Oru Devathai Paarkkum Neram Ithu - 47 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 47

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 47

விஷால் தொடர்ந்து குவைத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான்.தீபா தன்னுடைய பெயிண்டிங் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க விரும்பினாள் . விஷாலிடம் இதை சொன்ன போது நான் மறந்தே போய்விட்டேனேஅவளுடைய இந்த திறமையை உடனே அதற்கான ஏற்பாடுகளை செய் அனன்யா என்று சொன்னான். அனன்யாவும், சுபாவும் அந்த ஓவியங்களை செலக்ட் செய்து கண்காட்சியாக வைக்க லொகேஷன் பார்த்தனர். அவை நல்ல அழகுள்ள ஓவியங்களாக இருந்தன. குழந்தைகளும் உற்சாகமடைந்தனர். விஷால் குறிப்பிட்ட தேதியில் கண்காட்சிக்கு வர முடியுமா என கேட்டாள் தீபா. அவனுடைய வேலை சுமை காரணமாக வர முடியாமல் போனதை விளக்கினான் . பரவாயில்லை விஷால் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது என்றாள் தீபா. விஷால் கண்காட்சி செலவுக்காக பணம் அனுப்பி இருந்தான். கண்காட்சி invitationஐ whatsapp மூலமாக நெருங்கிய நண்பர்களுக்கும்,உறவினார்களுக்கும் அனுப்பினாள் சுபா. தீபா அம்மா இல்லாத குறை ஒன்றுதான். அவள் இருந்திருந்தால் தன் பெண்ணை நினைத்து பெருமை பட்டிருப்பாள் .

அனன்யா மூன்று குழந்தைகளையும் கவனத்துடன் வளர்த்தாள் .எந்த குறையும் இல்லாதவாறு பார்த்துகொண்டாள். கண்காட்சிக்கு எதிபார்த்ததை காட்டிலும் வரவேற்பு நன்றாக இருந்தது.சுபாவுக்கும், அனன்யாவுக்கும் நன்றி சொன்னாள் தீபா. அடுத்த கண்காட்சியை விஷால் வந்தவுடன் வைத்துகொள்ளலாம் என்று தீபா சொன்னாள். விஷால் வீடியோ பார்த்து மகிழ்ந்து போனான். என்ன வேணும் தீபா உனக்கு வாங்கி அனுப்புகிறேன் என்றான். நானும் சுபாவும் கூடிய சீக்கிரம் குவைத் வருவோம் அப்போது வாங்கி கொடு என்றாள்.சரி தீபா. அனன்யா மூன்று பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே கருதினாள் .ஸ்ருதி, சாட்விக், லயா மூவரும் படிப்பிலும் சுட்டிகளாக இருந்தனர். சுபா குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் டான்ஸ் கிளாஸில் பிஸி ஆனாள். சென்னையில் ஒரு டான்ஸ் ஸ்டுடியோ ஓபன் பண்ண வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது.விஷாலிடம் சொன்னாள். விஷால் இப்போதுதான் குழந்தைகள் வளர்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்து பெரியவர்கள் ஆகட்டும் பிறகு எங்கு வேண்டுமானாலும் டான்ஸ் ஸ்டுடியோ திறக்கலாம் என்றான். சரி விஷால் நீ சொல்வதும் சரிதான் என்றாள்.

சுபா அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஊருக்கு போய் அவரை பார்த்தாள். அவர் நிலைமை அத்தனை
கவலைக்கிடமாய் இல்லையென்றாலும் அவர் விஷாலை ஒரு முறை பார்க்க விரும்பினார்.விஷால் வந்திருந்தான். அவனை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டவராய் இருந்தார். தொந்தரவு கொடுத்து விட்டேனா என்னவோ எனக்கு என் மீதே நம்பிக்கையில்லை என்றார். அப்படி சொல்லாதீங்க நீங்க பூரண குணமாகி விடுவீர்கள் என்றான். சுபா கலக்கத்துடன் இருந்தாள்.அனன்யாவும் வந்து பார்த்தாள். ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்தார்கள். இனி உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்று சுபா அப்பாவிடம் சொன்னார்கள். சுபா நீ கொஞ்ச நாள் அப்பாவோடு இருந்துவிட்டு வா என்று சொன்னான் விஷால்.குவைத் திரும்பினான் விஷால் .

