Oru Devathai Paarkkum Neram Ithu - 30 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 30

Featured Books
  • तुझी माझी रेशीमगाठ..... भाग 2

    रुद्र अणि श्रेयाचच लग्न झालं होत.... लग्नाला आलेल्या सर्व पा...

  • नियती - भाग 34

    भाग 34बाबाराव....."हे आईचं मंगळसूत्र आहे... तिची फार पूर्वीप...

  • एक अनोखी भेट

     नात्यात भेट होण गरजेच आहे हे मला त्या वेळी समजल.भेटुन बोलता...

  • बांडगूळ

    बांडगूळ                गडमठ पंचक्रोशी शिक्षण प्रसारण मंडळाची...

  • जर ती असती - 2

    स्वरा समारला खूप संजवण्याचं प्रयत्न करत होती, पण समर ला काही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 30

எக்ஸாம்ஸ் தொடங்க இன்னும் ஒரு மாதமே இருந்தது. அனன்யாவுக்கும் இது தெரியும் என்பதால் கவனத்துடன் அவனுக்கு சொல்லி தந்தாள். சுபா ஒரு வாரம் கழித்து அவளுடைய காலேஜ் போனாள். தீபாவும் பொறுப்புடன் படித்து வந்தாள். விஷால்.. என்ன அனன்யா? ரொம்ப மாறி விட்டாய் நீ என்றாள். நீயும் தான் என்றான் . இது நல்லதுக்கா விஷால் எல்லாம் நல்லதுக்குத்தான்.விஷால் சட்டையை அவள் வீட்டில் மாட்டி அழகு பார்த்தாள் அனன்யா. இந்த சட்டை எனக்குத்தான் என விஷாலிடம் சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தாள். சுபா எனக்கும் ஒரு சட்டை குடு என்று விஷாலிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் . சுபா ப்ராஜக்ட் சப்மிட் செய்ய போயிருந்தாள். இன்னும் ஒரு வாரம் கழித்து வருவேன் என சொல்லி போயிருந்தாள் அதுவரை ஹாஸ்டலில் இருப்பாள்.

அனன்யா பொறுப்புடன் இவனை வழி நடத்தும் போது இன்னும் அழகாய் தெரிந்தாள். விஷால் நாம ஹையர் ஸ்டடீஸ் பண்ணலாமா ? அப்போ கல்யாணம் .. அது ஒரு பக்கம் இருக்கட்டும் விஷால் . இப்போ எதுக்கு மேலே படிக்கணும்னு சொல்லுற? என்னவோ உன்னை எங்க பார்த்தேனோ அந்த இடத்தை என்னால விட்டு வர முடியல என்றாள். ம்ம் என்னாலயும் தான் .சுபாவுக்கு ஃபோன் செய்தாள் அனன்யா எப்படி இருக்க சுபா நல்லா இருக்கேன் விஷால் என்ன பண்ணுறான் . ரொம்ப நல்ல பிள்ளை ஆயிட்டான். ம்ம் நான் வந்து அவனை கவனிச்சிக்குறேன்
விஷால் எப்படியாவது ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்க வேண்டுமென நினைத்தான்.

விஷால் நாளைக்கு நான் சொன்னேனே அந்த அங்கிள் போய் பார்ப்போமா .. உனக்கு நம்பிக்கை இருக்கிறதா அனன்யா . நிச்சயம் இருக்கிறது . சரி அப்போ நாளைக்கு அவரை ஈவினிங் போய் பார்ப்போம் . வாங்க என வரவேற்று காபி கொடுத்தார். விஷால் தானே உங்க பெயர். அனன்யா சொன்னா அவ குரலுக்கு எங்க வீட்டுல எல்லோருமே ஃபேன்ஸ். அவளுக்காக நிச்சயம் இந்த ஹெல்ப் பண்ணுறேன் என்றார்.நிச்சயம் நீங்க ரொம்ப லக்கி என்றார். உங்க ப்ரோஃபைல் குடுத்துட்டு போங்க . நான் இன்டர்வியூ அரேஞ்ச் பண்ணி தரேன் என்றார். ரொம்ப தாங்க்ஸ் சார் என்றான்.என்ன விஷால் ஓகே தானா என்றாள். ம்ம் ஓகே தான் . இனியாவது வொர்ரி பண்ணாதே என்றாள். தீபா ஃபோன் பண்ணி இருந்தாள் என்ன ஆச்சு ? அவர் இன்டர்வியூ அரேஞ்ச் பண்ணி தறேன்னு சொல்லி இருக்காரு . கங்க்ராட்ஸ் விஷால் என்றாள்.

