Oru Devathai Paarkkum Neram Ithu - 45 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 45

Featured Books
  • साथिया - 139

    एक महीने बाद*अक्षत कोर्ट जाने के लिए तैयार हो रहा था और  साँ...

  • नशे की रात - भाग - 2

    अनामिका ने अपने पापा मम्मी को इस तरह कभी नहीं देखा था कि मम्...

  • अनोखा विवाह - 7

    अनिकेत आप शादी के बाद के फैसले लेने के लिए बाध्य हैं पहले के...

  • अनामिका - 4

    सूरज के जीवन में बदलाव की कहानी हर उस इंसान के लिए है जो कभी...

  • इश्क दा मारा - 35

    गीतिका की बात सुन कर उसकी बुआ जी बोलती है, "बेटा परेशान क्यो...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 45

கேரளா ட்ரிப் விஷாலுக்கும், சுபாவுக்கும் மறக்க முடியாததாய் இருந்தது. சுபா விஷாலுடனான தனிமையை இயற்கையோடு ரசித்தாள். சுபா உனக்கு பொண்ணு வேணுமா பையன் வேணுமா என்றான் எனக்கு பொண்ணுதான்பா என்றாள்.ம்ம் அனன்யாவும் அதைத்தான் நினைக்கிறா பொண்ணுக்கு பேரெல்லாம் கூட செலக்ட் பண்ணி வைத்து விட்டாள் என்றான் விஷால். விஷால் நம்ம காதலிக்க ஆரம்பிச்சு இத்தனை வருஷத்திலே நீ என் மேல எவ்வளவு அன்பு வைத்து இருக்கேன்னு தெரியும்.கேரளா ட்ரிப் போய் வந்த மூன்று மாதங்களுக்குள் அந்த நல்ல செய்தி வந்தது . சுபா கர்ப்பமாய் இருக்கிற செய்தி டாக்டர் மூலமாக உறுதி படுத்தபட்டது.குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். சுபா அந்த செய்தியை ஸ்வாதி டீச்சரிடம் சொன்னாள். அவளும் வாழ்த்து தெரிவித்தாள் . அனன்யா, தீபா இருவருமே சுபாவுக்கு சப்போர்ட் ஆக இருந்தனர். சுபா விஷாலை வெளிநாடு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் தன் கூடவே இருக்கும்படி சொல்லிவிட்டாள்.

அனன்யா , தீபா அம்மா இருவரும் சுபாவை கவனமாக பார்த்துகொண்டனர். ஊரிலில் இருந்து சுபா அம்மா, அப்பா வந்திருந்தனர். அவர்களும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சுபா அவர்களுடைய அன்பில் பூரித்து போனாள். விஷால் அப்பா , அம்மாவுக்கு இந்த தகவலை சொன்னான் அவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.விஷால் சுபாவின் வளைகாப்பு முடிந்தவுடன் சுபாவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சுபா அப்பா கேட்டுக்கொண்டார். விஷாலும் மறுப்பு சொல்லவில்லை.அனன்யா சுபாவின் குழந்தைக்காக அவ்வப்போது இனிமையான பாடல்களை பாடினாள்.சாட்விக் மீது சுபாவுக்கு இருக்கும் அன்பு எவ்விதத்திலும் குறையாமல் இருந்தது. விஷால் வெளிநாடு போவதை தற்காலிகமாக தள்ளி வைத்திருந்தான்.சுபாவை கூட்டிக்கொண்டு செக் அப் போய் வந்தான். அவளுடைய உணவு ,உடற்பயிற்சி போன்றவற்றில் கவனமாய் இருந்தான். சுபா என்னதான் தைரியமானவளாக இருந்தாலும் அவளுக்கும் குழந்தை நல்லபடியாய் பிறக்க வேண்டும் என்ற கவலை இருந்தது.

