இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஷால். அவனுக்கு தலையே சுற்றியது. தீபா என்ன ஆச்சு விஷால் உனக்கு என்றாள். ஏன் தீபா இப்படி பண்ணினே என்றான். உன்னை கொல்ல பார்த்தவனை சும்மா விட சொல்லுறியா விஷால் அதான் பணம் கொடுத்து அதே டிரைவர் மூலமா ரேவந்தை தீர்த்து கட்டினேன் என்றாள். உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா சொல்லு விஷால் . உன்னையும் இழந்து விட்டு இந்த உலகத்துல வேற என்ன இருக்கு அதுதான் அப்படி பண்ணினேன். போலீஸ் கிட்ட ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன் என்றாள். தீபா என்று அவளை கட்டிகொண்டு அழுதான் விஷால். அனன்யாவும், சுபாவும் இதை எப்படி தாங்க போகிறார்களோ மேலும் தீபா அம்மாவுக்கு இந்த செய்தியை எப்படி சொல்வதென தவித்து போனான் விஷால். எவ்ளோ வருஷம் ஆனாலும் எனக்கு கவலையில்லை விஷால் நான் வெளியே வரும்போது எனக்காக ஒரு ரோஸ் வாங்கிட்டு வா விஷால் அது போதும் என்றாள் தீபா. நான் உன்னை எப்படி விடுவேன் தீபா என் உயிரை கொடுத்தாவது உன்னை வெளியில் எடுப்பேன் என்றான் விஷால்.
வக்கீலுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான்.அவர் உடனே வருவதாக சொன்னார். தீபா அதிகம் அலட்டி கொள்ளவில்லை . மகளிர் போலீசார் வந்து அழைத்து சென்றனர்.அனன்யாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான் . அவளும் செய்தி கேட்டு துடித்து போனாள். நானும் சுபாவும் உடனே சென்னை வரோம் என்றாள். இருவரையும் சமாதானபடுத்த முடியவில்லை. தீபாவை பார்த்து சுபாவும், அனன்யாவும் அழுதனர்.எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்றனர். ரேவந்த் ஒரு விஷம் மாதிரி அவனால் அனன்யாவுக்கும் ஆபத்து தான் அதுதான் நான் அப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்றாள் தீபா. விஷால் கோர்ட் சம்பந்தபட்ட விஷயங்களை வக்கீலிடம் கேட்டு தெரிந்து கொண்டிருந்தான். எப்படியும் ஒரு வாரத்தில் பெயில் கிடைத்து விடும் ஆனால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
தீபாவை சிறைச்சாலைக்கு அழைத்து போனார்கள். அனன்யா, சுபா இருவருமே செய்வதறியாது கலங்கி போனார்கள்.விஷாலுக்காக எவ்வளவு பெரிய காரியத்தை செய்து இருக்கிறாள். அனன்யா விஷாலிடம் தீபா பெயிலில் வந்ததும் முதலில் அவளை கல்யாணம் செய்து கொள் என்றாள். விஷால் மறுப்பேதும் சொல்லவில்லை. சுபாவும் அதையே சொன்னாள். தீபா அம்மாவிடம் தடுமாறி அவள் அரெஸ்ட் ஆன விஷயத்தை சொன்னான் அவள் சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள். உங்களுக்காகதானே என் பொண்ணு ஜெயிலுக்கு போனாள் பரவாயில்ல தம்பி என்று கண்ணீர் சிந்தினாள் .
எனக்கு தீபாவை உடனே பார்க்கணும் என்றாள். இன்னும் ஒரு வாரத்திலே பெயில் கிடைத்து விடும் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றான் விஷால். அனன்யா, சுபா இருவருமே தீபாவுக்காக பிரார்த்தனை செய்தார்கள் .
