oru devathai paarkkum neram ithu - 10 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 10

Featured Books
  • उजाले की ओर –संस्मरण

    मनुष्य का स्वभाव है कि वह सोचता बहुत है। सोचना गलत नहीं है ल...

  • You Are My Choice - 40

    आकाश श्रेया के बेड के पास एक डेस्क पे बैठा। "यू शुड रेस्ट। ह...

  • True Love

    Hello everyone this is a short story so, please give me rati...

  • मुक्त - भाग 3

    --------मुक्त -----(3)        खुशक हवा का चलना शुरू था... आज...

  • Krick और Nakchadi - 1

    ये एक ऐसी प्रेम कहानी है जो साथ, समर्पण और त्याग की मसाल काय...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 10

சுபா நியூ இயர் லீவுக்கு வருவது உறுதியாகி விட்டது . இதை அனன்யாவே சுபா சொன்னதாக சொன்னாள் .இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு என்றான் விஷால். அனன்யா எனக்கு நியூ இயர் டிரஸ் எடுக்கணும் சண்டே வரியா என்றாள். தீபாவும் வரா, அப்ப நான் வரலை . சும்மா சொன்னேன்.. நானும் நீயும் மட்டும் போவோம் ஓகே .சுபாவுக்காக நீ எவ்வளவு வருத்தபடுறேன்னு எனக்கு தெரியும் விஷால்.சண்டே கடைக்கு போனார்கள் . அவளுக்கு பிடித்தமான ஆடைகளை எடுத்தார்கள்.

சுபாவுக்கும் ஒன்று எடுத்தாள் .விஷால் உனக்கு எதுவும் வேணாமா இல்லை அனன்யா தீபாவளிக்கு எடுத்ததே நிறைய இருக்கு .சரி போவோமா.. இந்த நியூ இயர் மறுபடியும் 3 பேரும் ஒண்ணா இருக்கணும் என்றாள் அனன்யா.வீட்டுக்கு வந்ததும் ,சரி நான் வரேன் அனன்யா நாளைக்கு காலேஜில் பார்க்கலாம் என்றான் . ஓகே விஷால் பைஅனன்யா எவ்வளவு பக்குவமாக நடந்து கொள்கிறாள் அவள் மனதிலும் ஆசை இருந்தாலும் நிதானமாக இருக்கிறாள் என்று நினைத்தான். சுபாவிடம் இருந்து ஃபோன் வந்தது . இந்த ஷர்ட் நல்லா இருக்கா என்று காண்பித்தாள் .எதுக்கு சுபா இதெல்லாம் . அனன்யா சொன்னா நீ எதுவும் எடுத்துக்கலன்னு, எனக்கு மனசு கேக்கல அதான் ஃபிரண்ட்ஸ் கூட ஷாப்பிங் வந்துட்டேன் என்றாள் . இது ஓகே வா என ஏழெட்டு சட்டைகளை காண்பித்தாள். ஒன்றை ஓகே செய்தான்.விஷால் உனக்காக வெயிட் பண்றேன் என்றாள் .

காலேஜில் ஆண்டு விழா மும்முரமாக நடந்து கொண்டிருந்தது . அனன்யா பாட்டு பாடும் குழுவில் இருந்தாள். அவள் கிளாஸ் வராமல் song ரிகர்சல் செய்ய போய்விடுவாள். மதியம் இவனை பார்க்க ஆவலுடன் வந்து விடுவாள். சாரி விஷால் கொஞ்சம் busy நீ எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிடு என்றாள். இதுக்கெல்லாம் மூஞ்சை தூக்கி வச்சுக்காதே என்று சொன்னாள். அவள் ரோஸ் நிற சுடிதார் அணிந்திருந்தாள்.ஆண்டு விழாவில் அவள் பாட்டு தான் ஹைலைட் . எல்லோரும் அவளை பாராட்டினார்கள் . இவனை பார்த்து பொறாமை பட்டார்கள். இவனுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று இவன் காது படவே பேசினார்கள். அதை பத்தி எல்லாம் நீ என கவலை படுற ? என்றாள் அனன்யா . நெஜமாவே உன் அன்புக்கும் திறமைக்கும் தகுதி உள்ளவனா நான்? என்றான் விஷால் .. நீ என் செல்லம் உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் உண்டு . கண்டவங்க பேசுரதை பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்லை என்றாள்.

