Oru Devathai Paarkkum Neram Ithu - 32 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 32

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 32

விஷால் பெங்களூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கு அழைத்து போனான். பூங்காக்களில் புகைப்படம் எடுத்து கொண்டார்கள். பிறகு மைசூர் அழைத்து போனான். இயற்கை அழகு நிறைந்த பகுதிகளில் மெய் மறந்து போனார்கள்.ஊர் திரும்பும் நாள் வந்ததும் தீபா நான் போகலை ஊருக்கு என்றாள். சுபாவும், அனன்யாவும் அவளை கஷ்டப்பட்டு சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர். சுபா தீபா பாவம் தானே எவ்வளவு நாள்தான் விஷாலை பிரிந்து இருப்பாள் என்றாள் .விஷால் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தான். விஷால் நாம மூணு பேருமே ஆஸ்ட்ரேலியா போனா என்ன ? என்றாள் அனன்யா. அது கஷ்டம் அனன்யா. உனக்கு scholorship எளிதில் கிடைத்து விடும் . சுபாவுக்கு கூட ட்ரை பண்ணினா கிடைத்துவிடும் ஆனா எனக்கு கிடைக்காது என்றான். எனக்கு இன்டர்வியூ கால்ஸ் எல்லாம் வருது அதை முதல்லே அட்டென்ட் பண்ணுகிறேன் என்றாள் அனன்யா. சுபாவும் டான்ஸ் ஸ்கூல் தொடங்க முயற்சிகள் செய்து கொண்டுதான் இருந்தாள்.

அனன்யா அன்று காலையிலேயே இன்டர்வியூவிற்கு போனாள். போஸ்டிங் சென்னையில் இல்லாததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்ததாக சொன்னாள் . எல்லா வேலையும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் என்று விஷால் சொன்னான். விஷால் சென்னையில் நான் இருக்குற வரைக்கும் கொஞ்ச நாள் உன் கூட நிம்மதியா இருக்கணும் என்றாள். நாம ஊருக்கு போய் உங்க அப்பாவ பார்த்து பேசிட்டு வரலாமா அனன்யா? அவர் என்ன சொல்ல போறாரு ? நீ ஆஸ்ட்ரேலியா போறதுக்கு முன்னாடி நம்ம engagement வச்சிக்கலாம்னு ஒரு யோசனை. விஷால் நீயா இதை சொல்லுற. ஆமா அனன்யா . ரொம்ப சந்தோஷம் நான் அப்பாகிட்ட பேசுறேன். நான் எங்க அப்பா அம்மா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் என்றான் விஷால். எனக்கு கொஞ்சம் டைம் குடு விஷால் . முதல்ல அப்பா என்ன நெனைக்கிறார் அப்படின்னு தெரிஞ்சுகிக்கிறேன் . சரி அனன்யா . சுபா நீ என்ன நினைக்கிற ? உங்க engagement நல்ல ஐடியா தான். நல்லா grand ஆ celebrate பண்ணனும் விஷால் .

சுபா என்ன நினைப்பாளோ என நினைத்தான். நீ கவலைபடாதே விஷால் நான் உன் கல்யாணத்தை சிறப்பா நடத்துவேன் . அடுத்து நம்ம கல்யாணம்தானே இல்லை ஒருவேளை அது இல்லைனாலும் உன் கூடவே இருப்பேன் கடைசி வரை என்றாள். தீபாவிடமும் இது பற்றி பேசினான். அவளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னாள். அனன்யாவுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது அவளுடைய பாடும் திறமைக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. அனன்யாவுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியது.விஷால் உனக்கு பிடிக்கலைனா அந்த வேலை நமக்கு வேண்டாம் அனன்யா .சரி .விஷால் அப்பாவிடம் பேசினாயா அனன்யா ? என்றான். ம் உன்னையும் வர சொல்லுறார். சரி டிக்கெட் புக் பண்ணு. சுபா தனியாக இருப்பாளா ? நான் பார்த்து கொள்கிறேன் விஷால். நீ போய்விட்டு வா என்றாள்.

