Oru Devathai Paarkkum Neram Ithu - 26 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 26

Featured Books
  • Nafrat e Ishq - Part 1

    चिड़िया की चहचहाहट सुनाई देती है। सुबह के 5:00 बज रहे हैं। द...

  • Our Destiny Dance - 5 ( Last Part)

    सान्या: केसा एहसास???महक: वही यार ... जाने दे ... कल मिलते ह...

  • नादान इश्क़ - 1

    शादी का मंडप सजा हुआ है, और हॉल फूलों की खुशबू से महक रहा है...

  • रूहानियत - भाग 10

    Chapter - 10 I hate youअब तकनील चाहत को देखता है...,तो चाहत...

  • बेजुबान - 5

    पढ़ लेती,"वह बोला ,"मा का है"किसी दूसरे के नाम की चिट्ठी नही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 26

சுபாவுக்கும், இவனுக்கும் ஒரே சமயத்தில் ஜுரம் வந்துவிட்டது. இருவருமே அவரவர் ரூமில் இருக்கும்படி ஆகிவிட்டது. என்ன சுபா உனக்கும் ஜுரமா, எல்லாம் உன் வேலைதான் என்றாள்.டாக்டரை பார்த்தியா விஷால். பார்த்தேன் சுபா. நீ ? இல்லை விஷால் தானாகவே சரி ஆயிடும். இது தப்பு சுபா உடனே டாக்டர் போய் பாரு. சரி விஷால். நான் வேணா வரவா . வேணாம் விஷால் நான் கீதாவை கூப்பிட்டுக்கிட்டு போகிறேன். போயிட்டு வந்து எனக்கு ஃபோன் பண்ணு சுபா . ஓகே விஷால். அனன்யா ஃபோன் பண்ணினாள் . நல்லா மழைல ஆட்டம் போட்டீங்களா .. அதெல்லாம் ஒண்ணும்இல்லை. ரூம் கிட்ட வரும்போது மழை வந்து விட்டது. விஷால் உடம்பை பார்த்துக்க வெந்நீர் குடி என்றாள்.

சுபாவுக்கு ஜுரம் சரியாகி விட்டது. இவனுக்கு ஜுரம் லேசாக இருந்தது .சுபாவை போய் பார்த்தான். என்னடா இன்னும் சரி ஆகலையா? உள்ளே வா என்றாள். நான் உனக்கு கஞ்சி வைத்து தருகிறேன் என்றாள். சரி இங்கேயே கொஞ்சம் ரெஸ்ட் எடு என்றாள். விஷாலுக்கு ஜுரம் என்றாள் கீதாவிடம்.உடம்பை கவனிச்சுக்கங்க விஷால் நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன் என்றாள் கீதா.மெடிக்கல் ஷாப் போய் இன்னும் சில மாத்திரைகளை வாங்க வந்தாள். இதை போடு விஷால். இங்கேயே படு என ஒரு பெட்ஷீட் , தலையணை தந்தாள். தைலம் தேய்த்து விட்டாள்.அவன் சிறிது நேரத்தில் தூங்கி போனான். விழித்து பார்த்த போது சுபா இல்லை கீதா மட்டுமே இருந்தாள். வந்து தொட்டு பார்த்தாள். இப்போது ஜுரம் விட்டு இருக்கிறது. சுபா இப்போ வந்து விடுவாள். இந்த கஞ்சி குடிங்க என்றாள். சுபா கோவிலுக்கு போய் விட்டு வந்திருந்தாள். இவனுக்கு திருநீறு பூசி விட்டாள்.விஷால் நீங்க ரொம்ப லக்கி என்றாள் கீதா.

சாயங்காலம் அருகில் இருந்த பார்க் போனார்கள் சுபாவும், விஷாலும்.
இப்போ பரவாயில்லையா விஷால். ஓகே தான் என்றான். சரி நான் கிளம்பட்டுமா. என்ன அவசரம்,நைட் ஏதாவது சமைத்து தருகிறேன் எடுத்துட்டு போ. ஹோட்டல் சாப்பாடு இன்னைக்கு வேணாம். சரி சுபா. காப்பி சாப்பிடுவோமா . போவோம் விஷால். காப்பி ஷாப் போனார்கள். அனன்யா இப்போ எப்படி இருக்கே விஷால் என்றாள். பரவாயில்லை சுபா மதியம் கஞ்சி வைத்து கொடுத்தாள் என்றான். நான் வேணும்னா வர வா என்றாள். அதெல்லாம் வேண்டாம், உனக்கு ப்ராஜக்ட் இருக்கிறதுல்ல என்றான். சேமியா பாத் செய்து கொடுத்திருந்தாள் சுபா. நன்றாக இருந்தது .

