Oru Devathai Paarkkum Neram Ithu - 44 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 44

Featured Books
  • नशे की रात - भाग - 2

    अनामिका ने अपने पापा मम्मी को इस तरह कभी नहीं देखा था कि मम्...

  • अनोखा विवाह - 7

    अनिकेत आप शादी के बाद के फैसले लेने के लिए बाध्य हैं पहले के...

  • अनामिका - 4

    सूरज के जीवन में बदलाव की कहानी हर उस इंसान के लिए है जो कभी...

  • इश्क दा मारा - 35

    गीतिका की बात सुन कर उसकी बुआ जी बोलती है, "बेटा परेशान क्यो...

  • I Hate Love - 4

    कल हमने पढ़ा था कि अंश गुस्से में उसे कर में बैठा उसे घर की...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 44

குடும்பத்தாருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு பெங்களூர் திரும்பினான் விஷால். முன்னதாக சுபாவும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியிருந்தாள்.அனன்யா ஒரு மியூசிக் ஆல்பம் பண்ண விரும்புவதாக சொன்னாள். விஷால் அவளை அதற்காக பாராட்டி உற்சாக படுத்தினான்.மியூசிக் ப்ரொடியூசர் சில பேரை பார்த்து விட்டு வந்தாள். எனக்கென்னவோ இது ஒண்ணும் சரியா வராதுன்னு தோணுது விஷால். ஏன் என்ன ஆச்சு அனன்யா. நிறைய செலவு ஆகும் போல அதோட சில பேர் தப்பான நோக்கத்தோட பேசுறாங்க . ஓ சாரி அனன்யா. பணத்தை பத்தி நீ கவலைபடாதே எப்படியாவது ரெடி பண்ணலாம் .நானும் எனக்கு தெரிஞ்சவாங்க கிட்ட சொல்லி வைக்கிறேன். நீ நல்ல ப்ரொடியூசர மட்டும் கண்டுபிடி அனன்யா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றான். தாங்க்ஸ் விஷால். சுபாவிடமும் இதை பற்றி சொன்னான். ரொம்ப நல்ல விஷயம் நானும் இங்கே ட்ரை பண்ணுறேன் என்றாள்.


தீபா சாட்விக் உடன் விளையாடி கொண்டு கொண்டிருந்தாள். என்ன தீபா சாட்விக் என்ன சொல்லுறான். அவனுக்கு தங்கச்சி பாப்பா வேணுமாம் விளையாட என்றாள். அதுக்கென்ன நிச்சயம் அடுத்த வருஷம் அவன் கூட தங்கச்சி பாப்பா இருக்கும் என்றான். விஷால் தீபாவிடமும் அனன்யாவின் மியூசிக் ஆல்பம் பற்றி சொன்னான். சூப்பர் விஷால் நானே சுபாவிடம் பேசி டான்ஸ் டிசைன் பண்ணி தருகிறேன் என்றாள்.தாங்க்ஸ் தீபா. தீபாவும் தனக்கு தெரிந்த நபர்களிடம் மியூசிக் ப்ரொடியூசர் தேவை என்பதை சொல்லி வைத்தாள். அனன்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்க சுபா அப்பாவும்,விஷால் அப்பாவும் பணம் அனுப்பியிருந்தனர். விஷால் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. அனன்யா எப்படியாவது சாதிக்க வேண்டும் என எண்ணினாள் .அப்போதுதான் டான்ஸ் டீச்சர் ஸ்வாதி மூலம் ஷெரின் என்ற பெண் மியூசிக் ப்ரொடியூசர் அறிமுகமானார். அவரும் ஒரு நல்ல வாய்ஸ் தேடி கொண்டிருந்ததாகவும் அனன்யா வாய்ஸ் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டதால் அவர் மியூசிக் ஆல்பம் தயாரிக்க ஒப்புக்கொண்டார்.


