Oru Devathai Paarkkum Neram Ithu - 48 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 48

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 48

விஷால் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசினான். அவரை புரிந்து கொள்ளாமல் போய்விட்டதற்காக மன்னிப்பும் கேட்டான். என்னப்பா மன்னிப்பு எல்லாம் கேக்குற எனக்கு நீ முக்கியம் உன்னுடைய சந்தோஷம் முக்கியம் என்றார் விஷால் அப்பா. அனன்யா இன்னும் 6 மாதங்களில் வீடு காட்டும் பணி முடிந்து விடும் என விஷாலிடம் சொன்னாள். வீடு கிரக பிரவேசத்தின் போது கட்டாயம் விஷால் இந்தியா வந்து விடுமாறு சொல்லியிருந்தாள். விஷாலும் சரி அனன்யா வந்து விடுகிறேன் என்றான். விஷாலுடைய குடும்பமும், குழந்தைகளும் புது வீட்டுக்கு போக போவதை எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தனர்.தீபா தன்னுடைய அடுத்த ஓவிய கண்காட்சிக்காக ஓவியங்களை வரைய தொடங்கியிருந்தாள் .அனன்யா தன்னுடைய ஆஸ்ட்ரேலியா போன அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டு இருந்தாள். விஷால் உனக்கு எழுத நேரம் கிடைக்குமா என்றான். ஏற்கனவே நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன் அவற்றை தொகுக்க வேண்டியது தான் பாக்கி என்றாள். விஷால் ஆலோசனைகளை வழங்கினான். அதில் ரேவந்த் பற்றி குறிப்பிட வேண்டாம் என்று சொன்னான். அனன்யா யோசித்து பார்த்து பின்பு சரி விஷால் நீ சொல்கிறபடியே செய்கிறேன் என்றாள்.

அனன்யா தன்னுடைய புத்தகதை ஆஸ்ட்ரேலியாவில் வெளியிட விரும்பினாள். அதற்காக தன் ஆஸ்ட்ரேலியா நண்பர்களிடமும் பேசி வந்தாள். அனன்யா புத்தகம் எழுதும் வேலையையும் சேர்த்து பார்த்தாள். வீடு கட்டும் பணி பற்றி சுபா அப்பா அவ்வப்போது விஷாலிடம் ஆலோசனை செய்தார் . விஷாலும் அவர் ஆலோசனைகளை ஏற்று கொண்டான். அனன்யா புக் ரிலீஸ் ஃபங்சன் நடக்கும் போது அவசியம் விஷால் ஆஸ்ட்ரேலியா வர வேண்டும் என சொல்லி இருந்தாள். விஷால் வீடு கிரக பிரவேசத்திற்கு தயாராகி விட்டது. விஷால் அப்பாவும், சுபா அப்பாவும் விழாவிற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர்.அனன்யாவும் , சுபாவும் ஒரு வாரம் முன்பே சொந்த ஊர் சென்று விட்டனர். கடைசி நேர வீட்டு வேலைகள் இருந்தன. அவற்றையெல்லாம் விரைந்து முடிக்க சொன்னார்கள். சுபா இந்த வீடு அருமையா வந்திருக்கு என்றாள். அனன்யா விஷால் வருகிற இந்தியா வந்து செட்டில் ஆகிற வரை எனக்கு நிம்மதி இருக்காது என்றாள். ம்ம் நீ சொல்வதும் சரிதான் என்றாள் சுபா.