அன்று இரவு 10 மணிக்கெல்லாம் தீபா தூங்க போய்விட்டாள். அனன்யா என்ன விஷால்? நாம சரியான பாதைலதான் போறமா? ஏன் விஷால் அப்படி கேக்குற? எப்படியும் நீ யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கிடுவ .. என்னை போய் காதலிக்கிறேன்னு சொன்னா, போதும் விஷால் நான் அழுவேன் என்றாள். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவளை காயப்படுத்தி விட்டதாக நினைத்தான். சாரி அனன்யா என்றான் , நீ ஒண்ணும் என்னையும் உன்னையும் கம்பேர் பண்ண வேண்டாம் என்றாள்.இரு சுபா கிட்டயே சொல்லுறேன் . வேணாம் அனன்யா .அவளை துரத்தி பிடித்தான் .இனிமே அப்படி சொல்ல மாட்டேன். பிராமிஸ்? பிராமிஸ் .அனன்யா பெருந்தன்மையாக சொல்லிவிட்டாலும் அவனுடைய மனம் இன்னும் அதே கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தது. அவள் நினைத்தால் எப்படியோ இருக்கலாம் . வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்கலாம் என்றும் நினைத்தான். அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் அது தன்னால் முடியும் என அனன்யா நம்புகிறாள். அந்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தான்.

சுபா வருவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. இவன் காலேஜ் போய் வந்து கொண்டிருந்தான். காலேஜ் முடிந்ததும் தான் இவனுக்கு உலகமே தெரிய போகிறது . அனன்யா அவனை சிறுபிள்ளை போல நேசிக்கிறாள்.அவளுக்கும் இந்த நிஜ உலகம் பற்றி புரிதல் கிடையாது . இப்படி பலவாறாக யோசித்தான் விஷால். என்ன யோசனை என்றாள் அனன்யா.. நான் உன்னைதவிர வேற எதை பத்தி யோசிப்பேன் அதானே பார்த்தேன். நாளைக்கு பீச் போவோமா ரொம்ப நாள் ஆகுது என்றாள். பீச் என்றதுமே தீபா ஓடி வந்தாள். நாளைக்கே போறமா என்றாள் எப்ப என ஆர்வமாய் கேட்டாள். நீயே சொல்லு தீபா என்றான். சாயங்காலம் போவோம் அப்போதான் அழகா இருக்கும் பீச். சரி கடல் கன்னி என்றான்.

பீச் ஏகாந்தமாய் இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததால் தீபாவுக்கு தலை கால் புரியவில்லை. தீபா பார்த்து விளையாடு என்றான். சரி விஷால் . அனன்யா அவளோடு சேர்ந்து கொண்டாள். இவன் இன்னும் கொஞ்ச நாள் அப்புறம் கல்யாணம், குழந்தை எல்லாம் வந்துவிட்டால் இந்த வெகுளித்தனம் போய்விடும் என நினைத்தான். விஷாலும் போய் அவர்களுடன் விளையாடினான். அனன்யா இவன் முதுகில் ஏறி கொண்டாள்.இப்படியே ரொம்ப தூரம் போகணும் விஷால் என்றாள். தீபா என்னையும் என்றாள். அவளையும் சுமந்தான். அனன்யா சிரிப்பை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அவன் குழப்பத்தை விட்டு வெளியே வந்தான். வா அனன்யா போகலாம் என்றான். இன்னும் கொஞ்ச நேரம், இன்னும் கொஞ்ச நேரம் என்று விளையாடினார்கள் தீபாவும் , அனன்யாவும்.இவன் முழுக்க நனைந்து விட்டான் .
அனன்யாவையும் , தீபாவையும் வீட்டில் விட்டான்.அனன்யா ஃபோன் பண்ணினாள் என்ன விஷால் அப்படியே விட்டுட்டு போயிட்ட.. நீ விளையாண்டு tired ஆக இருப்பே அதுதான் .. காரணம் சொல்லாதே மணி 8 தான் ஆகுது. நீ ஒரு 10 மணிக்கு தீபா வீட்டுக்கு வா என்றாள்.கடல் கன்னி தூங்கி விட்டாளா இல்லை முழிச்சிட்டு தான் இருக்கேன் என்றாள் தீபா. அனன்யா அப்போதுதான் வந்தாள்.தீபா கொஞ்சம் டீ வேணும் என்றாள் அனன்யா. சரி. ரொம்ப குளிருதுடா .. கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்ட என்றான் விஷால். அவளுடைய கைகளை தொட்டு தேய்த்தான். டீ குடித்தாள்.தாங்க்ஸ் தீபா என்றாள்.
தீபா டான்ஸ் ,விஷால் டான்ஸ் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு . விஷாலும் ,தீபாவும் இணைந்து ஆடினர். சூப்பர் என்றாள் அனன்யா. தீபா நான் தூங்க போறேன் என்றாள். சரி .

