Oru Devathai Paarkkum Neram Ithu - 49 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 49

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 49

கம்பெனி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்திருந்தது. கஸ்டமர்களிடம் நல்லதொரு அபிப்ராயம் இருந்தது. பிராஃபிட் ஆவரேஜ் அளவில் தான் இருந்தது. விஷால் முதல் வருடம் தானே போக போக சரி ஆகி விடும் என்றான். தீபாவின் இரண்டாவது ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீபாவின் ஓவியங்களை பார்க்க இந்த முறை சென்ற முறையை விட அதிக பார்வையாளர்கள் வந்திருந்தனர். நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. விஷால் தீபாவுக்கு அவள் ஆசைப்பட்ட உடை ஒன்றை வாங்கி கொடுத்தான். விஷால் தீபாவளியை கொண்டாட சொந்த ஊரில் உள்ள புது வீட்டுக்கு சென்றான். ரொம்ப வருடம் கழித்து குடும்பத்தாருடன் கொண்டாடும் தீபாவளி ஆதலால் அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிட்டான். விஷாலின் பிள்ளைகள் பட்டாசுகளை வாங்கி குவித்தார்கள். அனன்யா அவர்கள் தீபாவளி கொண்டாடுவதை விஷாலுடன் சேர்ந்து ரசித்தாள். சுபாவும், தீபாவும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தீபாவளி பலகாரங்களை சுபா அம்மாவும், விஷால் அம்மாவும் செய்தார்கள்.

அனன்யா பிசினஸ் சுமாராக போகிறது அதை சரி செய்ய என்ன வழி என்று விஷால் அப்பாவோடு ஆலோசனை செய்தாள்.மேலும் சில தொழில் நுட்ப நிபுணர்களோடும் ஆலோசனை செய்தாள். அனன்யா சில கம்பெனி சார்ந்த முடிவுகளை மாற்ற முடிவு செய்தாள். அதை பற்றி விஷாலிடமும் பேசினாள். அனன்யா செய்த வேலையால் கம்பெனி போக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. கம்பெனி வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியது. விஷால் மார்கெட்டிங் துறையில் இருந்த தேக்கத்தை போக்கினான். எல்லாம் சரியான பாதையில் போய் கொண்டிருந்தது. அது அனன்யாவுக்கும் விஷாலுக்கும் நிம்மதி தந்தது. அப்போதுதான் விஷாலுடைய அம்மாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது . விஷால் விரைந்து போய் அவளை பார்த்தான். அவள் எல்லோரையும் ஒரு முறை பார்க்க வேண்டும் என சொல்லி இருந்தாள். குழந்தைகளையும் அழைத்து போயிருந்தான். உனக்கு ஒண்ணும் ஆகாதும்மா என்றான். அவள் தன் பேர குழந்தைகளை அருகில் அழைத்து பேசினாள். அனன்யா, தீபா , சுபா ஆகியோரிடமும் பேசினாள். விஷால் கையை பிடித்துகொண்டாள். அவள் உயிர் பிரிந்தது . விஷால் கதறி அழுதான்.விஷால் அப்பாவும் அழுதார். விஷாலை எல்லோரும் சமாதானபடுத்த முயன்றனர். குடும்பமே சோகத்தில் மூழ்கியது. விஷால் அப்பா அவனை தேற்றினார். நீ கஷ்டப்பட்டா அவங்க எல்லோருமே கஷ்டப்படுவாங்க மனச தேற்றிக்கொள் விஷால் என்றார். கொஞ்ச நாள் அவரை அவன் கூட பெங்களூர் வந்து இருக்குமாறு சொன்னான். அவர் மறுத்து விட்டார். விஷால் இறுதி சடங்குகளை குறையில்லாமல் செய்தான்.