சுபா ஃபோன் செய்திருந்தாள் . அனன்யா எல்லாம் சொன்னாள். எத்தனை பேரு உன்னை மாதிரி இருப்பாங்க விஷால் . அனன்யா மாதிரி ஒரு பொண்ணு கிடைத்தால் அவங்க உடனே பேண்டை அவுத்துடுவானுங்க .. ஆனா நீ அப்படி இல்லை. அதை மொதல்ல புரிஞ்சிக்க.. எதுக்கும் கவலைப்படாதே . ஓகே சுபா என்றான்
நீ எதுக்கு சுபா கிட்ட போய் இதை சொன்னே, அவ வேற டென்ஷன் ஆயிட்டா . அவ சொன்னாதான் நீ கேக்குற .. சரி சரி இதோட இதை விட்டு விடலாம்.நாளைக்கு வீட்டுக்கு வா ரொம்ப நாளாச்சு உன்கிட்ட பேசி .

என்னாச்சு அனன்யா ? லேசா ஜுரம் என்றாள். சரி வா ஹாஸ்பிடல் போகலாம் . அதெல்லாம் வேண்டாம் விஷால். நீ உக்காரு . நேத்து நெறைய பேரு ஃபோன் பண்ணினாங்க .. அதனால சரியா தூக்கம் இல்லை . சரி அனன்யா நான் அப்புறம் வரட்டுமா நீ ரெஸ்ட் எடுத்துக்க .
டேய் கிட்ட வாடா .. உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க என்று சிரித்தாள். அவளை மெதுவாக தோளில் சாய்த்துக்கொண்டான்.
எனக்கு என்னென்னவோ தோணுது விஷால்.. அவள் நைட்டி அணிந்திருந்தாள் . மடியில் படுக்க வைத்து மென்மையாக தட்டிக்கொடுத்து கொண்டிருந்தான். விஷால் ? என்ன நாம இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுனா என்ன.. என்ன சொல்லுற நீ ?சும்மா கேட்டேன்.. உனக்கு என் மேல எவ்ளோ ஆசை விஷால் ..?அதை வார்த்தையால் சொல்ல முடியாது .. ம் அப்புறம் அவளுடைய உதட்டில் உதடு வைத்து முத்தமிட்டான். விஷால் நீ ரொம்ப கெட்ட பையன் என்றாள். அவளுடைய மார்பு பகுதியில் முத்தமிட்டான். விஷால் நீ ரொம்ப ரொம்ப கெட்ட பையன். மெல்ல அவளுடைய பாதங்களை பிடித்து விட்டான்..

ஜுரம் சரியாகும் வரை காலேஜ் வர வேண்டாம் என்றான் விஷால்.
நாளைக்கு வந்து பார்க்கிறேன் .. விஷாலுக்கு மனம் வேறு எதிலும் செல்லவில்லை.காலையில் சுபா ஃபோன் செய்திருந்தாள் என்னாச்சு அனன்யாவுக்கு உடம்பு சரியில்லையாமே.. ஆமாம் லேசா ஜுரம் .நீ எதுக்கு காலேஜ் போனே பக்கத்துல இருந்து பார்த்துக்க வேண்டியதுதானே. சாரி சுபா நான் மதியமே போய் பார்க்குறேன் ..
அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். சரி வா நான் வீட்டுலதான் இருக்கேன்.அனன்யா எதுவும் சாப்பிட்டியா ? பிரட் சாப்பிட்டேன். நீ என்ன சாப்பிட்ட? ஒண்ணும் இல்லை ஏண்டா இப்படி பண்ண .. சரி இரு நூடுல்ஸ் பண்ணி தரேன் .. அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ சும்மா இரு என்று சமயலறைக்குள் நுழைந்தாள் . விஷால் சாப்பிடாம என்ன வேலை உனக்கு . அவள் பாதி இவன் பாதி என்று சாப்பிட்டனர்.

நாளைக்கு கண்டிப்பா காலேஜ் வருவேயில்ல.. நிச்சயமா வருவேன் .விஷால் நூடுல்ஸ் நல்லா இருந்துச்சு என்றான். அவள் இன்னும் 4 நாளிலே நியூ இயர் வர போகுது .. ரொம்ப exciting ஆ இருக்கு என்றாள்.சுபாவுக்கு ஃபோன் பண்ணுவோமா? பண்ணு பண்ணு என்றான் விஷால். என்ன காதல் ஜுரமா அனன்யா என்றாள் சுபா. இவன் சும்மா டி... நானும் என்னென்னவோ சொல்லி பார்க்குறேன் ஒண்ணும் வழிக்கு வர மாட்டேன் என்கிறான். அவ சொல்லுறத கேளு விஷால் .. சரி சுபா.அப்போ நான் கிளம்பட்டுமா ? எனக்கு கொஞ்சம் மருந்து வாங்கணும் போலாமா.. சரி ..

