ப்ராஜக்ட் எதிர்பார்த்தபடி அந்த வாரத்தில் முடியவில்லை. சுபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நீ ஊருக்கு போ சுபா நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றான். இன்னும் ஒரு வாரம்தானே நான் இருக்கிறேன் என்றாள். அனன்யா கவலைப்படுவாள். நீ இருந்தாலாவது அவளுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும். சரி விஷால் நான் டிக்கெட் புக் பண்ணிவிட்டு உனக்கு சொல்கிறேன் . சரி சுபா. அனன்யா இரவு ஃபோன் செய்தாள். சுபா சொன்னாள். பரவாயில்லை விஷால் நீ வேலையை முடித்து விட்டு வா என்றாள். இவனுக்கு அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது .சரி அனன்யா பிறகு கூப்பிடுகிறேன் என்று சொன்னான். சுபாவை டிரைன் ஏத்தி விட சென்று இருந்தான். எனக்கு போகவே மனசு இல்லை என்றாள். நீ பத்திரமா போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு என்றான். தீபாவையும் பார்த்துக்கொள் என்றான். சரி விஷால்.
ப்ராஜக்ட் முடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. பிரசன்டேஷன் பண்ணுவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன. ஒரு வழியாக எல்லவற்றையும் சால்வ் செய்ய நண்பர்கள் உதவி செய்தார்கள். இவன் ஒரு சில இடங்களில் வேலைக்கு அப்ளை பண்ணி வைத்தான். சில இடங்களுக்கு நேராகவும் போய் வேலை கேட்டான். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். அவளிடம் தான் வேலையும் தேடுவதாக சொன்னான். விஷால் அதிகம் ஸ்ட்ரைன் பண்ணாதே பிறகு பார்த்து கொள்ளலாம் என்றாள். இல்லை சுபா என்னால் உங்களையெல்லாம் விட்டு ரொம்ப நாள் இருக்க முடியாது என்றான். இது நடந்து இரண்டு நாட்களுக்குள் அனன்யா ஃபோன் செய்தாள் . அப்பா சம்மதம் தந்துவிட்டார். நானும் சுபாவும் 6 மாதம் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க சென்னை வரோம் என்றாள். தீபா? அவளும் வருகிறாள். சரி அனன்யா கேட்கவே சந்தோஷமாய் இருக்கிறது என்றான்.உன் ப்ராஜக்ட் என்ன ஆச்சு அனன்யா . அது முடிந்து விட்டது என்றாள்.
அனன்யா இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் அனன்யா நான் வர என்றான். இப்போது எந்த பிரச்சனையும் இல்லை விஷால் நீ பொறுமையாக வா என்றாள். விஷால் நிம்மதி அடைந்தான். ஒரு வழியாக ப்ராஜக்ட் சக்சஸ்ஃபுல் ஆக முடிந்தது . பிரசன்டேஷன் நல்ல படியாக முடிந்தது . அனன்யாவும், சுபாவும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விஷாலை வீடு பார்க்க சொன்னாள் அனன்யா. அதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை அனன்யாவிடம் சொன்னான். சரி அப்போ நாங்க மூணு பேரும் தங்குகிற மாதிரி வீடு பார்த்து கொள்கிறோம் நீ தங்கியிருக்கும் பகுதியிலேயே என்றாள். சரி அனன்யா அவசர பட வேண்டாம் எதுவாக இருந்தாலும் யோசித்து செய் என்றான்.
விஷால் ஊருக்கு கிளம்ப தயார் ஆனான். இனி எக்ஸாம்ஸ் இருக்கிறது அது முடிந்தவுடன் சென்னை வருவான். நண்பர்களுக்கு எல்லாம் நன்றி சொன்னான். எப்போது வேண்டுமானாலும் வா விஷால் என்றனர். சுபாவும் , அனன்யாவும் சென்னைக்கு எக்ஸாம் முடிந்தவுடன் விஷால் உடன் வர எண்ணியிருந்தனர். தீபா அம்மா சற்று தயங்கி கொண்டிருந்தாள் . தீபா உடல் நிலை பற்றி அவள் அம்மா கவலைப் பட்டார்.தீபா நானும் சென்னைக்கு போவேன் என பிடிவாதமாய் இருந்தாள். விஷாலுக்கு தீபா அம்மா ஃபோன் செய்தாள் இவ ரொம்ப பிடிவதமா இருக்குறா தம்பி நீங்க கொஞ்சம் சொல்லுங்க என்றாள். நான் இப்போது ஊருக்கு தான் வருகிறேன் வந்து நேரில் பேசுகிறேன் என்றான். இவனுக்கும் உள்ளுக்குள் கவலையாக இருந்தது .