தீபா எப்பவும் போல டான்ஸ் கிளாஸ் வேலைகளை செய்தாள். அவளுக்கு இன்னும் குழந்தை இல்லையே என்ற வருத்தம் இல்லை.விஷால் அவளிடம் நேரிடையாகவே கேட்ட போதும் நமக்கு என்ன அவசரம் விஷால் இப்போ ஏற்கனவே ரெண்டு பிள்ளைகள் நமக்கு இருக்காங்க என்றாள். காலம் வேகமாக ஓடியது. சுபாவின் வளைகாப்பு ஏற்பாடுகளை விஷால் செய்தான்.நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் எல்லோரையும் அழைத்திருந்தான்.சுபாவுக்கு எல்லா சடங்குகளையும் தவறாமல் செய்ய வேண்டுமென அனன்யா , தீபா அம்மாவிடம் சொன்னான். வளைகாப்பு முடிந்ததும் சுபாவை அவளது அப்பாவும், அம்மாவும் சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். சுபா அவனை ரொம்பவும் மிஸ் பண்ண போவதாக வருத்தப்பட்டாள். இவன் அடிக்கடிஊருக்கு வந்து பார்ப்பேன் என சொல்லி இருந்தான்.

சுபாவை அவளது அப்பா அம்மா நன்றாக பார்த்துக்கொள்வார்கள் இருந்த போதும் இவனுக்கு சற்றே பதட்டமாய் இருந்தது. அனன்யாவும், தீபாவும் அதெல்லாம் ஒண்ணும் பயப்பட தேவையில்லை எல்லாம் நல்லபடியாக முடியும் என்றார்கள். சுபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட உடனே விஷாலை பார்க்க வேண்டும் என்று சுபா சொன்னாள். இவனும் அனன்யா, தீபா, தீபா அம்மா ஆகியோர் ஊருக்கு சென்றனர். விஷால் நீ என் பக்கத்துலேயே இரு விஷால் என்றாள் சுபா. சுபா ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயானாள் . விஷாலும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்தனர். சுபாவை அணைத்து முத்தமிட்டான் விஷால்.நமக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறது விஷால் என்றாள் சுபா. குழந்தை பிறந்ததை இனிப்புகள் வழங்கி கொண்டாடினான் விஷால். சாட்விக் எனக்கு தங்கச்சி பாப்பா வந்தாச்சு என்று எல்லோரிடமும் சொல்லி கொண்டிருந்தான். சுபா அம்மாவும், அப்பாவும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.6 மாதம் சுபா அவர்களுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என சொல்லிவிட்டனர். தீபாவும் ,அனன்யாவும் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தனர்.

சுபா அப்பா பேர் சூட்டும் விழாவிற்கும் ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் அனன்யாவிடம் பேர் சொல்லுமாறு கேட்டுக்கொள்ள அவள் ஸ்ருதி என்ற பெயரை சூட்டலாம் என்று சொன்னாள். அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். விஷால் குழந்தையின் காதில் ஸ்ருதி என்று மூன்று முறை சொன்னான். ஸ்ருதி ஸ்ருதி என்று சாட்விக் சொல்லி பார்த்தான். சுபாவுக்கும் குழந்தையின் பெயர் பிடித்திருந்தது. விஷால் ஊருக்கு திரும்பி வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அனன்யாவையும் , தீபாவையும் கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து சுபாவை கவனித்து கொள்ளும்படி சொன்னான். குழந்தை அழவும்,சிரிக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வந்தது.
விஷால் எப்படியும் இந்த வருட இறுதியில் வெளிநாடு செல்வது என்ற முடிவோடு இன்டர்வியூ போய் வந்து கொண்டிருந்தான். அனன்யாவும், தீபாவும் 10 நாட்கள் கழித்து பெங்களூர் வந்து சேர்ந்தனர் . சுபா இடையில் இவனிடம் ஃபோன் பேசி வந்தாலும் அனன்யாவிடம் விசாரித்தான் சுபா எப்படி இருக்கா குழந்தை எப்படி இருக்கு .. ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க நீ கவலைபடாதே விஷால் என்றாள் அனன்யா.

அனன்யா நான் வெளிநாடு போனா நீ எல்லாம் பார்த்துக்கொள்வாயா எதுக்கு விஷால் இப்போ நீ வெளிநாடு போகணும் என்றாள். குழந்தைங்க எதிர்காலத்துக்கு நாம ஏதாவது செஞ்சே ஆகணும் அதனால்தான். நான் பார்த்துக்குவேன் விஷால் ஆனா சுபா இதுக்கு ஒத்துக்குவாளா அவகிட்ட நீதான் பக்குவமா எடுத்து சொல்லணும். சரி விஷால். தீபாகிட்ட ஏற்கவனவே சொல்லிட்டேன் அவ புரிஞ்சிக்கிட்டா என்றான் விஷால். ம்ம் ஆனா வருஷத்துக்கு ஒரு தடவையாவது வந்து எங்களை பார்த்துக்கொள்வாயா விஷால். நிச்சயமா. விஷாலுக்கு குவைத்தில் வேலை கிடைத்து விட்டது. அனன்யா ஏதும் சொல்லாமல் உள்ளுக்குள் கலங்கினாள். எதுக்கு இப்போ அனன்யா நீ கவலைபடுற எப்படி விஷால் உன்னை பிரிஞ்சு ?? ஓகே விஷால் நீ தைரியமா போய்ட்டு வா. சுபா பெங்களூர் வர இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் . விஷாலும் இரண்டு மாதங்களில் குவைத் கிளம்ப வேண்டியதுதான்.

