oru devathai paarkkum neram ithu - 9 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 9

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 9

அனன்யா அப்படி சொன்னதும் இவனுக்கு சற்றே பயமாக இருந்தது .ஆனால் துணிந்து தான் ஆக வேண்டும் மறுபடி அவளுக்கு போன் செய்தான். அனன்யா நீ நிச்சயமா அப்பா கிட்ட சொல்ல போறியா? ஏன் விஷால் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா அப்படி சொல்ல வரல அனன்யா, நீ பயப்படாதே எது நடந்தாலும் நம்ம காதல் ஜெயிக்கும். சரி அனன்யா காலேஜ்ல பார்க்கலாம் .ஓகே விஷால் அனன்யா ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து விட்டாள், அவள் நிச்சயம் சொல்லத்தான் போகிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நிச்சயம் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.அனன்யா சுபாவிடமும் பேசினாள். இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்பதே சுபாவின் வேண்டுகோளாக இருந்தது .நீயும் விஷால் மாதிரி பயப்படுற ,எதுக்கு பயப்படுற ?நான் பயப்படவில்லை ஆனா எதிர்காலத்தில் நல்ல விதமா விஷால் கூட சந்தோஷமா வாழ ஆசைப்படுகிறேன் எதுக்கும் யோசிச்சு செய் என்றாள் சுபா

பொங்கல் எப்போது வரும், சுபாவை எப்போது பார்ப்போம் என்று ஏங்கிக் கிடந்தான் விஷால். அனன்யா விஷாலை நினைத்து கவலைப்பட்டாள் .விஷால் படிப்பில் கவனம் செலுத்து.. நாம எப்பவுமே ஒண்ணா தான் இருக்க போறோம் அத மாத்த யாராலயும் முடியாது ஈவினிங் வீட்டுக்கு வரேன் பேசுவோம் என்றாள் சரி அனன்யா என்றான் .ஈவினிங் 5 மணி போல வீட்டுக்கு வந்தாள் ஏன் விஷால் ஒழுங்கா படிக்க மாட்டேங்குற எப்பவுமே கவலையா இருக்கிற.. படிக்கிறேன் அனன்யா .இன்னைக்கு கூட எச்ஓடி கூப்பிட்டு பேசினார். இன்னைக்கு நைட்டு நாம ஸ்டடி பண்ணுவோம்.. அது சரியா வருமா? நிச்சயம் சரியா வரும். என்னோட இன்னொரு பிரண்டு தீபா வீட்டுக்கு போவோம் அவ வீட்ல எந்த தொந்தரவும் இருக்காது. நீ இந்த நோட்ஸ் ஜெராக்ஸ் எடுத்துட்டு குடு எப்படியாவது நீ பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணனும் என்றாள்.

அவளே வந்து தீபா வீட்டுக்கு அழைத்து போனாள் . தீபாவை அறிமுகப்படுத்தி வைத்தாள் அனன்யா. நானும் உங்க கூட ஸ்டடி பண்ண வரலாமா என்றாள் தீபா. நிச்சயமா.. அனன்யாவும் விஷாலும் படிக்க தொடங்கினர் . அப்போது சுபாவிடம் இருந்து போன் வந்தது என்ன விஷால் நான் இல்லாம நைட் ஸ்டெடியா இங்க தீபாங்குறவங்க வீட்டுக்கு வந்து இருக்கோம்.. சரி சரி கவனமாக படி விஷால் என்று ஃபோனை வைத்து விட்டாள்.நாளைக்கும் நாம தீபா வீட்டுக்கு போவோமா சரி விஷால் நான் பேசிட்டு சொல்றேன் நாளைக்கு தீபா வீட்ல இருக்க மாட்டா நாம் இரண்டு பேரும் தான் இருப்போம் உனக்கு ஓகேவா விஷால் சரி அனன்யா.

விஷால் பழையபடி இல்லை அவனுக்கு இப்போது முழு கவனமும் படிப்பின் மேல் வந்துவிட்டது. எழுந்திரு அனன்யா ஸ்டடி பண்ணலாம் என்று சொல்லிவிட்டு தூங்குகிறாயே என்று எழுப்பினான் சாரி விஷால் நேத்தும் தூங்கலையா.. அதான் அப்ப வீட்டுக்கு போலாமா ? வேண்டாம் விஷால் நீ படி நான் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்து கொள்கிறேன் என்றாள் அவளுடைய துப்பட்டா தாறுமாறாக விலகி கிடந்தது இவன் போய் அதை சரி செய்தான் என்ன பண்ற விஷால் ஒன்னும் இல்ல நீ தூங்கு நீ தூங்கு என்றான் உனக்கு எதுவும் வேணும்னா கேளு விஷால் . சரி இவனுக்கும் தூக்கம் வந்தது போய் காபி குடிச்சிட்டு வரலாமா நான் கீழே போய் போட்டு எடுத்துட்டு வரேன் இல்ல நானும் வரேன் என்றான் வேண்டாம் விஷால் நீ வந்தா சும்மா இருக்க மாட்டே அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது வா போவோம் .