சரியாக 31 தேதி காலை சுபா வந்து விட்டாள்.அனன்யாவும் , விஷாலும் ஸ்டேஷன் போயிருந்தனர். சுபா சற்றே இளைத்து காணப்பட்டாள் .
என்ன சுபா ஆளே மாறிட்டே அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கல சுபாவை வீட்டில் டிராப் செய்தான். அனன்யா அவள் வண்டியில் வீட்டுக்கு போய் விட்டாள். உள்ள வா விஷால் வாப்பா தம்பி என்று சுபா அம்மா கூப்பிட்டாள் . சுபா நீ ரெஸ்ட் எடு நான் ஈவினிங் வந்து பார்க்கிறேன் .அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ இங்கேயே இரு நான் குளிச்சிட்டு வரேன் ...அது வந்து சுபா.. சொல்றத கேளு. சுபா அம்மாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான் நியூ இயர் கேக் ஆர்டர் பண்ணிட்டியா என்றாள் சுபா. பண்ணியாச்சு இரு டிபன் சாப்பிட்டுட்டு அப்புறம் அனன்யா வீட்டுக்கு போகலாம் சுபா அம்மா வெரைட்டியாக சமைத்து இருந்தாள் .

அனன்யா வீட்டுக்கு போன போது மணி 11 ஆகி இருந்தது . அனன்யா ஏதோ படித்துக் கொண்டிருந்தாள்.. என்ன அனன்யா ஜுரம் எப்படி இருக்குது? இப்போ பரவாயில்லை ..கையில் இருந்த பழங்களை கொடுத்தாள் . எதுக்குடி இதெல்லாம்? இருக்கட்டும் அதனால என்ன? மூவரும் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அனன்யா விஷால் நல்லா டெவலப் ஆயிட்டானே, ஆமாம் ஆமாம் இல்லாத வேலை எல்லாம் பண்றான் நீ இடம் கொடுத்து இருப்ப அதான் விளையாடி இருப்பான் என்றாள் சுபா. அந்த காலேஜ் எப்படி? பரவாயில்ல பசங்க எல்லாம் பிரண்ட்லியா இருக்காங்களா, இருக்காங்க. நான் போனதுக்கு அப்புறம் விஷால் ரொம்பவே மாறிட்டான் இல்ல, அப்படி சொல்ல முடியாது அவன் உன்னையே தான் நினைச்சுட்டு இருக்கான்

அனன்யா நான் போய் லஞ்ச் ரெடி பண்றேன் நீங்க பேசிட்டு இருங்க என்றாள் . சுபா கண்ணை மூடி சேரில் சாய்ந்திருந்தாள் என்னாச்சு சுபா ட்ரெயின்ல வந்த டயர்டு..அனன்யா ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள் தூங்கிட்டியா சுபா இல்ல இல்ல ஜூஸ் எடுத்துக்க... ஜூஸ் எடுத்துக் கொண்டாள் விஷால் என்ன சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க என்னால ரொம்ப நாள் வெயிட் பண்ண முடியாது என்றாள் சுபா என்னையும் தான் என்றாள் அனன்யா. விஷால் கண்டிப்பா பண்ணிக்கிறேன் என்றான்

மதியம் லஞ்ச் சாப்பிட்ட பிறகு, அனன்யா நான் கொஞ்சம் வெளில போறேன் ஒரு ஒன் ஹவர்ல வந்துடுவேன் பிறகு வெளியில் போகலாம் என்றாள்.
சரி அனன்யா என்றான் விஷால். சுபா தூங்கிக் கொண்டிருந்தாள் அவள் அருகில் போய் உட்கார்ந்து தலையை வருடி கொடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அனன்யா எங்கே என்று கேட்டாள் பிரண்டு வீட்டுக்கு போய் இருக்கா இப்போ வந்துருவா என்றான் விஷால். சுபா முகம் கழுவி கொண்டு வந்தாள் . காபி போடவா என்று கேட்டான் விஷால்.. நானே போட்டு தரேன் என்று உள்ளே போனாள் சுபா..