விஷாலும், அனன்யாவும் கோவிலுக்கு சென்றனர். எனக்கென்னவோ பயமாயிருக்கு விஷால் என்றாள் அனன்யா. அப்படி அவர் நம்மை கை விட்டாலும் பார்த்துக்கலாம் நீ வா என்றான். தாங்க்ஸ் விஷால்.அனன்யா அப்பா வா விஷால் என்றார் . உட்கார் . நேத்து உங்க அப்பா அம்மாவை பார்த்து பேசினேன் . நீ இப்போ நல்ல வேலைல இருக்கிறதா சொன்னாங்க. இவ வேற ஆஸ்ட்ரேலியா போறேன்னு சொல்லுறா. இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணினப்புறம் அனுப்பலாம்னு நெனைச்சேன் என்றார். இப்போ நீ வந்து engagement வச்சிக்கலாம்னு சொல்லுற. நாளைக்கு நாம எங்க குல தெய்வ கோவிலுக்கு போவோம் அப்புறமா எங்க ஆளுங்க கிட்ட பேசிட்டு சொல்லுறேன். நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் அவங்களால பிரச்சனை வரக்கூடாதில்லையா என்றார்.

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் என்னாச்சு அனன்யா அப்பா சம்மதித்து விட்டாரா ? 90% ஓகே தான் என்றாள். ரொம்ப சந்தோஷம் அனன்யா . நாளைக்கு குல தெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் உனக்கு ஃபோன் பண்ணுறேன் என்றாள். விஷால் தூங்கி விட்டாயா? எப்படி தூக்கம் வரும் அனன்யா? ம்ம் விஷால் இவ்ளோ நான் காத்திருந்தோம் நாளைக்கு ஒரு நாள் தானே என்றாள்.நீ என்ன நினைக்குற அனன்யா . நான் ஏன் முடிவுல உறுதியாத்தான் இருக்கிறேன். அது போதும் அனன்யா. மறுநாள் காலையிலேயே வீட்டுக்கு வந்து விட்டாள்.என்னாச்சு அனன்யா சரியா தூங்க வில்லையா ? அதெல்லாம் ஒண்ணும்இல்லை. என்னவோ உன்னை பார்க்கணும்னு மனசு துடிச்சது வந்துட்டேன். இரு நான் கிளம்ப இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் .காப்பி போட்டு தரேன் என்றான்.சரி விஷால்.


விஷால் கண்களை மூடி பிரார்த்தனை செய்தான். கடவுளே அனன்யா மனசு நோகும்படி எந்த முடிவும் கொடுத்து விடாதே என்றான்.
விஷாலை அங்கு வந்திருந்த பெரிய மனிதர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அனன்யாவும் , விஷாலும் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்தனர். தம்பி நல்லாதான் இருக்காரு என்றார்கள். எனக்கு ஒரு ரெண்டு வாரம் டைம் குடு விஷால் அதுக்குள்ள நல்ல முடிவா எடுக்க முயற்சி பண்ணுறேன் என்றார் அனன்யாவின் அப்பா .சுபாவுக்கும், தீபாவுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நம்பிக்கையோட இருங்க நல்லதே நடக்கும் என்றாள் சுபா. இன்னும் ஒரு நாள் இருந்துட்டு போகலாம் விஷால் என்றாள் அனன்யா. சரி லீவு கேட்டு பார்க்கிறேன் என்றான். ஒரு நாள் லீவு கிடைத்து விட்டது.
தீபாவை போய் பார்த்தார்கள் இருவரும்.வாழ்த்துக்கள் இருவருக்கும் என்றாள் தீபா. அனன்யா வெட்க சிரிப்போடு இருந்தாள். தீபா அம்மா இருவருக்கும் திருஷ்டி சுற்றி போட்டாள்.