மறுநாளும் வகுப்பில் தூங்கி விழுந்தான் விஷால். தீபா ஊரிலிருந்து வந்து விட்டாள் அனன்யா இன்னைக்கு ஒரு நாள் பிரேக் எடுத்துக்கலாம் நாளைக்கு மறுபடியும் ஸ்டார்ட் பண்ணலாம் என்றாள் . தீபா விஷாலுக்கு போன் பண்ணி இருந்தாள். அவ வரலைன்னா என்ன நாம ஸ்டடி பண்ண கூடாதா என்று கேட்டாள். இதை கேட்டதும் தீபா இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க என்று கட் செய்தான் என்னாச்சு விஷால் ஒன்னும் இல்ல தீபா போன் பண்ணா.. என்ன சொன்னா நைட் ஸ்டடிக்கு கூப்பிட்டா.. இதில் என்ன தப்பு இருக்கு அவ கூப்பிட்டது ஸ்டடிக்கு மாதிரி தெரியல என்றான் விஷால்.. இதெல்லாம் சகஜம் விஷால் நீ வேணா போயேன்.. போய் தான் பாரேன் என்று சிரித்தாள் உன்னை ஸ்டடி பண்ணவே எனக்கு நேரம் போதல இதுல இன்னொன்னு வேற..

சுபா இருந்திருந்தால் என்னை பார்த்து தீபா அப்படி கூப்பிட்டு இருப்பாளா சுபா தான் சும்மா விட்ருப்பாளா என்றான் விஷால் சும்மா புலம்பாதே விஷால் எல்லாம் நல்லது தான் நாளைக்கு உனக்கு சப்போர்ட் வேணும்னா எல்லோரோட பிரண்ட்ஷிப் வேணும் அதுல நல்லவங்களும் இருப்பாங்க கெட்டவங்களும் இருப்பாங்க என்றாள் அனன்யா. போதும் தாயே இன்றைக்கு இது போதும். அனன்யா நான் இருக்கேன்டா உனக்கு , சொல்லுவியே தவிர ஒண்ணும் காட்ட மாட்டே..ஓங்கி அவன் முதுகில் ஒரு தட்டு தட்டினாள் அனன்யா.


அனன்யா உனது பிறந்தநாளுக்கு என்ன வேணும்னு முன்னாடியே சொல்லிடு அப்புறம் லாஸ்ட் மினிட்ல என்ன தவிக்க விடாதே. சரி விஷால். நாம உன்னோட பர்த்டேவ சர்ப்ரைஸா சுபா கூட கொண்டாடுனா என்ன?.. அவளே இப்பதான் படிக்க போய் இருக்கா அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் .அதுவும் சரிதான். எங்கேயாவது வெளியூர் போலாமா? எங்க திருச்சிக்கா என்று சிரித்தாள் அதெல்லாம் வேண்டாம் இந்த முறை சிம்பிளா கொண்டாடினா போதும். என்ன அனன்யா இப்படி சொல்லிட்ட நான் என்னென்னவோ பிளான் பண்ணி வச்சிருந்தேன்.. அப்படி என்ன பிளான் பண்ணி வச்சிருந்தே அது சஸ்பென்ஸ்.. இப்ப வேணாம்னு சொல்லிட்டியே ..

அனன்யா ஒரு ரிக்வெஸ்ட் உன் பர்த்டேக்கு அப்பா கிட்ட நம்ம லவ் பத்தி பேச வேண்டாம், பொங்கலுக்கு சுபா வரும்போது அவகிட்ட பேசிட்டு அதுக்கப்புறம் நாம சொல்லிக்கலாம் ப்ளீஸ் என்றான் விஷால். சரி விஷால் உனக்காக இது தள்ளி போடுறேன்.. ஆனா பொங்கலுக்கு அப்புறம் என்னால தள்ளி போட முடியாது. சரி அனன்யா. எக்ஸாம் வருது படிக்கணும் விஷால் ஒரு வாரம் நீயும் நானும் பாத்துக்காம இருக்க முடியுமா, என்ன விளையாடுறியா வேணும்னா நீ என்ன பாக்காம இரு நான் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்றான் விஷால்.

