Oru Devathai Paarkkum Neram Ithu - 28 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 28

Featured Books
  • तुझी माझी रेशीमगाठ..... भाग 2

    रुद्र अणि श्रेयाचच लग्न झालं होत.... लग्नाला आलेल्या सर्व पा...

  • नियती - भाग 34

    भाग 34बाबाराव....."हे आईचं मंगळसूत्र आहे... तिची फार पूर्वीप...

  • एक अनोखी भेट

     नात्यात भेट होण गरजेच आहे हे मला त्या वेळी समजल.भेटुन बोलता...

  • बांडगूळ

    बांडगूळ                गडमठ पंचक्रोशी शिक्षण प्रसारण मंडळाची...

  • जर ती असती - 2

    स्वरा समारला खूप संजवण्याचं प्रयत्न करत होती, पण समर ला काही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 28

 தீபா செக் அப் காக சென்னை வந்திருந்தாள். சுபா போன் பண்ணி சொல்லி இருந்தாள் அவள் அம்மாவும் வந்திருந்தார் நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன் சுபா என்றான் ஓகே விஷால் என்ன சொன்னாரு டாக்டர் என விசாரித்தான் இப்ப பரவாயில்ல இருந்தாலும் ட்ரீட்மெண்ட் கண்டினியூ பண்ண சொல்லி இருக்காரு. நான் ரெண்டு நாள் இருந்துட்டு வரேன் என்றாள் தீபா அவள் அம்மாவிடம். தம்பி கொஞ்சம் ஜாக்கிரதையா பாத்துக்கங்க நான் போயிட்டு வரேன் என்றாள். சரி ஆன்ட்டி என்று சொன்னான் .சுபாவும் விஷாலும் ஸ்டேஷன் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர். தீபா சுபா ரூமிலேயே தங்கி கொண்டாள். சரி தீபா ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கிறேன் என்றான் பாண்டிச்சேரி அழைச்சிட்டு போறேன்னு சொன்னியே ஓ மறந்து போயிட்டேன். நாளைக்கு போவோமா சரி சுபா நீயும் வரியா நான் வரல விஷால் கொஞ்சம் வேலை இருக்கு அப்படியா . நாளை மறுநாள் மூணு பேரும் வேற எங்காவது போவோம் . சரி தீபா நாளை காலை ரெடியா இரு வந்த அழைச்சிட்டு போறேன் என்றான் விஷால்.

தீபா காலையில் தயாராக இருந்தாள். ப்ளூ கலர் சாரி உடுத்தி இருந்தாள்.
சரி வா போவோம் என்று வண்டியில் ஏற்றிக்கொண்டு பறந்தான். அனன்யா எப்படி இருக்கிறாள் என விசாரித்தான். அவ கொஞ்சம் பிஸியா தான் இருக்கிறாள். நைட் ஸ்டெடி எல்லாம் எப்படி போகுது பரவாயில்ல நீ இல்லாம போர் அடிக்குது என்றாள்.
அனன்யா போன் பண்ணி இருந்தாள் எங்கே இருக்கீங்க என்ன பண்றீங்க என்றாள் பாண்டிச்சேரி போகிறோம் என்றான் சுபா வரவில்லையா அவளுக்கு கொஞ்சம் வேலை நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள். சுபா ஒரு ரூம் போட்டு விடு ஈவினிங் நானும் வந்து விடுகிறேன் என்று சொல்லி இருந்தாள். அதே ரிசார்ட்டில் ரூம் போடலாம் என்று தீபா சொன்னாள் சரி தீபா தீபா உனக்கு எப்படி இருக்கு உடம்பு இப்போதைக்கு பரவாயில்ல விஷால் நான் நல்லாத்தான் இருக்கிறேன் ஆனால் டாக்டர்தான் விடமாட்டேங்குறாரு நீ மயங்கி விழுந்தது உனக்கு ஞாபகம் இல்லையா தீபா நல்லா ஞாபகம் இருக்கு அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்துகிறாய் சாரி தீபா.
பதினோரு மணிக்கு எல்லாம் ரூமுக்கு போய் விட்டார்கள் சரி தீபா கொஞ்சம் ரெஸ்ட் எடு ஒரு அரை மணி நேரத்தில் வெளியே போகலாம் என்றான். இவனுக்கும் அவளுக்கும் ஒரே அறை எடுத்திருந்தான். தீபா குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டாள் இவன் அவளது மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தான்.