விஷால் அவன் அம்மாவிடம் அதிகம் பேசாததை எண்ணி மனம் வருந்தினான். அனன்யா ,சுபா, தீபா எல்லோரும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். சுபா அப்பா,அம்மா விஷால் அம்மா இறப்புக்கு வந்திருந்தனர். சுபா அப்பா அவருடைய சொத்து முழுவதையும் சுபாவுக்கும், விஷாலுக்கும் மாற்ற முடிவு செய்திருந்தார். விஷால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பிடிவாதமாக இருக்கவே சுபா பேருக்கு வேண்டுமானால் மாற்றி கொடுங்கள். அவள் விருப்பதையும் கேட்டு அவள் சம்மதம் சொன்ன பிறகு சொத்துக்கள் சுபா பேருக்கு மாற்றப்பட்டன.சுபா விஷாலையும் நிலம் பதிவு செய்யும் அலுவலகத்துக்கு கூட்டி சென்றாள். விஷால் அவளுக்கு துணையாக இருந்தான்.

விஷால் திடீரென மயங்கி விழுந்தான். அவனை அவசரமாக ஹாஸ்பிடல் அள்ளி எடுத்து கொண்டு சென்றார்கள். குடும்பத்தார் மொத்தமும் பதறி போனார்கள். விஷாலுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர் . விஷால் ஐசியு வில் அனுமதிக்கபட்டிருந்தான் . அனன்யா எல்லோருக்கும் தைரியம் சொல்லி கொண்டிருந்தாள்.சுபாவும், தீபாவும் அழுது கொண்டிருந்தார்கள். இதை பார்த்த குழந்தைகளும் கலங்கினார்கள் . விஷாலை இரண்டு நாட்கள் கழித்து நார்மல் பிரிவுக்கு மாற்றினார்கள். விஷால் கண் திறந்து பார்த்து அனன்யா அனன்யா என்றான். விஷால் அருகிலே போய் அமைதியாக அவனை பார்த்தாள் அனன்யா. உனக்கு ஒண்ணும் இல்லை விஷால் . நான் இருக்கிற வரை உனக்கு ஒண்ணும் ஆகாது என்றாள். கோவில் பிரசாதத்தை பூசி விட்டாள். விஷால் நீ இல்லாத உலகத்தை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்றாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது . விஷால் அதை துடைத்து விட்டான். இனி பயப்பட ஒன்றுமில்லை என்று டாக்டர் சொன்னார்.

விஷாலை கட்டாயம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டாள் அனன்யா. அவள் தற்காலிகமாக கம்பெனி தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.
தீபாவும், சுபாவும் வீட்டை பார்த்துகொண்டனர்.விஷால் தனக்கு மயக்கம் வந்து தான் காப்பாற்றப்பட்டது ஒரு கனவு போல இருந்தது என்றான் . விஷால் அவன் பிள்ளைகளுடன் நேரம் செலவிட்டான். அவர்களும் விஷாலுக்கு ஹார்ட் அட்டாக் என்றதும் சற்றே பயந்து போயிருந்தார்கள். அவனுடைய பிசினஸ் இப்போது நன்றாக போய்கொண்டிருந்தது . விஷால் கவலைபட ஏதுமில்லை.அவனுடைய கடைசி பெண் லயா வந்து அவனை எழுப்பி குட் மார்னிங் சொல்லி டீ குடுத்தாள். அவளுக்கு தாங்க்ஸ் லயா என்று சொன்னான். அனன்யா அவனை கவனமாக பார்த்துகொண்டாள். அந்த ஹார்ட் அட்டாக் எல்லோரையுமே பாதித்திருந்தது. விஷால் தான் நார்மல் ஆகி விட்டதாக சொன்ன போதும் அவனை ஓய்வில் இருக்கும்படி செய்தாள் அனன்யா.