எனக்கு தூக்கம் வரலை, நீயும் தூங்க கூடாது விஷால் என்றாள் அனன்யா .விஷால் நிஜமாவே இன்னைக்கு பீச் விளையாட்டு அருமையா இருந்தது.மறுபடி எப்போ போவோம் விஷால்? எப்போ என்றாள்? சுபா வந்த பிறகு. நிச்சயமா? நிச்சயம்.சோபாவில் உட்கார்ந்து அவனை மடியில் சாய்த்து கொண்டாள்.இவன் அவளுடைய கண்களையே பார்த்து கொண்டிருந்தான். என்ன பாக்குற விஷால். இந்த கண்கள் அதுக்கென்ன பார்த்துக்கொண்டே இருக்கலாம். ம்ம் அப்புறம் இந்த உதடு .. அப்புறம் இந்த கழுத்து . போதும் விஷால். அவள் நெஞ்சோடு சேர்த்து அணைத்தாள். விஷால் என்னவோ புரியல உன் கூட இருந்தாலே நான் சந்தோஷமா இருக்கேன்டா என்றாள்.
தூக்கம் வருது என்றான்.பாடவா என்றாள். ம்ம் பாடி முடித்ததும் அவள் உதட்டில் முத்தமிட்டான் . அவள் இவனை நெஞ்சோடு சாய்த்து தழுவிக் கொண்டாள்.

சுபா வந்துவிட்டாள். அனன்யாவும் , தீபாவும் பீச் கதைகளை சொல்லி கொண்டிருந்தனர். மிஸ் பண்ணிட்டேனே என்றாள் சுபா. மறுபடியும் பீச் போவோம் என்றாள் தீபா.ப்ராஜக்ட் சப்மிட் பண்ணிட்டேன். இனி எக்ஸாம்ஸ் போனா போதும் என்றாள் சுபா. விஷாலுக்கு ஃபோன் செய்தாள். எங்கே இருக்க நீ என்றாள்.வீட்ல வேலையா இருக்கேன் . சரி நான் வரேன் அங்கே என்றாள். நான் போய் அவனை கூட்டி வருகிறேன் என்றாள் சுபா. வா சுபா எப்போ வந்தே இப்போதான் ஒரு மணி நேரம் ஆகுது. உக்காரு இதோ வந்து விடுகிறேன் என்றான்.
வா போகலாம் வீட்டுக்கு என்றாள் .அனன்யாவும் தீபாவும் வெயிட் பண்ணுகிறார்கள்.சரி போகலாம் என்றான்.


பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வாழ்க்கை ஓடி கொண்டிருத்தது விஷாலுக்கு. சென்னையில் இருந்து இன்டர்வியூ மெயில் வந்திருந்தது. அனன்யாவிடம் சொன்னான். போய்விட்டு வா விஷால் ஆல் தி பெஸ்ட் என்றாள். அவள் சில குறிப்புகளை சொல்லி கொடுத்தாள். அங்கிள் ஏற்பாடு செய்த இன்டர்வியூ தான் பயப்படாமல் போ என்றாள். அவருக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னாள். விஷால் சென்னைக்கு கிளம்பி போனான். இரண்டு கட்டமாக இன்டர்வியூ வைத்திருந்தார்கள். இவன் ரிட்டன் எக்ஸாம் பாஸ் செய்துவிட்டான். அடுத்தது நேர்முக தேர்வு வைத்திருந்தார்கள்.ஓரளவு நன்றாக செய்திருந்தான். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். என்னாச்சு விஷால் இன்டர்வியூ ? மெயில் போடுரோம்னு சொல்லி இருக்காங்க என்றான். நாளைக்கு கிளம்பி வரேன் என்றான். ஓகே விஷால்.

விஷால் ஃபர்ஸ்ட் இன்டர்வியூ தானே போக போக சரியாகிவிடும் என்றாள் சுபா.ரொம்ப தாங்க்ஸ் அனன்யா இப்போ நல்லா confident வந்துடுச்சு . சூப்பர் விஷால். அனன்யா விஷால் இன்டர்வியூ போனதற்காக ஒரு சிறிய ட்ரீட் வைத்திருந்தாள். ஐஸ் கிரீம் ஷாப் கூட்டி போனாள். தீபா, சுபா இருவரும் என்ஜாய் பண்ணினர் . அனன்யாவும் இவனும் ஐஸ்கிரீம் பகிர்ந்து கொண்டனர். விஷால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொன்னான்.அனன்யா எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றாள். சுபா விஷாலுக்கு வேலை கிடைச்சா பெரிய ட்ரீட் நான் தரேன் என்றாள். விஷால் எப்படியாவது இந்த வேலை கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டான்.
அனன்யா இன்டர்வியூ போக நல்ல உடைகள் வேண்டும் இவனுக்கு எடுக்க வேண்டும் என்றாள். சரி வா போவோம் என்று சுபா கிளம்பி விட்டாள். நாளைக்கு போவோம் என்றான் விஷால். சரி.