ஏதாவது சாப்பிடறியா தீபா? ஆமா விஷால் எனக்கு பசிக்குது. சரி வா போவோம் என்று பக்கத்தில் இந்த ஹோட்டலுக்கு போனார்கள் அவள் நீ சாப்பிடலையா என்றாள். எனக்கு பசிக்கவில்லை தீபா சும்மா சாப்பிடு விஷால் என்று சொன்னாள்.
பிறகு பக்கத்தில் உள்ள இடங்களை சுத்தி பார்த்தார்கள் பாண்டிச்சேரியில் உள்ள ஆசிரமங்கள். சர்ச்சுகள் போன்றவற்றை சுற்றி பார்த்தார்கள் பிறகு போட் ஹவுஸ் போனார்கள். கடைசியாக பீச்சுக்கு வந்தார்கள் அவள் போய் விளையாடிக் கொண்டிருந்தாள் விஷால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.நீயும் வா விஷால் என்றாள். அவள் அருகில் போய் நின்று செல்பி எடுத்துக் கொண்டான் நல்லா இருக்கு இந்த பீச் என்ன அனன்யாவும் சுபாவும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றாள். அவள் நன்றாக நனைந்து விட்டாள் போதும் தீபா ஜலதோஷம் பிடித்து விடப்போகிறது என்றான் எனக்கு ஒன்றும் இல்லை விஷால் ஒன்னும் ஆகாது என்று அவனை கட்டிக் கொண்டாள். அங்கேயே இருவரும் அமர்ந்து இருந்தனர். ரொம்ப தேங்க்ஸ் விஷால் எனக்காக லீவு போட்டியே என்றாள் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நீ சந்தோஷமா இருக்கியா அதுதான் முக்கியம். 5 மணி போல சுபாவுக்கு போன் பண்ணினான். எங்க இருக்க சுபா கிளம்பிட்டியா கிளம்பிட்டேன் விஷால் . இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன் என்றாள். தீபா இவனுக்கு ஒரு டிரஸ் எடுத்து வந்திருந்தாள். அதை போட்டுக்காட்டும்படி கேட்டுக் கொண்டாள். நன்றாக இருந்தது. தேங்க்யூ தீபா என்றான்
சுபா 7 மணிக்கு வந்து விட்டாள் அவளை பார்த்ததும் தீபா உற்சாகம் அடைந்தாள். இவன் சரியாவே பேச மாட்டேங்கிறான் என்றாள் தீபா. ஏன் விஷால் இப்படி பண்ற என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் சுபா.
சுபா வந்ததும் காபி ஆர்டர் செய்தான். தீபா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சுபாவும் இவனும் வெளியே வந்து பேசினார்கள். என்ன சுபா வேலை எல்லாம் முடிந்ததா? அல்மோஸ்ட் எல்லாம் முடிந்தது இனி பிரசண்டேஷன் பாக்கியிருக்கிறது என்றாள். வாக்கிங் போய்விட்டு வருவோமா என்றான் விஷால். தீபாவையும் அழைத்துக் கொண்டு பீச் ஓரமாக நடந்தான் இருவருடைய கையையும் பிடித்துக் கொண்டான்.தீபாவும் சுபாவும் கொஞ்சம் மெதுவாக நடந்து போகலாம் விஷால் என்றார்கள். சாரி சாரி நான் ஏதோ நினைப்பில் இருக்கிறேன். அனன்யாவுக்கு போன் பண்ணி
சுபா பேசினாள். உன்னை மிஸ் பண்ணுகிறோம் என்று சொன்னாள்.

சுபா அப்பாவிடம் பேசினாயா ஏதாவது சொன்னாரா அவரிடம் பேசி ரொம்ப நாள் ஆகிறது என்றாள். சோளக்கதிர் வாங்கி கொடுத்தான் மூவரும் சாப்பிட்டார்கள் தீபா எனக்கு கொஞ்சம் உட்கார வேண்டும் போல் இருக்கிறது என்றாள். அங்கு இருந்து பெஞ்சில் மூவரும் உட்கார்ந்தார்கள்.
என்ன ஆச்சு தீபா காலையிலிருந்து நடக்கிறோம் இல்லையா அதான் வேற ஒன்னும் இல்லை என்றாள். சுபா நீ என் கவலையாக இருக்கிறாய் விஷால் என்னவோ அனன்யா இல்லாத ஒவ்வொரு நிமிடமும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்றான் தீபாவும் சுபாவும் அவனுக்கு ஆறுதல் கூறினார்கள் .
நாளைக்கு எங்கே போகிறோம் விஷால் இன்னும் சில இடங்கள் இருக்கின்றன என்று அவற்றைப் பற்றி விளக்கினான்.