விஷால் முடிந்த வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளிடம் பேசி வந்தான். சின்னவள் லயா அடிக்கடி அப்பா சீக்கிரம் வா அப்பா என்று சொல்லுவாள். பெரியவன் சாட்விக் அதிகம் பேசமாட்டான். ஸ்ருதி ஏதாவது பாடி காட்டுவாள். இவனுக்கு அனன்யாவை பாட சொல்லி கேட்டது போல இருக்கும். விஷாலுக்கு குறைகள் இல்லை.அனன்யாவுக்கும் அவனுக்குமான காதல் தொடங்கி 10 வருடம் நிறைவடைந்திருந்தது . இதை அனன்யா மகிழ்ச்சி பொங்க எல்லோரிடமும் சொன்னாள். இதை விஷால் உடன் கொண்டாட சுபாவும், தீபாவும் குவைத் செல்ல முடிவெடுத்தனர். அனன்யா விஷாலின் அப்பாவையும்,அம்மாவையும் கொஞ்ச நாள் வந்து தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டாள் . குழந்தைகளை பார்த்துகொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவர்களும் வந்து தங்கினார்கள்.

விஷால் சுபா , தீபா வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான்.அன்றைய நாளில் அனன்யா கோவிலுக்கு போய் எல்லோர் பேரிலும் அர்ச்சனை செய்தாள். கடவுளே விஷால் சீக்கிரம் இந்தியா வர வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது. அனன்யாவுக்கு விஷாலிடம் காதல் சொன்ன தினத்தை பற்றி நினைக்க நினைக்க சந்தோஷமாய் இருந்தது. விஷால் ரோஸ் மலரச்செண்டு ஒன்றை அவளுக்கு அனுப்பியிருந்தான். லவ் யு அனன்யா forever என்று எழுதி இருந்தது. விஷால் ஏர்போர்ட்டில் தீபாவையும், சுபாவையும் வரவேற்றான். அவர்களை காரில் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றான். அவர்கள் களைப்பாய் இருந்தார்கள் ஆனாலும் விஷாலை கட்டி கொண்டு வாழ்த்து சொன்னார்கள். தீபா உன்னுடைய பெயிண்டிங் கண்காட்சி அருமை என்றான். தாங்க்ஸ் விஷால் .

அவர்கள் இருவருக்கும் அவனே சமைத்து போட்டான். என்ன விஷால் சமைக்கவெல்லாம் தெரிந்து கொண்டாயா என்றாள் சுபா. இன்னும் 5 வருஷம் இருக்கணும் இல்ல என்றான். ம்ம் விஷால் அவ்வளவு வருஷம் எல்லாம் உன் பிரிவை என் இதயம் தாங்காது என்றாள் தீபா. அவர்கள் அனன்யா கொடுத்து அனுப்பியிருந்த ஸ்வீட் இவனுக்கு ஊட்டி விட்டனர். அனன்யாவுடன் வீடியோ கால் பேசினர். மிஸ் யு விஷால் ஹாப்பி anniversery என்றாள். விஷால் அவளை நினைத்து பெருமை பட்டான். அவள் மாதிரி பொறுமை யாருக்கும் வராது . தீபாவும் , சுபாவும் இவனை கட்டிகொண்டு தூங்கினர். தீபா , சுபா இருவருமே தனக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தான். குழந்தைகளும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஷாலுடன் சில நாட்கள் தங்கிவிட்டு திரும்ப பெங்களூர் சென்றனர் தீபாவும், சுபாவும்.

அனன்யாவுடைய இரண்டாவது மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆகி பரவலாய் வரவேற்பு பெற்றது. ஷெரின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். அனன்யாவுக்கு விஷால் வாழ்த்துக்களை தெரிவித்தான். விஷாலிடம் சினிமாவில் பாட வாய்ப்பு வருகிறது பாடட்டுமா என்றாள். அனன்யா உன் கனவுக்கு என்றைக்குமே தடையாய் இருக்க மாட்டேன் என்றான் விஷால். அனன்யா சினிமாவில் பாடல்கள் பாட தொடங்கினாள். ஷெரினும், சுபாவும் அவளுக்கு உதவினர். சுபா அம்மாவும் குழந்தைகளை பார்த்துகொள்ள உதவினாள். விஷால் அனன்யாவின் வெற்றியை குவைத்தில் கொண்டாடி மகிழ்ந்தான். விஷால் அவளுக்கென ஒரு வைர மோதிரம் வாங்கி அனுப்பி இருந்தான். அனன்யா முற்றிலும் தோற்றம் மாறிவிட்டாள். ஆனால் விஷால் மீது இருந்த அன்பில் குறையில்லாமல் பார்த்துகொண்டாள்.

