Oru Devathai Paarkkum Neram Ithu - 25 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 25

Featured Books
  • दिए की रात

    भगवान राम जब अयोध्या लौटे थे तब से उनके आने की खुशी मे लोगों...

  • दिल से दिल तक- 5

    (part-5)आभा 6 सप्ताह की बैड रैस्ट पर थी. दिन भर बिस्तर पर पड...

  • ज्ञान

        दो मित्र, अमित और सुनील, बचपन से ही साथ पढ़े और साथ खेले...

  • इश्क इबादत - 2

    इतना सबकुछ हो गया फिर भी पूनम जी अभी तक मूक दर्शक बनकर बैठी...

  • मोमल : डायरी की गहराई - 27

    पिछले भाग में हम ने देखा कि अब्राहम बेहोश हो कर गिर पड़ा था।...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 25

நாளைக்கு எங்கேயாவது போவோமா விஷால் என்றாள். பீச்சுக்கே போவோம் என்றாள் தீபா . இவ வேற எப்ப பார்த்தாலும் பீச் பீச்சுன்னு என்றாள் அனன்யா. பரவாயில்லை பீச்சுக்கே போவோம் என்றான் விஷால்.அனன்யா கீழே போய் படுக்கலாம் விஷால் என்றாள். வேணாம் உன் மடியே சவுகரியமாய் இருக்குது என்றான். இரு போய் தலையணை எடுத்து வருகிறேன் என்றாள் தீபா. இன்னும் இரண்டு மாசம் அப்புறம் எப்பவும் உன் கூடத்தான் என்றான் விஷால். அனன்யா முன்ன மாதிரி இல்லே விஷால் நீ என்றாள். என்னாச்சு அனன்யா? கவனிக்கவே மாட்டேங்குர .. ஓ என்றவாறு அவளை தூக்கினான். அவளுடைய உடல் பஞ்சு போல இருந்தது . அனன்யா செல்லம் என்ன வேணும் என்று அவள் மேலே படுத்தான். போதும் நீ கொஞ்சுனது . அவள் இடையில் முத்தமிட்டான். பிறகு கன்னங்களிலும் , கழுத்திலும் முத்தமிட்டான். தீபா வந்து விட்டாள். விஷால் எழுந்து கொண்டான். போதும் ரொம்ப நேரம் ஆச்சு போய் தூங்குங்க ரெண்டு பேரும் என்றான். ம்ம் அதெல்லாம் முடியாது நாங்க ரெண்டு பேரும் இங்க தான் இருப்போம். சிறிது நேரம் கம்ப்யூட்டர் games விளையாடினர். தீபா நீ போய் தூங்கு . நான் வருகிறேன் என்றான். அனன்யா நாம ஹனிமூன் எங்கே போலாம் விஷால். நீயே சொல்லு . darjeeling அது ரொம்ப தூரம் அனன்யா. ரொம்ப தூரம் போகணும் டிராவல் பண்ணனும் விஷால் உன் கூட என்றாள்.

அவள் துப்பட்டா சரிந்து விழுந்தது . இதுவேற இருக்குற அழகை எல்லாம் மறைக்குது என்றான் விஷால். விஷால் சும்மா இருக்கணும் வாலு பண்ணாம என்றாள்.பாட்டு பாடவா விஷால் என்றாள். இதென்ன கேள்வி நீ பாடி என்னைக்கு நான் வேணாம்னு சொல்லி இருக்கேன். பாடி முடித்ததும் அவளை அணைத்து முத்தமிட்டான்.சரி வா கீழே போய் தூங்கலாம் என்று கையை பிடித்து இழுத்தாள். சரி வா போவோம் என்று அவளை தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். நான் தூங்குற வரை முழிச்சிரு விஷால் ஆனா பாட மட்டும் செய்யாதே என்றாள். அவள் நேத்து ஒரு கனவு கண்டேன் விஷால். நம்ம ரெண்டு பேரும் மலை மேல ஏறுகிற மாதிரி. நல்லா பாத்தியா அது மலைதானா டேய் ஆமா விஷால் அது ஒரு பனி மலை . நல்லா குளிர்காத்து அடிக்குது. நான் உன்னை கட்டி புடிச்சிருக்கேன். நீயும் நானும் உச்சிக்கு கொஞ்ச தூரத்துல tent போட்டு .. போட்டு போ விஷால் வெக்கமா இருக்கு . சரி அப்புறம் என்ன ஆச்சு . tent திடீர்னு பறக்குது . பனி புயல் அடிக்குது, நீயும் நானும் விடாம புடிச்சு அந்த மலை மேல தொங்குறோம் . அப்போ சுபா, தீபா ?அவங்க இன்னொரு tent ல இருக்காங்க. உன் நெஞ்சே ஒரு பனி மலை தான் அதுல வேணா சறுக்கி விளையாடுறேன். சீ தூங்கு விஷால் எப்போ பார்த்தாலும் உனக்கு அதுலேயே கண்ணு என்றாள்.

