Oru Devathai Paarkkum Neram Ithu - 27 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 27

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 27

ஈவினிங் 4 மணி போல தீபாவும் சுபாவும் எழுந்தனர். அனன்யா டீ அரேஞ்ச் செய்தாள். எங்க போன அனன்யா என்று கேட்டாள் சுபா . பக்கத்துல விஷால் கூட இருந்தேன் என்றாள். சரி கடைக்கு போவோமா கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டும் என்றாள். விஷால் நீயும் வா என்றாள். பர்த்டே party கொண்டாட தேவையான பொருட்களை வாங்கினாள் அனன்யா. தீபா மேக்அப் சாமான்கள் சிலவற்றை வாணங்கினாள். தீபா அவள் அம்மாவுக்கும் சில பொருட்களை வாங்கினாள் . இங்கே நெறைய பீச் இருக்கு நாம சண்டே போய் பார்ப்போம் என்றான். ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து 10 மணிக்கு ரூம் திரும்பினார்கள். அங்கே இருந்த party ஹாலில் பர்த்டே கொண்டாட பேசி வைத்திருந்தான் விஷால். நான்கு பேரும் அந்த ஹாலை அலங்கரிக்க தொடங்கினர்.அனன்யா நேர்த்தியாக செய்து முடித்தாள்.

மணி 12 அடித்த போது ஹாப்பி பர்த்டே சுபா என்று பாடி வாழ்த்தினார்கள். கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள் சுபா. அவள் இப்போது சற்று மகிழ்ச்சியாக இருந்தாள்.விஷால் தூங்க போறியா என்றாள் இல்லை கொஞ்சம் வேலை இருக்கு . இன்னைக்குமா? ஒரு அரை மணி நேரம் என்றான். சுபாவும் ,அனன்யாவும் இவன் ரூமிலே டிவி பார்த்தனர். தீபா அவர்கள் ரூமில் டிவி பார்த்தாள். கொஞ்ச நேரத்தில் தீபா வந்து என்ன பண்ணுறீங்க எல்லாம் என்றாள்.இவன் லேப்டாப்பில் எதையோ தட்டிக்கொண்டிருந்தான். விஷால் நாளைக்கு பார்க்க கூடாதா இதெல்லாம் என்றாள் தீபா. கொஞ்சம் அர்ஜண்ட் என்றான். சுபா புது சாரியில் தேவதை மாதிரி இருந்தாள்.சரி வாங்க போவோம் இந்த டிரஸ் மாத்திட்டு வருவோம் என்று போனார்கள். விஷால் வேலையை முடித்து விட்டான். சுபாவுக்கென வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை ஊட்டி விட்டான். சுபாவும் , அனன்யாவும் ஆளுக்கொரு பக்கமாக படுத்து கொண்டனர். விஷால் ? என்ன அனன்யா.. மனசே இப்போதான் ஹாப்பி யா இருக்கு. ம்ம் சுபா அவன் மேல் காலை தூக்கி போட்டாள். தீபா அவள் லேப்டாப்பில் ஏதோ படம் பார்த்து கொண்டிருந்தாள்.

ஒரே வீட்ல நாம எல்லாம் நின்னைக்கவே சந்தோஷமா இருக்குடா விஷால் என்றாள் அனன்யா . அவள் கன்னத்தை தட்டினான். உனக்கு ஒரு ரூம், சுபாவுக்கும் எனக்கும் ஒரு ரூம், தீபாவுக்கு ஒரு ரூம் என்றான். ம்ம் தாங்க்ஸ் விஷால் என்றாள் சுபா விஷாலை அணைத்து கொண்டாள். உனக்கு கனவு வராதா சுபா. வருமே ஆனா எல்லாம் கெட்ட கனவா வரும் என்றாள். அனன்யாவை சேர்த்து அணைத்தான். இன்னிக்கு டெகரேஷன் சூப்பர் என்று கன்னத்தில் முத்தம் இட்டான். நான் எங்க படுக்கிறது என்றாள் தீபா . மூவரும் சிரித்தார்கள். தீபா வெட்கம் வர மெல்ல சிரித்தாள். அனன்யா எல்லோருமே வேலைக்கு போனால்தான் ஓரளவு நல்லா இருக்க முடியும் என்றான். சரி விஷால் .

