Oru Devathai Paarkkum Neram Ithu - 39 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 39

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 39

இன்ஸ்பெக்டரிடம் இருந்துதான் ஃபோன் வந்திருந்தது . விஷால் உங்களை ஆக்சிடென்ட் பண்ணி கொல்ல பார்த்தவனும் , ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ணி கொன்னவனும் ஒரே ஆள் தான்னு சொல்லியிருந்தேன் ஆமா சார் அவன் நேத்து நைட் பாய்ஸன் சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டான்.எங்களுக்கு இப்போதான் information கிடைச்சது. வேற ஏதாவது தகவல் கிடைச்சா உடனே உங்களை கூப்பிடுறோம் என்றார். ரொம்ப தாங்க்ஸ் சார் என்றான் விஷால். என்னாச்சு விஷால் என்றாள் அனன்யா ஒண்ணும் இல்லை அந்த ரேவந்த்தை ஆக்சிடென்ட் பண்ண டிரைவர் சூசைட் பண்ணி இறந்து போயிட்டானாம் . எதுக்காக அவன் தற்கொலை பன்னிக்கணும்? போலீஸ் அதை விசாரிக்கிறாங்க.நான்கு பேரும் பொங்கலை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு பெங்களூருக்கு மகிழ்ச்சியாய் திரும்பினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் டிரைவர் மொபைலில் ரெகார்ட் ஆகியிருந்த ரேவந்துடனான உரையாடல் பற்றி தெரிய வந்தது.
அதில் தெளிவாக ரேவந்த் விஷாலை கொல்ல திட்டம் தீட்டியிருப்பதும் பதிவாகி இருந்தது. விஷால் இருக்குற வரை என்னால அனன்யாவை நெருங்க முடியாது நீ ஆக்சிடென்ட் பண்ணி அவனை முடித்து விடு என்று பேசியிருந்தான். போலீஸ் விஷாலையும் அனன்யாவையும் விசாரணைக்கு அழைத்தனர். என்னாச்சு விஷால் எதுக்காக போலீஸ் உன்னை கூப்பிடுறாங்க ? ரேவந்த் என்ன கொல்ல ட்ரை பண்ணதா ஒரு சந்தேகம் போலீசுக்கு அதான் கூப்பிடுறாங்க . இதை கேட்டு அனன்யா, தீபா, சுபா மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனன்யா அவன் இப்படி செய்வான்னு கனவுல கூட நினைக்கல என்றாள். போலீஸிடம் ரேவந்த் அனன்யாவை ஒருதலையாய் விரும்பியதை அனன்யா சொன்னாள். அவர்கள் அனன்யா மீதுள்ள காதலால்தான் ரேவந்த் இப்படி செய்ததாக சொன்னார்கள்.அத்துடன் விஷால் கேசை குளோஸ் செய்து கொள்வதாகவும் சொன்னார்கள்.

தீபாவும் , சுபாவும் அதை பற்றியே பேசிகொண்டிருந்தனர். விஷாலுக்கு எதுவும் ஆகியிருந்தால் அந்த ரேவந்த்தை ஒரு வழி பண்ணியிருப்பேன் என்றாள் சுபா. விடுங்க ஏதோ தப்பு பண்ணி விட்டான் . இப்போ அவனே தண்டனையை அனுபவித்து விட்டான் என்றான் விஷால். அதெப்படி விஷால் விட முடியும் எங்க மூணு பேரையும் நினைச்சு பார்த்திருக்க வேண்டாமா அவன். ம்ம் அதுவும் சரிதான். விஷால் மனதில் அப்போது வேறெதையும் பற்றி நினைக்கவில்லை. அவர்கள் நிம்மதியை கெடுக்கும் எந்த விஷயத்தை பற்றியும் பேச கூட விரும்பவில்லை. அனன்யாவிடம் இதை பெரிது படுத்த வேண்டாமென்று சொல்லிவிட்டான். விஷாலுடைய கல்யாண ஆல்பம் வந்து விட்டது. வீடியோவும் வந்து விட்டது. இருவரும் நல்ல பொருத்தம் என்று தீபா சொன்னாள். விஷால் அவர்கள் மூவரும் ஒற்றுமையாய் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டான். சில போட்டோக்களை frame செய்து எங்கே மாட்ட வேண்டும் என்று பேசி கொண்டிருந்தார்கள். அனன்யா ஒரு வழியா இந்த ரேவந்த் கேஸ் முடிந்து விட்டது என்றாள். இல்லை அனன்யா முடியவில்லை . என்னோட கேஸ் மட்டும்தான் முடிவடைந்திருக்கிறது. ரேவந்த்தை எதற்காக அதே டிரைவர் கொன்னான் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ம்ம் அவங்க விட்டாலும் நீ விட மாட்டே போல என்று சிரித்தாள் அனன்யா. அனன்யா மனதிலும் அந்த கேள்வி இருந்தது. அவளுக்கு உள்ளுக்குள் ரேவந்த் மேல் ஆத்திரம் இருந்தாலும் விஷால் மேல் இருந்த பிரியத்தால் அமைதி காத்தாள் .விஷால் மியூசிக் கிளாஸ் நடத்த சில instruments வாங்கணும் என்றாள். இதெல்லாம் என்கிட்ட கேக்கணுமா வாங்கிக்கொள் என்றான். நீயும் வாயேன் விஷால் என்றாள் என்னைக்கு அடுத்த சண்டே. சரி அனன்யா .

