Oru Devathai Paarkkum Neram Ithu - 41 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 41

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 41

தீபாவை சென்னைக்கு அழைத்து சென்றான். தீபா சிறைக்கு பெயில் முடிந்து சென்றாள். கோர்ட்டில் வாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தார்கள். விஷால் பெங்களூர் திரும்பினான். விஷால் தீபாவின் இந்த நிலமையை எண்ணி வருந்தினான். இரண்டு மாதங்களில் தீபாவின் பர்த்டே வருகிறது. அப்போது போய் பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். அனன்யாவிடமும் , சுபாவிடமும் இதை சொன்னான். தீபா அம்மா அவர்களுடன் இருப்பது ஆறுதலாக இருந்தது. ஒரு மாதம் கழித்து அனன்யா தனக்கு பெண் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அவளையும் சுபாவையும் செக் அப் அழைத்து போயிருந்தான். டாக்டர் அனன்யா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார்.சுபா, அனன்யா இருவரும் மகிழ்ந்து போனார்கள். விஷால் இனிப்புகள் எல்லோருக்கும் வழங்கி கொண்டாடினான். தீபாவுக்கு இந்த செய்தியை உடனடியாக சொல்ல வேண்டும் என நினைத்தான். அனன்யா நானும் சென்னை வரேன் என்றாள். இப்போ அதிக தூரம் டிராவல் பண்ண கூடாது அடுத்த முறை அழைத்து போகிறேன் என்றான். தீபாவை பார்க்க மனு போட்டிருந்தான். சிறை அனுமதி கிடைத்ததும் அவளை சந்தித்தான். விஷயத்தை சொன்னதும் கங்க்ராட்ஸ் விஷால் நீ அப்பாவாயிட்ட என்றாள். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன . அனன்யாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லு என்றாள். தீபா உன் பர்த்டே வுக்கு என்ன வேண்டும் என்றான். நீ அனன்யாவை அழைத்து வா அவளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என்றாள் .

தீபா அம்மா அனன்யாவை கண்ணும் கருத்துமாக பார்த்துகொண்டாள். அனன்யா டாக்டர் சொன்னபடி நடந்துக்கணும் விஷால் குறும்பு பண்ணகூடாது என்றாள். சுபாவும், விஷாலும் கோவிலுக்கு போயிருந்தனர்.அனன்யாவுக்காகவும் , தீபாவுக்காகவும், பிறக்க போகிற குழந்தைக்காகவும் வேண்டி கொண்டனர். சுபா அனன்யாவுக்கு உதவிகள் செய்தாள். தீபா பர்த்டே அன்றும் கோவில் போய் பிரசாதம் வாங்கி கொண்டு வந்தான் விஷால். சுபாவையும், அனன்யாவையும் அழைத்து கொண்டு போயிருந்தான் தீபாவை பார்க்க. சிறை அனுமதி பெற்று கேக்கை தீபாவிடம் கொடுத்தான் விஷால். நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும் என்று தீபாவிடம் சொன்னான். எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு என்றாள் தீபா.அனன்யாவை பார்த்ததும் தீபா ரொம்ப சந்தோஷ பட்டாள். ரொம்ப தாங்க்ஸ் அனன்யா இவ்ளோ தூரம் வந்ததுக்கு. குட்டி விஷால் என்ன சொல்லுறான் என்றாள். சுபா தீபாவிடம் சிறைச்சாலையில் பிரச்சனை எதுவும் இருக்கிறதா என கேட்டுக்கொண்டிருந்தாள். அனன்யா தீபாவின் கைகளை பிடித்து கொண்டாள்.