மூன்று பெண்களின் நிழலில் தான் ஓய்வெடுத்து கொண்டிருப்பதாக விஷால் நினைத்தான்.அவனுடைய உடல்நலம் முந்தைக்கு இப்போது தேறி வந்தது . சுபா அப்பாவும், அம்மாவும் வந்து பார்த்து போனார்கள்.விஷாலுடைய குழந்தைகள் இப்போது பெரிய மனிதர்கள் போல பேசினார்கள் இவனை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. ஸ்ருதியும், லயாவும் ஒரு மியூசிக் ஆல்பம் பண்ண அனன்யாவை கேட்டுக்கொண்டிருந்தார்கள். சாட்விக் டான்ஸ் பிரமாதமாக ஆடுகிறான். விஷால் இந்த குடும்பத்தின் அமைதி நீடித்திருக்க வேண்டும் கடவுளே என வேண்டிக்கொண்டான். விஷால் அப்பா அவனுடன் வந்து கொஞ்ச நாள் இருந்தார்.விஷால் அப்பா அவனுக்கு தைரியம் சொன்னார். குடும்பத்தோடு குல தெய்வம் கோவிலுக்கு போய் வந்தார்கள். விஷால் அனன்யாவிடம் பிசினஸ் காம்படிஷன் பற்றி பேசினான். அவள் எல்லவற்றுக்கும் திட்டங்கள் தயார் செய்து வைத்திருந்தாள்.அனன்யா அவனுடைய உலகத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தாள்.

விஷாலிடம் என்ன டிபன் பண்ணட்டும் என்றாள் சுபா. உன் விருப்பம் என்றான். சும்மா சொல்லு விஷால் உப்புமா பண்ணி கொடு என்றான். முன்பு அனன்யா அவனுக்காக உப்புமா பண்ணி கொடுத்தது நினைவுக்கு வந்தது.விஷால் இப்போது சிறுவனும் இல்லை வயதானவனும் இல்லை அவனுடைய பிள்ளைகள் அவனை இளமையாகவே வைத்திருக்கிறார்கள். விஷால், தீபா, அனன்யா , சுபா நால்வரும் தாங்கள் படித்த காலேஜ் போய் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.இப்போது காலேஜ் விடுமுறை காலம் என்பதால் மாணவர்கள் அதிகம் பேர் தென்படவில்லை. விஷால் அவனுடைய வகுப்பறைக்கு சென்றான். நேற்றுதான் அனன்யாவை பார்த்த மாதிரி இருந்தது. அனன்யா உட்கார்ந்த இடத்தில் போய் உட்கார்ந்தான். விஷால் இடத்தில் அனன்யா உட்கார்ந்தாள். அவளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக வகுப்பில் இடம் மாறி உட்கார்ந்தது நினைவுக்கு வந்தது. தீபாவும் ,சுபாவும் கல்லூரியை சுற்றி வந்தனர். கேண்டீன் சென்று ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டனர்.

அனன்யா மறுபடி நான் உன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் போல இருக்கிறது விஷால் என்றாள். விஷால் காலேஜ் விட்டு வெளியே வந்து மூவருக்கும் ரோஸ் பூ வாங்கி வைத்து விட்டான். விஷால் நான் உன்னிடம் காதல் சொல்லிய நாளை மறக்கவே முடியாது என்றாள். சுபாவும் தீபாவும் அவன் கையை பிடித்து கொண்டார்கள்.காலேஜ் நட்பில் ஆரம்பித்த காதல் அவனை நல்ல நிலைக்கு உயர்த்தியதாக நினைத்தான். ஹெச் ஓ டி உடல் நிலை சரியில்லை என கேள்விப்பட்டான் . அவரை போய் அவரது வீட்டில் பார்த்தான். நீ நினைத்ததை சாதித்து விட்டாய் என்றார் . அவர்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார் . ஹெச் ஓ டி அவன் காதலுக்கு செய்த உதவியை அவனால் மறக்கவே முடியாது.

அனன்யா ஸ்ருதியின் சங்கீத கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தாள்.அது ஒரு எளிமையான விழாவாகவும் அதே சமயம் நல்ல இசை ரசனை உள்ளவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாகவும் இருக்கவேண்டும் என விஷால் விரும்பினான். invitation தயார் செய்து தீபாவும், சுபாவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்தனர். விஷால் அவளுடைய பாட்டை கேட்பதற்கு ஆவலாய் இருந்தான். ஸ்ருதிக்கு மேடை பயம் என்பது துளியும் இல்லை. அவள் பாட பாட ஆடியன்ஸ் தங்களை மறந்தனர். விஷாலுக்கு பெருமை தாளவில்லை. அவள் என் பொண்ணுதான் என்று பார்ப்பவரிடம் எல்லாம் சொல்லி கொண்டிருந்தான். அவளுக்கு மேடையிலேயே ஒரு கடிகாரத்தை பரிசளித்தான். அனன்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். தீபாவும், சுபாவும் வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர். சாட்விக், லயா இருவரும் ஸ்ருதியை வாழ்த்தினர் .