விஷால் வீட்டுக்கு போனார்கள் . விஷால் அம்மாவிடம் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தாள் அனன்யா. இனிமே நான் இங்கேதான் இருக்கணும். நினைக்கவே ஹாப்பி யா இருக்குடா என்றாள்.அவள் மனதில் எந்த பயமும் இல்லை.சரி சாயங்காலம் வீட்டுக்கு வா என்றாள். பிரிய மனமில்லாமல் அனுப்பி வைத்தான். 4 மணி போல ஃபோன் செய்தாள். தீபா வந்திருக்கிறாள் அவளுக்கும் எனக்கும் ரோஸ் வாங்கிட்டு வா என்றாள். சரி அனன்யா அதோடு கொஞ்சம் ஸ்வீட்டும் வாங்கி வா என்றாள்.எங்கேஜ்மெண்ட் பற்றி ஆர்வமாக பேசிகொண்டிருந்தார்கள் தீபாவும், அனன்யாவும். விஷால் அவர்கள் பேசுவதையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ரோஸ் வைத்து விட்டான் இருவருக்கும். தீபா ஏக்கத்தோடு விஷாலை பார்த்தாள்.

கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருந்துவிட்டு தீபா கிளம்பினாள். எங்கேஜ்மெண்ட் ல என்னுடைய வேற லெவல் டான்ஸ் அவசியம் இருக்கும் என்றாள் தீபா.தாங்க்ஸ் தீபா என்றாள் அனன்யா.அனன்யா விஷாலை அணைத்துகொண்டு இன்னும் என்ன யோசிக்கிற என்றாள். ஒண்ணும் இல்லை. உன்னை முதலில் பார்த்த அந்த நிமிடத்தை தான் இப்பவும் எப்பவும் நினைக்கிறேன் என்றான்.அவள் தலையில் இருந்த ரோஸ் பூவை பார்த்து கொண்டிருந்தான். இரு உனக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வருகிறேன் என்றாள். வேணாம் அனன்யா என்றான். அதெல்லாம் சொல்லக்கூடாது நீ இந்த வீட்டு மாப்பிள்ளை என்றாள். அவள் ஸ்வீட் பண்ணியிருந்தாள். அவளுக்கு முதலில் ஊட்டினான். honeymoon எங்கே போலாம் விஷால். இனிமே எல்லாமே உன் விருப்பம் தான் அனன்யா. எனக்கு எல்லாமே நீ தான் என்றான்.

சென்னை திரும்பினார்கள் அனன்யாவும், விஷாலும். சுபா ஓடி வந்து அனன்யாவை கட்டிக்கொண்டாள். இன்னமும் அனன்யா அப்பா வெளிப்படையான சம்மதம் சொல்லவில்லை என்றான் விஷால். என்ன விஷால் இது என்றாள் அனன்யா.சுபா அவர்களுக்காக ஸ்பெஷல் ஆக சமைத்து இருந்தாள் . இது கல்யாண மயக்கம் என்று சொல்லும்படியாக அனன்யா கற்பனைகளில் மிதந்தாள் . அவளுக்கு வேலை கிடைத்து விட்டது. இன்னும் ரெண்டு நாளிலே ஜாயின் பண்ணனும் விஷால் என்றாள். சென்னையிலேயே போஸ்டிங் போட்டு இருந்தார்கள். விஷால் நான் ஆசைப்பட்ட மாதிரி எல்லாம் நடக்குது . நீ ஏன் விஷால் ஒரு மாதிரி இருக்கே என்றாள். அப்படியெல்லாம் இல்லை என்றான். அவளை முதல் நாள் அலுவலகத்தில் கொண்டு போய் விட்டு வந்தான் விஷால். பார்த்து நடந்துக்கோ அனன்யா என்றான்.

அந்த வார கடைசியில் மூவரும் மூவி போனார்கள். சுபா நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க என்றாள். அவளையும் இழுத்து கொண்டுதான் போனார்கள்.வரும் போது மழை வந்துவிட்டது. மழை ஒரு நல்ல அறிகுறி என்று நினைத்தான் விஷால். அனன்யா வேலை பற்றி ஒரு குறையும் சொல்லவில்லை. சுபாவின் வேலைக்காக முயற்சி செய்தார்கள் அனன்யாவும், விஷாலும். அவளும் இன்டர்வியூ போய் வந்தாள். சுபா அப்பா அடுத்த வாரம் வெளிநாட்டில் இருந்து வர போவதாக சொன்னாள் .நான் ஊருக்கு போய் அவரை பார்த்து பேசிவிட்டு வருகிறேன் என்றாள் சுபா. டிக்கெட் புக் பண்ணி குடுத்தாள் அனன்யா. வருவதற்கு 15 நாட்கள் ஆகும் என்றாள். அனன்யா நீ என் கூடவே இரு விஷால் என்றாள் இங்கிருந்தே தினமும் அம்பத்தூர் போ என்றாள் . சுபா ஊருக்கு புறப்பட்டு போனாள்.