பிள்ளைகள் மூவரும் சிறப்பாக படித்து வந்தனர்.இது விஷாலுக்கு நிம்மதியை தந்தது. விஷால் ஆசைப்படி சொந்த ஊரில் வீடு கட்ட திட்டமிட்டனர் சுபாவும், தீபாவும். அனன்யா அதற்கு உதவி செய்தாள். அனன்யா வீட்டையே கொஞ்சம் இடித்து கட்ட அனன்யா ஒப்புக்கொண்டாள். விஷால் முதலில் தயங்கினாலும் எல்லோருடைய விருப்பம் அதுவென்பதாலும் ஒத்துக்கொண்டான். மூவரும் ஊருக்கு போய் அனன்யா வீட்டை பார்த்தனர். சுபா அப்பா நான் பார்த்துகொள்கிறேன் நீங்கள் அவசியம் என்றால் மட்டும் வாருங்கள் என்றார். ஒரு நல்ல நாளில் பூஜை போடப்பட்டது. விஷாலால் வர முடியவில்லை . அனன்யா ரூம் அப்படியே இருக்க வேண்டும் என தீர்மானிக்கபட்டது. குழந்தைகள் ரூம், விஷால் ரூம் என டிசைன் செய்தார்கள்.அனன்யா சினிமாவில் பாடகியாக பிஸியாக ஆனாள்.
தீபா வீட்டின் இன்டீரியர் வேலைகளை தன்னுடைய பெயிண்டிங் ஓவியங்கள் மூலமாக இன்னும் அழகு படுத்த திட்டமிட்டாள்.

விஷால் வீட்டுக்காக பணம் அனுப்பி கொண்டிருந்தான். அனன்யா தன்னுடைய அப்பாவுடைய சொத்தில் இன்னொரு பகுதியை விற்று வீட்டை கட்ட தொடங்கினாள். விஷால் அப்பாவும் பணம் உதவி செய்தார்.வீடு அவர்கள் ஆசைப்பட்ட படி வளர்ந்து வந்தது. குழந்தைகளோடு ஒரு முறை ஊருக்கு போய் வீட்டை பார்த்து வந்தாள் அனன்யா. இந்த வீட்டில் தான் தன்னுடைய காதல் நினைவுகள் இன்னும் இருப்பதாக அனன்யா சொன்னாள். விஷால் சீக்கிரம் வந்து வீட்டை பார் என சுபாவும்,தீபாவும் சொல்லி வந்தார்கள் . விஷால் வர முடியாதபடி அவனுடைய அலுவலக சூழ்நிலை இருந்தது. எத்தனையோ சிரமங்கள் தாண்டி விட்டான் விஷால். இன்னும் 5 வருடங்கள் கழித்து இந்தியா வந்து சொந்தமாக பிசினஸ் தொடங்கலாம் என எண்ணி இருந்தான் . அனன்யாவும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாள்.அதற்காக பாடுபட்டு கொண்டிருந்தான்.

