அப் சாமான்கள் எல்லாவற்றையும் அனைவரையும் அழைத்து போய் ஷாப்பிங் செய்து வாங்கி கொடுத்தான்.விஷால் முன்பு அவன் போயிருந்த அதே ரிசார்ட் புக் செய்திருந்தான். குழந்தைகளுக்கு ஒரு அறை பெரியவர்களுக்கு ஒரு அறை என புக் செய்தான். தீபா நானே கார் ஒட்டுகிறேன் என்றாள். இந்த முறை குழந்தைகளோடு போகிறோம் என்பதால் விஷால் உற்சாகம் மிகுந்தவனாக இருந்தான்.

அனன்யா , சுபா, தீபா மூவரும் தயாராகி விட்டானர். குழந்தைகள் இன்னும் ரெடி ஆகி கொண்டு இருந்தனர். விஷால் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டான். அனன்யா எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொண்டாள்.தீபா முன்பு பாண்டிச்சேரி போன நினைவுகளை விஷால் உடன் பகிர்ந்து கொண்டாள். பசங்களுக்கு வேண்டிய ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் எல்லாம் அனன்யா வாங்கி வைத்திருந்தாள். முதலில் பாண்டிச்சேரி போனார்கள். அங்கு இருந்த பீச் ரிசார்ட் இப்போது இன்னும் அழகாக மாறி இருந்தது. விஷால் குழந்தைகளை கவனமாக இருக்கும் படி சொன்னான்.பயண களைப்பு இருந்ததால் விஷால் தீபாவிடம் நீ பசங்களை அழைத்து போய் பீச் சுற்றி காட்டு நான் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்றான். அனன்யாவும், சுபாவும் உடை மாற்றி கொண்டனர். அனன்யா காப்பி ஆர்டர் பண்ணட்டுமா விஷால் ? அப்படியே பிஸ்கட்டும் என்றான். சரி விஷால். விஷால் இருவரையும் பார்த்தான். இப்போதும் அவர்கள் முன்னை விட அழகாய்தான் தெரிகிறார்கள் என்றான்.

விஷால் சுபா, அனன்யாவுடன் கடற்கரைக்கு சென்றான் மணி மாலை 5 ஆகியிருந்தது . ஸ்ருதி, லயா, சாட்விக் கடல் அலையில் விளையாடி கொண்டிருந்தனர். இவனை பார்த்ததும் இவன் கையை பிடித்து கடலுக்குள் இழுத்தனர். அனன்யா பார்த்து பார்த்து சாட்விக் என்றாள். தீபாவும், அனன்யாவும் ஏதோ கரையிலேயே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். விஷாலும் அவர்களுடன் உற்சாகமாக விளையாடினான். சின்னவள் லயாவை உப்புமூட்டை தூக்கி கொண்டு சுற்றினான். பிறகு நீங்க விளையாடுங்க என்று அனன்யா மடியில் படுத்தான். என்ன விஷால் அதுக்குள்ள வந்து விட்டாய் என்றாள். அதெல்லாம் ஒண்ணும்இல்லை குழந்தைகள் விளையாடட்டும் . என்ன அனன்யா உனக்கு நினைவு வருதா எனக்கு ஊட்டி, டார்ஜிலிங் போன அனுபவமெல்லாம் நினைவு வருது என்றாள். அந்த பனி மலை கனவு இப்பவும் வருதா..?அதெல்லாம் வருவதில்லை. இப்போ நீயும் நம்முடைய குழந்தைகளும் தான் கனவுல வறீங்க என்றாள்.