சரி விஷால் நீ ஒரு பாட்டு பாடு.அவன் பாடி முடிக்கவும் அவள் தூங்கவும் சரியாய் இருந்தது. அவளை நெற்றியில் மெல்ல முத்தமிட்டான். போர்வையை போர்த்தி விட்டான். அவனும் அருகில் இருந்த சோபாவில் படுத்து கொண்டான். காலை 4 மணிக்கே முழிப்பு வந்து விட்டது. அனன்யா தூங்கி கொண்டிருந்தாள். அவள் அருகே போய் உட்காரந்திருந்தான். என்ன விஷால் அதுக்குள்ளே எழுந்து விட்டாயா என்றாள் தீபா. ஆமாம்.டீ தரவா? சரி குடு . அனன்யா அதற்குள் எழுந்து விட்டாள். முகம் கழுவி வந்தாள். ஏன் என்னை எழுப்பலை நீ தூங்கிட்டு இருந்த . பாதி டீ அவள் குடித்தாள் . சரி வாக்கிங் போவோமா. நீயும் வா தீபா என்றான். மூவரும் வாக்கிங் சிறிது தூரம் போனார்கள். ஏன் விஷால் உனக்கு கனவெல்லாம் வராதா ? வரும் கடல்தான் என் கனவுல வரும் . யார் யார் இருப்பாங்க. பீச்ல நான், நீ , சுபா, அப்புறம் தீபா எல்லோரும் இருப்பீங்க. எல்லோரும் ஸ்விம்மிங் டிரஸ் ல இருப்போம். போதும் போதும் என்றாள் அனன்யா. நான் எப்படி இருந்தேன் அந்த ஸ்விம்மிங் டிரஸ் ல என்றாள் தீபா. கடல் கன்னி மாதிரி என்றான். தீபா வெட்கம் வர சிரித்தாள்.

7 மணி ஆகிவிட்டது . நான் வீட்டுக்கு போயிட்டு 8 மணி போல உன் வீட்டுக்கு வரேன் அனன்யா என்றான் விஷால். சரி.விஷால் குளிக்கும் போது அனன்யாவுடைய கனவை நினைத்து பார்த்தான். 8 மணிக்கு அனன்யா வீட்டுக்கு போனான். தீபாவுக்கு ஃபோன் பண்ணினான். 11 மணிக்கு பீச் போகலாம் என்று சொன்னான். சரி விஷால். அனன்யா டிபன் பண்ணியிருந்தாள். ஏதாவது வாங்கணுமா அனன்யா கடைக்கு போவோமா என்றான். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்றாள். டிபன் நீயும் சாப்பிடு என்றான். சென்னைக்கே நாலு பேரும் போவோமா விஷால். ம்ம் நடக்குமா விஷால். கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும். நானும் வேலைக்கு போறேன் விஷால். இங்கே இருக்குற மாதிரி அங்கே இருக்க முடியாது அனன்யா. பரவாயில்லை . உன் கூட நானும் கஷ்டபடுறேன். ம்ம் நீ ஒரு முடிவோட இருக்க .. மணி 10 ஆனது சரி அனன்யா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்து உன்னை அழைச்சிட்டு பீச் போறேன் ஓகே வா . ஓகே

பீச்சில் யாரும் இல்லை. தீபா துள்ளி குதித்தாள் .அனன்யாவும் இவனும் குளித்தார்கள். விஷால் அவளை அள்ளி எடுத்தான். தீபாவை தூக்கி தண்ணீரில் போட்டான். மூவரும் பிறகு சுபாவிடம் பேசினார்கள். என்னை விட்டுட்டு போய் விட்டீர்களா என்றாள். அனன்யா ஏதோ சொல்லி சமாளித்தாள். தீபா கடலை விட்டு இறங்குகிற மாதிரி தெரியவில்லை. அவளை தூக்கி வந்தான். போதும் கடல் கன்னி தீபா அப்புறம் ஜுரம் வந்து விடும் என்றான். மூவரும் அருகில் இருந்த ஹோட்டல் போய் சாப்பிட்டனர். பீச் மணலில் படுத்திருந்தான் விஷால். அருகே அனன்யாவும் படுத்திருந்தாள். தீபா மறுபடி அலையோடு விளையாட ஆரம்பித்தாள் . இப்படியே இருக்கலாம் போல இருக்கு என்றாள் அனன்யா. பனி மலையில் சாய்ந்து கொள்ளவா என்றான். அவள் மார்பில் இழுத்து அணைத்து கொண்டாள். தீபா கிளிஞ்சல்கள் பொறுக்க தொடங்கினாள்.