இந்தியாவில் பிசினஸ் தொடங்குவது அத்தனை சுலபமில்லை என்ற போதும் விஷால் அப்பா அவனை ஊக்க படுத்தினார். அவர் அவனுக்கு நம்பிக்கையை ஊட்டினார். அவனுடைய பிசினஸ் டெவலப்மெண்ட் சம்பந்தமாக சில வேலைகளை அவரே செய்தார். நிறைய பேரை
சந்தித்தும் வந்தார். அனன்யாவும் அவனுடைய பிசினஸ் ஆரம்பிக்க பணம் சேர்த்து வந்தாள். விஷாலின் பிள்ளைகள் நன்கு வளர்ந்து விட்டார்கள். சுபா தன்னுடைய ஆசைபடி சென்னையில் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினாள். தீபா சென்னையில் தங்கி அதை பார்த்து கொள்ள ஏற்பாடு செய்தாள் சுபா. அவள் லயாவை விட்டு பிரிந்து இருப்பது சிரமமாக இருந்தாலும் கொஞ்ச நாட்களில் டான்ஸ் ஸ்டுடியோ டெவலப் ஆன பிறகு வேறு ஒரு நல்ல மாஸ்டர் கிடைத்ததும் ஒப்படைத்துவிட்டு பெங்களூர் திரும்பி விடலாம் என எண்ணினாள் தீபா. விஷால் சென்னை டான்ஸ் ஸ்டுடியோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தான். தீபா நீ இல்லாம போர் அடிக்குது விஷால் நாம ஒண்ணா ஆடி எவ்வளோ வருஷம் ஆகுது என்றாள். ஆமாம் நானும் , நீயும் , சுபாவும் ஒன்றாக ஆடி ரொம்ப வருஷம் ஆகிறது என்றான்.

சுபா அவனுக்காக ஒரு ஸ்பெஷல் டான்ஸ் குழந்தைகளுடன் ஆடி வீடியோ அனுப்பி இருந்தாள். விஷால் அவற்றை மிகவும் ரசித்தான். அனன்யா மட்டும் அவ்வபோது சொந்த ஊருக்கு சென்று வீட்டை பார்த்து வந்தாள். அங்கிருந்து விஷால் உடன் பழைய கதைகளை பேசுவாள். அவளுக்குதான் எத்தனை எத்தனை நினைவுகள். அத்தனையும் விஷாலின் நினைவுகள். அவள் ஆஸ்ட்ரேலியா போனாலும் மற்றும் எங்கு போனாலும் விஷாலின் நினைவுகள். அனன்யா இந்த ரூம் உனக்கு பிடித்திருக்கிறதா என்றாள்.நல்லா இருக்கு என்றான். நம்ம கடைசி காலம் வரை வாழ போற வீட்டுல உன்னோட என்னோட காதல் நம்ம குழந்தைகள் மூலமா நிரம்பியிருக்கணும் விஷால் அதுதான் என்னோட ஆசை. நீ வந்ததும் இந்த சினிமா ல பாடுறத விட்டு விடுவேன் என்றாள். ஏன் அனன்யா அப்படி சொல்லுகிறாய். எனக்கு என்னவோ உன் கூட நேரம் ஸ்பெண்ட் பண்ணனும் விஷால்.அப்போதான் நான் வாழுற மாதிரியே இருக்கும் . இல்லேன்னா இந்த வீடு, இந்த பணம், புகழ் எல்லாம் வேஸ்ட் என்றாள்.

விஷால் அனன்யாவுடன் பழகிய நாட்களை நினைத்து கொண்டான். அவள்தான் அவன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள். இத்தனை பேர், புகழ் வந்த போதும் இவனுடன் சேர்ந்து வாழ காத்திருக்கிறாள். அனன்யாவையும், சுபாவையும், தீபாவையும் அவனால் இனி பிரியவே முடியாது என்ற அளவில் அவனுடைய உணர்வில் கலந்து இருந்தார்கள்.தீபாவுக்கு ஃபோன் பண்ணினான். இப்போதான் கொஞ்சம் பேர் டான்ஸ் கிளாஸ் சேர்ந்து இருக்கிறார்கள் என்றாள். சென்னை வெயில் வாட்டி எடுப்பதாகவும் சொன்னாள். ம்ம் விஷால் என்னவோ உன் நினைவிலே நான் வருகிறேனா என்றாள். எப்படி உன்னை மறக்க முடியும் தீபா.. என்றான் விஷால். வீட்டு வேலைகள் முடிய 6 மாதம் ஆகும் என சுபா அப்பா சொல்லி இருந்தார். அவருடைய உடல்நிலை பற்றியும் விசாரித்தான். இப்போது பரவாயில்லை என்றார். விஷால் அப்பா ரொம்பவும் விஷாலுக்காக லோன் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.அவரை ஆரம்பத்தில் விலக்கி வைத்ததை எண்ணி மனம் வருந்தினான் விஷால்.