தீபா இப்போதும் டான்ஸ் ஆடுகிறாயா என்றான் எப்பவாவது ரொம்ப ஜாலியாக இருந்தால் ஆடுகிறேன் இன்னைக்கு நைட்டு ஆடுவோமா விஷால். விஷால் விழுந்து விழுந்து சிரித்தான் ரொம்ப நாளாச்சு இல்ல என்றான் . ஆமாம் விஷால். தீபா சுபா கூட சேர்ந்து ஆடுவோமா என்றான். சுபா வெட்கப்பட்டாள் என்ன வெட்கம் எல்லாம் படுற . மூணு பேரும் ஆடி ரொம்ப நாள் ஆகப்போகிறது என்றாள் சுபா.

பிறகு மூவரும் ஐஸ்கிரீம் ஷாப்புக்கு சென்றனர் விஷாலும் தீபாவும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தனர். சுபாவோட ஐஸ்கிரீமை விஷால் பகிர்ந்து கொண்டான். நல்லா இருக்குல்ல என்றான்.எட்டு மணி போல ரூமுக்கு போனார்கள் . நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க நான் இப்ப வந்துடறேன் என்று வெளியே போனான். அனன்யாவுக்கு போன் செய்தான் என்ன அனன்யா என்ன பண்ற? சாப்பிட்டுட்டு இருக்கேன் விஷால் சரி அப்புறம் பண்ணட்டுமா பரவால்ல சொல்லு விஷால் நீ இல்லாம ஒரே போரா இருக்குது அதான் தீபா சுபா இருக்கிறார்களே ஒரு டான்ஸ் போட வேண்டியதுதானே என்றாள்,
ப்ராஜெக்ட் எந்த அளவு இருக்கிறது என்றான் விஷால். அது முடியும் தருவாயில் இருக்கிறது விஷால் என்னை விட்டுட்டு போய்ட்டீங்களா என்றாள். ப்ராஜெக்ட் இல்லைன்னா உன்னையும் கூப்பிட்டு இருப்பேன் என்றான் விஷால். சரி அனன்யா மறுபடியும் கூப்பிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சில ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொண்டு வந்தான்.

ஒன்பது மணி போல ரெஸ்டாரண்டுக்கு சென்றார்கள் தீபா அவள் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் நடந்தார்கள். விஷால் அதுக்குள்ள ரூமுக்கு போகணுமா என்றாள் சுபா. மூவிக்கு போகலாமா என்றாள் தீபா. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாள் சுபா. எத்தனை நாள் ஆகிறது படத்துக்கு போய் என்றாள் சுபா.
இரு நாங்கள் டிரஸ் மாற்றி விட்டு வருகிறோம் என்றார்கள். படம் நன்றாக இருந்தது . 12:00 மணி போல ரூமுக்கு திரும்பினார்கள். நான் கீழே படுத்து கொள்கிறேன் என்றான். அதெல்லாம் முடியாது மூணு பேரும் மேலே படுத்துக் கொள்வோம் என்றாள் தீபா.தீபா ஒரு ஓரத்திலும் விஷால் ஒரு ஓரத்திலும் படுத்துக்கொண்டான் சுபா நடுவில் படுத்து இருந்தாள்.சுபா அவனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள் .
தீபா தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தாள் என்ன ஆச்சு தீபா என்றான் உன் மடியில் படுத்துக்கட்டா விஷால் என்றாள். சரி என்றான். சுபாவும் எழுந்து கொண்டாள். அவள் லேப்டாப்பை எடுத்து சில வேலைகளை செய்து கொண்டிருந்தாள். தீபாவை மடியில் போட்டு தட்டிக் கொடுத்து கொண்டு இருந்தான் விஷால். கொஞ்ச நேரத்தில் தூங்கி போனாள். சுபா வந்து இவன் மேல் சாய்ந்து கொண்டாள்.அனன்யாவுக்கு அன்றைய தினம் எடுத்த போட்டோக்களை அனுப்பினான் விஷால். சூப்பர் என்று ரிப்ளை கொடுத்திருந்தாள்.