வக்கீல் முயற்சி செய்து இரண்டு வாரங்களில் தீபாவுக்கு பெயில் வாங்கி விட்டார். அவள் துவண்டு விடவில்லை. அது ஒன்றே விஷாலுக்கு ஆறுதலாய் இருந்தது. அவளை போய் சிறையில் இருந்து அழைத்து வந்தான். தீபாவை பார்த்ததும் அவள் அம்மா கதறி அழுதாள் . அழாதே அம்மா எனக்கு ஒண்ணும் இல்லை என்றாள். விஷாலுக்கு அவளை விசாரிக்க வார்த்தைகள் இல்லை. அனன்யா , சுபா இருவரும் அவளை அழைத்து சென்றனர். 3 மாதங்கள் பெயில் குடுத்திருந்தார்கள். அதற்குள் இந்த கல்யாணத்தை நடத்த வேண்டும் என்றாள் அனன்யா. தீபா அம்மா மறுப்பேதும் சொல்லவில்லை. தீபா எதுக்கு இப்போ அவசரம் என்றாள். விஷால் உனக்கு புரியாது தீபா இந்த கல்யாணம் இப்போதான் நடக்கணும் என்றான். சரி விஷால் உன் விருப்பமே என் விருப்பம் என்றாள்.நல்ல நாள் பார்க்க வேண்டும் என அனன்யாவும், சுபாவும், சுபா அம்மாவும் ஜோசியரை பார்க்க போயிருந்தனர். கல்யாணம் சிம்பிள் ஆக இருந்தால் போதும் என தீபா சொல்லிவிட்டாள்.
விஷால் தீபாவை சிறு குழந்தை போல தாங்கினான். விஷாலுக்கும் தீபாவுக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. விஷால் எனக்கு இப்போ குழந்தை வேண்டாம் என் பிள்ளை ஜெயிலிலே பிறப்பது வேண்டாம் என்றாள். சரி தீபா. எப்படியாவது குறைந்த கால அளவிலான சிறைதண்டனை கிடைக்க வக்கீல் வாதாடினார். டிரைவர் தற்கொலை செய்து கொண்டதால் போதிய ஆதாரங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. கல்யாண தேதி குறிக்கபட்டது . கோவிலில் வைத்து கல்யாணம் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. தீபா இப்படித்தான் நம்ம கல்யாணம் நடக்கணும்னு இருக்கு என்றாள்.விஷாலும், அனன்யாவும், சுபாவும் தீபாவை அழைத்துக்கொண்டு புடவை கடைக்கும், நகை கடைக்கும் போய் வந்தனர். தீபா தாலியை தேர்ந்தெடுப்பதில் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாள். சுபா அப்பாவும், அம்மாவும் விஷால் அப்பா, அம்மாவும் ஒரு வாரத்துக்கு முன்பே வந்துவிட்டனர். தீபா அதிகம் பேசவில்லை.
அனன்யா விஷால் தீபா திரும்ப போய் தான் ஆகனுமா என்றாள். விஷால் வேற வழியில்லை என்றான். பாவம் தீபா நமக்காக எவ்வளவு கஷ்டம் என்றாள் அனன்யா.வீடியோ, போட்டோகிராபர் ஏற்பாடு பண்ணி விட்டாயா அனன்யா . நாளைக்குதான் சொல்லணும். சாப்பாடு ஒரு 100 பேருக்கு சொல்லிவிடு என்றான். சரி விஷால். நெருங்கிய நண்பர்களை கல்யாணத்துக்கு அழைத்திருந்தார்கள். சில நிபந்தனைகளுடன் தான் பெயில் குடுத்திருந்தார்கள்.விஷால் மேளங்கள் முழங்க தீபாவின் கழுத்தில் தாலி கட்டினான்.தீபாவின் கையை பிடித்து ஹோமத்தை சுற்றி வந்தான். தீபாவின் கண்கள் கலங்கி இருந்தன. தாங்க்ஸ் விஷால் என்றாள். என்ன தீபா இது சின்ன பிள்ளை மாதிரி என்றான். இந்த நாளை எப்பவும் மறக்க மாட்டேன் விஷால் என்றாள். தீபா அம்மா இருவரையும் ஆசீர்வதித்தாள்.
சுபா அப்பா நடந்த விஷயங்களை கேட்டறிந்தார் அவரும் தன்னால் ஆன உதவிகளை செய்து தருவதாக சொன்னார்.
