Oru Devathai Paarkkum Neram Ithu - 7 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 7

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 7

ஒரு வழியாக சுபாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு தான் செய்வது சரிதான். தான் சுயநலமாக இருந்தால் அவளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என நினைத்தான். அனன்யாவும் இதற்காக ரொம்ப வருத்தப்பட்டாள். இவனுக்கு காலேஜ் போகவே பிடிக்கவில்லை . சுபா நினைப்பாவே இருந்தது. அனன்யா நீ தேவை இல்லாம கவலை படுற எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றாள். சுபா நான் அவளை ஏமாத்திட்டதா நினைக்கிறாள். அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. இந்த வார கடைசியில் நாம அவள போய் பார்க்கலாம் நான் சுபா அம்மாகிட்ட பேசி இருக்கேன் அவர்களும் சரி என்று சொல்லி இருக்காங்க. ரொம்ப தேங்க்ஸ் அனன்யா.

தினமும் அனன்யா உடன் பழகி வந்தாலும் சுபாவின் நினைப்பு விஷாலை விட்டுப் போகவில்லை. சுபாவுக்கு போன் செய்யலாமென நினைத்தான் . அனன்யா அதை தடுத்து விட்டாள். நாம தான் நேரில் பார்க்க போறோமே அப்புறம் என்ன, அவங்க அப்பாவுக்கு இது தெரியாது தெரிஞ்சா பெரிய பிரச்சினை ஆயிடும் என்றாள் அனன்யா. அந்த வார கடைசியில் அனன்யாவும் விஷாலும் அந்த ஹாஸ்டலுக்கு சென்றனர் சுபா வெளியே வந்தாள் இவனை பார்த்ததும் லேசாக அதிர்ச்சி அடைந்தாள் நீ ஏன் இங்கு வந்த? அப்பாவுக்கு தெரிஞ்சா உன்னை ஏதாவது பண்ணிடுவார் அதனால தான் நான் உனக்கு போன் கூட பண்றது இல்ல. மூவரும் அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் சென்றனர். நான் இப்ப பக்குவம் ஆயிட்டேன். இனிமே விஷால் நீ என்ன பார்க்க வர வேண்டாம். சுபா கோவத்துல அப்படி சொல்லாதே என்றால் அனன்யா. இல்ல நான் சீரியஸா தான் சொல்றேன் எனக்கு விஷாலோட லைஃப் தான் முக்கியம் நானும் அவனும் சேர்ந்து வாழ போற லைஃப் தான் முக்கியம் அதுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் ஆயிட்டேன்.

விஷால் சுபாவின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியும் சோகமும் அடைந்தான். ஒருபுறம் அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் என்பது மகிழ்ச்சி அளித்தாலும் இனிமேல் தன்னை பார்க்க வர வேண்டாம் என்று சொன்னது சோகத்தை அளித்தது. விடை பெற்றுக் கொண்டான். என்ன அவசரம் என்றாள் சுபா. நீதான் சொல்லிட்டியே என்றான் விஷால். நான் சொன்னா உடனே போயிடுவியா கொஞ்ச நேரம் இரு. பிறகு அனன்யாவை பார்த்து நீதான்டி விஷாலை பாத்துக்கணும். என்னோட காதலையும் நீ தான் சேர்த்து பார்த்துக்கணும் , ஆனா உனக்கு சந்தோஷமா இருக்குமே என்று சிரித்தாள் சே சே நான் என்ன அவ்வளவு கேவலமானவளா உங்கள பிரிச்சு நான் என்ன செய்ய போறேன், இருந்தாலும் நீ கொடுத்து வச்சவ என்றாள் சுபா.
சுபாவை நினைத்து நீ என்னை ஒதுக்காதே எப்பவும் போல இரு என்றாள் அனன்யா. சரி அனன்யா நீயும் கவனமா இரு அவ பிரிஞ்சு போனது போல நீயும் போயிட்டா நான் உடைந்து போய்விடுவேன் என்றான் விஷால். நீ எதுக்கும் கவலை படாதே நான் பாத்துக்குறேன். சுபாவின் பிரிவு விஷாலுக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. டான்ஸ் கிளாஸ் போவதை நிறுத்தி விட்டான் அவளுடைய நினைவு எந்த இடத்துக்கு போனாலும் தொடர்ந்து வந்தது. அனன்யா உடனான நெருக்கம் எந்த வகையிலும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஒரு வகையில் சுபாவின் பிரிவுக்கு தன்னுடைய அஜாக்கிரதையே காரணம் என்று நினைத்தான் அது போல அனன்யாவுக்கும் நடக்கக்கூடாது. அனன்யா போன் பண்ணி இருந்தாள் விஷால் நீ எங்க இருக்க? வீட்டுல தான் இருக்கேன்.. ஒரு குட் நியூஸ் வர தீபாவளிக்கு 10 டேஸ் லீவுல சுபா வருகிறாள் நிஜமாவே இது குட் நியூஸ் தான் என்றான் விஷால் நீ என்ன பிளான் பண்ணி இருக்க அது சஸ்பென்ஸ் என்றாள் அனன்யா

தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் உற்சாகமாக இருக்கப் போகிறது. சுபா அனன்யா ஆகியோர் இவன் வாழ்வில் புத்துணர்ச்சியை தொடர்ந்து தந்து கொண்டிருந்தனர் .இவனுடைய பெற்றோர் இருந்தாலும் ,அதிகம் அவர்களுடன் நெருக்கம் கொண்டிருக்கவில்லை. சுபா போன் பண்ணி இருந்தாள் எப்படி இருக்க விஷால் நல்லா இருக்கியா இருக்கேன் சுபா நான் தான் வரேனே அப்புறம் ஏன் சோகமா இருக்க நல்ல ஜாலியா இரு நான் வந்ததும் உன்னை கவனிச்சுக்கிறேன் என்று சிரித்தாள் . அவளுடைய சிரிப்பை கேட்டதும் தான் இவனுக்கு நிம்மதி உண்டாயிற்று. எப்படி படிக்கிற சுபா எப்பவும் போல தான் சில சமயம் உன் நினைப்பால அழுகையா வருது விஷால் என்றாள் சுபா. மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினான் .

அனன்யா இன்னைக்கு கிளாஸ் போக வேண்டாம் வேறு எங்காவது போகலாமா என்று கேட்டாள் . எங்கு போகலாம் அனன்யா? பக்கத்துல
எக்சிபிஷன் போட்டு இருக்காங்க போலாமா சரி போகலாம் என்று கிளம்பினார்கள். இருவரும் கைகோர்த்துக்கொண்டு எக்ஸிபிஷன் சுத்தி வந்தார்கள். ஏன் விஷால் என்னமோ போல இருக்க அதுக்காகத்தானே வெளியே வந்தோம். சாரி அனன்யா என்னால உடனே என்ன மாத்திக்க முடியல. சரி வா ஒரு போட்டோ எடுத்துப்போம் என்று அருகில் இருந்த ஸ்டுடியோவிற்கு சென்றார்கள் . ஏற்கனவே நிறைய செல்பிகளை போனில் எடுத்திருந்தாள் அவைகளை வாட்ஸ் அப்பில் சுபாவுக்கு அனுப்பி வைத்தாள் . சுபாவும் என்னை விட்டுட்டு போறீங்களா இன்னைக்கு நீங்க மழையில நனைவீங்க என்று சாபம் கொடுத்தாள்