அனன்யா வந்துவிட்டாள். வரும்போது ஆர்டர் செய்திருந்த கேக்கையும் வாங்கி வந்திருந்தாள். காபி குடிச்சியா விஷால் குடிச்சேன் சுபா போட்டு கொடுத்தா உனக்கு வேணுமா இன்னும் இருக்கு என்றான் விஷால். சரி நான் எடுத்துக்கிறேன். சுபா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். சரி நான் வீட்டுக்கு போயிட்டு வருகிறேன் என்றான் விஷால் நீ எங்கேயும் போகக்கூடாது என்றாள் சுபா. என்ன பிளான் அனன்யா நைட் 12 மணிக்கு கேக் வெட்டுறோம் அதுக்கப்புறம் சுபா டான்ஸ் அனன்யாவோட பாட்டு விடிய விடிய நியூ இயர் கொண்டாடுகிறோம். ஓகேவா விஷால் ?எனக்கு ஓகே.வேற யாரையும் இன்வைட் பண்ணலையா? சுபா வேணாம்னு சொல்லிட்டா..
அப்ப சரி. நாளைக்கு காலைல கோயிலுக்கு போறோம் மதியம் வேளாங்கண்ணி போறோம் என்றாள் அனன்யா.

விஷால் எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் அனன்யா நீயும் வரியா இல்ல நீங்க போயிட்டு வாங்க நான் இப்பதான் வெளிய போயிட்டு வந்தேன் என்றாள். சரி அனன்யா நாங்க போயிட்டு 8 மணிக்கு வந்துடுறோம் ஏதாவது வேணும்னா போன் பண்ணு என்றான் விஷால் கடைக்கு போய் கொஞ்சம் ஸ்வீட் வாங்கினாள் சுபா. ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா என்று கேட்டாள் . போலாமே என்றான் .அனன்யாவுக்கும் ஐஸ்கிரீம் பேக்கிங் செய்து கொண்டான். உனக்கு இந்த டிரஸ் நல்லா இல்ல விஷால் வேற டிரஸ் எடுப்போமா இப்பயா? நாளைக்கு நியூ இயர் தானே.. ஏற்கனவே நீ ஒன்னு எடுத்து இருக்க தானே அது இருக்கட்டும் இப்ப ஒன்னு எடுப்போம்.

ட்ரையல் ரூமில் உடைமாற்றிக் கொண்டு வந்து காண்பித்தான். அவளுக்கு பிடித்திருந்தது அதையே செலக்ட் செய்தான். இப்பதான் நல்லா இருக்கு இப்படியே டிரஸ் பண்ணு விஷால்.. உனக்கு ஏதாவது வேணுமா என்றான். நைட்டி தான் வேணும். அதை ஒன்று வாங்கிக் கொண்டாள் . வேற ஏதாவது வேணுமா? வாங்கணுமா என்றான் விஷால் அவ்வளவுதான் வீட்டுக்கு போகலாம்.மொட்டை மாடியில் டெக்கரேஷன் செய்து வைத்திருந்தாள் அனன்யா. இவர்கள் வரும் சத்தம் கேட்டதும் கீழே வந்தாள் . எனக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க ?ஐஸ்கிரீம் சூப்பர் அதை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தாள் . சுபா வீட்டுக்கு போன் பண்ணி பேசிக் கொண்டிருந்தாள்.வேற என்ன வாங்கினீங்க இவனுக்கு ஒரு டிரஸ் வாங்கினோம். எனக்கு ஒரு நைட்டி என்றாள் சுபா. சுபா வா கொஞ்சம் ஹெல்ப் பண்ணு சமையலறையில் என்றாள் அனன்யா இரண்டு பேரும் நைட் டிபனுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் இவன் போய் உள்ளே பார்த்தான் என்ன பசிக்குதா என்றாள் அனன்யா இல்லை இல்லை சும்மாதான் பார்த்தேன் என்றான் விஷால்.

விஷால் மேலே போய் நின்றான் காற்று பரவசமாக அடித்தது அடுத்த வருடம் இதே போல இவர்கள் இரண்டு பேரோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்பினான் . மேலேயே டிபனை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். நிலா வெளிச்சத்தில் டேபிள் போட்டு மூவரும் அமர்ந்தனர். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்றான் விஷால் .அனன்யா ஏதோ ஒரு பாட்டை பாடத் தொடங்கினாள்.
அனன்யா, சுபா இருவரும் உடைமாற்றிக் கொண்டு வந்தனர். இவனும் புதிய உடை மாற்றிக் கொண்டு வந்தான். புதியதொரு வருடத்திற்காக மூவரும் ஆவலுடன் காத்திருக்க தொடங்கினர்.