ப்ராஜக்ட் முடிந்தாலும் காலேஜில் சில வேலைகள் இருந்தது . அதையும் முடிக்க வேண்டும். அனன்யா இவன் வந்தவுடன் வீட்டுக்கு வந்து பார்த்தாள். அவள் இப்போது தெளிவாக இருந்தாள். விஷால் நான் சென்னைக்கு முன்னே போகிறேன் போய் வேலை தேடுகிறேன் என்றாள். அதெல்லாம் வேண்டாம் அனன்யா . எக்ஸாம் முடியட்டும் நாம மூணு பேரும் போவோம். அப்போ தீபா அவள் அம்மாவுக்கு அவளை விட்டா யாரு இருக்கா ? அதையும் யோசிக்கணும். சரி விஷால். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள்.மதியம் வீட்டுக்கு அனன்யா வை கூப்பிட்டு லஞ்ச் க்கு வந்துவிடு விஷால் என்றாள். தீபா இங்கதான் இருக்கா என்றும் சொன்னாள். அனன்யா இவனுடைய கையை பிடித்து கொண்டாள். இனி யாராலும் நம்மை பிரிக்க முடியாது என்றாள். அவளை அணைத்துகொண்டான்.
மதியம் பெரிய விருந்தே ஏற்பாடு பண்ணியிருந்தாள் சுபா. எதுக்கு சுபா இவ்வளவு. ரொம்ப நாள் ஆச்சு சேர்ந்து சாப்பிட்டு என்றாள். தீபாவை சமாதானபடுத்தினான். தீபா இப்போது நாங்கள் போய் செட்டில் ஆவதே கஷ்டம். அதனால் அப்புறம் உன்னை அழைத்து கொள்கிறோம் என்றான். என்னை கல்யாணம் பண்ணி கூட்டி போ விஷால் என்றாள். விஷால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாலும் அவளுடைய நிலமையிலிருந்து யோசித்தான். ஒரு 6 months வெயிட் பண்ணு நாம கல்யாணம் பண்ணிக்கொள்வோம் என்றான். சரி என்றாள். அனன்யாவும், சுபாவும் மௌனமாக இருந்தார்கள். மொட்டை மாடிக்கு போனார்கள். விஷால் நாளைக்கு காலேஜ் போகணும் அனன்யா என்றான். நானும் வருகிறேன் என்றாள். சரி
சுபா இவன் முகத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். விஷால் லேப்டாப்பில் ஏதோ பண்ணி கொண்டிருந்தான். என்ன சுபா .. பாவம் தீபா என்றாள். அவ ஹெல்த் தான் முக்கியம் என்றான். அனன்யா மடியில் தலை வைத்து படுத்திருந்தான். அனன்யா நீ என்ன சொல்லுறே . நீ சொல்லுறது சரிதான் விஷால் என்றாள். தீபா அமைதியாய் இருந்தாள்.தீபா என்று கூப்பிட்டான். என்ன விஷால்? என் மேல கோவம் இல்லையே என்றான் .இல்லை விஷால் எனக்கு உன் லைப் முக்கியம் என்றாள்.கொஞ்ச நாளைக்கு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எக்ஸாம் முடியும் வரை என்றான். இன்னைக்கு நைட் தீபா வீட்டுல மீட் பண்ணுவோம் என்றான். தீபா உனக்கு ஓகே தானே . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை வாங்க என்றாள்.