தீபா வெட்கம் மின்ன பால் சொம்புடன் விஷால் அறைக்கு போனாள். வா தீபா . லவ் யு விஷால் என்று கட்டிக்கொண்டாள்.என்ன தீபா அமைதியாய் இருக்கிறே .ம்ம் எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு விஷால். எது நிஜம் எது கனவு அப்படின்னு தெரியல . கடற்கரைல நாம நடந்து போயிட்டே இருக்கப்போ சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம போகுற மாதிரி. வெறும் அலை சத்தமா கேக்குது. தீபாவை அணைத்து முத்தமிட்டான். விஷால் நீ எப்பவும் நான் இல்லை என்றாலும் அனன்யாவையும் , சுபாவையும் சந்தோஷமா வைத்து கொள்ள வேண்டும் என்றாள்.சரி தீபா. நாளைக்கு பாண்டிச்சேரி போவோமா விஷால் . ரெண்டு நாட்கள் கழித்து போவோம் என்றான்.சரி விஷால்.தீபாவை சில நாட்கள் கழித்து பிரியபோகிறோம் என்பது அவனுக்கு மிகுந்த வேதனை அளித்தது.தீபாவின் கல்யாண போட்டோக்களையும் , வீடியோவையும் தீபா ஆர்வம் மின்ன பார்த்து கொண்டிருந்தாள்.
விஷால் அனன்யா, தீபாவுடன் பேசினான். பாண்டிச்சேரி போவதற்கு தயார் ஆனார்கள். முதலில் தீபாவும், விஷாலும் மட்டும் போவதாக இருந்தது . தீபாதான் இருக்கிற கொஞ்ச காலம் சேர்ந்து இருப்போம் என்று சொன்னாள். தீபா அம்மா உடல் நிலை பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. விஷால் நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகு ஹனிமூன் போவோமா என்றாள். இப்போ ஏன் ஜெயில் பத்தி நினைக்கிறே என்றான். ம்ம் சரி விஷால் நினைக்கலை . அவளுக்கு பிடித்த ஜீன்ஸ் உடைகள் வாங்கி வந்திருந்தான். போட்டு பார்த்து மகிழ்ந்தாள். ரொம்ப நல்லா இருக்கு விஷால் ஆனா உனக்கு புளூ சாரி தானே பிடிக்கும் அதையே கட்டி கொண்டு வருகிறேன் என்றாள். தீபா நீ எப்படி டிரஸ் செய்தாலும் அழகுதான் என்றான். தீபா தாலியை அடிக்கடி தொட்டு பார்த்து கொண்டாள். விஷால் மூவரையும் அழைத்து கொண்டு பாண்டிச்சேரி போனான்.
விஷால் மனம் வெறுமையால் நிரம்பியிருந்தது.ஆனால் தீபாவுக்காக எதையும் செய்ய தயாராய் இருந்தான். தீபா நான் காரை ஓட்டுகிறேன் என்றாள். மெதுவாகதான் ஓட்டுவேன் பயப்படவேண்டாம் என்றாள். அவள் நேர்த்தியாக கார் ஓட்டும் அழகை ரசித்தபடி வந்தான் விஷால். பாண்டிச்சேரி எப்போதும் போல அழகான கடற்கரைகளுடன் இவனை வரவேற்றது. ரூம் புக் பண்ணி இருந்தாள் சுபா. கல்யாணத்திற்கு பிறகு முதன் முறையாக பாண்டிச்சேரி வருகிறார்கள். தீபா ஜீன்ஸ் மாற்றிக்கொள் என்றான். சரி விஷால். மூவரும் அவனுடைய மனைவிகள் என்பது சிலருக்கு வியப்பாகவும், ஒரு சிலருக்கு கேலியாகவும் ,மேலும் சிலருக்கு பொறாமையாகவும் இருந்தது. அதையெல்லாம் விஷால் பொருட்படுத்தவில்லை. ஈவினிங் போல போல ரிசார்ட் போய் விட்டார்கள். சுபாவும், அனன்யாவும் நாங்கள் ரூமிலே இருக்கிறோம் நீங்கள் கடற்கரைக்கு போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். தீபா விஷாலை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு போனாள்.