போலீசார் என்ன காரணத்துக்குக்காக டிரைவர் தற்கொலை செய்து கொண்டான் என்பதை கண்டறிய முயன்றனர். அவனுடைய குடும்ப பிரச்சினை காரணம் என தெரிய வந்தது . விஷால் அனன்யாவுடன் சென்று இசைக்கருவிகள் வாங்கினான். தீபாவும் , சுபாவும் கூட வந்திருந்தனர். அனன்யாவின் இசை பற்றிய புரிதல் விஷாலுக்கு ஆச்சரியம் அளித்தது . நான் உண்மையிலேயே ரொம்ப லக்கி அனன்யா என்றான். ம்ம் ஐஸ் வைத்தது போதும் எனக்கு சீக்கிரம் தாலாட்டு பாடுற chance குடு விஷால் என்றாள் சிரித்து கொண்டே.விஷால் அவளை அணைத்து கொண்டான் . தீபாவும், சுபாவும் மியூசிக் சிஸ்டம் ஒன்றை வாங்கினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்திருந்தார் எனக்கு ரேவந்த் கேஸ் விஷயமா உங்களை நேரில பார்க்கணுமே என்றார். சென்னை வர முடியுமா ? எப்போ சார் வரணும் ?நாளைக்கு ஈவினிங்
சரி வரேன் சார். மூவரிடமும் சென்னை போகும் விஷயத்தை சொன்னான். எதுக்காக கூப்பிடுறாங்க விஷால் என்றாள் தீபா. என்னனு தெரியல அவசியம் போகணும் என்றான்.

சென்னையில் உனக்கு என்ன வேணும் தீபா என்றான். நீ சீக்கிரம் வந்தா போதும் என்றாள். சுபாவும், அனன்யாவும் கூட எதுக்கு விஷால் நீ போகணும் என்றார்கள். நான் போகலை என்றால் ரேவந்த் கேஸ் முடியாது அப்புறம் திரும்ப திரும்ப கூப்பிடுவார்கள் என்றான். அரை மனதாக விஷாலை அனுப்பி வைத்தனர். விஷால் சென்னை வந்து சேர்ந்ததும் இன்ஸ்பெக்டரை போய் பார்த்தான். வாங்க விஷால் ரொம்ப நன்றி வந்ததுக்கு என்றார். ரேவந்த் கேஸ் ல அந்த டிரைவர் சூசைட் பண்ணி கிட்டதாலே கேஸ் குளோஸ் பண்ணலாம்னு நினைத்தோம். ஆனா ரேவந்த் ஃபோன் செக் பண்ணினதுல தீபாங்கிரவங்க காண்டாக்ட் நம்பர் பத்தி அவங்க வீட்ல யாருக்குமே தெரியல . என்ன தீபாவா? ஆமா சார் அப்புறம் நீங்க சென்னைல தங்கியிருந்த வீட்ல விசாரிச்சப்ப அவங்க உங்க கூடத்தான் இருக்கிறதா கேள்விப்பட்டோம். ஆமா சார் நான் கல்யாணம் பண்ணி கொள்ள போற பொண்ணு. சரி விஷால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா அடுத்த வாரம் அவங்களை ஒரு என்குயரி பண்ணிடுறோமே . அவங்களுக்கு உண்மை தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கிறதா நினைக்கிறோம். எனக்கு புரியல இன்ஸ்பெக்டர் இருந்தாலும் நான் தீபாவை அழைச்சிட்டு வரேன் என்றான். தாங்க்ஸ் விஷால்.

தீபாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னபோது சரி விஷால் நாம அடுத்த வாரம் சென்னை போவோம் என்றாள். எப்படி தீபா நம்பர் ரேவந்துக்கு கிடைத்தது என்று புரியவில்லை. விஷால் பெங்களூர் வந்ததும் தீபாவிடம் விசாரித்தான். என்னாச்சு தீபா நீ ஏதாவது அவன்கிட்ட பேசினாயா என்றான் . அதெல்லாம் ஒண்ணும் இல்லை உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப அவன் வந்து பார்க்க வில்லை அவன் மேல எனக்கொரு சந்தேகம் இருந்தது அதனால அவனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன் என்றாள் . அதுக்கு அவன் என்ன சொன்னான். சாரி சொல்லிட்டு போனை வைத்து விட்டான். அனன்யாவும், சுபாவும் சற்றே குழம்பியவர்களாக இருந்தனர். தீபா ஒண்ணும் பயப்படாதீங்க என்றாள். தீபா ஏதாவது நடந்திருந்தா சொல்லு தீபா நான் பார்த்துகொள்கிறேன் என்றான். அதெல்லாம் ஒண்ணும் இல்லை விஷால். உனக்காக நான் அவன் கிட்ட பேசக்கூடாதா ? அதுதான் பேசினேன் என்றாள்.

விஷால் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றின. தீபா அவளுடைய அம்மாவை போய் பார்க்க வேண்டும் என்றாள். தீபா அம்மாவை பெங்களூர் அழைத்து வந்துவிடலாம் என்றாள். அவனுக்கும் சரி என்று பட்டது. அனன்யாவும், சுபாவும் சரி என்றனர். காரிலேயே போகலாம் என முடிவெடுத்தனர். தீபா என ஒரு மாதிரி இருக்கிறே என்றான். எப்பவும் போலத்தான் இருக்கிறேன் என்றாள். அம்மாவை பத்திரமாக பார்த்து கொள்வாயா விஷால் ? கண்டிப்பா . விஷால் எனக்கு எது நடந்தாலும் என்னை மறந்துட மாட்டாயே என்றாள். நான் எப்படி உன்னை மறப்பேன் தீபா. எதுக்கு இப்ப தேவையில்லாம பேசுற என்றான். தீபா அம்மாவை சந்தித்தார்கள் இருவரும். இப்போ எப்படி இருக்கீங்க பரவாயில்லை தம்பி. இவளை பிரிஞ்சு இருக்கிறதுதான் கஷ்டமா இருக்கு என்றாள். உங்களை பெங்களூர் அழைச்சிட்டு போகலாம்னு இருக்கோம். எதுக்கு தம்பி அதெல்லாம் உங்களுக்கு தொந்தரவு என்றாள். ஒரு தொந்தரவும் இல்லை . நீங்க இங்க தனியா கஷ்டபடுறீங்க . சரி தம்பி ரெண்டு நாள் இருங்க. எனக்கு சில வேலைகள் இருக்கு அதை முடிச்சுட்டு போகலாம் என்றாள்.

அனன்யாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். ஒண்ணும் பிரச்சனை இல்லை விஷால். நீ மெதுவா வா. அன்றைக்கு மாலையே டாக்டரிடம் அழைத்து போனான். இப்போ ஸ்டடியா இருக்காங்க .இருந்தாலும் ஜாக்கிரதையா பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். தீபா வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தான். தீபா டீ கொண்டு வந்து கொடுத்தாள். அவளை இழுத்து அணைத்தான். என்கிட்ட கூட சொல்ல மாட்டேங்குறியே என்றான். தீபா நான் மடியிலே படுத்துக்கட்டுமா விஷால் என்றாள். விஷால் என்னவோ உனக்கு ஏதாவது ஒன்னுனா என்னால தாங்கவே முடிய மாட்டேங்குது . விஷால் ஆறுதலாக அவள் தலையை கோதி விட்டான். நாளைக்கு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போகலாமா விஷால் ? நிச்சயமா அம்மாவையும் அழைத்து கொண்டு போக வேண்டும் என்றாள். விஷாலுக்கு அவளுடைய நடவடிக்கைகள் சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

