Oru Devathai Paarkkum Neram Ithu - 11 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 11

Featured Books
  • પ્રેમ થાય કે કરાય? ભાગ - 12

    ચેતવણીમમ્મી સાંજનાં ટિફિનની તૈયારી કરવામાં લાગી જાય છે. તે ફ...

  • નાયિકાદેવી - ભાગ 40

    ૪૦ જોગનાથની ટેકરી! મહારાણીબા નાયિકાદેવીની વાત જ સાચી નીકળી....

  • લાભ પાંચમ

              કારતક સુદ પાંચમ  અને દિવાળીના તહેવારનો  છેલ્લો દિવ...

  • ભાગવત રહસ્ય - 100

    ભાગવત રહસ્ય-૧૦૦   આ શરીરને સ્પર્શ કરવાથી કાંઇ આનંદ મળતો નથી,...

  • ખજાનો - 67

    "હર્ષિત...! પેલાં દિવસે..તે કાગળનો ટુકડો તું કેમ સંતાડતો હતો...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 11

மணி 12 தொட்டதும் எங்கும் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது . ஹாப்பி நியூ இயர் விஷால் என அனன்யாவும் சுபாவும் சொன்னார்கள் . தொடர்ந்து ஃபோன் கால் வர தொடங்கியது . எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி சொன்னார்கள் . சுபா பிளேயர் இல் பாட்டை போட்டு விட்டு ஆட தொடங்கினாள் . விஷாலும் அவள் கூட கொஞ்ச நேரம் ஆடினான். பிறகு கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார்கள். ஸ்வீட் கொடுத்தாள் அனன்யா.இரவு முழுவதும் கொண்டாடினார்கள் .
விடிகாலையில் அனன்யாவும், சுபாவும் தூங்க போனார்கள்.விஷால் மாடியிலேயே படுத்து கொண்டான்.

வீட்டுக்கு போய் குளித்து முடித்து உடை மாற்றினான். மூவரும் கோவிலுக்கு போனார்கள். காலை டிபன் சுபா வீட்டில் .ரொம்ப நல்லா இருந்தது கேக் என்றான் விஷால்.விஷாலுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. நான் ஒரு அரை மணி நேரம் தூங்குகிறேன் என்னை அப்புறமா எழுப்பி விடுங்க என்றான். அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கினான். கண் விழித்து பார்த்த போது இவன் சுபா மடியில் படுத்திருந்தான் . அனன்யா இவனுடைய கால்களை பிடித்து விட்டு கொண்டிருந்தாள் . ஏன் இப்படி பண்ணுறீங்க ரெண்டு பேரும் . சும்மாதான் என்று சிரித்தார்கள். சுபா நீ சரியாவே சாப்பிடலை என்றாள். சரி டீ போட்டு கொடு என்றான் விஷால்.

அனன்யாவும் இவனும் சமயலறைக்குள் போனார்கள் .விஷால் சுபாவை கட்டிபிடித்து லவ் u செல்லம் என்றான்.டீ நன்றாக இருந்தது .அனன்யா எனக்கில்லையா ஒண்ணும் என்றாள் . அன்னைக்கு முத்தம் கொடுத்த அதே இடத்துல கொடுக்கவா ? சீ நீ ரொம்ப bad பாய் என்றாள்.நாளைக்கு இந்நேரம் ஹாஸ்டல் போகணும்னு நினைக்கவே கஷ்டமா இருக்கு . சரி அதை பத்தி இப்போ ஏன் யோசிக்குறே ? மதியம் வேளாங்கண்ணி போறோம் என்றான். 12 மணி அளவில் கிளம்பினார்கள் .2 மணிக்கெல்லாம் போய் சேர்ந்து விட்டனர்.பீச் மணலில் மூவரும் அமர்ந்தார்கள். அனன்யா இருவரையும் கடலுக்குள் இழுத்தாள் .மூவரும் கடல் அலையில் நனைந்தபடி விளையாடினர் .பிறகு அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டனர். இரவு எட்டு மணி வரை கடற்கரையில் ஆட்டம் போட்டு விட்டு ஊர் திரும்பினர்.