அனன்யா எதுவும் பேசாமல் படித்து கொண்டிருந்தாள். சுபாவும், தீபாவும் ஏதோ பேசிகொண்டிருந்தனர். விஷால் வந்ததும் அனன்யா அவனை கட்டிக்கொண்டாள். என்னாச்சு அனன்யா. நேத்து ஒரு கனவு கண்டேன் விஷால். பனி மலையா ? ஆமாம் விஷால். ஒண்ணும் பயபடாதே நாம கீழே விழ மாட்டோம் என்றான். தீபா கொஞ்சம் தண்ணி குடு என்றான். சுபாவும் கீழே போனாள். அனன்யா நாம இனிமேதான் தைரியமா முடிவு எடுக்கணும் என்றான். ஓகே விஷால்.சுபாவும், தீபாவும் விஷால் பக்கத்தில் உட்கார்ந்தனர். சுபா நான் வேலைக்கு சீக்கிரம் போகணும் அப்பதான் இந்த பிரச்சனை எல்லாம் தீரும் என்றான். சுபா அவன் தலையை கோதி விட்டாள். கொஞ்ச நேரம் படித்து கொண்டிருந்தான். சுபா, தீபா இருவரும் கீழே சென்றனர். அனன்யா அவனையே பார்த்துகொண்டிருந்தாள்.
நாம இன்னைக்கு கோவில் போகணும் என்று காலையிலேயே வந்துவிட்டார்கள் சுபாவும், தீபாவும். குளித்து ரெடி ஆகி போன போது கோவிலில் அனன்யா இருந்தாள். நீ எப்போ வந்தே என்றான் 6 மணிக்கு. அனன்யா ஸ்பெஷல் அர்ச்சனைக்கு கொடுத்திருந்தாள். கொஞ்சம் தாமதமானது .அனன்யா இவனுக்கு திருநீறு,குங்குமம் வைத்து விட்டாள் . சுபாவும், தீபாவும் கண்கள் மூடி பிரார்த்தனை செய்தனர். அனன்யா வீட்டில் டிபன் பண்ணியிருந்தாள் .சுபா, தீபா இருவரும் அனன்யாவுக்கு ஹெல்ப் பண்ணினர். சரி டைம் ஆச்சு காலேஜ் கிளம்பு என்றான். அனன்யா அவன் வண்டியில் எறிக்கொண்டாள். சரி நாங்க போயிட்டு வரோம் ஈவினிங் பார்க்கலாம் என்றான்.
காலேஜ் ரொம்ப நாள் கழித்து போனாதால் நண்பர்கள் விசாரித்தனர். ஹெச் ஓ டி கூப்பிட்டு பேசினார். என்னப்பா மூணு கல்யாணமா என்று சிரித்தார். இவன் அமைதியாய் இருந்தான். ப்ராஜக்ட் பத்தி பேசினார். உங்க சப்போர்ட்டுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார் என்றான்.மதியம் அனன்யா கூட லஞ்ச் சாப்பிட்டான். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் ரோஸ் வாங்கி வர சொல்லி. . ப்ராஜக்ட் சம்மந்தமாக கொஞ்சம் பேரை பார்த்தான். வீட்டுக்கு போகும் போது ரோஸ் வாங்கிகொண்டு போனான் . இவன் தீபா வீட்டுக்கு போகும்பொது மணி 10 30 ஆகி விட்டது. 3 பேரும் விழித்து இருந்தார்கள். ஏன் தூங்க போகலையா என்றான். ரோஸ் எங்கே என்றாள் தீபா. மூவருக்கும் வைத்து விட்டான் . அனன்யா ஏன் லேட் என்றாள். அவளை அணைத்து முத்தமிட்டான் . சாரி என்றான். தீபா நீ போய் தூங்கு என்றான். சரி விஷால். சுபாவுக்கும், அனன்யாவுக்கும் நடுவில் படுத்து கொண்டான். பயமா இருக்கு என்றான் . எதுக்கு. எப்படியாவது நல்ல வேலைக்கு போகணும் என்றான். சுபா அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அனன்யா அவனை நெருங்கி படுத்தாள்.