சுபா எங்காவது வெளியில் போகலாம் என்றாள் . ஷாப்பிங் மால் போகலாம் இவனுக்கு டிரஸ் எடுக்கலாம் என்றாள் தீபா. நால்வரும் ஷாப்பிங் மால் போனார்கள். இவனுக்கு பொருத்தமான உடைகளை தேடி எடுத்தார்கள்.அனன்யாவுக்கு ஒரு சாரி எடுத்து குடுத்தான் விஷால்.நல்லா இருக்கா அனன்யா . எனக்கு பிடிச்சிருக்கு என்றாள்.
தீபாவும், சுபாவும் சூப்பர் என்றனர். ஹோட்டல் ஒன்றில் நால்வரும் சாப்பிட்டனர். இரவு அனன்யா ஃபோன் பண்ணினாள் .விஷால் தூங்கி விட்டாயா என்றாள். இல்ல சொல்லு. வேலை கிடைச்ச உடனே சென்னை போலாமா என்றாள். இவன் சிரித்தான். என்ன சிரிக்கிற. கண்டிப்பா போகலாம் . உனக்குத்தான் என் மேல எவ்வளவு நம்பிக்கை என்றான். ஆமா விஷால் சென்னைக்கு போனா தினமும் உன் கூடவே இருக்கலாம்.என்னை எப்பவும் இப்படியே பார்த்துப்பியா விஷால். நிச்சயமா. குட்நைட் விஷால்.

அனன்யா மீதுள்ள அன்பை எப்போதுமே அவனால் மறைக்க முடியாது.முதலாம் ஆண்டு காதல் நிறைவு தேதி நெருங்கி கொண்டிருந்தது. சுபா தான் இதை சொன்னாள். இதை கொண்டாட வேண்டும் என்று அனன்யாவும் சொன்னாள். விஷாலுக்கு அனன்யா ஃபோன் பண்ணி காதலை வெளிப்படுத்திய நாளை அவனால் மறக்கவே முடியாது .கேக் ஆர்டர் செய்தார்கள்.அனன்யா ஒரு நல்ல ப்ரெசெண்ட் வாங்கி குடுக்கிறேன் விஷால் என்று சொன்னாள்.விஷால் அதெல்லாம் வேண்டாம் அனன்யா என்றான். இப்போதான் டிரஸ் எடுத்தோம் என்றான். இருக்கட்டும் விஷால் என்றாள். சுபாவுக்கும், அனன்யாவுக்கும் வாழ்நாளெல்லாம் அன்பு செலுத்த கடமை பட்டிருப்பதாக விஷால் நினைத்தான். தீபா பிறகு வந்தவள் என்றாலும் அனன்யா மீது தான் முதல் காதல்.

விஷால் என்ன யோசனை என்றாள் அனன்யா.ஒண்ணும் இல்லை நீ இல்லேன்னா இந்நேரம் என்னவாகி இருப்பேன் ? ஒன்னுமில்லாம போயிருப்பேன் . விஷால் எதுக்கு இப்படி பேசுற. நான் மட்டும் நீ இல்லாம போயிருந்தா நல்லாவா இருந்திருப்பேன். சுபா போதும் சண்டை போட்டது, இனிமே கட்டில் மேலே சண்டை போடுங்க என்றாள். காலேஜ் நண்பர்கள் வாழ்த்தினார்கள். விஷால் எல்லோருக்கும் நன்றி சொன்னான். பிரதிப்புக்கும் மனமார நன்றி சொன்னான். சுபா தன் வீட்டிலேயே எல்லா ஏற்பாடும் செய்தாள். விஷாலும் அனன்யாவும் சேர்ந்து கேக் வெட்டினார்கள். சுபாவுக்கும். தீபாவிற்கும் ஊட்டி விட்டான் விஷால்.அனன்யாவிற்கு மோதிரம் அணிவித்தான். ஃபங்சனுக்கு திவ்யாவும் வந்திருந்தாள் . சீக்கிரம் ஃபர்ஸ்ட் நைட் நடக்கட்டும் என்றாள் சிரித்து கொண்டே.