அனன்யா தூங்கி விட்டாள். சுபா பகலிலே தூங்கி விட்டதால் விழித்து கொண்டு இருந்தாள். தீபாவும் ஒரு பக்கமாக படுத்து உறங்கினாள். வா சுபா வெளியே போவோம் என்றான். கடற்கரை காற்று சில்லென்று வீசியது.சுபா விஷால் நான் நெனைக்கிற மாதிரி நம்ம வாழ்க்கை இருக்குமா ? நிச்சயமா இருக்கும் . அனன்யா விஷால் என்று கூப்பிட்டாள். என்ன ஆச்சு? எங்கேயும் போகாதே என்றாள் தூக்கத்தில்.நமக்கு கடற்கரை ஒட்டி ஒரு வீடு வேணும் விஷால். நாம எப்பவுமே அங்க சந்தோஷமா இருக்கணும். சுபாவை கட்டிக்கொண்டான். விஷால் எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று அவள் ரூமுக்கு போனாள். சுபா அவளுடைய ஃபிரண்ட்ஸ்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்தாள் . வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி கொண்டிருந்தாள்.தீபாவுக்கு பக்கத்தில் படுத்து கொண்டான். சுபாவும் கொஞ்ச நேரம் கழித்து வந்து படுத்தாள் . ஏதாவது ஒரு லைட் எரியட்டும் என்றான் விஷால். சுபா அவனை அணைத்து கொண்டு எனக்கு உன்னை மாதிரி பையன் வேணும் விஷால் என்றாள். நிச்சயமா என்றான் . மூன்று மணி போல அனன்யா இவனை எழுப்பினாள்.சுபாவின் அணைப்பில் இருந்து விடுவித்து கொள்வது சிரமமாக இருந்தது.

அனன்யா இப்போ பீச்சுக்கு போலாமா என்றாள். ரொம்ப குளிருமே .. பரவாயில்லை என்னை கட்டிக்கோ வா போகலாம் என்றாள். சுபாவிடம் சொல்லி விட்டு கிளம்பினான். அனன்யா இங்க உட்காரலாம் என்றாள். அந்த குளிரிலும் சிலர் வாக்கிங் போனார்கள்.இந்த அமைதி ரொம்ப பிடிச்சிருக்கு நீயும் நானும் இந்த கடலும். இதென்ன கவிதை மாதிரி.அனன்யா ரொம்ப குளிருதுடா என்றாள். அவனது ஸ்வெட்டர் கழட்டி குடுத்தான். சூப்பர் விஷால் நல்லா இருக்கு என்றாள். உன் மனசுல நான் எப்பவுமே இப்படி நெருக்கமா இருப்பேனா விஷால். நீ என் உயிர் அனன்யா என்றான். உன்னை முதன் முதலா பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டேன். உனக்காக எதையும் செய்வேன் அனன்யா .
அவளை தூக்கிகொண்டு கடல் அலையில் சிறிது தூரம் நடந்தான். நீ எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியாது அனன்யா . ம்ம் உன்னை மாதிரி 2 பெண் பிள்ளை வேணும் என்றான்.நான் இப்பவே ரெடி என்றாள்.

விடிந்தும் விஷால் தூங்கி கொண்டிருந்தான் . மணி 7 ஆகி விட்டிருந்தது. மூன்று பெண்களும் குளித்து தயாராக இருந்தனர். விஷால் எங்க போறோம் நம்ம என்றான் . கோவிலுக்கு என்றார்கள்.
நான்கு பேரும் சாமி கும்பிட்டார்கள். தீபாவுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என வேண்டிக்கொண்டான். என்ன வேண்டுற என்றான் அனன்யாவிடம் .. ம்ம் அதெல்லாம் சொல்லக்கூடாது என்றாள்.
நால்வரும் பாண்டிச்சேரி சுற்றி பார்க்க காரில் கிளம்பினர். பாண்டிச்சேரி பீச் ரொம்ப அருமையாக இருந்தது . நாள் முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு மாலை ரிசார்ட் திரும்பினார்கள் . நாளைக்கு கடலூர் பீச் இருக்கிறது அங்கே போவோம் என்றான். நால்வரும் டீ குடித்தனர். இவன் ப்ராஜக்ட் வேலைகளை கவனித்தான். சுபாவும் அவளுடைய வேலையை கவனித்தாள். தீபா இவனையே பார்த்துகொண்டிருந்தாள். ஒரு 1 மணி நேரம் வந்து விடுகிறேன் தீபா என்றான். ஓகே விஷால்.