சுபா கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டாள் . அனன்யா இன்னும் தூங்காமல் இருந்தாள்.அவள் பக்கம் திரும்பி அவள் மார்பில் முத்தமிட்டான். அனன்யா இன்னும் ரெண்டு என்றாள். அவனுக்கு அனன்யாவை முதலில் சந்தித்த காலங்கள் நினைவுக்கு வந்தது. அவள் காலை இவன் மேல் போட்டு கொண்டாள். அனன்யா ஒரு 4 மணிக்கு எழுப்பி விடறியா கொஞ்சம் படிக்கணும் என்றான் . சரி விஷால். தீபாதான் வந்து எழுப்பினாள். அனன்யா தூங்கி கொண்டிருந்தாள்.தீபா காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அவள் கையை பிடித்து முத்தம் கொடுத்தான். இன்னைக்கும் காலேஜ் போனுமா விஷால் என்றாள் அனன்யா ?இல்லை கொஞ்சம் மெடீரியல் வாங்கணும் கடைக்கு போகணும் என்றான். நானும் வரேனே என்றாள் அனன்யா. சரி
என்னுடைய வண்டியிலே போகலாம் விஷால் என்றாள். சரி பாத்து ஓட்டு அனன்யா .. இருவரும் ஷாப்பிங் முடித்தனர். உள்ளே வா விஷால் என்றாள். ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள். அவள் டிவியை ஆன் செய்துவிட்டு , இப்போ வரேன் விஷால் என்று உள்ளே போனாள். உனக்கு பணம் தேவைப்படுமா விஷால்? இப்போ இல்லை என்றான்.
நம்ம நாளைக்கு பாங்க் போகணும் ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் என்றாள். சரி அனன்யா.அவளுடைய ப்ராஜக்ட் புக் கொண்டு வந்து காண்பித்தாள். நல்லா இருக்கா . சூப்பர் என்றான்.
சரி அனன்யா வீட்டுல எல்லாம் அப்படியே இருக்கு நான் போயிட்டு நைட் வரேன் என்றான். சரி விஷால்.
சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுதா ? முடிஞ்சுது . எனக்கு என்ன வாங்குன .. அனன்யா தான் உனக்கு ஏதோ fancy items வாங்குனா என்றான்.விஷால் நைட் வருவியா என்றாள். நிச்சயமா என்றான். தீபா தூங்கி கொண்டிருந்தாள். அனன்யா சாப்பிட்டாயா விஷால் என்றாள். சுபா ப்ராஜக்ட் புக் வாங்கி பார்த்தான். பட்ஜெட் அதிகமாக இருந்தது.கொஞ்ச நேரம் சுபாவிடம் பேசி கொண்டிருந்தான். அனன்யாவிடம் பாட சொல்லி கேட்டான். அவள் பாடி முடித்ததும் எல்லோ ரோஸ் ஒன்றை அவளுக்கும், தீபாவுக்கும் கொடுத்தான். தீபாவுக்கு ஸ்வீட் வாங்கி வந்திருந்தான்.
அனன்யா அந்த ரோஸ் உடன் போட்டோ எடுத்துக்கொண்டாள் . அனன்யா விஷால் எப்போ சென்னைக்கு போவோம் என்றாள். இன்னும் 2 மாதத்தில் என்றான்.
அனன்யாவுடன் பாங்க் சென்று ஃபார்ம் fillup செய்து கொடுத்தான். விஷால் எனக்கு தெரிஞ்ச ஒரு அங்கிள் கிட்ட உனக்கு வேலைக்கு சொல்லி இருக்கிறேன் என்றாள். அவர் நமக்கு எல்லா ஹெல்ப் பண்ணி தறேன்னு சொல்லி இருக்காரு . உனக்கு ஓகே வா. ஓகே தான் அனன்யா. உன் வீட்டுக்கு போலாம் ரொம்ப நாளாச்சு என்றாள். வீடு கிளீன் பண்ணவே இல்லை என்றான். இருவரும் சேர்ந்து சுத்தப் படுத்தினார்கள்.மதியம் food ஆர்டர் பண்ணினான் விஷால். எனக்கு உன் வீடு ரொம்ப பிடிக்கும் விஷால்.என்னைக்கு இருந்தாலும் நீ வர போற வீடுதானே என்றான். சுபா ஃபோன் பண்ணியிருந்தாள். வீட்டை சுத்தம் பண்ணிட்டு இருக்கோம் என்றான். நான் வரவா என்றாள். ஈவினிங் உன் வீட்டுக்குதான் வரோம் என்றான். அனன்யாவை சோபாவில் உட்கார வைத்தான் , நான் போய் குளித்து விட்டு வரேன் என்றான்.ஓகே விஷால் . அவனுடைய சட்டையை எடுத்து போட்டுக்கொண்டாள்.அவள் மனம் விஷாலுக்காக ஒவ்வொரு நொடியும் துடித்தது.