சுபா ஊருக்கு போய்விட்டாள் .மறுபடியும் விஷாலை வெறுமை சூழ்ந்தது .ஊருக்கு போய் சேர்ந்ததும் சுபா ஃபோன் செய்தாள் . இந்த நியூ இயர் ரொம்ப என்ஜாய் பண்னினேன் விஷால் என்றாள்.அனன்யா மூவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தாள் . நல்லாயிருக்கு என்றான் விஷால். அடுத்த நியூ இயர் இன்னும் ஸ்பெஷல் ஆ பண்ணனும் .சுபா இல்லாத வெறுமையை போக்க அனன்யா ரொம்பவும் முயற்சி செய்தாள் எக்ஸாம்ஸ் காரணமாக அனன்யாவை அதிகம் சந்திக்க முடியவில்லை அதற்காக மனம் தளராமல் அவ்வப்போது போனில் பேசி வந்தான். இன்னும் இரண்டு எக்ஸாம்கள் இருந்தன .இவன் ஓரளவுக்கு நன்றாக எழுதி இருந்தான். அனன்யா எக்ஸாம் முடிஞ்சதும் கம்ப்யூட்டர் கோச்சிங் போகலாம் என்று சொல்லி இருந்தாள் .

ஒரு வழியாக எக்ஸாம் முடிஞ்சது இனி அனன்யாவை தினமும் சந்திக்கலாம் 15 நாட்கள் விடுமுறை விட்டிருந்தார்கள். அனன்யா இவனுக்கு போன் செய்தாள். எங்க இருக்க நீ ?வீட்லதான் இருக்கேன் வா கம்ப்யூட்டர் கிளாஸ் போகலாம்.இவனையும் அழைத்துக் கொண்டு மாடர்ன் கம்ப்யூட்டர் சென்டருக்கு விரைந்தாள். அங்கே அறிமுக வகுப்பு எடுத்தனர் . தீபாவும் வந்திருந்தாள் . நைட் ஸ்டடி முடிந்தது இப்ப கம்ப்யூட்டர் ஸ்டெடியா என்றாள் இவன் பதில் பேசாமல் இருந்தான். இவனும் தீபாவும் ஒரே கம்ப்யூட்டரை பகிர்ந்து கொள்ளும்படி இருந்தது. அனன்யா கம்ப்யூட்டரை கற்றுக் கொள்வதில் கவனமாக இருந்தாள் .

விஷால் கிளாஸ் எப்படி இருந்தது? கிளாஸ் ஓகே தான் ஆனால் இந்த தீபா ..அவளுக்கு என்ன? அவ கூட உட்கார்ந்து இருக்கிறது தான் கடுப்பா இருக்கு என்றான் விஷால்.அதெல்லாம் பார்த்தா முடியுமா விஷால் நீ கம்ப்யூட்டர்ல கான்சென்ட்ரேட் பண்ணு. சரி அனன்யா


நாளைக்கு லைப்ரரி போகணும் கொஞ்சம் புக் ரிட்டர்ன்பண்ண வேண்டும் என்றாள் அனன்யா சரி போவோம் காலேஜ் லைப்ரரியில் லீவு என்பதால் அதிக பேர் காணப்படவில்லை. விஷாலும் அனன்யாவும் கொஞ்ச நேரம் லைப்ரரியில் அமர்ந்திருந்தனர். பிறகு கேண்டினுக்கு சென்றனர் என்ன விஷால் அமைதியாக வர எனக்கு இந்த அமைதி ரொம்ப பிடிச்சிருக்கு காலேஜ் இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் அது சரி உனக்காக காலேஜ் எப்பவுமே லீவ் விட்டு விட முடியுமா.. இங்க பக்கத்துல friend ரூம் இருக்கு போய் பார்க்கலாமா என்று கேட்டாள் அனன்யா. பேர் என்ன? திவ்யா அவளுக்கு போன் பண்ணினாள் . 4 பேர் சேர்ந்து ரூம் எடுத்திருந்தார்கள். திவ்யாவுக்கு அரியர் இருந்ததால் ஊருக்கு போகவில்லை. இப்ப அவசியம் போகணுமா அனன்யா பார்த்து ரொம்ப நாளாச்சு அவளும் ப்ரீயா தான் இருக்கா நீ வேணும்னா வெயிட் பண்றியா நான் போய் பாத்துட்டு வரேன் இல்ல நானும் வரேன் என்று விஷால் சொன்னான் .