ப்ராஜக்ட் இறுதி கட்டத்தை எட்டியிருந்தது . இன்னும் மூன்று வாரங்களில் முடிந்து விடும். சுபா அப்பா ஒத்துக்கொண்டு விட்டார். இன்னும் 6 மாதம் டைம் அதுக்குள்ள இந்த படிப்பெல்லாம் முடித்து விட வேண்டும் என்று சொல்லி இருந்தார். அனன்யா மகிழ்ச்சி பொங்க இதை விஷாலிடம் சொன்னாள். சுபாவும் மகிழ்ந்து போனாள். 6 மாதம் விஷாலோடு சென்னையில் இருக்கலாம் என்பது புதிய நம்பிக்கையை குடுத்தது . அனன்யா அவளுடைய அப்பாவிடம் சென்னை போய் வேலை தேடுவது சம்பந்தமாக பேச்சு வார்த்தையை துவக்கி இருந்தாள்.விஷால் வேலைக்காக சென்னை நண்பர்களிடம் சொல்லி வைத்தான். விஷால் அனன்யாவுக்கு நன்றி சொன்னான்.

சுபாவுடைய பர்த்டே அடுத்த வாரம் வருகிறது. அனன்யாவுக்கு ஃபோன் பண்ணி என்ன பண்ணலாம் என்றான். நானும் தீபாவும் சென்னை வந்து விடுகிறோம் என்றாள் உற்சாகமாக. சரி அனன்யா . சுபா எதுக்காக அவங்க ரெண்டு பேரும் வீணா அலையனும். நாமளே ஊருக்கு போனாள் என்ன. இப்போதான் ப்ராஜக்ட் ஒரு ஸ்டேஜ் வந்திருக்குது. அவங்க வந்தா உன் ரூம்லேயே தங்கிக்கலாமா இல்லை ரூம் புக் பண்ணிவிடலாமா? ரூம் புக் பண்ணு விஷால். ஏதாவது நல்ல ரிசார்ட் பாண்டிச்சேரி ல. செலவை பத்தி கவலைபடாதே என்றாள்.அப்போ நான் புக் பண்ணி விடுகிறேன் .

அனன்யா பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்களை திட்டமிட்டாள்.அனன்யா டிக்கெட் புக் செய்தாள். அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தீபாவிடம் பாண்டிச்சேரி போகிறோம் என்று சொன்னாள். தீபா செம ஜாலி தான் பீச்சுக்கு போலாம் இல்ல என்றாள். சுபா ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்து வைத்திருந்தாள். விஷால் இந்த வாரம் நம்ம கோயிலுக்கு போகலாம் என்று சொல்லி இருந்தாள். இப்ப ஜுரம் எப்படி இருக்கு என்று விசாரித்தாள். அதெல்லாம் அப்பவே போய்விட்டது. கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார்கள். சுபா நாம பாண்டிச்சேரி என்னைக்கு போறோம் விஷால்?அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அனன்யா காலையிலேயே பாண்டிச்சேரி வந்து விடுவாள். நாம் வெள்ளிக்கிழமை மதியம் அங்க போய் சேர்வோம். அடுத்த நாள் உன்னுடைய பர்த்டே அதை கொண்டாடிவிட்டு ஞாயிற்றுக்கிழமை பாண்டிச்சேரி சுத்தி பாப்போம். அவர்கள் ஞாயிறு இரவு புறப்பட்டு ஊருக்கு போவார்கள். விஷால் நான் உனக்கு கொஞ்சம் அக்கவுண்டில் பணம் போடுகிறேன். அதெல்லாம் வேணாம் சுபா என்கிட்ட இருக்கு. இருக்கட்டும் விஷால் வச்சுக்க என்றாள்.நீண்ட நாட்கள் கழித்து. கொண்டாட்டத்திற்கு தயாரானான் விஷால் சுபாவுக்கு புது உடைகள் எடுத்தான் . அவள் விஷாலுக்கும் உடைகள் எடுத்தாள்.
அனன்யாவும்,தீபாவும் எப்படியோ வீட்டில் பர்மிஷன் வாங்கி விட்டனர். விஷாலை சந்திக்க போகும் நாளை எண்ணி காத்திருந்தனர். நாமும் ஷாப்பிங் போவோமா என்றாள் தீபா. நாம தான் பாண்டிச்சேரி போறோமே அங்கேயே வாங்கிக்கலாம் .டைம் இருக்குமா நிச்சயம் இருக்கும். இருந்தாலும் சுபாவுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டாமா .அதுவும் சரிதான் அவளுக்கு டிரஸ் வாங்கி கொண்டு போவோமா ?போன் பண்ணி பார்ப்போம்.. சுபா உனக்கு என்ன வேண்டும் டிரஸ் வேணுமா இல்லை கிப்ட் வாங்கி தரவா என்று கேட்டாள் . அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வந்து சேர்ந்தா போதும் என்றாள் சுபா. நாங்க டிரஸ் எடுத்துட்டு வரோம். அப்படின்னா புடவை எடுத்துட்டு வா அதான் விஷாலுக்கு பிடிச்சிருக்கு ஓ அப்படியா சரி சுபா.