சுபா அவனை ஆழமாக பார்த்தாள். சுபா ஏன் அப்படி பார்க்கிறாய் என்றான். இத்தனை வருஷத்திலே நீ கொஞ்சமும் மாறலை விஷால். அப்படியேதான் இருக்கிறாய் என்றாள். தீபா பசங்களை கூட்டிக்கொண்டு கடலை ஒட்டியவாறு சிறிது தூரம் நடந்தாள். சாட்விக் இப்போது நன்கு வளர்ந்து விட்டான் என்றாள் அனன்யா. விஷாலை காட்டிலும் உயரமாய் வளர்வான் என்றாள் சுபா. ம்ம் எனக்கு ஏதும் ஆனாலும் நீ அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும் அனன்யா என்றான் விஷால். ஏன் விஷால் அப்படி சொல்லுறே இனிமே அப்படி சொல்லாதே அவர்களை நாம சேர்ந்துதான் நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் . அவங்களோட ஆசையும் அதுதான் என்றாள் . சுபா போய் ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள்.
லயா விஷால் மடியில் அமர்ந்து கொண்டாள். சாட்விக் அனன்யா மடியில் அமர்ந்து கொண்டான். ஸ்ருதி ஒரு பாட்டு பாடேன் என்றான் விஷால். இப்போவா சரி பாடுறேன் என்று சொன்னாள். அவள் அப்படியே அனன்யாவின் பிரதி பிம்பமாக இருந்தாள். எல்லோரும் அவள் பாடி முடித்ததும் கை தட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

லயா, ஸ்ருதி இருவருமே அருமையான பெண் குழந்தைகள். விஷால் குடும்பத்தின் குட்டி தேவதைகள். அவர்கள் எதிர்காலத்துக்கும் எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் . விஷால் ரூமுக்கு போனான். தீபா மட்டும் இருந்தாள். அனன்யா , சுபா இருவரும் ரிசப்ஷன் கவுண்டரில் ஏதோ விசாரித்து கொண்டிருப்பதாக சொன்னாள். இவன் தீபாவை அணைத்து கொண்டான். என்ன கடல் கன்னி கண்டுக்கவே மாட்டேங்குற என்றான். குழந்தைகள் இருந்தார்கள் , உனக்கு நானே சொந்தம்தான் எப்போ வேணுமோ எது வேணும்னாலும் கேளு விஷால் என்றாள். ம்ம் விஷால் எனக்கு என்னென்னவோ தோணுது.. என்ன என்றான் அவளுக்கு முத்தம் கொடுத்தவாறே . அப்புறம் சொல்கிறேன் என்றாள். அனன்யாவும் , சுபாவும் பிள்ளைகளின் நனைந்த உடைகளை மாற்றும்படி சொல்லி கொண்டிருந்தார்கள். தீபா அவனை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டாள்.

குழந்தைகள் உடன் சாப்பிட ஹோட்டல் போனார்கள்.சாப்பிட்டு விட்டு ரூமுக்கு திரும்பியதும் எல்லோரும் நல்ல பிள்ளைகளா தூங்குவீர்களாம் என்றான் விஷால். இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட இருந்து விட்டு ரூமுக்கு போகிறோம் என்றார்கள் குழந்தைகள். அனன்யா அவர்களுக்காக ஒரு கதை சொன்னாள். பிறகு அவர்கள் டிவி பார்த்து கொண்டிருந்தனர். ஒரு வழியாக மணி 12 அளவில் குழந்தைகள் தூங்க சென்றார்கள். தீபா நான் அவர்களுடனே படுத்து கொள்கிறேன் என சென்று விட்டாள். அனன்யா ஒரு புறம் சுபா ஒரு புறம் படுத்திருந்தனர். இவன் நடுவில் படுத்திருந்தான். என்ன அனன்யா ஒரே யோசனை? யோசனை எல்லாம் ஒன்றுமில்லை.விஷால் சுபாவுக்கும், அனன்யாவுக்கும் உதட்டில் முத்தமிட்டான். இருவரும் அவனை கட்டிகொண்டு தூங்கி போனார்கள். அவர்கள் அன்பு இல்லாவிட்டால் தான் இந்நேரம் என்னவாகி இருப்போம் என யோசித்து கொண்டிருந்தான் விஷால். சிறிது நேரம் வெளியில் போய் நின்றான் . தீபா வந்தாள். என்ன தீபா தூக்கம் வரலியா என்றான். ம்ம் சரி வா கொஞ்ச தூரம் நடந்து போய் டீ சாப்பிடுவோம் என்றான். போகலாம் என்றாள். அவளுடைய கையை பிடித்து கொண்டான்.