அனன்யா சுபா அப்பா என்ன விஷயமா வந்திருப்பாரு ? என்றான் விஷால். அவர் சாதாரணமாத்தான் லீவுல வந்திருக்காருன்னு சுபா சொன்னா. சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் அப்பா உன்கிட்ட பேசனுமாம். சரி குடு . தம்பி எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கேன் அங்கிள் . பழசு எல்லாம் மறந்துடுங்க.சுபா மனசுல நீங்கதான் இருக்கீங்க. அவ டான்ஸ் ஸ்கூல் விஷயமா பேசுனா. நீங்கதான் தம்பி பண்ணி குடுக்கணும் . கண்டிப்பா அங்கிள்.மத்தது எல்லாம் உங்க அப்பா அம்மா கிட்டே பேசிக்கிறேன் தம்பி. சுபா நான் ஒண்ணும் பண்ணலை அவராதான் மனசு மாறி இந்த முடிவுக்கு வந்து இருக்காரு. இவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சுபா கொண்டாட்ட மனநிலைக்கு போனாள்.

என்ன சுபா தூங்கி விட்டாயா ? இல்ல விஷால் சொல்லு .. கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் சுபா . நிச்சயம் விஷால் . நான் அவசரபடுத்தலை . அனன்யாவும் வாழ்த்துக்களை தெரிவித்தாள் . டான்ஸ் ஸ்கூல் வேலைகளை பார்க்கணும் என்றாள் சுபா.சொந்த ஊரிலேயே டான்ஸ் ஸ்கூல் தொடங்கவேண்டுமென்பது அவள் விருப்பம்.விஷால் என்ன அனன்யா நாளைக்கு எங்கேயாவது போலாமா . எங்கே போகணும்னு மட்டும் சொல்லு நான் ரெடி என்றான். மகாபலிபுரமே போகலாம் என்றாள். ரொம்ப நாளாச்சு போய் என்றான். தீபா ஃபோன் பண்ணியிருந்தாள். அவள் கூட ரொம்ப நேரம் பேசி கொண்டிருந்தாள் அனன்யா. விஷால் தூங்கி போய்விட்டான். அனன்யா அவன் நெற்றியில் முத்தமிட்டு லவ் யு விஷால் என்றாள்.

மகாபலிபுரம் பீச் அவளுக்கு பிடித்திருந்தது . அனன்யா அவளுடைய கனவுகள் எல்லாம் நனவாகும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்றாள்.இவன் கையை பிடித்து கொண்டு சிறிது தூரம் நடந்தாள். அனன்யா என்னை தூக்கிக்கோ என்றாள். சிறிது தூரம் அவளை தூக்கி கொண்டு நடந்தான்.அனன்யா அவனோடு புகைப்படம் எடுத்துக்கொண்டாள் . இன்னும் கொஞ்ச நாளில் அவளுக்கே அவளுக்கென்று விஷால் இருப்பான். இதை நினைத்து பூரித்து போனாள் அனன்யா.அவர்கள் தங்களுடைய உலகத்தை கட்டமைத்து கொண்டிருந்தார்கள்.அனன்யாவை முத்தமிட்டான் விஷால்.
சுபாவும், தீபாவும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்கள். விஷால் உடனான காதலை எண்ணி சுபா மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
சுபா அப்பா விஷாலுடைய அப்பா அம்மா வை பார்த்து பேசினார். விஷாலுடைய விருப்பமே எங்கள் விருப்பம் என்று சொன்னார்கள். சுபா அப்பாவுக்கு அனன்யா பற்றி தெரிந்திருந்தாலும் சுபாவின் மனதை மாற்ற அவரால் முடியவில்லை. ஒரே பெண்ணான சுபாவின் வாழ்க்கையை வீணாக்க விரும்பவில்லை. விஷாலுக்கு ஃபோன் வந்தது . அப்போது தான் அவனுக்கு அந்த செய்தி இடி மாதிரி வந்து சேர்ந்தது .