விஷால் ப்ராஜெக்ட் முடிப்பதில் பிசியாக இருந்தான். பர்த்டேவிற்கு கீதாவை கூப்பிடுவோமா என்று கேட்டான் விஷால் அவள் பாண்டிச்சேரி வரவேண்டும் இதற்காக அதான் பார்க்கிறேன் என்றாள். சுபா அப்படி என்றால் உன் ரூமிலேயே வியாழக்கிழமை சாயங்காலம் ஒரு முறை கேக் வெட்டுவோம் உன் பிரெண்ட்ஸ் கூட சரி விஷால்.

விஷால் வியாழக்கிழமை சாயங்காலம் சுபா ரூமுக்கு போய் விட்டான் எல்லோரும் சுபாவுக்கு வாழ்த்து சொன்னார்கள் அனன்யா வீடியோ காலில் வந்தாள்.விஷாலும் உற்சாகமாக கலந்து கொண்டான் . சுபா நாளை காலை 7 மணிக்கு ரெடியா இரு நாம பாண்டிச்சேரி போலாம் என்றான். நான் பிரண்டு கிட்ட பைக் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றான் விஷால். தேவையான திங்ஸ் எடுத்து பேக் செய்தாள் சுபா. மறுநாள் காலையில் போன் செய்தாள் அனன்யா. நாங்கள் ரிசார்ட்டுக்கு வந்து விட்டோம் என்று சொன்னாள். நாங்க ஒரு 12 மணி போல வந்து விடுவோம் கிளம்பி விட்டோம் என்று விஷால் சொன்னான். சுபா எல்லாம் எடுத்துக் கொண்டாயா? வேறு ஏதாவது வாங்கணுமா ஒன்னும் இல்ல விஷால் போலாம் என்றாள்.


விஷால் சரியாக 12 மணிக்கு எல்லாம் ரிசார்ட் வந்து விட்டான் அனன்யா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். தீபா எங்கே என்றான் டயர்டா இருக்குன்னு தூங்கிட்டு இருக்கா சரி சரி தூங்கட்டும் . டிரைன் journey எல்லாம் எப்படி இருந்தது. அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்ல விஷால். அப்பா எப்படி இருக்காங்க அனன்யா .நல்லா இருக்காங்க. நீ சென்னை வரது பத்தி பேசினியா சொல்லி இருக்கேன் யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருக்காரு. தீபா இவன் வந்ததும் எழுந்து விட்டாள். ரூம் பிடிச்சிருக்கா அனன்யா சுத்தி பாத்தியா எல்லாம் நல்லா இருக்கா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு விஷால். தீபா உனக்கு நம்ம எப்ப பீச்சுக்கு போவோம் விஷால்.
எப்போ வேணாம் போலாம் என்றான் விஷால். தீபா உனக்கு உடம்பு எப்படி இருக்குது? இப்போ ஒன்னும் தொந்தரவில்லையே? அதெல்லாம் ஒன்னும் இல்ல மறுபடி செக்கப் எப்போ வர சொல்லி இருக்காங்க அடுத்த மாசம். சுபா ,அனன்யா இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். தீபா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் வெளியே போய் சுற்றி பார்த்துவிட்டு வந்தான். இவனுக்கு ஒரு அறையும் அவர்கள் மூவருக்கு ஒரு அறையும் புக் பண்ணி இருந்தான்.
விஷால் ரூமுக்கு போனான்.குளித்து உடைமாற்றினான். ரெண்டு மணிக்கு சாப்பிட போவோம் என்று சுபாவிடம் சொன்னான் தீபா உனக்கு பசிக்குதா என்று கேட்டான் இல்லையில்லை இரண்டு மணிக்கே போவோம் என்றாள். தீபா. அனன்யா அவள் வாங்கி வந்த சாரியை காண்பித்தாள். சூப்பரா இருக்கு அனன்யா என்றாள் சுபா. பர்த்டேக்கு வாங்கிய உடைகளை காண்பித்தாள் சுபா. நல்ல செலக்சன் என்றாள் அனன்யா. சுபா நான் போய் குளிச்சிட்டு வரேன் என்றாள். சரி . விஷால் எங்க சுபா குளிக்க போய் இருக்காளா ஓகே ஓகே அனன்யா உன்னுடைய ப்ராஜெக்ட் எப்படி போகுது முடிய போகுது விஷால். நீ ரொம்ப இளைத்து போயிட்ட விஷால். ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா என்றாள் அனன்யா.