அனன்யா எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள். சுபாவுக்கும், ஸ்வாதி டீச்சருக்கும் நன்றி சொன்னாள். விஷால் இனி உன் குரல் எல்லா பக்கமும் கேட்கும் என்றான்.மியூசிக் ஆல்பம் தயாரிக்க ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டது கையெழுத்து போட்டாள் அனன்யா.சாட்விக்கை தீபாவும், தீபா அம்மாவும் பார்த்து கொண்டனர்.அனன்யா வேலைக்கு போன நேரம் போக மிச்ச நேரம் ஷெரினின் ஸ்டுடியோவில் இருந்தாள்.ஷெரினின் துடிப்பான அனுபவம் அனன்யாவிற்கு பிடித்திருந்தது. அவர்கள் musicians ,singers ,லிரிக்ஸ், composing , இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் என பலவாறாக ஆலோசனைகள் நடத்தினர். ஆல்பம் இறுதி வடிவம் பெற்றது.ஆல்பம் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்று வந்தாள் அனன்யா. சாட்விக்கை பிரிந்து இருப்பது அனன்யாவுக்கு கஷ்டமாக இருந்தது .சுபா அவ்வப்போது ஆல்பம் தயாரிப்பு பணிகள் எந்த அளவுக்கு இருக்கிறது என கேட்டு வந்தாள்.

அனன்யா அவளே லிரிக்ஸ் எழுதி பாட முடிவெடுத்திருந்தாள் . ஆரம்பத்தில் தயங்கிய ஷெரின் அனன்யாவின் பாடல் வரிகள் சிறப்பாக வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.காலம் வேகமாக சென்றது. காதலர் தினத்தன்று ஆல்பம் வெளியிட வேண்டும் என்பது அனன்யாவின் விருப்பமாக இருந்தது. அதனால் வேலைகள் வேகமாக நடந்தது . யுட்யூப் மூலமாகவும் வெளியிட திட்டம் போட்டிருந்தார்கள். அந்த ஆல்பத்தை விஷாலுக்கு தன் காதலர் தின பரிசாக அளிக்க இருப்பதாக அனன்யா சொன்னாள். விஷால் அந்த வருட இறுதியில் வேறு கம்பெனி மாற திட்டம் வைத்திருந்தான். வேலைக்காக வெளிநாடு சென்று வரலாம் என நினைத்தான். அனன்யாவும், சுபாவும் வேண்டாமென்று சொன்னார்கள். நல்ல வேலை கிடைத்தால் போய்த்தானே ஆக வேண்டும் என்று சமாதானபடுத்தினான். சுபாவிடம் பேசினான் காதலர் தினத்துக்கு என்ன வேண்டும் என கேட்டான். சாட்விக் உடன் அவள் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஃபிரேம் செய்து அனுப்புமாறு கேட்டிருந்தாள் .

அனன்யாவின் ஆல்பம் ரிலீஸ் ஆவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் ஷெரின் மற்றும் அனன்யாவின் விடாமுயற்சியால் காதலர் தினத்தன்று அனன்யாவின் மியூசிக் ஆல்பம் ரிலீஸ் ஆனது. நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் ஷெரீனை சந்தித்து வாழ்த்துக்கள் சொன்னான். அதை தொடர்ந்து சினிமாவில் பாட அனன்யாவிற்கு வாய்ப்புகள் வந்த போதும் அவள் அதை ஏற்கவில்லை. சுபா சாட்விக் உடனான போட்டோ தனக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாக சொன்னாள். சுபா சிங்கப்பூர் போய் ஒரு வருடம் ஆகிவிட்டது. அவள் இப்போது நன்கு மெலிந்து விட்டாள்.அனன்யாவின் ஆல்பம் பார்த்து விட்டு சூப்பர் என்றாள்.மியூசிக் ஆல்பம் பரவலான கவனம் பெற்றதில் குடும்பத்தார் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.மியூசிக் ஆல்பம் ப்ரமோஷன் விஷயமாக சிங்கப்பூர் போக இருப்பதாக சொன்னாள் அனன்யா. நீயும் வா விஷால் நாம் சுபாவை பார்த்த மாதிரி இருக்கும் என்றாள். தீபா டான்ஸ் ஸ்கூல் வேலைகள் இருக்கிறது என்றாள். சாட்விக்கையும் அழைத்து கொண்டு சிங்கப்பூர் சென்றார்கள்.