அனன்யா சொந்தக்காரர் கல்யாணத்துக்காக இரண்டு நாட்கள் சென்னை போவதாக சொன்னாள் . போய்ட்டு வா உனக்கு ஒரு சேஞ்சா இருக்கும் எனக்கு போன் பண்ணாதே ஃபுல்லா என்ஜாய் பண்ணு அதெல்லாம் முடியாது நான் போன் பண்ணுவேன் என்றாள் அனன்யா. கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஈவினிங் வரியா என்றாள் சரி வருகிறேன். விஷால் நான் வேணும்னா கேன்சல் பண்ணட்டுமா எதுக்காக இதெல்லாம் சாதாரண விஷயம் நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கு எல்லாரும் வரணும் இல்ல அதனால நீ கண்டிப்பா போய் தான் ஆகணும் அது சரி அப்ப நான் போறதுல உனக்கு வருத்தம் இல்லை அப்படித்தானே ?என்ன அனன்யா எல்லா பக்கமும் கேட் போடுற .

உனக்கு சென்னையில் இருந்து என்ன வாங்கி வரட்டும் பெல்ட், சூ வேற ஏதாவது வேணுமா? அதெல்லாம் ஒன்னும் வேணாம் அனன்யா உனக்கு பிடிச்சது ஏதாவது, சுபாவுக்கு பிடிச்சது ஏதாவது வாங்கிக்கொள். சரி உள்ள வா, அப்பா இல்லையா எதுக்கு இப்ப அப்பாவ தேடுற? அப்படி இல்ல என்று அவளை கட்டி அணைத்தான்.நினைச்சேன் .. இன்னும் ரெண்டு நாள் எப்படி இருக்க போறேனா என்று விஷால் சொன்னான். சரி உக்காரு நான் போய் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். உள்ளே போய் லெமன் ஜூஸ் போட்டு எடுத்து வந்தாள் நாளைக்கு எத்தனை மணிக்கு போற அஞ்சு மணிக்கு நான் வரவா வேண்டாம் வேண்டாம். நீ மட்டும் ஜாலியா போற.. சீ உனக்கு வேற வேலையே இல்லை. அவளை இழுத்து பிடித்து மடியில் உட்கார வைத்தான் அவள் கண்களை மூடிக்கொண்டாள் என்னடா பண்ண போற எப்பவும் போல தான் அவள் கைகளில் மோதிரத்தை மாட்டி விட்டான். எதுக்குடா இது எப்பவும் உன் கையில் இருக்கணும் என்றான்.

அனன்யா இல்லாத நாட்கள் ரொம்ப கஷ்டமாக கழிந்தது. இடையில் அவள் போன் பண்ணி இருந்தாள் . நீ இல்லாமல் ரொம்ப போரா இருக்குடா என்று சொன்னாள் . கல்யாணம் எப்படி நடந்தது என விசாரித்தான். அது நல்லபடியா நடந்தது .. சுபா இவனுக்கு போன் பண்ணி இருந்தாள் என்ன பண்ற விஷால்.. அனன்யா உன்னை விட்டுட்டு போயிட்டா போல இருக்குது.. நாளைக்கு வந்துடுவா .. சரி விஷால்.. வர நியூ இயர் கொண்டாட்டத்துக்கு லீவு கேட்டு இருக்கேன் கிடைச்சதுன்னா கண்டிப்பா வருவேன். ரொம்ப சந்தோஷம் சுபா நீ வந்தனா செம ஜாலியா இருக்கும் என்றான் விஷால்.


அனன்யா சென்னையிலிருந்து வந்து விட்டாள் இவனுக்கு போன் செய்தாள் நான் இன்னைக்கு காலேஜ் போகல, நீயும் போகாதே. வீட்டுக்கு வா உன்கிட்ட பேசணும் சரியா 9:00 மணிக்கு வரேன். வீட்டுக்கு போய் பெல் அடித்த போது அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்தாள் .என்ன அனன்யா டிஸ்டர்ப் பண்ணிட்டேனா அதெல்லாம் ஒன்னும் இல்லடா கொஞ்சம் டயர்டா இருந்தேன். இரு காப்பி போட்டு எடுத்துட்டு வரேன் உள்ளே போனாள் . காபி குடித்தான்.. ரெண்டு நாளா ஒரே தொல்ல என்ன ஆச்சு? நம்பர் குடு நம்பர் குடுன்னு ஒரே டார்ச்சர் யாரு எல்லாம் கல்யாணத்துக்கு வந்த பசங்க தான் அப்புறம் என்ன ஆச்சு? நீயும் நானும் சேர்ந்து இருக்க போட்டோவ காமிச்சதுக்கப்புறம் பேசாம போயிட்டானுங்க.