விஷாலும் அனன்யாவும் போய் சுபாவையும், ஸ்ருதியையும் பார்த்தார்கள். சுபாவிடம் பக்குவமாய் விஷால் குவைத் போகும் விஷயத்தை சொன்னாள். சுபா அதை கேட்டு அழ தொடங்கினாள். விஷால் அவளை அணைத்து கொண்டு சமாதானபடுத்தினான்.எனக்கு வேற வழி இல்ல சுபா.நம்ம குழந்தைக்காக இதெல்லாம் நாம இந்த பிரிவை தாங்கித்தான் ஆகணும் என்றான். ஸ்ருதியை கவனமாய் பார்த்துக்கொள். சுபா இப்போதானே நமக்கு குழந்தை பிறந்திருக்கு அதுக்குள்ளே ஏன் போகணும் விஷால். ம்ம் நீ சொல்லுறதும் சரிதான். இதுக்கப்புறம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது சுபா. நான் இடையில் வந்து உன்னை பாரத்துக்கிறேன் என்றான். அனன்யாவும், விஷாலும் ஊர் திரும்பினர். விஷால் தனக்கு தேவையானவற்றை பேக் செய்ய தொடங்கினான். அனன்யாவும், தீபாவும் அவனுக்கு உதவிகள் செய்தனர். சாட்விக் அப்பா வெளிநாடு போகிறார் என்றதும் குழம்பி போயிருந்தான்.

சுபா விஷால் ஊருக்கு போவதற்கு ஒரு வாரம் முன்பே வந்து விட்டாள். கூட சுபா அப்பாவும், அம்மாவும் வந்திருந்தார்கள். ஸ்ருதி இவனை நன்கு அடையாளம் கண்டு சிரித்தாள்.சுபா அவனுக்கு ஒரு வாட்ச் வாங்கி கொடுத்தாள். என்னை எப்பவும் மறக்காதே என்றாள். சாட்விக் ஸ்ருதியுடன் விளையாடி கொண்டிருந்தான். விஷாலுக்கு தடுமாற்றமாய் இருந்தது. சுபா அப்பாவிடம் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கேட்டு கொண்டான். விஷால் குவைத் போக இன்னும் ஒரு வாரமே இருந்தது.சுபா அப்பா ஏற்கனவே வெளிநாட்டில் இருந்தவர் என்பதால் சில அறிவுரைகள் சொன்னார். அவற்றையெல்லாம் கவனமுடன் கேட்டுகொண்டான் விஷால். புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை தீபா கொடுத்தாள். தீபா விஷால் ஏதாவது பிரச்சனைனா உடனே கால் பண்ணு நான் வரேன் என்றாள். என்னையும் அழைத்து போலாமே என்று தீபாவும் ஒரு முறை கேட்டு விட்டாள். அடுத்த முறை நிச்சயம் அழைத்து போகிறேன் என்று சொன்னான். விஷாலின் அப்பா , அம்மாவும் வந்திருந்தார்கள்

விஷாலை ஏர்போர்ட்டுக்கு சென்று அவனது குடும்பத்தார் வழி அனுப்பி வைத்தார்கள். குழந்தைகளை பிரிவதுதான் அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அனன்யா கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டாள். சாட்விக், ஸ்ருதி இருவரையும் இனி இரண்டு வருடம் கழித்தே பார்க்க முடியும். அதற்குள் அவர்கள் முக்கியமான குழந்தை பருவத்தை கடந்திருப்பார்கள்.விஷால் குவைத் போய் சேர்ந்தான். அனன்யா, சுபா, தீபா மூவரும் அதிகம் அவன் பிரிவை பற்றி பேசிக்கொள்ளவில்லை . அது மேலும் வருத்தத்தை தான் ஏற்படுத்தும் என்பதால் தவிர்த்து விட்டார்கள்.அவர்கள் குழந்தைகளின் சிரிப்பில் , அழுகையில் தங்களை மறந்தார்கள். விஷால் ஊருக்கு போய் சேர்ந்ததும் நல்லபடியாக வந்து சேர்ந்ததாகவும் வேலை அவ்வளவு கஷ்டமாய் இல்லை எனவும் கூறினான்.