இரண்டு நாட்கள் முன்புதான் விஷாலால் வர முடிந்தது. கிரக பிரவேசம் சிறப்பாக நடைபெற்றது. விஷால் தன்னுடைய பெற்றோரிடமும், சுபாவின் பெற்றோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினான். குழந்தைகளுக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது. விஷால் அப்பாவும், விஷால் அம்மாவையும் இனி புது வீட்டில் இருக்க சொல்லி விட்டான் விஷால். அனன்யா அவளுடைய விஷால் உடன் அவளுடைய பழைய புதுப்பிக்க பட்ட அறைக்கு சென்றாள். அங்கே தீபா அனன்யாவையும் ,விஷாலையும் வரைந்த ஓவியம் ஃபிரேம் பண்ணி மாட்டபட்டிருந்தது . விஷாலுக்கு தான் முதன் முதலில் அனன்யாவிடம் கணக்கு படிக்க போன காலம் நினைவுக்கு வந்தது. அனன்யாவை அணைத்து கொண்டான். எனக்கு கணக்கு சொல்லி தரியா என்றான். நீ இன்னுமா கணக்குல வீக்கா இருக்கிற என்று சிரித்தாள். அவளுடைய டிசைன் தேர்வு எல்லாமே வீட்டிற்கு பொருத்தமாய் இருந்தது. விஷால் குழந்தைகளுடைய அறையையும் பார்த்தான்.அவனுக்கும் பிடித்திருந்தது . விஷால் தீபாவுக்கும், சுபாவுக்கும் நன்றி சொன்னான். குழந்தைகளை நன்றாக வளர்த்ததற்காக.விஷால் மன நிறைவுடன் இருந்தான்.

அனன்யா புக் எழுதி 3 மாதங்களில் முடித்து விட்டாள்.பப்ளிஷர் அவளுடைய புக் நன்றாக வந்திருக்கிறதென்று சொன்னார். ஆஸ்ட்ரேலியாவில் வெளியிடுவது என்பதால் சற்று செலவு அதிகம் ஆகுமென்று யோசித்தாள்.விஷால் இது உன்னுடைய இரண்டு வருட புதிய பயணம் அதனால் பரவாயில்லை என்று சொன்னான். அனன்யா தன்னுடைய மகன் சாட்விக் பிறந்த நாளில் அதை ரிலீஸ் செய்ய விரும்பினாள். விஷாலும் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். புத்தகத்தில் விஷாலுடனான் பிரிவு மற்றும் அவனுடைய திடீர் ஆஸ்ட்ரேலியா வருகை போன்றவை இருந்தன. falling in love with australia என புத்தக தலைப்பிட்டிருந்தாள் அனன்யா. விஷாலுக்கு அந்த புத்தகம் ரொம்ப பிடித்திருந்தது. அவள் பட்ட கஷ்டங்களும் புரிந்தது. புத்தக வெளியீட்டு விழாவில் விஷால் கலந்து கொண்டான். யுட்யூப்பில் அதை லைவ் ஆக பார்த்து மகிழ்ந்தார்கள் குழந்தைகளும், தீபா மற்றும் சுபாவும். அனன்யா அவளுடைய அப்பாவை நினைவு கூர்ந்தாள். தன்னை ஆஸ்ட்ரேலியா கட்டாயம் செல்ல வேண்டும் என கூறிய விஷாலையும் நினைவு கூர்ந்தாள். புத்தகம் பரவலான வரவேற்பை பெற்றது.விஷால் அனன்யாவிடம் பேசினான் . இப்போ உனக்கு ஹாப்பி தானே என்றான் . ம்ம் ரொம்ப ஹாப்பி என்றாள்.

அனன்யா சினிமாவில் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்தாள். விஷால் அதிர்ச்சி அடைந்தான். ஏன் அனன்யா இந்த திடீர் முடிவு என்றான். நீ கொஞ்ச நாளிலே இந்தியா வர போறே தவிர குழந்தைகளை பார்த்துகொள்ள வேண்டியிருக்கு என்றாள். விஷால் ஒன்றும் சொல்லவில்லை. அவளுடைய குரலுக்கு முதல் ரசிகன் அவன்தான். அதனால் சற்று ஏமாற்றம் அடைந்தான். விஷால் எவ்வளவோ சொல்லியும் அனன்யா தன் முடிவில் மாறவில்லை. அனன்யா விஷாலுக்காக அவனுடைய பிசினஸ் மாதிரியை உருவாக்கினாள். அதற்காக விஷால் உடன் பேசி அவனுடைய எண்ணத்தை தெரிந்து கொண்டாள். கம்பெனி துவங்க தேவையான ஃபார்மாலிட்டீஸ் எல்லவற்றையும் துவங்கினாள். அவர்கள் கம்பெனி நடத்த தேவையான இடத்தை தேர்வு செய்தாள். விஷாலுடைய அப்பாவுக்கு லோன் கிடைத்தது. விஷாலுக்கு இந்த செய்தி அவன் அப்பா அவன் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