மறுநாள் காலையிலேயே கிளம்பி கோவிலுக்கு போனார்கள். விஷால் தீபாவுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்திருந்தான். இன்னும் சிறிது காலம் பிடிக்கும் அவள் குணமாக என்று சொல்லி இருந்தார்கள் அதுவரை கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். அவளுக்காக வேண்டிக் கொண்டான். இன்னும் சில இடங்களுக்கு போனார்கள் அங்கெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். விஷால் பிரியாணி சாப்பிடுவோமா என்றாள் தீபா.மதியம் அவள் ஆசைப்பட்ட மாதிரி அன்லிமிட்டட் பிரியாணி கடைக்கு கூட்டி சென்றான்.இந்த முறை பாரடைஸ் பீச்சுக்கு சென்று இருந்தார்கள் அப்புறம் ராக் பீச்சுக்கு சென்றார்கள்..தீபா ரொம்ப சந்தோஷம் விஷால் என்றாள் . அவளை கட்டி அணைத்து முத்தமிட்டான். தனியா போயிடுவியா தீபா நான் போய் விடுவேன் என்றாள். அவளை ஸ்டேஷன் வரை சென்று வழி அனுப்பி வைத்தான்.சுபா ரூமுக்கு போயிருந்தான் நீ தீபாவிடம் சரியாகவே பேசவில்லை விஷால் ஆமாம் சுபா நான் அனன்யாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றான். சுபா அனன்யாவுக்கு போனை போட்டாள். விஷால் ரொம்ப ஃபீல் பண்ணுகிறான் என்றாள். போனை அவனிடம் கொடு என்றாள்.விஷால் நீ எப்படி இருக்கியோ அதை விட பல மடங்கு உன் நினைவோடு இருக்கிறேன் நான். அதனால நீ கவலைப்பட்டால் அது என்னையும் தான் பாதிக்கும் ஜாலியா இரு விஷால் என்றாள். சரி சுபா நான் கிளம்புகிறேன் என்றான் .. நாளைக்கு போன் பண்றேன்.அந்த வார கடைசியில் சுபா ப்ராஜக்ட் முடித்து விட்டாள். இவனுக்கு உற்சாகமாக ஃபோன் செய்து சொன்னாள். விஷால் இனி நான் ஃப்ரீ தான் எப்போ வேணா நாம மீட் பண்ணலாம் என்றாள்.வாழ்த்துக்கள் சுபா என்றான்.


ப்ராஜக்ட் முடிஞ்சதுக்காக ட்ரீட் குடுக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வராங்க நீயும் வா விஷால் என்றாள். நானா ? ஆமாம் விஷால் என்னைக்கு ? நாளைக்கு சாயங்காலம் 6 மணிக்கு . வேலை முடித்து விட்டேன் என்றால் அவசியம் வருகிறேன் என்றான். நீ கட்டாயம் வா விஷால். நாம டான்ஸ் ஆடலாம் என்றாள். எப்படியோ கொஞ்சம் லேட் ஆக போய் சேர்ந்தான் விஷால். அவளுடைய நண்பர்களுக்கு இவனை அறிமுகப்படுத்தி வைத்தாள். விஷால் ஒரு கிப்ட் வாங்கி கொண்டு போயிருந்தான். சீக்கிரமே வேலைக்கு போக வேண்டும் விஷால் என்று சொல்லி கொண்டிருந்தாள். விஷால் உற்சாகமாக டான்ஸ் ஆடினான். அவளும் ஆடினாள். அந்த வீடியோ வை தீபாவுக்கும் , அனன்யாவுக்கும் ஷேர் செய்தான்.சுபா இப்போ ரூம் ல நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றாள். மத்தவங்க ஊருக்கு போய்விட்டாங்க என்றாள். நீ வா விஷால் ரூமுக்கு போவோம் என்று party முடிந்ததும் அழைத்து சென்றாள். அனன்யாவிடம் பேசினார்கள். விஷால், தீபா ரெண்டு பேருமே சூப்பர் டான்ஸ் என்றாள். அனன்யா சாப்பிட்டாயா என்றான், இனிமேல்தான். விஷால் சீக்கிரம் வாடா என்றாள். அடுத்த வாரம் நானும் சுபாவும் வந்து விடுவோம் என்றான். மிஸ் யு லவ் யு அனன்யா என்றான்.