Oru Devathai Paarkkum Neram Ithu - 34 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 34

Featured Books
  • नशे की रात - भाग - 2

    अनामिका ने अपने पापा मम्मी को इस तरह कभी नहीं देखा था कि मम्...

  • अनोखा विवाह - 7

    अनिकेत आप शादी के बाद के फैसले लेने के लिए बाध्य हैं पहले के...

  • अनामिका - 4

    सूरज के जीवन में बदलाव की कहानी हर उस इंसान के लिए है जो कभी...

  • इश्क दा मारा - 35

    गीतिका की बात सुन कर उसकी बुआ जी बोलती है, "बेटा परेशान क्यो...

  • I Hate Love - 4

    कल हमने पढ़ा था कि अंश गुस्से में उसे कर में बैठा उसे घर की...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 34

விஷால் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தான். அனன்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் . தீபாவும்,சுபாவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அவர்களுடைய உலகம் இன்னும் விரிவடைந்தது . அனன்யா ஆஸ்ட்ரேலியா போக இன்னும் 2 வாரங்களே இருந்ததால் தீபாவையும், சுபாவையும் சென்னை வர சொல்லி இருந்தான். அவர்கள் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லி இருந்தார்கள். புதிய கார் எடுத்துகொண்டு குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தார்கள்.தீபாவும் , சுபாவும் சொன்ன மாதிரி சென்னை வந்து விட்டார்கள். விஷால் பயணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நால்வரும் ஷாப்பிங் போனார்கள். அனன்யா நீ இல்லாம நான் எப்படி இருப்பேன் விஷால் என புலம்பி கொண்டே இருந்தாள். சுபாவும், தீபாவும் அவளுக்கு தைரியம் சொன்னார்கள்.இரண்டு வருடங்கள் எப்படி அவளை விட்டு பிரிந்து இருக்க போகிறோமோ என்று உள்ளுக்குள் கவலையோடு இருந்தாலும் அனன்யாவின் எதிர்காலம் கருதி இந்த பிரிவை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

அனன்யாவுக்கு மெல்போர்ன் யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்திருந்தது. அவளுடைய கசின் ரேவந்த் அங்கே ஏற்கனவே படித்து கொண்டிருந்தான். அவனுடன் பேசி அங்குள்ள நடைமுறைகளையும் , பழக்கவழக்கங்கள் பற்றியும் தெரிந்து கொண்டாள் அனன்யா.இருவருக்கும் அதிக வயது வித்தியாசமில்லை. விஷாலும் ரேவந்திடம் பேசினான். ரேவந்த் ஏர்போர்ட்டில் வந்து பிக்அப் செய்து கொள்வதாக சொல்லி இருந்தான்.அவன் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே அனன்யா தங்க இடம் பார்த்திருந்தான்.அனன்யாவை ஏர்போர்ட் சென்று வழி அனுப்பி வைத்தார்கள் . சுபாவும், தீபாவும் அனன்யாவை அழுதவாறே வழி அனுப்பி வைத்தனர்.விஷால் அனன்யா முன்பு அழக்கூடாது என உறுதியாக இருந்தான். வெறுமை மறுபடி அவனை சூழ்ந்தது.அனன்யா இப்போது எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

ரேவந்த் அனன்யாவை ஏர்போர்ட்டில் வந்து அழைத்து சென்றான். விஷாலுக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். அனன்யா பேசினாள்.நீ ஆசைப்பட்ட மாதிரி இந்த கோர்ஸ் நல்லபடியா முடிப்பேன் விஷால் என்றாள். எனக்கு உன் மேல் முழு நம்பிக்கை இருக்கு அனன்யா என்றான் விஷால். சுபாவும், தீபாவும் ஊருக்கு போனார்கள். ஏதாவது எமர்ஜென்ஸி னா கூப்பிடு விஷால் உடனே வருகிறோம் என்றார்கள். விஷால் வாழ்க்கை மறுபடி ஜீரோவில் இருந்தது. அன்றாட வாழ்வில் பெரிய மாற்றங்கள் இல்லை.அவளுடன் இருந்த நினைவுகளே அவனுக்கு துணை. ரேவந்த் அனன்யாவுக்கு எல்லா உதவிகளையும் செய்தான்.அனன்யா யூனிவர்சிட்டியில் சேர்ந்தாள்.அவ்வப்போது விஷாலுக்கு ஃபோன் செய்து வந்தாள். அவள் எந்த ஒரு புதிய இடத்துக்கு போனாலும் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வந்தாள். அவளுடைய உலகத்தை எப்படியோ இவனுடன் பகிர்ந்து கொண்டாள்.