அனன்யாவுக்கே அந்த பெருமை சேரும். ஸ்ருதியின் பாடும் திறமையை ஊக்குவித்தது அனன்யாதான். சூப்பர் அனன்யா என அனன்யாவுக்கு முத்த மழை பொழிந்தான் விஷால். போதும் விஷால் என வெட்கப்பட்டாள். அனன்யாவின் திறமை அனைவராலும் பேசப்பட்டது. விஷாலை செக் அப் அழைத்து போனாள் அனன்யா. இப்போது பரவாயில்லை இனி ஒரு அட்டாக் வராதவாறு நடந்து கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்தார் டாக்டர். அனன்யாவிடம் தனியாக பேசினார். விஷால் டாக்டர் என்ன சொன்னாங்க என்றான் . நீங்க சீக்கிரமே ஆபீஸ் வரலாம்னு சொன்னாங்க ஆனா என் கூடத்தான் இருக்கணும் என்றாள்.
விஷால் ஆபீஸ் போனான் அவனால் பழைய வேகத்தில் செயல்பட முடியாமல் போனாலும் அனன்யாவுக்கு உதவியாய் இருந்தான். முக்கிய முடிவுகள் எடுப்பதில் இருவரும் சேர்ந்தே எடுத்தனர்.

விஷால் பிள்ளைகள் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.லயாவும் மியூசிக் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருந்தாள். அவளுக்கென கீபோர்ட் ஒன்றை வாங்கி கொடுத்தான். சாட்விக்க்கு ஒரு மியூசிக் சிஸ்டம் வாங்கி கொடுத்தான். அனன்யா ரொம்ப செல்லம் குடுக்காதே விஷால் என்றாள். விஷால் மனதில் அவர்கள் மூவரும் இசை மற்றும் நடன துறையில் நன்கு பிரகாசிப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது. தீபா எப்பவும் போல இருந்தாள். அவள் தனக்கென எதையும் அடிக்கடி கேட்டது கிடையாது . என்ன தீபா உனக்கு என்ன வேண்டும் என்றான். உன் ஆபிசை சுற்றி பார்க்க வேண்டும் என்றாள். அவளை ஆபீஸ் அழைத்து போய் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். விஷால் எனக்கும் உன் கூடவே இருக்கணும்ணு ஆசைதான் என்றாள். ம்ம் அது சரி நீயும் வந்து விட்டால் குழந்தைகளை யார் பார்த்து கொள்வார்கள் என்றான். எனக்கொரு சிஸ்டம் அட்மின் வேலை கொடு விஷால் உன் கூடவே இருக்கிறேன் என்றாள்.

அனன்யாவிடம் பேசினான் தீபாவுக்கு பெயிண்டிங் ,டான்ஸ் ஸ்கூல் வேலையே சரியாக இருக்கும் . இதில் இந்த வேலை வேறு, வேண்டாம் அவள் ரொம்ப சோர்ந்து போய்விடுவாள். அவள் டான்ஸ் ஸ்கூல் , பெயிண்டிங் வேலையே பார்க்கட்டும் என்றாள் அனன்யா.விஷால் தீபாவிடம் எடுத்து சொன்னான். அவள் முகம் வாடி இருந்தது கடல் கன்னி நாம நிச்சயம் நீ ஆசைபட்ட இடத்துக்கு போவோம். நாம எப்பவுமே ஒன்னாதான் இருப்போம் என்றான். நிஜமாவா விஷால் நாம எங்கே போறோம் என்றாள். நீயே பிள்ளைகள் விருப்பத்தையும் கேட்டு சொல்லு, எல்லோரும் சேர்ந்து போவோம் என்றான் விஷால்.தீபா அவனை கட்டி அணைத்து முத்தமிட்டாள். லவ் யு விஷால் என்றாள்.