சுபாவுக்கும் எனக்கும் சாரி எடுத்தேன்.. எனக்கு ஒன்னும் இல்லையா உனக்கு ஒரு பெல்ட் வாங்கினேன் என்றாள். நீ இந்த கல்யாண போட்டோஸ் பாத்துட்டு இரு.. நான் குளிச்சிட்டு வரேன் அப்போ நானு சும்மா இருடா நீ வேற என்றாள் . குளித்துவிட்டு வந்தாள் அனன்யா. போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு .. சுபாவுக்கு வாட்ஸ் அப் பண்ணி விடு என்றான் விஷால்.நான் ஏற்கனவே அனுப்பிவிட்டேன். அவ நியூ இயர்க்கு வரேன்னு சொல்லி இருக்கா.. எங்கிட்டயும் சொன்னா ஏதாவது சாப்பிடுறியா ..சாப்பிட்டு தான் வந்தேன் எனக்கு பசிக்குது எங்கயாவது வெளியே போய் சாப்பிடலாமா சரி இருவரும் ஹோட்டலுக்கு போனார்கள் அனன்யா தோசை ஆர்டர் செய்தாள் எப்பவுமே தோசை தானா என்று கிண்டல் செய்தான்.

எங்க வீட்டுக்கு போலாமா அனன்யா சரி வா போலாம் என்று கிளம்பினார்கள்.. நியூ இயர்க்கு என்ன பிளான் வச்சிருக்க அதுதான் எனக்கும் புரியல .. நீ என்ன பிளான் வச்சிருக்க வேளாங்கண்ணி போவோமா சூப்பர் ஐடியா அனன்யா.. அப்புறம் கல்யாணத்துல வேற என்ன விசேஷம் என்னை பாட சொன்னாங்க பாடுனேன் நிறைய ஃபேன்ஸ் கிடைச்சாங்க அவங்க வீட்டு விசேஷத்துக்கு கூப்பிட்டு இருக்காங்க .. சரி நீ டிவி பாத்துட்டு இரு நான் போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரேன்.. நான் மட்டும் இருக்கவா கீழே அம்மா இருக்காங்க போய் பேசிட்டு இரு நான் இப்ப வந்துடறேன்..ஏன் விஷால் அப்பா அம்மா கூட அவ்வளவாக சரியாக பேச மாட்டேங்கற என்னவோ சின்ன வயசுல இருந்து கண்டித்து வளர்த்ததனால என்னால இயல்பா பேச முடியல.. என்றான் விஷால். சரி வேற என்ன பிளான்? இன்னைக்கு லீவு வேற போட்டாச்சு.. மதியம் படத்துக்கு போவோமா வேணாம் விஷால் என்ன வீட்டில் விட்டுவிடு நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் .சரி வா . அப்ப நான் கிளம்பவா, எனக்கு உன் கூட இருக்கணும் போல இருக்கு நீ தூங்கு நான் வேணா இங்கே உட்கார்ந்து இருக்கேன்.மக்கு , மக்கு என்றாள் சிரித்து கொண்டே. மெல்ல அவள் அருகில் போனான் . என்ன சொன்ன? என்ன சொன்ன ? என்று அவளை தூக்கி சுற்றினான். அவளுடைய பின்புறத்தை அவனுடைய கைகள் அழுத்தி பிடித்திருந்தன.போதும் போதும் விஷால்.. தெரியாம சொல்லிட்டேன் என்றாள்.

அனன்யா கூட சும்மா இருப்பதே பேரனுபவம் .அனன்யா காலேஜ் வந்து விட்டாள் . விஷால் இன்னும் வரவில்லை. இரண்டு கிளாஸ் முடிந்த பிறகே வந்தான். எங்கே போய் தொலைஞ்சே என்றாள். வீட்ல ஒரு வேலை அதை முடிச்சிட்டு வர லேட் ஆயிடுச்சு .எக்ஸாம்ஸ்க்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு விஷால் . இனி அடிக்கடி லீவு போட கூடாது என்றாள் .