ரேவந்த் அனன்யாவை விரும்ப தொடங்கியிருந்தான். அவளுடன் அதிக நேரம் செலவிட்டான். அனன்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்த நேரம் பார்த்து கொண்டிருந்தான். அனன்யாவின் திறமையும், அழகும் அவனை கிறங்கடித்தது .அனன்யா part டைம் வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தாள். விஷால் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னான். இங்கே நீ இல்லாம ரொம்ப போர் விஷால் அதனாலே தான் வேலைக்கு போறேன் என்று சொன்னாள். விஷாலால் மறுக்க முடியவில்லை. மறுபுறம் சுபா அப்பா பேசினார் என் பொண்ணு வாழ்க்கையையும் கொஞ்சம் பாருங்க தம்பி சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க என்றார். சுபா அப்பா அப்படித்தான் சொல்லுவாரு நீ உன் மனசுக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு விஷால் நாம கல்யாணம் பன்னிக்கலாம் என்றாள். சுபாவும், தீபாவும் டான்ஸ் ஸ்கூல் வேலையில் பிஸியாக இருந்தார்கள் .அனன்யா நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீடியோ காலில் வந்து விடுவாள். அது ஒன்றுதான் அவனுக்கு ஆறுதலாக இருந்தது .

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். டான்ஸ் காம்படிஷன் ஒன்று அவளுடைய ஸ்கூலில் நடக்க இருப்பதாகவும் அதை பார்க்க அவனை அழைத்திருந்தாள் . அனன்யாவும் உனக்கும் ஒரு சேஞ்ச் ஆக இருக்கும் போய்விட்டு வா என்று சொன்னாள். சுபாவும், தீபாவும் அவனை வரவேற்றனர். சுபா அவள் வீட்டில் தான் தங்க வேண்டும் என அன்பு கட்டளையிட்டாள். 20 பேர் போட்டியில் கலந்து கொண்டார்கள்.டான்ஸ் ஸ்கூல் இப்போது நல்லா ரீச் ஆயிட்டிருக்குது என்றாள் தீபா. அன்று இரவு அனன்யாவிடம் பேசினார்கள். என்ன அனன்யா எப்படி இருக்கு ஆஸ்ட்ரேலியா ? நல்லா போகுது உங்களை எல்லாம் மிஸ் பண்ணுறேன் என்றாள். டான்ஸ் வீடியோ எல்லாம் சூப்பர் என்றாள். சீக்கிரமே வந்து விடுவேன் வந்ததும் உங்களுக்கு கல்யாண சாப்பாடுதான் என்றாள்.

சுபா மடியில் தலை வைத்து படுத்திருந்தான். விஷால் அனன்யா நல்லதானே இருக்கா அப்புறமும் என கவலைபடுறே என்றாள் தீபா.விஷால் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். தீபா நான் காலையில் வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனாள். சுபா நான் தப்பு பண்ணுறேனா ? அவளை கட்டாயபடுத்தி அனுப்பி இருக்க கூடாதோ ? அவ என்ன சின்ன குழந்தையா? இப்போ நான் இல்லே உன்னை பிரிஞ்சு நானும் தான் கஷ்டபடுறேன் என்றாள். அவளை இழுத்து முத்தமிட்டான். சுபா அழுது விடுவாள் போல இருந்தது. பழையபடி எல்லாம் மாறிவிட்டால் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் என்றான். ம்ம் நீ எனக்கு கிடைச்சதே போதும் விஷால். அவள் அவனை மார்போடு சேர்த்து அணைத்து கொண்டாள். விஷால் சுபாவுக்காக மனம் வருந்தினான்.