மூவரும் மதியம் 3 மணி போல அனன்யா வீட்டுக்கு வந்தனர். மறுபடி ஒரு முறை நல்ல நீரில் குளித்தனர். அனன்யா நான் வீட்டுக்கு போகவா என்றான். போலாம் எல்லாம் ஒரு நாலு மணி போல போலாம் . டிரைன் எத்தனை மணிக்கு 11 மணிக்கு. அப்போ 8 மணிக்கு போகலாம் என்றாள். தீபா பசிக்குது என்றாள். அவளுக்கு நூடுல்ஸ் பண்ணி கொடுத்தாள் அனன்யா. உனக்கு பசிக்குதா விஷால் இல்லை அனன்யா . தீபா டிவியில் எதையோ ஸ்வரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அனன்யா நீ ரெஸ்ட் எடு என்றான். இவனும் டிவி பார்த்தான். விஷால் என்று கூப்பிட்டாள். என்ன அனன்யா ? காலை வலிக்குது என்றாள். இரு தைலம் வாங்கி கொண்டு வருகிறேன் என்று வெளியே போய் வாங்கி வந்தான். அவள் காலில் தேய்த்து விட்டான்.

தீபா நீயும் போய் ரெஸ்ட் எடு என்றான். சரி விஷால் எனக்கு நெஞ்சு வலிக்குது என்று சிரித்தாள். அதுக்கு அப்புறம் வந்து வைத்தியம் பார்க்கிறேன் என்றான். அனன்யா 4 மணிக்கு எழுந்து வந்து பார்த்த போது விஷால் தூங்கி கொண்டிருந்தான். டீ போட்டு குடித்தாள்.
தீபாவும் எழுந்து விட்டாள். இன்னுமா தூங்குகிறான் என்றாள் தீபா. தூங்கட்டும் என்றாள் அனன்யா. ஏதோ ஸ்நாக்ஸ் ரெடி பண்ணினார்கள் தீபாவும், அனன்யாவும். 5 மணிக்கு முழித்தான் விஷால். எழுப்பி இருக்கலாமே என்றான். விஷால் முகம் கழுவி வந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டான்.அனன்யா நாம கடைக்கு போய் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும் என்றாள். அனன்யா உனக்கு ஏதாவது வாங்கணுமா விஷால் என்றாள். ஒண்ணும் இல்லை. ரெண்டு மணி நேர ஷாப்பிங் முடித்து வீட்டுக்கு வந்தார்கள்.

அனன்யா எல்லாவற்றையும் பிரித்து அடுக்கி வைத்தாள். விஷாலும், தீபாவும் ஹெல்ப் பண்ணினார்கள். சீக்கிரம் ஒரு வீடு பாரு விஷால் வந்து விடுகிறோம் என்றாள். அனன்யா தான் வரைந்த சிறிய கிருஷ்ணன் பெயிண்டிங் ஒன்றை கொடுத்தாள். அனன்யா கிளம்புகிறேன் என்று சொன்னால் அழுது விடுவாள் போல இருந்தாள். மறுபடி எப்போ என்றாள்.இடையில் வர முயற்சி பண்ணுகிறேன் என்றான்.அப்படி பார்க்காதே அனன்யா. அவளை தூக்கி அவள் மார்பில் முத்தம் பதித்தான். எப்பவுமே நான் இங்கேதான் இருக்கேன்..புரியுதா என்றான்.சரி விஷால் பத்திரமா போய்ட்டு வா என்றாள். வரேன் தீபா என்று சொல்லிவிட்டு சென்னைக்கு கிளம்பினான்.