மாலையில் அவர்கள் வீடு திரும்பும் போது சுபா சொன்னது போல். இருவருமே மழையில் நனைந்து விட்டார்கள். நீ என் வீட்டுக்கு வா அனன்யா என்றான். நீ எதுவும் பண்ண கூடாது. சரி சரி பயப்படாதே என்றான் விஷால் .மழையில் நனைந்து மிக அழகாக இருந்தாள் அனன்யா. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் நீ ஏன் ஒதுங்கி போகிறாய் என்றாள் அனன்யா. அவளுக்கு துவட்ட டவல் கொண்டு வந்து கொடுத்தான். அவள் இவனுக்கு முதலில் துவட்டி விட்டாள். அவளுடைய துப்பட்டாவை பிழிந்து காய போட்டாள் . இவன் சூடாக டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான் தேங்க்ஸ் விஷால் .. என் பக்கத்துல உக்காரு என்றாள் . அனன்யாவின் கைகளை பிடித்துக் கொண்டான். அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான் .
விஷால் நீ ஏன் இன்னும் தயங்குற நான் உனக்கு தான் என்றாள்.


சுபா வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. இவர்கள் இருவரும் தீபாவளிக்காக எல்லா விதமான பொருட்களையும் வாங்க கடைத்தெருவுக்கு சென்று இருந்தனர். சுபா இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும் என்றாள் அனன்யா. அனன்யா சுபாவுக்கு கால் செய்தாள் ஹாய் சுபா ஷாப்பிங் வந்திருக்கோம் உனக்கு பிடிச்சது வாங்கிட்டு இருக்கோம் . ஹாய் விஷால் உன் நினைப்பாவே இருக்குடா உனக்காக நானும் வாங்கி வைத்திருக்கிறேன் என்றாள் சுபா. நீ வந்தா மட்டும் போதும் சுபா என்றான் விஷால் சும்மா சொல்லாதே நீ என்னை மறந்துட்ட எப்ப பார்த்தாலும் அனன்யா மடியிலேயே இருக்கிற .. என்றாள் செல்லமாக. அப்படி எல்லாம் இல்லை சுபா என்றாள் அனன்யா இவனுக்கு எப்போதும் உன் நினைப்புதான்


சுபா வந்ததும் அனன்யாவுக்கு போன் செய்தாள் . இன்னைக்கு நைட்டு ஒருத்தரும் தூங்க கூடாது என் வீட்டுக்கு வந்துடுங்க என்று அன்பு கட்டளை இட்டாள் . சரி வருகிறோம் சுபா. விஷால் தயக்கத்துடன் சுபாவுக்கு போன் செய்தான் ..சுபா எப்ப வந்த. நான் வந்து ஆறு மாசம் ஆச்சு நீ எப்ப வீட்டுக்கு வர என்று கேட்டாள் . நைட் 7 மணிக்கு வரேன் ஏன் இப்பவே வாயேன் என்றாள் . இன்னும் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு முடிச்சிட்டு வந்து பார்க்கிறேன் என்றான் விஷால் . விஷாலும் அனன்யாவும் சுபா வீட்டுக்கு போயினர். வா விஷால் என்று மாடிக்கு அழைத்துச் சென்றாள் . அனன்யா அவர்கள் சிறிது நேரம் தனிமையில் இருக்கட்டும் என்று கீழேயே சுபா அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் என்ன ஆச்சு அன்னைக்கு நெஜமாவே மழை பெஞ்சுதாமே செம விஷயம் நடந்ததாமே என்ன விஷால்? அதையும் உன்கிட்ட சொல்லிட்டாளா? சுபாவுடைய கண்களைப் பார்த்தான். அதில் ஆசையும், பிரியமும், ஏக்கமும் நிரம்பி கிடந்தது. அவளை வாரி அணைத்து கொண்டான் . அவள் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் . அவளுடைய உடல் சில்லிட்டு கிடந்தது. விஷால் நீ என்னை மறந்து விட மாட்டியே... என்றவாறு அவன் கைகளில் முத்தமிட்டாள் .