மறுநாள் மதியம் தீபா வீட்டில் சமைத்திருந்தாள். சுபாவும், இவனும் போயிருந்தனர். தீபா இப்பவும் சிஸ்டம் ப்ராப்ளம் இருக்கிறதா என்றான். தீபா நீ இங்கேயே இரு விஷால் சிஸ்டம் நன்றாக இருக்கும் என்றாள் . சுபா, தீபாவுக்கு சில உடைகளை வாங்கி வந்திருந்தான். இருவரும் அதை மகிழ்ச்சி பொங்க வாங்கி கொண்டனர். எங்காவது வெளியே போகலாம் என்றாள் தீபா.திருச்சி போய் வெகு நாளாகிறது என்றாள் சுபா. காரிலேயே போலாம் என்றான் விஷால்.சரி கிளம்புங்க என்றான். தீபா முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டாள். திருச்சி மலைக்கோட்டை , முக்கொம்பு அணைக்கு சென்றார்கள்.அருகில் இருந்த கோவில்களுக்கு சென்றார்கள். தீபாவும், சுபாவும் அனன்யா வுக்காக வேண்டி கொண்டனர்.இன்னும்ஒரு மறக்க முடியாத ட்ரிப் ஆக அமைந்திருந்தது . தீபா விஷால் உடன் நெருக்கமாக நின்று போட்டோக்கள் எடுத்துக்கொண்டாள்.தீபாவின் விஷால் மீதான காதல் துளியும் குறையாமல் இருந்தது .


சென்னைக்கு திரும்பினான் விஷால்.அவன் வேலைகளில் கவனம் செலுத்தினான். அனன்யா பிரிவை மறக்க இடைவிடாமல் வேலை செய்ய பழகி கொண்டான். இப்போது அவனுக்கு இந்த கசந்து போன காலத்தை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற எண்ணமே வங்கி இருந்தது.விஷால் அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். என்னடா திருச்சி போனியாமே எனக்கென்ன வாங்குன என்றாள். பட்டுபுடவை.நேற்றே உனக்கு அனுப்பி வைத்து விட்டேன் என்றான். லவ் யு விஷால் என்றாள். அங்கே கடற்கரை எல்லாம் சூப்பர் ஆக இருக்குமே என்றான். ஆமாம் விஷால் . விஷால் சுபா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறாள் நேத்து என்னிடம் சொல்லி அழுதாள் . என்ன செய்ய முடியும் அனன்யா காதல் என்றாலே கஷ்டம்தான் என்றான். ரேவந்த் எப்படி இருக்கிறார் ? அவன் நல்லா இருக்கிறான். வருகிற காதலர் தினத்துக்கு உனக்கு என்ன கிப்ட் வேண்டும் அனன்யா . நீ போட்ட எங்கேஜ்மெண்ட் மோதிரமே போதும் விஷால் என்றாள்.

அனன்யாவுடனான உறவு இன்னும் நெருக்கமானது. காதல் இன்னும் அதிகமானது அவள் வேண்டாமென்று சொல்லிவிட்டாலும் அவளுக்கென்று ஒரு சிறந்த பரிசை வாங்கி தர வேண்டும் என எண்ணினான். சுபாவும், தீபாவும் சென்னை போய் விஷாலுடன் காதலர் தினத்தை கொண்டாடுவது என தீர்மானித்தனர். சுபா இந்த காதலர் தினத்தில் செம டான்ஸ் போடுவோம் என்றாள். தீபா, சுபா இருவரும் ஆவலுடன் காதலர் தினத்தை நோக்கி காத்திருந்தனர். இடையில் நியூ இயர், பொங்கல் போன்றவை கடந்து போனாலும் அவர்கள் மனம் முழுக்க விஷால் பற்றியே சிந்தனை இருந்தது.இன்னும் 10 தினங்கள் இருந்தது காதலர் தினத்துக்கு. சுபா அவனுக்கு காதலை வெளிப்படுத்திய நாளை அவனால் மறக்கவே முடியாது.சுபாவுக்கும், தீபாவுக்கும் பரிசு பொருளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அனன்யாவிடம் ஒப்படைத்திருந்தான். அவள் சில ஆலோசனைகள் குடுத்திருந்தாள் .