மறுநாள் காலை கிளம்பி கோவிலுக்கு போனார்கள். குழந்தைகள் சீக்கிரம் விஷால் குணமாகி இன்னும் லாங் டூர் எல்லாம் போக வேண்டும் என்று வேண்டி கொண்டார்கள். சின்னவள் லயா இவனுக்கு பிரசாதம் வைத்து விட்டாள். அனன்யா இன்னும் கண்களை மூடிக்கொண்டு வேண்டி கொண்டிருந்தாள். சுபாவும், தீபாவும் கோவிலை சுற்றி வந்தனர். குழந்தைகளும் கோவிலை சுற்றி வந்தனர். கோவிலுக்கு வெளியே வந்ததும் புகைப்படம் எடுத்துகொண்டனர். ஏற்கனவே பார்த்த இடங்கள்தான் என்றாலும் எல்லா இடத்துக்கும் அழைத்து சென்றான் விஷால். சர்ச்களுக்கும் , ஆசிரமங்கள் , போட் ஹவுஸ் போன்றவையும் பார்த்தார்கள். அங்கெல்லாம் புகைப்படமும் வீடியோவும் எடுத்து கொண்டார்கள். விஷால் தன்னை மறந்து குழந்தைகளின் அன்பில் திளைத்தான். சாட்விக் அதிகம் பேசுவதில்லை என்ற போதும் விஷாலுக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது அதிகம் துடித்து போனான். விஷால் அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க முயன்றான்.

விஷாலுக்கும், அனன்யாவுக்கும் கொஞ்சம் அலுவல் வேலைகள் இருந்தன. ஆகையால் மற்ற எல்லோரும் சுற்றி பார்க்க சென்றனர். விஷால் உனக்கு ஏதும் தொந்தரவு இல்லையே என்றாள். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. சில சமயம் ரொம்ப திங்க் பண்ணுறேன் அதான் எனக்கு கவலையா இருக்கு என்றான். விஷால் இட்ஸ் ஓகே .. என்று அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டாள். அவளை அணைத்து கொண்டு தாங்க்ஸ் அனன்யா என்றான்.விஷாலிடம் ஷாப்பிங் செய்த பொருட்களையெல்லாம் காட்டி கொண்டிருந்தனர் குழந்தைகள். அதை வைத்து விளையாடவும் செய்தனர். தீபா, சுபா நீங்க எதுவும் வாங்கி கொள்ளவில்லையா என்றான் . உன் கூட போகும் போது வாங்கி கொள்ளலாம்னு விட்டு விட்டோம் என்றார்கள். நாளைக்கு கடலூர் பீச் போவோம் என்று சொல்லியிருந்தான் விஷால். சுபா என்ன ஆபீஸ் வேலையெல்லாம் முடிஞ்சதா என விசாரித்தாள். முடிந்து விட்டது என அனன்யா சொன்னாள்.மூவர் கூடவும் கடற்கரை ஒட்டி நீண்ட தூரம் வாக்கிங் போனான் விஷால்.

தீபா இந்த இரவு சூப்பர் ஆ இருக்கு என்றாள். இங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தார்கள். நீங்கள் மூணு பேருமே ஒத்துமையா இருக்குறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றான் விஷால். ம்ம் தாங்க்ஸ் விஷால் என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சுபா. இந்த இரவு முடியவே கூடாது விஷால் என்று சொன்னாள் அனன்யா. ம்ம் அப்படியே நட்சத்திரங்களை எண்ணி கொண்டிரு அனன்யா உன் அன்பை போல அதுவும் முடிவில்லாமல் இருக்கும் என்றான். விஷால் அனன்யாவை பாட சொல்லி கேட்டான் . அவள் வசீகரா என்ற பாடலை பாடினாள். காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே என்ற வரியை விஷால் மிகவும் ரசித்தான்.