திவ்யா இவர்களை வரவேற்றாள் .வாங்க வாங்க திவ்யா மட்டும் தனியாக இருந்தாள் . இன்னைக்கு எனக்கு பிராக்டிகல்ஸ் இருக்கு ஓ சாரி நாங்க தொந்தரவு பண்ணிட்டோமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒரு ஒரு மணி நேரத்துல வந்துடுவேன். நீங்க பேசிட்டு இருங்க என்றால் இல்லை இல்லை நாங்கள் கிளம்பறோம் எப்பயாவது ஒரு தடவ தானே வரீங்க இருங்க காபி போட்டு தரேன் என்றாள் , அனன்யா அவள் கூட கிச்சனுக்கு சென்றாள் . திவ்யா லேப்டாப் ஒன்றை கொடுத்து இதுல மூவிஸ் அப்லோட் பண்ணி இருக்கேன் பாருங்க நான் வந்துடறேன் என்றாள். சீக்கிரம் வந்துவிடு திவ்யா என்றாள் அனன்யா. திவ்யா கிளம்பி போனதும் அனன்யா லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தாள் . ஏதாவது பிட்டு படம் போட்டு விடாதே மானம் போய்விடும் என்று சொன்னான் விஷால். உனக்கு எப்ப பாரு அதே நினைப்புதான். ஏதோ ஒரு ரொமான்டிக் படத்தை போட்டு இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். படத்தில் நெருக்கமான காட்சி வந்ததும்
அனன்யாவின் முகத்தை பார்த்தான்.போதும்டா நீ பார்த்தது படத்தை பாரு. நீ இருக்கும் போது படத்துல என்ன இருக்கு ?சுபா போன் செய்தாள் என்ன செய்றீங்க படம் ஓட்டிட்டு இருக்கோம். நல்ல படமா பாருங்க என்றாள் சுபா.

திவ்யா வந்து விட்டாள் என்ன பண்ணிங்க ரெண்டு பேரும் சும்மா படம் பார்த்துட்டு இருந்தோம் என்ன படம் அப்படி எல்லாம் ஒரு படமும் இல்லையே யார் சொன்னா என்கிட்ட கேட்டு இருக்கலாமே என்றாள் திவ்யா மூணு பேரும் பார்ப்போமா என்று கேட்டு அதிர்ச்சியடைய வைத்தாள். அதெல்லாம் வேண்டாம் திவ்யா நாங்க கிளம்பறோம் என்றான் விஷால். இருங்க சாப்பிட்டு போகலாம் நான் இப்ப சமைச்சுடுறேன் என்று சொன்னாள். எவ்ளோ வருஷமா லவ் பண்றீங்க ஆறு மாசமா இன்னுமா தயங்குறீங்க.. என் ஆளெல்லாம் முதல் வாரத்திலேயே எல்லாத்தையும் முடிச்சிட்டான் இதை கேட்டதும் விஷால் அவ்வளவு சீக்கிரமா. ஆமா இங்க தான் இந்த ரூம்ல தான். சான்ஸ் மிஸ் பண்ணிட்டேனே என்றான் விஷால்.நீ ரொம்ப லக்கி விஷால் அனன்யா மாதிரி பொண்ணு கிடைச்சிருக்கு. எனக்கும் ஒருத்தன் வாய்த்து இருக்கானே.திவ்யா நன்கு சமைத்து இருந்தாள் சாப்பாடு சூப்பரா இருக்குது என்றாள் அனன்யா

ஒரு வழியாக திவ்யாவிடம் விடைபெற்று கிளம்பினார்கள் அடிக்கடி வாங்க என்றாள் திவ்யா. அனன்யா நான் கூட நீ எங்க ஏதாவது பண்ணுவியோ என்று நினைத்தேன். இவன் பதில் பேசாமல் சிரித்தான். இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை . இதே சுபாவா இருந்தா ஒரு வழி பண்ணி இருப்ப என்றாள் அனன்யா. வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டாள். அனன்யா நீயே கோவமா இருக்க இப்ப எதுக்கு வீட்டுக்கு. அட சும்மா வா அப்பா லேப்டாப் வாங்கி தரேன்னு சொல்லி இருக்காரு நம்ம வீட்டிலேயே எல்லாம் பார்க்கலாம் எதுக்கு அடுத்தவங்க லேப்டாப் சொல்லிவிட்டு சிரித்தாள். முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டாள் மணி 5 ஆகி இருந்தது. இவன் போய் டீ போட்டான் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான் தேங்க்யூ விஷால் என்றாள். இருவரும் மாடிக்கு போனார்கள். அவளை மெதுவாக அணைத்தான் என்ன திடீர்னு நான் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல என்றான். எனக்கு தெரியும்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது . வீட்டு வேலைகளையும் அனன்யா செய்து வந்தாள் .பொங்கலுக்கு எங்கே போறோம் அனன்யா . எங்கேயும் போகலை உன் வீட்டு பொங்கல் தான் விசேஷமே . எங்க வீட்டுலயா ஆமாம் என் மாமியார் வீட்டுலதான் .அனன்யா புது லேப்டாப் வாங்கி விட்டாள்.விஷாலுக்கு ஃபோன் செய்தாள். டேய் புது லேப்டாப் வாங்கியாச்சு வந்து பாரு. கொஞ்சம் வேலையா இருக்கேன் சாயங்காலம் வந்து பார்க்கிறேன் என்றான். சரி . எப்படி இருக்கு லேப்டாப் உன்னை மாதிரியே இருக்கு..ஓவர் ஸ்மார்ட் . அனன்யா முறைத்தாள். நல்லா இருக்கு ஸ்பீட் இன்னும் கொஞ்சம் இருந்தா நல்லா இருக்கும் . உன் ஸ்பீட் விட இது நல்லாதான் இருக்கு என்றாள் அனன்யா.நீதான் ஸ்லோ என்றாள் .