அனன்யா இடையில் சொந்த ஊருக்கு சென்று விஷால் அப்பா அம்மாவை பார்த்து வந்தாள். விஷால் அப்பா அவளிடம் பிசினஸ் தொடர்பாக பேசி சில ஆலோசனைகள் வழங்கினார். லோன் வாங்கி கொடுத்ததற்க்காக அனன்யா நன்றி சொன்னாள். விஷால் ஆசைபட்ட மாதிரி பிசினஸ் நல்லா வரணும் என்றார் விஷால் அப்பா. சுபாவின் டான்ஸ் ஸ்கூல் சென்னையில் ஓரளவு பெயர் பெற்றது. அதற்கு ஒரு புதிய மாஸ்டர் நியமித்து இருந்தார்கள். தீபா பெங்களூர் திரும்பினாள். விஷாலுடைய குழந்தைகள் ஸ்ருதி, சாட்விக், லயா மூவரும் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்று பரிசு பெற்றனர். விஷால் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தான்.விஷால் வந்தவுடன் கம்பெனி துவங்க வேண்டிய அளவு வேலைகளை அனன்யா துரித படுத்தினாள்.விஷால் தன்னுடைய 15 வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து கொண்டு இந்தியா வர திட்டமிட்டான் . அவனுக்கு உதவிய நண்பர்கள், முதலாளிகள், மானேஜர்கள் போன்றோருக்கு மனமார நன்றி சொன்னான். அவனால் மறக்கவே முடியாத நினைவுகளை கொண்டிருந்தது குவைத். அனன்யா வந்து போனது , சுபாவும், தீபவும் வந்து போனது போன்ற நிகழ்வுகள் அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தன. அனன்யாவும் மற்றொரும் இவன் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர் . விஷால் இந்தியா வந்து விட்டான். அவனுடைய மனம் எல்லையில்லா சுதந்திரம் கொண்டதாக உணர்ந்தது. இனி பிள்ளைகளையும் மனைவிகளையும் பிரிய வேண்டிய கட்டாயமில்லை. அவனுடைய குடும்பத்தார் அவனை வரவேற்றனர். சாட்விக் , ஸ்ருதி, லயா மூவரும் ஆவலுடன் அவனை கட்டி கொண்டனர் . அனன்யா நிம்மதி பெருமூச்சு விட்டாள். விஷால் தீபா , சுபா இருவரையும் அணைத்து கொண்டான். அனன்யா எப்படியோ இத்தனை வருடங்கள் அவனில்லாமல் கடந்து விட்டாள் . ஏர்போர்ட்டுக்கு விஷால் அப்பா, அம்மா சுபா அப்பா , சுபா அம்மா ஆகியோர் வந்திருந்தார்கள். தீபா அம்மாவை அவன் ரொம்ப மிஸ் பண்ணினான்.

விஷாலின் வருகையை கேக் வெட்டி கொண்டாடினான் சாட்விக். குழந்தைகள் அவனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். அனன்யா ,சுபா, தீபா மூவருமே அவனுக்காக சமைக்க தொடங்கினர். விஷால் அவர்களுக்காக வாங்கிய விளையாட்டு பொருட்களையும், பரிசு பொருட்களையும் அவர்களிடத்தில் கொடுத்தான்.அனன்யா அவனிடம் தனியாக சிறிது நேரம் பேசி கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் ரெஸ்ட் அப்புறம் தான் பிசினஸ் பேச்சு என்று அனன்யா ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாள். அவனுடைய குழந்தைகள் வாங்கிய மெடல்கள் , பரிசுகள் போன்றவற்றை பார்வையிட்டான். தீபா தன்னுடைய இரண்டாவது ஓவிய கண்காட்சிக்கு வைக்க உள்ள ஓவியங்களை அவனிடம் காண்பித்தாள். அவை அருமையாய் இருந்தது.கண்காட்சி தேதியை விஷால் தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்லிவிட்டாள். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.