மறுநாள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றார்கள்.பயபக்தியோடு சாமி கும்பிட்டார்கள். அங்கிருந்து வேளாங்கண்ணி புறப்பட்டார்கள்.விஷால் சொந்த ஊரில் உள்ள வீட்டுக்கு போய்விட்டு பிறகு வேளாங்கண்ணி போகலாம் என்று அனன்யா சொன்னாள்.அதன்படியே பயண திட்டத்தை மாற்றினார்கள்.சுபா வீட்டிற்கு சென்றார்கள். அங்கே சுபா அப்பாவையும் அம்மாவையும் பார்த்தார்கள் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். அவர்கள் அங்கே தங்கி விட்டுத்தான் போக வேண்டும் என அன்பு கட்டளை பிறப்பித்தனர். விஷாலுக்கும் தீபா வீட்டில் தங்குவது இஷ்டம் தான். அனன்யாவும் தீபாவும் குழந்தைகளை பார்த்து கொள்வதில் நேரம் செலவிட்டனர். தீபா சமையல் அறையில் சுபா அம்மாவுக்கு உதவிகள் செய்தாள். இந்த வீடு சுபாவுடைய காதல் நினைவுகளை கொண்டுள்ளது. சுபாவுடைய வீட்டு மொட்டை மாடியில் கட்டிலில் படுத்திருந்தான். விஷால் என்ன பண்ணுறே என்றாள் சுபா? உன்னைத்தவிர வேறு சிந்தனை ஏது என்றான் விஷால். இந்த வீடும் மாடியும் எத்தனையோ கொண்டாட்டங்களை பார்த்திருக்கிறது என்று அவளை அணைத்தான். விஷால் குறும்பு பண்ணகூடாது என்றாள் சுபா.

அவர்கள் விஷால் வீட்டுக்கு மதியம் போல போனார்கள் விஷால் அப்பா அவர்களை உற்சாகமாக வரவேற்றார். குழந்தைகளை பார்த்ததும் இன்னும் மகிழ்ந்து போனார்.விஷால் அம்மா இறந்து ஒரு வருடம் ஆகி இருந்தது. விஷால் அப்பா எனக்கு தனியாக இருக்க கஷ்டமா இருக்கிறது நானும் உங்களுடனே பெங்களூர் வந்து விடுகிறேன் என்றார். இதைதான் நான் முன்பே சொன்னேன் என்றான் விஷால். விஷால் அப்பா குழந்தைகளை அழைத்து கொண்டு கடைக்கு போனார். அனன்யா , சுபா, தீபா மூவரும் கொஞ்ச நேரம் சோபாவில் அமர்ந்து பழைய கதைகளை பேச தொடங்கினர். பேசி தீராத கதைகள் அவை என்று அனன்யா சொன்னாள். அனன்யா படுக்கை அறையில் சிறிது நேரம் படுத்திருந்தான் விஷால்.அனன்யா ஏதோ ஆபீஸ் விஷயமாக போனில் பேசி கொண்டிருந்தாள். தீபாவும் ,சுபாவும் ஒரு புதிய பாடலுக்கு டான்ஸ் ஆடி கொண்டிருந்தனர். அவர்கள் அப்படி ஆடி ரொம்ப நாட்கள் ஆகி இருந்தது. விஷாலுக்கு எல்லாமே காதல் நினைவுகளாய் தோன்றின.

மதியம் போல வேளாங்கண்ணி சென்றார்கள் . சர்ச் சென்று கும்பிட்டார்கள். குழந்தைகளுக்கு அந்த இடத்தின் வரலாறு பற்றி சொன்னான் விஷால். குழந்தைகள் மூவரும் உற்சாகமாக கடற்கரையில் விளையாண்டனர். அனன்யா , சுபா, தீபா மூவர் கூடவும் நடந்தான் விஷால். அனன்யா எனக்கு கால் வலிக்குது என்றாள். அவளை தூக்கி கொண்டான். தீபாவும் , சுபாவும் அவனுடன் மெதுவாக நடந்தார்கள். அவர்கள் இன்னும் வெகுதூரம் போக வேண்டும் . அவர்களின் காதல் பயணம் தொடரும் ....

நிறைந்தது .. நன்றி ! மீண்டும் சந்திப்போம்