சுபா சாட்விக்கை அள்ளி எடுத்து முத்த மழை பொழிந்தாள். சுபா என்ன இப்படி இளைத்து விட்டாய் என்றான். அப்போதான் நல்லா டான்ஸ் பண்ண முடியும் என்றாள். அனன்யாவுக்கு ஆல்பம் வெற்றி பெற்றதற்காக ஒரு நெக்லஸ் பரிசாக அளித்தாள் சுபா. அனன்யாவும் சுபாவும் விஷால் வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதை பற்றி ஏதோ பேசிகொண்டிருந்தனர். சாட்விக் இப்போது ஒரு சில வார்த்தைகள் பேச கற்றுக்கொண்டிருந்தான். அதில் சுபா அம்மா என்பதும் ஒன்று. விஷால் சுபாவின் தனிமை குறித்து யோசித்தான். அவளும் ரொம்ப தவித்துதான் போயிருப்பாள். ஸ்வாதியை சந்தித்து பேசினார்கள். ஆல்பம் நன்றாக இருப்பதாக ஸ்வாதி சொன்னாள். விஷாலும் அனன்யாவும் ஷெரீனை தங்களுக்கு அறிமுகபடுத்தியமைக்காக நன்றி சொன்னார்கள்.அனன்யா, சுபா, விஷால், சாட்விக் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். அனன்யாதான் சமைத்திருந்தாள்.

அனன்யா ஷெரினுடன் ஆல்பம் விஷயமாக வெளியே போயிருந்தாள். சாட்விக் தூங்கி கொண்டிருந்தான். சுபாவை அணைத்து கொண்டான். விஷால் ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா நீ அடிக்கடி சிங்கப்பூர் வரணும் என்றாள். அவள் கன்னங்களில் முத்தமிட்டான்.தீபாவிடம் பேசினார்கள் தீபா சில பொருட்களை வாங்கி தர சொன்னாள். அதை வாங்கி விஷாலிடம் கொடுத்து அனுப்புவதாக சுபா சொன்னாள். சுபா நீ அவசியம் வெளிநாடு போய் வேலை பார்க்கணுமா விஷால் என்றாள். ம்ம் நம்ம குழந்தைக்காக என்றான். சுபா அவனை தழுவிக்கொண்டு தூங்கி போனாள்.அனன்யா இரவு லேட் ஆக வந்தாள். சுபாவும், இவனும் அவள் வருகைக்காக காத்திருந்தனர். மூவரும் ஹோட்டல் போய் சாப்பிட்டனர். அனன்யாவுடைய ஆல்பம் சம்பந்தமான வேலைகள் முடிந்து விட்டது. சுபாவுடன் சில இடங்களை சுற்றி பார்த்தனர்.சாட்விக் அங்கிருந்த பூங்காக்களில் விளையாடி மகிழ்ந்தான்.தீபா அடுத்த முறை உன்னை பார்க்க வருவாள் என விஷால் சொன்னான். விஷாலையும், சாட்விக்கையும் பிரிய மனமில்லாமல் அனுப்பி வைத்தாள் சுபா.

அனன்யா சுபாவுக்காக வருத்தபட்டாள். இன்னும் ஒரு வருடம்தானே என தனக்குதானே சமாதானபடுத்தி கொண்டாள்.தீபா சுபா எப்படி இருக்கிறாள் என விசாரித்தாள். நல்லா இருக்கிறாள்.சுபா பர்த்டே அன்று சர்ப்ரைஸ் ஆக தீபா சிங்கப்பூர் சென்று அவளை வாழ்த்த வேண்டும் என plan செய்தான். தீபாவும் அவளுக்காக சில கிப்ட்களை வாங்கி வைத்திருந்தாள். சுபா பர்த்டே இன்னும் மூணு மாதங்களில் வருகிறது.தீபா ஏற்கனவே சிங்கப்பூர் போன அனுபவம் அவளுக்கு இருக்கிறது .திட்டமிட்டபடி தீபா போனாள் . தீபாவை பார்த்ததும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனாள் சுபா. இருவரும் கோவிலுக்கு போனார்கள். கேக் வெட்டி சுபாவின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். அனன்யாவும், விஷாலும் வீடியோ காலில் வந்து வாழ்த்தினார்கள்.தீபா அனன்யா, சுபா கொடுத்த கிப்ட்களை சுபாவிடம் கொடுத்தாள்.எனக்காக இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி தீபா என்றாள். இதே நீ பெங்களூர் வந்திருந்தா டான்ஸ் பார்ட்டி பண்ணியிருக்கலாம் என்றாள் தீபா.தீபா சுபாவுக்கு பிடித்த உணவை சமைத்து போட்டாள். நீ திரும்ப வரும் நாளை ஆவலாய் எதிர்பார்த்து
காத்திருக்கிறான் விஷால் என்றாள் தீபா. தீபாவை அவளுடைய டான்ஸ் ஸ்கூலுக்கு அழைத்து சென்று எல்லோருக்கும் அறிமுகபடுத்தி வைத்தாள்.தீபா விடை பெற்று பெங்களூர் திரும்பினாள்.