ஏன் விஷால் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்றாள். நான் உன்னை அப்படியே விட்டுவிட மாட்டேன் தீபா. என் கடல் தேவதை நீ என்றான். சும்மா சொல்லாதே என்றாள். அவளை தூக்கி கொண்டு கடல் அலைகளுக்கு நடுவே நின்றான். அவனுடன் அவள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடினாள் . விஷால் அவளை உதட்டில் முத்தமிட்டான். விஷால் எனக்காக எப்பவுமே இருப்பியா ? விஷால் அவளை இன்னும் இறுக்கி அணைத்தான் . விஷாலுக்கு தான் வேறு ஒரு உலகத்தில் இருப்பது போல தோன்றியது. அனன்யா, சுபா, தீபா இவர்களின் அன்பால் ஆன உலகம் அது. அனன்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது ரொம்ப நேரமாகிவிட்டது. ம்ம் அது சரிதான் என்றாள் தீபா.ரூமுக்கு வந்து ரெடி ஆகி ஹோட்டல் போய் சாப்பிட்டார்கள். விஷால் தீபா சாப்பிடுவதையே ரசித்து கொண்டிருந்தான். அனன்யா , சுபா இருவரும் வாக்கிங் போக வேண்டும் என சொன்னார்கள். மூவரோடும் வாக்கிங் போனான் விஷால்.
ஏன் விஷால் நாம நாலு பேரும் வெளிநாடு போயிட்டா என்ன என்றாள் அனன்யா.அதெல்லாம் நானும் விசாரிச்சேன் . அப்புறம் தண்டனை இன்னும் அதிகமாய் விடும் என்றான். சுபா தீபாவுக்கு ஆறுதலாக எதையோ சொல்லிகொண்டிருந்தாள். தீபாவை கட்டிகொண்டு படுத்திருந்தான். என்னாச்சு தீபா தூக்கம் வரலை என்றாள்.அவளுக்காக அனன்யா பாட்டு ஒன்றை பாடினாள். அது ஒரு தாலாட்டு மாதிரி இருந்தது. விஷால் தூங்கி போனான். மறுபடி கண்விழித்து பார்த்த போது தீபாவை காணவில்லை. வெளியே பதட்டதுடன் ஓடினான். என்னவோ வெளியே இருக்கணும் போல இருந்தது அதான் வந்தேன் என்றாள். இவன் நிம்மதி பெருமூச்சு விட்டான். அவள் அவனுடைய கையை கோர்த்து கொண்டாள். மறுநாள் கோவிலுக்கு போனார்கள். விஷால், அனன்யா, சுபா மூவரும் தீபாவுக்காக வேண்டிக்கொண்டார்கள். தீபா விஷாலை பார்த்து புன்முறுவல் செய்தாள் அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது. விஷால் அவளை அழைத்து கொண்டு எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தான்.
விஷாலுடனான நெருக்கத்தை ரொம்பவும் நேசித்தாள் தீபா. அவளுக்கு விஷால் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தீபா தன்னுடைய உலகத்தை விஷாலுடனே பிணைத்து கொண்டாள். எனக்கு இங்கேயிருந்து போகவே மனசில்லை விஷால் என்றாள் தீபா. நீங்க மூணு பேரும் என் மேல காட்டுற அன்புக்கு நான் என்னைக்கும் நன்றி உள்ளவளாக இருப்பேன் என்றாள்.விஷால் டூர் முடிந்து பெங்களூர் திரும்பினான். வக்கீல் இடையில் ஃபோன் பண்ணி பேசினார். எதுக்கும் பயப்படாதீங்க எல்லாமே பாசிட்டிவ் ஆ தான் இருக்கு என்றார். அனன்யா,விஷால் வேலைக்கு போயிருந்தார்கள். சுபா டான்ஸ் கிளாஸ் வேலைகளில் இருந்தாள். தீபா ஏதோ ஒரு வகை அமைதியில் ஆழந்திருந்தாள் . 3 மாதங்கள் வேகமாக ஓடி விட்டது. தீபா திரும்ப சிறைக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டிருந்தது . விஷால் தீபாவுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தான்.