தீர்ப்பு வரும் நாள் நெருங்கி கொண்டிருந்தது. எல்லோரும் சற்று பதட்டதுடனே இருந்தனர். வக்கீல் நிச்சயம் குறைந்த அளவிலான தண்டனை கிடைக்க எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டேன் என்றார். இனிமேல் ஆண்டவன்தான் முடிவு பண்ணனும் என்றார். தீர்ப்பு தேதி அன்று சுபா, அனன்யா, விஷால், சுபா அம்மா எல்லோரும் ஆஜர் ஆயினர். விசாரணைகள் முடிந்தது. ஜட்ஜ் தீபாவிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என கேட்டார். அவள் எதுவும் சொல்லவில்லை. தீபாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .தீபா சலனமற்று இருந்தாள். விஷாலை பார்த்ததும் கட்டிகொண்டு அழுதாள்.நாம அப்பீல் போவோம் தீபா என்றான் அதெல்லாம் வேண்டாம் விஷால் என்றாள்.தீபா சுபாவின் கையையும், அனன்யாவின் கையையும் பிடித்துகொண்டாள். ரொம்ப நேரம் அனன்யா இங்கே இருக்க வேண்டாம் என்றாள் தீபா. விஷால் தீபா அம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் தவித்தான்.

தீபா அம்மா ரெண்டு வருஷம் தானே சீக்கிரமாகவே ஓடி விடும் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள். வக்கீலுக்கு குறைந்த தண்டனை வாங்கி தந்தார் என்பதற்காக நன்றி தெரிவித்தான் விஷால். நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன் ஆனா விடுதலை தீர்ப்பு வாங்க முடியல என்றார் வக்கீல்.தீபா சிறையில் இரண்டு வருடம் இருக்க வேண்டும் என்பது விதியின் கொடுமையான தீர்ப்பு என எண்ணினான் விஷால்.அனன்யா குழந்தை வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களை தேடி படித்தாள். அவளை சந்தோஷமாக வைத்து கொள்ள விஷால் தன்னால் முடிந்ததை செய்தான். சிறு சிறு வீட்டு வேலைகள் ,வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளை செய்தான். அனன்யா தன் காதல் கனவு குழந்தையாக மலர போவதை எண்ணி மகிழ்ந்தாள்.இடையிடையில் ஆனன்யாவை செக் அப் அழைத்து போனான் விஷால் . டாக்டர் அறிவுரைகளை பின்பற்றினான்.

விஷால் சிறைக்கு சுபாவுடன் சென்று தீபாவை பார்த்தான். அவள் சற்றே இளைத்திருந்தாள் . அவளுக்கு சுபா ஆறுதல் கூறினாள் . அனன்யாவை ரொம்ப விசாரித்தாள் . அனன்யா வளைகாப்புக்கு தான் வர விரும்புவதாக சொன்னாள். வக்கீலிடம் சொல்லி அதற்கான மனுவை சமர்ப்பித்தான். அனன்யா என்ன சொன்னா தீபா என்றாள் வளைகாப்புக்கு வர இருப்பதாக சொன்னான். ரொம்ப சந்தோஷம் விஷால் . வளைகாப்பு நடத்த இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன. அனன்யா வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தாள். இப்போது போக வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதெல்லாம் ஒண்ணும் ஆகாது விஷால். அவளுக்கு பையன் தான் பிறப்பான் என்னும் நம்பிக்கை இருந்தது. பொண்ணு பொறக்கட்டுமே என்றான் விஷால் அது அடுத்தது என்றாள் வெட்கம் மின்ன.

சுபா இப்போதே குழந்தைக்கான பொம்மைகள், உடைகள், அவை கேட்கும் இசைகள் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாள். அதை வாங்கி வரவும் செய்தாள். அவளுக்கும் குழந்தை பற்றிய ஏக்கம் இருந்தது ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தாள் . விஷால் அவள் மனதை புரிந்து கொண்டு நடந்தான். சுபாவே அவனிடம் இதை பற்றி பேசினாள் . அனன்யா வேற நான் வேற அப்படின்னு நீ நினைத்ததில்லை விஷால் அதனாலே பிறக்கப போறது நம்ம குழந்தையாதான் பார்க்கிறேன் என்றாள். அவளை அணைத்துகொண்டான் விஷால். சுபாவின் டான்ஸ் கிளாஸ் இப்போது பரவலான கவனம் பெற்றிருந்தது. அது விஷாலுக்கும் மற்ற எல்லோருக்கும் மகிழ்ச்சியை குடுத்தது .
அனன்யா அப்பா அம்மா இல்லாதது பெரிய குறை ஆக இருந்தது. அதனால் வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என முடிவு செய்தான். சுபாவிடமும் இதை பற்றி சொன்னான். அவள் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் அழைப்போம் எந்த சொன்னாள் .சுபா அம்மா , அப்பாவை இரண்டு வாரம் முன்னமே வந்து விடும்படி விஷால் சொல்லி இருந்தான்.