அடுத்த நாள் காலையில் மூவரும் கோவிலுக்கு போயினர். தீபா அம்மா சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தாள். மதியம் சிறப்பாக சமைத்திருந்தாள். அம்மா பெங்களூர் வருவதிலே எங்க எல்லோருக்கும் சந்தோஷம் என்றான். அன்று மாலையே புறப்பட்டு பெங்களூர் போனார்கள். அனன்யாவும், சுபாவும் தீபா அம்மாவை வரவேற்றனர். எப்படிம்மா இருக்கீங்க விசேஷம் எதுவும் உண்டா என கேட்டாள். இனிமேதான் என்றாள் அனன்யா. விஷால் தீபா ரூமிலே அம்மாவை தங்க வைத்தான். அனன்யாவும் சுபாவும் அவளை நன்கு கவனித்து கொண்டனர். அந்த வார இறுதியில் சில இடங்களுக்கு தீபா அம்மாவை அழைத்து போனார்கள். குளிர் தீபா அம்மாவுக்கு பிடித்திருந்தாலும் ஒத்துக்கொள்ளவில்லை . அனன்யா எனக்கு அவங்க வந்தது ரொம்ப சந்தோஷம் விஷால் என்றாள் . அனன்யா நாம அவங்களை கவனமா பார்த்துகொள்ள வேண்டும் என்றான்.

இன்ஸ்பெக்டர் ஃபோன் செய்திருந்தார். நாளைக்கு சென்னைக்கு தீபாவை அழைச்சிட்டு வறீங்களா என்றார். கட்டாயம் சார். தீபாவும் இவனும் சென்னை செல்வதற்கு தயார் ஆனார்கள். தீபா அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். அவள் எதுக்கு அங்கெல்லாம் என்றாள். இது ஒரு சாதாரண என்குயரி என்றான் விஷால். அனன்யா மனம் படபடத்தது . எதுக்கும் ஏதாவது பிரச்சனை என்றால் என்னை உடனே கூப்பிடு விஷால் என்றாள். அங்கிள் நம்பர் வைத்து இருக்கீங்கல்ல என்றாள். இருக்கு அனன்யா . சென்னை சென்றதும் அவர்கள் ஒரு வக்கீலை பார்த்தார்கள். நீங்க எதுவும் பயப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்றார். தீபா எனக்கு இப்போது பீச் போக வேண்டும் போல இருக்கிறது என்றாள். இப்போவா ஆமா விஷால் உன்கூட கொஞ்ச நேரம் தனியாய் இருக்க வேண்டும் என்றாள். விஷால் நாம ரொம்ப தூரம் வந்து விட்டோம் . இனிமே நம்மளை பிரிக்க முடியாதுல்ல விஷால். என்னாச்சு தீபா ? எதையாவது சொல்லனும்னா சொல்லு. எனக்கு ஒரே ஆசைதான் விஷால் எனக்கு ஏதாவது ஆனா கூட உன்னையும் அனன்யாவையும் குழந்தையோட பார்க்கணும் என்றாள்.

போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். விஷாலை வெளியே இருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. தீபா சற்று நேரம் கழித்து வெளியே வந்தாள். என்ன கேட்டாங்க தீபா. நான் எல்லாம் சொல்லிட்டேன் . இனி அவங்கதான் முடிவெடுக்கணும் என்றான் தீபா. ஆனா நீ இனிமேத்தான் தைரியமா இருக்கணும் விஷால். அம்மாவை பார்த்துக்க. சுபாவையும் அனன்யாவையும் பத்திரமா பார்த்துக்க என்றாள். வா தீபா ஏதாவது சாப்பிடுவோம் என்றான். தீபா ஐஸ் கிரீம் இவனோடு பகிர்ந்து கொண்டாள். எனக்கு ஒரு முத்தம் கொடு விஷால் உதட்டிலே என்றாள்.கொடுத்தான். இரண்டு மணி போல் விஷாலுக்கு ஃபோன் வந்தது . ரேவந்தை கொலை செய்த குற்றத்திற்காக தீபாவை அரெஸ்ட் செய்கிறோம் என்று சொன்னார்.