சுபா ஃபோன் பண்ணியிருந்தாள் இன்னைக்குத்தான் வந்தேன் சுபா என்றான். சரி விஷால் ஃப்ரீ ஆனப்புறம் ஃபோன் பண்ணு . ok சுபா. வேலையெல்லாம் முடிக்க இரவு மணி 11 ஆகிவிட்டது. சுபாவே ஃபோன் செய்து விட்டாள் . என்ன தூங்கி விட்டாயா ? இல்லை சுபா கொஞ்சம் பேசலாமா.. ம்ம் உன்னுடைய ப்ராஜக்ட் எப்படி போகிறது சுபா , பரவாயில்லை நீ எப்படி இருக்கிறாய் விஷால்? காலேஜ் போனியா . காலேஜ் போனேன் எல்லோரும் நல்லா இருக்கிறார்கள். சுபா ஏன் என்னவோ போல பேசுகிறாய் யாராவது பக்கத்துல இருக்காங்களா .. இல்லை நீ இரண்டு நாள் ஊர்ல இல்லையா அதான் ஒரு மாதிரி இருக்கேன். சுபா எதுக்கு பீல் பண்ணுறே.அனன்யா கூட பீச் போயிருந்த போல. ம்ம் தீபாவும் வந்திருந்தா. நாம கோவா போகனும் , கேரளா போகணும் விஷால். வர சண்டே மகாபலிபுரம் போவோமா . நான் வரவே இல்லையே போன தடவை என்றாள்.சரி போவோம் என்றான்.
விஷால் ரொம்ப பயமா இருக்குடா.. என்ன விட்டு விடாதேடா. சுபா அழாதே பிளீஸ் என்னால தாங்க முடியாது என்றான். சண்டே என்ன டிரஸ் பண்ணிக்கிட்டு வரட்டும். சாரி கட்டிகொண்டு வா சுபா. சரி லவ் யு சுபா .லவ் யு விஷால். ஃப்ரெண்ட் பைக் வாங்கி வைத்திருந்தான். அதிலேயே போவோம் என்றான்.சரி நான் சண்டே 10 மணிக்கு ரெடி ஆ இருப்பேன் என்று சொல்லி இருந்தாள் .

சண்டே எப்ப வரும் என்று காத்திருந்தான். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்தான்.சுபா அப்படி சொன்னது அவனை ரொம்பவும் பாதித்தது .சண்டே சொன்ன மாதிரி காத்திருந்தாள்.சாப்பிட்டாயா என கேட்டாள் . ம்ம் போகலாம் என்று சொன்னாள். அந்த சாரியில் மிக அழகாக இருந்தாள். சுபா பேசாம ரூம்லேயே இருப்போமா என்றான். சீ என்றாள். இந்த புடவையில சூப்பர் ஆக இருக்கே என்றான். நீ வாங்கி குடுத்த புடவைதான் என்றாள். மழை வருகிற மாதிரி இருக்கே? குடை வச்சிருக்கேன் என்றாள்.அவன் கையை பிடித்து கொண்டாள். இன்னைக்கு வெயில் கொஞ்சம் பரவாயில்லை. இளநீர் குடிக்கிறாயா சரி விஷால்.

கடல் அலையில் போய் நின்றாள் சுபா. அவன் அவளையே கரையில் இருந்து பார்த்து கொண்டிருந்தான். வா விஷால் இங்கே என்றாள். அவளும் இவனும் சில புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.அவள் புடவை நழுவி அவளை விட்டு பிரியாமல் தழுவி நின்றது. சுபா என்றான்.. என்ன? எனக்கு ஒண்ணும் இல்லையா . நானே உனக்கு தாண்டா . அவளை முத்தமிட்டான். தழுவி கொண்டான். என்னால உன்னைத் தவிர எதையும் யோசிக்க முடியல என்றாள். ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்றாள். மழை வருகிற மாதிரி இருட்டிக்கொண்டு வந்தது . போலாமா சுபா என்றான். வேண்டாம் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்றாள். பக்கத்தில் இருந்த சிற்பங்களை வேடிக்கை பார்த்தனர்.

கொஞ்ச நேரம் அவன் மடியில் படுத்திருந்தாள். சுபா என்னாச்சு ஒண்ணும் இல்ல என்று அவள் கண்ணீரை துடைத்து கொண்டாள்.சரி வா ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டல் போனார்கள். சுபா மழை வருவதற்கு முன்பு போய் விடலாம் என்றான். விஷால் உனக்கு ஏதாவது வாங்கணும்னு நெனைச்சேன் என்றாள். இங்கே என்ன இருக்கு? கிளிஞ்சல்ல செஞ்ச மாலையெல்லாம் கிடைக்கும் விஷால். அதில் ஒன்றை வாங்கி இவனுக்கு போட்டு பார்த்து மகிழ்ந்தாள் . அவளும் ஒன்றை அணிந்தாள். ரூமுக்கு போவதற்க்கும் மழை வருவதற்க்கும் சரியாக இருந்தது. உள்ளே வா விஷால். அவள் முற்றிலும் நனைந்து போயிருந்து சிலை போல தோன்றினாள். டவல் எடுத்து வந்து துவட்டி விட்டாள். அவளை அணைத்தான். அவள் சாரி விலகி வழி கொடுத்தது.அவள் அவனை முத்தமிட்டாள்.