விஷாலும் அனன்யாவும் ஊருக்கு போய் விஷாலுடைய அப்பா அம்மாவை பார்த்து வந்தனர் . ஆல்பம் வெளியான விஷயத்தை சொன்னார்கள். அவர்களும் மகிழ்வுடன் ஆசீர்வாதம் செய்தார்கள்.சுபா வீட்டுக்கும் போய் வந்தார்கள். சிங்கப்பூர் சென்று சுபாவை பார்த்து வந்ததை பற்றி சொன்னார்கள்.இரண்டு வருட காண்ட்ராக்ட் முடிந்து பெங்களூர் திரும்பினாள் சுபா. ஏர்போர்ட் சென்று அவளை அழைத்து வந்தான் விஷால். ஸ்வாதி டீச்சர் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் டான்ஸ் ஸ்கூலில் மறுபடி ஜாயின் பண்ணி கொள்ளலாம் என்று சொல்லி இருந்தாள். சுபா மிகவும் களைத்து போயிருந்தாள். சாட்விக் அவளை பார்த்து சுபா அம்மா வந்துட்டாங்க என்றான். சுபா இதை கேட்டு மிகுந்த உற்சாகம் அடைந்தாள். சுபா நல்லபடியாக பயணம் முடிந்து வந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி .சுபா அப்பாவும், அம்மாவும் பெங்களூர் வந்திருந்தார்கள்.

சுபா இப்போதுதான் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தாள்.விஷால் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.திடீரென விழித்து விட்டாள் என்னாச்சு விஷால் அதான் வந்துட்டேன் இல்ல என்று அணைத்துகொண்டாள் சுபா. மறுபடியும் டாக்டர் செக் அப் போய் வந்தார்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும நம்பிக்கையோடு இருங்கள் என்றார் டாக்டர். அனன்யா சுபாவுக்கு குழந்தை உண்டாக வேண்டி சில சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்தாள். சுபாவும், விஷாலும் அந்த கோவில்களுக்கெல்லாம் போய் வந்தனர். அனன்யாவிடம் நிறைய பேர் மியூசிக் ஆல்பம் தயாரிப்பது தொடர்பாக சந்தேகங்களை கேட்டு வந்தனர். அதனால் அவளும் பிஸி யாக இருந்தாள். தீபா அடுத்த ஆல்பம் நம்ம நாலு பேரும் சேர்ந்து பண்ணுவோம் என்றாள். விஷால் வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தான். அநேகமாக குவைத்தில் வேலை கிடைக்கும் போல இருந்தது.


சுபா கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தாள். சாட்விக் உடன் உற்சாகமாக விளையாடினாள்.அவளுடைய உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இரண்டு வருட தனிமை அவளை ரொம்பவும் வாட்டியிருந்தது. எங்காவது ட்ரிப் போகலாம் என்று சொன்னாள் சுபா. கேரளா போகலாம் என்று சொன்னாள் தீபா. விஷால் நீயும் சுபாவும் மட்டும் போய் வாருங்கள் என்று சொன்னாள் அனன்யா.தீபாவும் அதை ஏற்றுக்கொண்டாள். கேரளா செல்லும்போது இந்த முறை பார்க்க வேண்டிய இடங்களை சுபா தேர்வு செய்தாள். சுபாவுடன்நீண்ட நாட்களுக்கு பிறகான பயணம் என்பது விஷாலுக்கு உற்சாகமாய் இருந்தது.சுபாவுக்கு எல்லோர் கூடவும் செல்லவே விருப்பம் ஆனால் அனன்யா சுபாவையும், விஷாலையும் மட்டும் அனுப்புவதில் ஒரு அர்த்தம் இருந்தது.இருவரின் நெருக்கம் காலத்தால் பிரிக்க முடியாததாக இருந்ததாது. விஷால் நம்ம ஊட்டி போயிருந்தோமே உனக்கு நினவு இருக்கா ? அதை எப்படி மறக்க முடியும் .அப்போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை காண்பித்தாள்.நான் அப்போ சின்ன பையன். நீ எப்பவுமே எனக்கு சின்ன பையன்தான் என கட்டி அணைத்து முத்தமிட்டாள் சுபா.