தீபாவுக்கு ஒரு வாரம் பெயில் கிடைத்து விட்டதாக வக்கீல் சொன்னார்.வளைகாப்பு விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது. அனன்யா லீவு போட்டு விட்டாள். விஷால் ரொம்ப வெளியே அலையாதே என்றாள். அதெல்லாம் திருவிழா மாதிரி இருக்கணும் நீ ஒண்ணும் கவலைப்படாதே என்றான். தீபா வந்தவுடன் அவள் விரும்புகிற இடங்களுக்கு அழைத்து போகவும் திட்டம் வைத்திருந்தான். தீபாவுக்கு பிடித்தமானவற்றை செய்யவும் வீட்டில் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய மனம் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும் மறுபுறம் தீபாவுக்காக ஏங்கியது . அவளுடனான் ஆரம்ப நாட்களில் அவளை உதறியதும் பின்பு அவளுடைய காதலை உணர்ந்து ஏற்றுக்கொண்டதும் நினைவலைகளாக வந்து போனது. விஷால் இரண்டு நாட்கள் முன்பாக தீபாவை சென்னை போய் அழைத்து வந்தான். போலீஸ் ஃபார்மாலிட்டீஸ் இருந்த போதும் அவற்றை சமாளித்தான். தீபா இவனை கட்டிக்கொண்டாள்.

தீபாவை பார்த்ததும் அனன்யா அவளை கட்டிகொண்டு அழுதாள். நீ அழக்கூடாது அனன்யா எல்லாம் நல்லதுக்குத்தான் நான் நல்லாதானே இருக்கிறேன் என்றாள் தீபா. தீபாவுக்கு உடைகள் வாங்கி வைத்திருந்தான் விஷால் அவற்றை மாற்றிக்கொண்டாள் . சுபா அவளை அவளுடைய அறைக்கு அழைத்து சென்றாள். தீபா அம்மா சுபா, தீபா, அனன்யாவுக்கு திருஷ்டி கழித்தாள் . வளைகாப்பு விழாவிற்கு சுபா அப்பா அம்மா, விஷால் அப்பா அம்மா முன்பே வந்து விட்டனர் அவர்கள் தீபாவை விசாரித்தனர். அவர்கள் அவளை அரவணைத்து கொண்டனர். தீபா விஷாலுடன் தனியாக இருக்க வேண்டுமென்று சொன்னாள். மாடியில் அனன்யா ரூமுக்கு போனார்கள். நான் வந்திருப்பது ஒண்ணும் தப்பு இல்லையே என்றாள். நீ வராமல் இந்த விழாவே நடந்திருக்காது என்றான். தீபா தன் தாலியை தொட்டு பார்த்து கொண்டாள். விஷால் எனக்கு உன்கூட கடைசி வரை வாழனும் அதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றாள்.

வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது . தீபா உற்சாகமாக கலந்து கொண்டாள். அவள் இப்போது சற்று மலர்ந்த முகத்தோடு தோன்றினாள். சுபாவும், தீபாவும் அனன்யாவுக்கு சந்தனம் , குங்குமம் வைத்து விட்டனர். புகைப்படங்கள் எடுத்துகொண்டனர். அனன்யாவுக்கு பிடித்த பலகாரங்கள் , உணவு பொருட்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன. தீபா அம்மா தீபாவோடு விழா முடிந்த பிறகு ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தாள். தீபா சில கோவில்களுக்கு போக வேண்டும் என்று சொல்லி இருந்தாள். அந்த கோவில்களுக்கெல்லாம் அழைத்து போனான். கூட சுபாவும் வந்திருந்தாள். விஷால் தீபா கூடவே இருந்தான். அனன்யாவை கவனமா பார்த்துக்க விஷால் என்றாள் தீபா.சரி தீபா. அருகில் இருந்த பார்க்குக்கு நடந்து போனார்கள். ரேவந்த் மட்டும் அப்படி செய்யாமல் இருந்தால் நமக்கும் குழந்தை இருந்திருக்கும் என்றாள் தீபா. இப்போ ஏன் அவனை பத்தி பேசுறே தீபா . ம்ம் எனக்கு வேற வழி தெரியல விஷால் என்றாள்.


தீபா திரும்ப பெயில் முடிந்து சிறை செல்லும் நாள் நெருங்கி கொண்டிருந்தது. அவள் தூக்கம் இல்லாமல் தவித்தாள் . விஷால் அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டான். நான் என்றைக்கும் உன் கூடவே இருப்பேன் என்றான். விஷால் சில சமயம் பயமாயிருக்கு என்றாள்.அதெல்லாம் ஒண்ணும் ஆகாது என்றான்.தீபா மறுபடி எப்போ விஷால் பார்க்கலாம் என்றாள். உனக்கு எப்போ தோணுதோ அப்ப நான் அங்கே இருப்பேன் . குழந்தையை அழைச்சிட்டு வருவியா விஷால் . நிச்சயமா அது நம்ம குழந்தை தீபா. என்ன பேர் யோசிச்சு வைத்திருக்கிறாய் தீபா அதை இப்போ சொல்ல மாட்டேன் ஆனா பையன் தான் பிறக்க போறான் அப்படின்னு என் உள் மனசு சொல்லுது. குட்டி விஷால் தான் பிறக்க போறான். தீபா அவனை அணைத்தவாறே உறங்கி போனாள். வக்கீலிடம் பேசி பார்த்தான் இப்போது பெயில் எக்ஸ்டெண்ட் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

சென்னைக்கு சென்றான். தீபா இவன் கையை பிடித்து கொண்டு முத்தமிட்டாள் . விஷால் அவளை அணைத்து கொண்டு தைரியமாக இரு என்றான். தீபாவை மீண்டும் சிறையில் அடைத்தனர். விஷால் நெடுநேரம் அங்கேயே இருந்த மரத்தடியில் உட்காரந்திருந்தான். அவனுக்கு அங்கிருந்து செல்ல மனமில்லை . அவள் என்னென்ன கஷ்டப்படுகிறாள் என்பதை நினைத்து வேதனை அடைந்தான். அனன்யாவிடம் எதையும் சொல்லவில்லை. அவள் இப்போது நிம்மதியாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம் . அனன்யா சுபாவோடு சமையல் அறையில் சிறு சிறு வேலைகளில் ஒத்தாசையாய் இருந்தாள். இவன் அவளை கூப்பிட்டான். என்ன சொல்லுறான் என் பையன் என்றான். குட்டி விஷாலுக்கு அவங்க அப்பா கூடவே இருக்கணுமாம் என்றாள். விஷாலும் அவளும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து மாட்டியிருந்தார்கள். விஷால் அதையே பார்த்து கொண்டிருந்தான்.

காலம் வேகமாக ஓடிகொண்டிருந்தது . அனன்யா , சுபா, தீபா வுடனான வாழ்க்கை பிணைப்பு இன்னும் ஆழமானதாக, அர்த்தமுள்ளதாக மாறி கொண்டிருந்தது பற்றி விஷால் யோசித்தான். அனன்யாவுக்கு குழந்தை பிறந்தால் ஒரு முழு வாழ்வின் ஆரம்பம் தொடங்கும் என நினைத்தான்.விஷால் அனன்யா நல்லபடியாக குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டான்.