நான்கு பேரும் ரெஸ்டாரண்ட் சென்றனர். வேணுங்கறத ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க என்றான் விஷால். சாப்பிட்டு முடித்ததும் பீச் பக்கமாக சென்றனர். வழக்கம்போல துள்ளி குதித்து சென்றாள் தீபா.
அனன்யா, சுபா, விஷால் மூவரும் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தார்கள். அனன்யா மணலிலே ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள். அவளை இழுத்தான் மடியிலே விழுந்தாள். மெதுவாக முத்தமிட்டான். விஷால் சுபாவின் தோளில் கை போட்டிருந்தான், அனன்யா இவனை அழைத்துக் கொண்டு கடலில் நனைய சென்றாள். சுபா இன்னும் மணலில் உட்கார்ந்து இருந்தாள். அவள் மனம் எதையோ யோசித்து கொண்டிருந்தது.

விஷால் ஒரு கையில் அனன்யாவையும் மறுகையில் சுபாவையும் பிடித்திருந்தான். அவர்கள் அவன் கையை எடுத்து இடுப்பில் போட்டுக் கொண்டனர் மூவரும் நெருங்கி நின்றனர். அனன்யா தீபாவை கூப்பிட்டு போட்டோ எடுக்க சொன்னாள் அப்போது சுபாவும் அனன்யாவும், விஷாலுக்கு முத்தம் கொடுத்தனர். நான்கு பேரும் கடல் அலையில் கொண்டாட்டம் போட்டனர்.

சரி வாங்க ரூமுக்கு போகலாம் என்றான் விஷால். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றாள் தீபா. இவளுக்கு எவ்வளவு நேரம் இருந்தாலும் பத்தாது என்று சொன்னான் விஷால். தீபாவை போய் அணைத்தான் என்ன விஷால் இன்னும் கொஞ்ச தூரம் போகலாமா என்று அவனையும் இழுத்துக் கொண்டு போனாள். அலையடிக்க அவள் அவனை உதட்டில் முத்தமிட்டாள்.என்ன சுபா உன் பர்த்டேகாகத்தானே வந்திருக்காங்க ஏன் சோகமா இருக்குற என்றான் விஷால். அடுத்த பர்த்டேக்கு நாமெல்லாம் இதே மாதிரி சேர்ந்து இருக்க முடியுமா விஷால். சுபா நாம எப்பவுமே ஒண்ணா தான் இருக்க போறோம் அது யாராலும் தடுக்க முடியாது என்றான் விஷால்.
தீபாவும் சுபாவும் ரூமிலே படுத்து தூங்கி விட்டார்கள். அனன்யா இவன் ரூமுக்கு வந்தாள் . வா அனன்யா என்றான். இந்த டிரஸ் நல்லா இருக்குது என்றான். என்ன விஷால் வீடு ஏதாவது பார்த்தியா .. முதல்ல வேலை கிடைக்கட்டும் அனன்யா. அதுக்கப்புறம் வீடு பார்க்கலாம் என்றான். உனக்கு பாண்டிச்சேரி புடிச்சிருக்கா அனன்யா ரொம்ப பிடிச்சிருக்கு ..நான் இங்கே தூங்கட்டுமா விஷால். சரி நீ தூங்கு . எங்கேயும் போகக்கூடாது விஷால் ..சரி, ஒரு பாட்டு பாடு விஷால்.. இப்பவா என்னவோ எனக்கு கேக்கணும்னு தோணுது என்றாள்.விஷால் ஏதோ ஒரு பாட்டை பாடினான் நல்லா இருக்கு ஆனா நீ எட்டி இருக்கிறது தான் நல்லாயில்லை அது வந்து அனன்யா அதெல்லாம் அப்புறம் முதல்ல கிட்ட வா என்றாள். உன் அருகில் போய் படுத்தான். நீ இல்லாம ரொம்ப கஷ்டமாயிடுச்சு விஷால். இன்னும் எவ்வளவு நாள் இருக்கு ப்ராஜெக்ட் முடிய ரெண்டு வாரம். ரெண்டு வாரமா? என்றாள். உன்னை பிரிந்திருக்க ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப வேதனையா இருக்கு விஷால்.அவள் துப்பட்டாவை எடுத்தான். விஷால் என்ன பண்ண போற புதையல் எடுக்க போறேன் என்றான்.