அனன்யா இவன் இல்லாத முதல் காதலர் தினத்தை கொண்டாட போகிறாள். ரேவந்த் அனன்யாவிடம் பழகினாலும் அவள் கூட சேர்ந்து சுற்றினாலும் அவளுடைய மனதை உடைக்க முடியவில்லை.சுபாவும், தீபாவும் இரண்டு நாட்கள் முன்பே வந்து விட்டார்கள். வீட்டை ஒழுங்கு படுத்தினார்கள். கோவிலுக்கு போனார்கள். விஷாலுக்கு சமைத்து போட்டார்கள். அவர்களை அழைத்து கொண்டு சில இடங்களுக்கு போனான். சுபா காதலர் தினத்தன்று எங்கு போகவேண்டும் என தீர்மானித்து வைத்திருந்தாள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். மூணு பேரும் சர்ப்ரைஸ் ஆக ஆஸ்ட்ரேலியா போவோமா என்றாள் தீபா. அதெல்லாம் வேண்டாம் அப்புறம் அனன்யா படிப்பு வீணாகிவிடும் என்றான் விஷால். ஒருவகையில் மூவரும் உற்சாகமாக இருந்தனர்.சேர்ந்து இருப்பதே அவர்களுக்கு ஆனந்ததை கொடுத்தது .

அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் வாழ்த்துக்கள் விஷால் என்னைக்கும் நமக்கு காதலர் தினம்தான் என சொன்னாள். தீபாவுக்கும், சுபாவுக்கும் வாழ்த்துக்கள் சொன்னாள்.அவளுடைய உதடுகள் சிரித்தாலும் பிரிவின் வலியை மறைக்க விஷாலும் அவளும் கஷ்டப்பட்டனர். விஷால் ரோஸ் பூக்கள் அடங்கிய போக்கே ஒன்றை அனன்யாவுக்கு அனுப்பியிருந்தான்.சுபா பீச் ரிசார்ட் ஒன்றை புக் செய்திருந்தாள்.இரவு முழுவதும் party யில் கலந்து கொண்டனர் மூவரும். சுபாவையும், தீபாவையும் முத்தமிட்டான். லவ் யு விஷால் என்றனர் இருவரும். பீச்சுக்கு போய் ஆட்டம் போட்டனர் தீபாவும், சுபாவும் .அனன்யாவிடம் இருந்து மூவருக்கும கிப்ட் வந்திருந்தது . அது அவர்கள் ஊட்டியில் எடுத்த ஒரு நெருக்கமான போட்டோவாக இருந்தது .

விஷால் சுபாவையும் தீபாவையும் அணைத்தவாறே படுத்திருந்தான். விஷால்? என்ன சுபா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்றாள். கன்னத்தில் முத்தமிட்டான். தீபா ஆடிய களைப்பில் உறங்கி கொண்டிருந்தாள். நான் உனக்கு லவ் சொல்ல போறப்போ எப்படி பயந்தேன் தெரியுமா என்றாள் சுபா. அதெல்லாம் இப்போ எதுக்கு சுபா ? உனக்கு தெரியாது விஷால். நீ என்னை கிஸ் பண்ணி ஐ லவ் யு சொன்ன அப்புறம் தான் உயிரே வந்தது என்றாள்.சுபா நான் உன்னை ஏமாற்ற மாட்டேன். எனக்கு தெரியும் விஷால் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள். தீபா அவன் மேல் காலை தூக்கி போட்டாள்.அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் ரோஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது விஷால் ஆனா இந்த ரேவந்த் பண்ணினதுதான் பிடிக்கல என்றாள். என்னாச்சு அனன்யா திடீர்னு எல்லார் முன்னாடியும் ப்ரபோஸ் பண்ண ட்ரை பண்ணினான்.எனக்கு அவனை பார்க்க பாவமா இருந்தது. இப்ப ரொம்ப பீல் பண்றான். அங்கே எப்படி இருந்தது சுபா, தீபா என்ஜாய் பண்ணினாங்களா . ம்ம் ரொம்ப நல்லா இருந்தது party .

சுபாவும், தீபாவும் பிரிய மனமில்லாமல் ஊருக்கு கிளம்பினர். விஷால் நினைவுகளில் இருந்து மறக்க முடியாத காதலர் தினமாக இது இருக்கும். ரேவந்துக்கும்தான். சுபா ஊருக்கு போனதும் ஃபோன் பண்ணி போட்டோஸ் அனுப்பி இருக்கேன் பாரு என்றாள். இவர்களுடைய சின்னஞ்சிறிய உலகத்தில் காதல் மட்டுமே முக்கியமானதாக இருந்தது. அதற்காக சுபாவும், தீபாவும் காட்டும் அக்கறையும் அன்பும் விஷால் என்றைக்குமே மறக்க முடியாததாக இருந்தது .ரேவந்திடம் இருந்து விஷாலுக்கு அழைப்பு வந்தது .