அனன்யா மனம் நிறைத்து விட்டது . இனி ஒரு கவலையும் இல்லை விஷால் இனி நம் கூடவே இருப்பான். குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான் விஷால். அவன் இன்னமும் குழந்தைதான் என சுபா சொன்னாள். விஷால் அவனுடைய மகள் ஸ்ருதி பாட கேட்டு ரசித்தான். லயாவும் அவளுக்கு சற்றும் குறைவில்லாமல் திறமை கொண்டிருந்தாள். விஷால் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் நண்பர்கள் சிலரை சந்தித்தான் . அனன்யா குடும்பத்துடன் கோவிலுக்கு போக வேண்டும் என சொன்னாள். அவர்கள் பிரார்த்தனை படி விஷால் நல்ல படியாக ஊர் வந்து சேர்ந்து விட்டான்.

விஷால் சிறிது நாள் ஓய்வுக்கு பிறகு கம்பெனி தொடர்பான வேலைகளை பார்க்க தொடங்கினான். அனன்யாவும் விஷால் அப்பாவும் வேலையாட்களை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கினர். எல்லாவித பணிகளும் நிறைவடைந்தன. கம்பெனி துவங்கப்பட்டது. விஷால் சிறிய அளவிலான முதலீட்டில் கம்பெனி தொடங்கியிருந்தான். இருந்த போதும் அவனுக்கு டென்ஷன் அதிகமாய் இருந்தது. அனன்யா அவனை ஆசுவாசபடுத்தினாள். ஒண்ணும் டென்ஷன் ஆகாதே விஷால் எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாள். விஷால் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை தொழில் வளர்ச்சிக்காக பயன் படுத்தினான். சுபா , தீபா ஆகியோர் எப்பவும் போல அவனுக்கு உறுதுணையாய் இருந்தனர். நிறைய பேரை சந்திக்க வேண்டியிருந்தது .நிறைய ஊர்களுக்கு போனான். அனன்யா ஏற்கனவே மார்க்கெட் ரிசர்ச் போன்றவற்றை செய்து வைத்திருந்தாள். அது அவனுக்கு மிகவும் உதவியாய் இருந்தது.

விஷால் எல்லோரையும் அழைத்துகொண்டு கடற்கரைக்கு போயிருந்தான். அவனுடைய மூன்று குழந்தைகளும் கடலில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.தீபா அவர்களை கவனமுடன் பார்த்துகொண்டிருந்தாள்.அனன்யாவும் ,சுபாவும் விஷாலின் கையை பிடித்திருந்தனர். சாரி அனன்யா , சாரி தீபா உங்களை ரொம்ப கஷ்டபடுத்தி விட்டேன் என்றான்.அதெல்லாம் ஒண்ணும் இல்லை விஷால். நாம எப்பவுமே சேர்ந்து தான் இருப்போம் என்றாள் சுபா. விஷால் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.அப்போ எனக்கு என்றாள் அனன்யா . அனன்யாவின் உதட்டில் முத்தமிட்டான். லவ் யு forever என்றான். கடல் காற்று அவர்கள் அத்தனை பேரையும் ஆனந்தம் நிரம்ப தழுவி சென்றது.விஷால் தீபாவிடம் என்ன கடல் கன்னி இன்னமும் உன் கடல் தாகம் தீரவில்லையா என்றான். அது என்றைக்குமே தீராது உன் மேலுள்ள காதலை போல என்றாள். விஷாலுக்கு அவள் சொன்னது மிகவும் பிடித்து போனது. அவள் இவனுக்காக செய்த சிறைவாசத்தை நினைத்து பார்த்தான். தீபா வந்ததும் அவள் மடியில் படுத்து கொண்டான்.அனன்யா ஐஸ் கிரீம் வாங்க போனாள். சுபா குழந்தைகளை ரொம்ப தூரம் போக வேண்டாம் என அதட்டி கொண்டிருந்தாள். சாட்விக் நீ யும் வா அப்பா கடல் அலையில் விளையாடலாம் என்றான். அப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீ போய் விளையாடு என்று தீபா சொன்னாள். விஷாலும் தீபாவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை புரிந்தனர். அது ஒரு பிரத்யேக காதல் மொழியாக இருந்தது.