அனன்யாவுக்கு பொறுப்புகள் அதிகம். அவள் விருப்பபட்டு எல்லோரையும் கவனித்து கொண்டாள். சுபா அம்மா கொஞ்ச நாள் அவர்கள் கூட இருந்து எல்லோரையும் வழி நடத்தினாள் . அனன்யா வேலைக்கு போய் விடுவாள். அப்போது குழந்தையை தீபா அம்மாவும், சுபா அம்மாவும் பார்த்து கொண்டனர். விஷால் தன்னுடைய சம்பளத்தை அனன்யாவுக்கு அனுப்பி இருந்தான் எல்லோருக்கும் பிடித்ததை வாங்கி கொடுக்க சொன்னான். அனன்யா ஸ்ருதிக்கும், சாட்விக்கிற்கும் பொம்மைகள் , உடைகள் போன்றவற்றை வாங்கினாள். அவளுக்கு ஒன்றும் வாங்கி கொள்ள மனம் வரவில்லை. விஷால் இரண்டு வருடம் கழித்து வரும் நாளை எண்ணி காத்திருந்தார்கள் மூன்று பெண்களும்.சுபாவிடம் பேசினான் விஷால் என்ன விஷால் சாப்பிடுகிறாயா ஒழுங்கா என்றாள். ம்ம் நீ வந்து ஊட்டி விடாதது தான் குறை என்றான். அடுத்த ஃப்ளைட் பிடித்து வருவேன் நீ ஒழுங்கா சாப்பிடவில்லை என்றால் .. அதெல்லாம் சரி ஸ்ருதி எப்படி இருக்கிறாள் அவளுக்கு அனன்யா பாட்டு என்றால் கொள்ளை இஷ்டம் . அவள் பாட்டு கேட்டால்தான் தூங்குகிறாள், சாப்பிடுகிறாள் . ம்ம் சாட்விக் டான்ஸ் கற்றுக்கொள்ள துடிக்கிறான் என்றாள் அனன்யா.

இவனுக்கு எல்லவற்றையும் உதறிவிட்டு ஓடி போய் அவர்களை கட்டி கொள்ள வேண்டும் போல இருந்தது. ஆனால் யதார்த்தம் அதுவல்லவே.விஷால் அங்கிருந்து புகைப்படங்களை அனுப்பி இருந்தான். குவைத் சிட்டியில் சில இடங்களுக்கு போயிருந்தான் . விஷால் பெரும் கனவை நோக்கி தன்னந்தனியாய் பயணிப்பதாய் நினைத்து கொண்டான்.அனன்யா அவனை கால நிலை மாற்றங்கள் குறித்து எச்சரித்தாள். குளிர்காலம், வெயில் காலம் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு அவனுக்கு சொன்னாள். தீபா அவனை பார்க்க வேண்டும் போல தோன்றிக்கொண்டே இருக்கிறதென்று சொன்னாள். எல்லாம் கொஞ்ச காலம் தான். அப்புறம் நிரந்தரமாக குடும்பத்தோடு இருக்கலாம் என்றான்.மேற்கொண்டு விஷாலுடைய வேலைகள் அங்கிருந்த சூழ்நிலைகளோடு ஒத்து போக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்காக விஷால் கொஞ்சம் சிரமபட்டான் . சாட்விக் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தீபா விஷாலுடன் பகிர்ந்து கொண்டாள். அருமையாக டான்ஸ் ஆடி இருந்தான் சாட்விக். தீபாவுக்கு மனமார நன்றி சொன்னான். விஷாலுக்கு இப்போது அதிக நம்பிக்கை வந்திருந்தது .

சுபா மெல்ல மெல்ல இப்போது பிரசவ கால உடல்நிலையில் இருந்து தேறி வருகிறாள். அனன்யா அவன் அனுப்பும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என எண்ணினாள். அவளுடைய இரண்டாவது மியூசிக் ஆல்பம் வெளியிடும் எண்ணமும் அவளுக்கு தோன்றியது. தீபாவும், சுபாவும் அதை கேட்டு மகிழ்ந்தனர்.