மாலை வாக்கிங் போனார்கள். ரொம்ப தூரம் வந்துவிட்டோம்... பானி பூரி சாப்பிடுவோம் என்றாள் தீபா . வாங்கி கொடுத்தான். தீபா என்னவோ சொல்ல வந்தாயே ,ஒண்ணும் இல்லை என்றாள். சும்மா சொல்லு ..அடுத்த மாதம் நான் வரப்போ நாம பாண்டிச்சேரி வரலாமா விஷால். நிச்சயமா என்றான். அவள் தாங்க்ஸ் விஷால் என்றாள். அனன்யா அருகில் இருந்த பெஞ்சில் எல்லோரையும் அமர்த்தி போட்டோ எடுத்தாள். ஏற்கனவே நிறைய போட்டோ எடுத்து வைத்து இருந்தாள். இது ஒரு கனவு மாதிரி இருந்தது விஷாலுக்கு. அனன்யா என்ன விஷால் யோசனை என்றான். நான் உன்னை பார்த்ததும் இந்த உலகத்தை மறந்து போயிடுறேன் என்றான்.

இரவு உணவுக்கு பின் சுபாவும் தீபாவும் அறைக்கு போய் விட்டார்கள். அனன்யா விஷால் .. விஷால் என்ன அனன்யா .. நாம குழந்தைக்கு ட்ரை பண்ணலாமா ? அவளை ஓடி பிடித்தான். உனக்கு இருக்கிற தைரியம் எனக்கில்லை அனன்யா. ஆசையா இருக்குடா என்றாள் கையை பிடித்துக்கொண்டே . அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு அனன்யா. நாம சந்தோஷமா இருக்குறப்பவே பேபி வேணும் என்றாள்.
அவன் சிரித்தான். சீக்கிரமே நடக்கும் அனன்யா என்றான். சுபா வந்து என்ன பேபின்னு பேச்சு அடிபடுது. அனன்யாவுக்கு இப்போவே வேணுமாம். சுபா விழுந்து விழுந்து சிரித்தாள்.

தீபா அவள் ரூமிலே தூங்கி கொண்டிருந்தாள். சுபா ஒரு பக்கம் அனன்யா மறுபக்கம் என படுத்து இருந்தனர். சுபா நெருங்கி அவளுடைய மார்புகளை அவன் மேல் அழுத்தினாள் . என்ன என்றான் எனக்குதான் ஃபர்ஸ்ட் பேபி என்றாள். அனன்யா சிரித்தாள். நான் ஏற்கனவே சொல்லி வைத்து விட்டேன் என்று விஷால் மேல் கால் போட்டாள். ரெண்டு பேரும் படிப்பை நல்லபடியா முடிங்க என்றான். ம்ம் ஹூம் என்றாள் அனன்யா. அனன்யா அவன் முதுகில் மார்புகளை அழுத்தினாள் . வேணும் விஷால் எப்பவுமே நீ எனக்கு வேணும் என்றாள். தீபாவை போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று போனான். தீபா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். கிட்டே போனதும் விஷால் என்ன வேணும் என்றாள். சும்மாதான் வந்தேன் என்றான். விஷால் ஐ லவ் யு சோ மச் என்றாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டு வந்தான்.

அன்று சில்வர் பீச் போனார்கள். தீபா ரொம்பவும் சந்தோஷபட்டாள் . விஷால் சூப்பரா இருக்கு என்றான் . அனன்யா,சுபா இருவரும் ஓடி பிடித்து விளையாடினர். விஷால் நீயும் வா என்றனர். நீங்கள் விளையாடுங்கள் நான் வீடியோ எடுக்கிறேன் என்றான். அந்த காட்சி ஒரு ரம்மியமான பெயிண்டிங் போல இருந்தது .விஷால் வாங்க போய் சாப்பிட்டு வந்து விளையாடலாம் என்றான். மாலை 3 மணிக்கு ரூம் திரும்பினார்கள்.கடலிலே விளையாண்டு உற்சாகமாக இருந்தார்கள் மூவரும். விஷால் இந்த பெண்களை இதே சந்தோஷத்தோடு வைத்திரு கடவுளே என வேண்டிக்கொண்டான்.