எனக்கு ஒரு ஹெல்ப் பன்றியா .. எனக்கு கொஞ்சம் வீட்டு வேலை இருக்கு ,இந்த புக் தீபா வீட்ல கொடுத்திட்டு வரியா என்னது தீபா வீட்டுக்கா.. சும்மா போ நான் ஃபோன் பண்ணி சொல்லிட்டேன் . தீபாவுக்கு அன்று பிறந்த நாள். கேக் எடுத்துக்குங்க என்றாள். இன்னைக்கு உங்களை பார்க்கணும்னு நெனைச்சேன் . சரி தீபா நான் வரேன் . இருங்க போலாம் . உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். எவ்ளோ நாள்தான் அவங்க ரெண்டு பேரையும் ஏமாத்துவீங்க .. துணிந்து ஏதாவது செய்ய பாருங்க. இல்லைனா அவங்க உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க ..யோசிச்சு பாருங்க . இவன் குழம்பியவனாக விடை பெற்றான்.

அனன்யாவுக்கு ஃபோன் செய்தான் என்ன சொன்னா தீபா? சீக்கிரம் நாம ஒண்ணு சேரணும்னு சொன்னா. ஓ எவ்வளோ நல்ல மனசு அவளுக்கு .
திவ்யா , தீபா இருவருமே ஒரே கருத்தை சொன்னார்கள். சீக்கிரம் முடித்து விடு என்று. சுபாவுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னான். அவள் விழுந்து விழுந்து சிரித்தாள் . இதையே நீ இப்பதான் யோசிக்கிறாயா ? இதெல்லாம் சும்மா அவளுக உன்னை சீண்டி பார்க்கிறதுக்காக சொல்லுறது . இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே . அனன்யா கிட்ட நான் பேசுறேன் . அவ உனக்கு எல்லாம் சொல்லுவா . வேண்டாம் சுபா அவ என்னை தப்பா நினைத்து கொள்வாள் . அதெல்லாம் ஒண்ணும் இல்ல அவளே கொஞ்ச நாளா இதை பத்தி என்கிட்ட கேட்டுகிட்டு தான் இருந்தா.

அனன்யா வீட்டுக்கு வந்திருந்தாள். சுபா கிட்ட என்ன சொன்ன என்றாள் சிரித்து கொண்டே. சும்மாதான் தீபாவும், திவ்யாவும் சொன்னத பத்தி கேட்டேன் . சரி சரி எனக்கு புரியுது . உனக்கு ஓகே னா எனக்கும் ஓகே தான் என்னைக்கு வெச்சுக்கலாம். என்ன அனன்யா சொல்லுற ? உண்மையாத்தான் சொல்லுறேன். எனக்கும் உன்னை பிரிஞ்சு இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் ஏதோ பேச்சுக்கு சொன்னேன் அனன்யா. அப்போ என் மேல உனக்கு ஆசை இல்லையா ? நிச்சயம் இருக்கு ஆனா கல்யாணம் வரை என்னால பொறுமையா இருக்க முடியும். எதுக்கும் யோசிச்சு சொல்லு எனக்கு ஓகே தான். சுபாவுக்கும் ஓகே தான். வர பொங்கல் அப்பவே வச்சிக்கலாமா. அனன்யா இதெல்லாம் தானா நடக்க வேண்டியது அவசர பட முடியாது . ம்ம் புரியுது . நீ டென்ஷன் ஆகாதே விஷால் இப்போ இருக்குற காலகட்டதிலே உன்னை மாதிரி ஆள் கிடைக்குறது கஷ்டம் அதான் எனக்கும், சுபாவுக்கும் கவலை .

விஷால் யோசித்து பார்த்தான். சுபாவுக்கே மறுபடி ஃபோன் செய்தான் . என்ன சுபா அனன்யா இப்படி சொல்லுகிறாள். அவ சொல்லுறதிலே என்ன தப்பு . எப்படியும் நாம ஒண்ணு சேர்ந்துதானே ஆகணும். ம்ம் நீ கவலைபடாதே.. நான் பொங்கலுக்கு வரும்போது நல்ல முடிவா எடுப்போம் என்றாள் .