தீபாவும், அனன்யாவும் தூங்கினர். சுபா வேலையாய் இருந்தாள். விஷால் இங்கே வாயேன் என்றாள். எத்தனை மணிக்கு டிரைன் என்றாள். 8 மணிக்கு. சுபா மறுபடி வேலைகளில் மூழ்கி விட்டாள். அனன்யாவை ஏக்கத்தோடு பார்த்தான் விஷால்.இன்னைக்கு மறுபடியும் ஊருக்கு போய்விடுவாள். இனி 2 வாரம் கழித்தே பார்க்க முடியும்.4 மணிக்கு எழுந்தாள் அனன்யா தீபாவையும் எழுப்பினாள். முகம் கழுவி டீ குடித்துவிட்டு டிரஸ் எல்லாவற்றையும் பேக் செய்தனர்.தீபாவும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். சுபா வந்து என்ன அவசரம் 8 மணிக்குத்தானே என்றாள். ஒரு வாக் போயிட்டு வரலாமா என்றாள் சுபா. சரி போவோம் ஆனா ரொம்ப தூரம் போக வேண்டாம் என்றான் விஷால். அனன்யா தோளில் கை போட்டவாறே அவளுடைய பேச்சை கேட்டவாறு நடந்தான் விஷால்.அவள் சில விஷயங்களை சொன்னாள்.

ரூமுக்கு வந்த போது மணி 6 30 ஆகி இருந்தது. சரி கிளம்புவோம் என்றார்கள் அனன்யாவும் ,தீபாவும். உடம்பை பார்த்துக்க விஷால் என்றாள் அனன்யா . தீபாவையும், அனன்யாவையும் வழி அனுப்பி வைத்தான்.சுபாவும், இவனும் சென்னைக்கு இரவு 11 மணிக்கு திரும்பினார்கள்.விஷால் ரொம்ப என்ஜாய் பண்னினேன் என்றாள் சுபா.
ரூமுக்கு வந்து விட்டான். அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள். என்னாச்சு அனன்யா? சீக்கிரம் வந்து விடுடா என்றாள். நிச்சயமா அனன்யா.சுபாவும், இவனும் ப்ராஜக்ட் முடிக்கிற நிலையில் இருந்ததனர்.ஊருக்கு போனதும் தீபா போட்டோக்களும், வீடியோ வும் அனுப்பி இருந்தாள். நல்லா வந்திருக்கு என்றான். சுபா அடுத்த வாரம் நாம முக்கியமான கோவிலுக்கு போகிறோம் என்று சொல்லி இருந்தாள்.

கோவிலை சுற்றி வந்தார்கள். சுபா என்ன திடீர்னு வேண்டுதல் அதிகமா இருக்கு என்றான். நீயும் நானும் சேர்ந்து வாழனும் விஷால். இதே சென்னைல நாம குழந்தைகளோட நல்லா வாழனும் விஷால் அதான் இந்த வேண்டுதல். சுபா ரூமுக்கு போயிருந்தான். கீதா ஊருக்கு போயிருந்தாள். சுபா இரு சமைக்கிறேன் என்றாள். உள்ளே போய் சமைத்து கொண்டிருந்தாள். என்ன விஷால் பசிக்குதா என்றாள். இல்ல இல்ல அவசரம் இல்ல என்றான். என்ன சமையல் என்றான். ரசம் தான் வைத்து இருக்கிறேன் . உனக்கு ஓகே வா என்றாள். எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே தான் என்றாள். முட்டை செய்திருந்தாள். நீயும் உட்கார்ந்து சாப்பிடு சுபா என்றான். சுபா அனன்யா ஃபோன் செய்தாளா. நேத்து நைட் பண்ணினா. அவ அப்பா பிடிவாதமா இருக்காராம் . ஓ உனக்கு எப்ப ப்ராஜக்ட் முடியுது சுபா. இந்த வாரம் முடிஞ்சுடும். அப்ப இந்த வாரம் போறியா. இல்ல விஷால் நாம் சேர்ந்தே ஊருக்கு போகலாம் என்றாள். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு விஷால் என்றாள். அவள் ஏதோ துணி மடித்து கொண்டிருந்தாள். பிறகு அருகில் வந்தாள்.இவன் கைகளை பிடித்து கொண்டான். அவள் இவனை அணைத்துகொண்டு நாம சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கணும் என்றாள்.