என்ன முடிஞ்சுதா என்று கேட்டாள்.. அனன்யா. இது இப்போதைக்கு முடியாது என்றாள் சுபா. நான் போய் காப்பி எடுத்துட்டு வரேன் விஷால் என்று கீழே போனாள் சுபா. இப்போ உனக்கு சந்தோஷம் தானே என்று விஷாலை பார்த்து அனன்யா கேட்டாள். விஷால் மென்மையாக புன்னகைத்தான்.இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் சுபா. ரொம்ப நாளாச்சு இல்ல இப்படி சாப்பிட்டு என்று அனன்யா சொன்னாள் . சுபா நீயும் உட்காரு என்று அவளையும் அமர செய்தான்.ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு என் பொண்ணு இளைத்து விட்டாள் என்று சுபா அம்மா சொன்னாள்.அனன்யாவும் விஷாலும் விடை பெற்றுக்கொண்டனர். நாளைக்கு வறோம் சுபா என்று சொல்லிவிட்டு கிளம்பினர்.

ஏன் முகத்தை அப்படி வச்சிருக்கே அனன்யா .. நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்குற. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல . அப்போ நாளைக்கு மதியம் என் வீட்டுல சாப்பிடு என்றாள். அது வந்து அப்பா இருப்பாரே அவர் வெளியூர் போறார் . சுபாவையும் invite பண்ணி இருக்கேன் .
சரி நான் நிச்சயமா வரேன் .வரும்போது ரோஸ் வாங்கிட்டு வா என்றாள் . நமக்கு என்ன ஃபர்ஸ்ட் நைட் நடக்க போகுதா ? எதுக்கு எப்போ பார்த்தாலும் ரோஸ் கேக்குற ? அது உனக்கு புரியாது.எனக்கு தெரியும் என்றான் சிரித்துகொண்டே .

இவன் காலை 11 மணிக்கே போய்விட்டான் . சுபாவும் வந்திருந்தாள் . சுபா அவ சமைக்க ஹெல்ப் பண்ணு . நிச்சயமா பண்றேன் . நீ கடைக்கு போய் இந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு வா. சரி . கடைக்கு போய் எல்லா சாமான்களையும் வாங்கி வந்தான். இரு பெண்களும் சமைக்க துவங்கினர். இவன் மெதுவாக சமயலறைகக்குள் எட்டி பார்த்தான் . சும்மா வா நாங்க ஒண்ணும் பெருசா எதுவும் பண்ணல . இந்த சாம்பார் எப்படி இருக்குனு பாரு . அனன்யா கரண்டியில் எடுத்து இவன் கையில் கொடுத்தாள் . அதன் ருசி பார்த்தவன் நல்லா வந்திருக்கு அனன்யா என்றான்.நான் செஞ்சது இந்த கூட்டு இது எப்படி இருக்குனு பாரு என்று கிட்டே வந்தாள் சுபா. நல்லா இருக்கு என்று அவளை தூக்கி சுற்றினான்.
அப்போது அவனுடைய கை அவளுடைய பின்புறங்களை அழுத்தி பிடித்திருந்தது . இதென்ன அநியாயம் என்னையும் தூக்கி சுத்து என்றாள் அனன்யா.மொதல்ல சாப்பாடு எனக்கு பசிக்குது என்றான் விஷால்.

ஒரு வழியாக மதியம் 2 மணிக்கு சமையல் தயாரானது . மூவரும் எல்லாவற்றையும் அரேஞ்ச் செய்தனர். நான் போய் இலை வாங்கிட்டு வரேன் என கிளம்பினான் விஷால். அதெல்லாம் வேண்டாம் இப்போவே லேட் ஆகிவிட்டது சாப்பிடு என்று சொன்னாள் அனன்யா. மூவரும் சாப்பிட்டு முடித்ததும் எல்லா தட்டையும் கழுவ எடுத்துக்கொண்டு போனான் விஷால். விஷால் அதெல்லாம் நாங்க பார்த்துகிறோம் என்றார்கள் இருவரும். ரோஸ் பூவை இருவருக்கும் வைத்து விட்டான்.
இந்த நாள் ரொம்ப ஸ்பெஷல் . தாங்க்ஸ் விஷால் என்றாள் சுபா.அனன்யா எனக்கு தூக்கம் வருது என்றாள். சரி போய் தூங்கு நாங்க பேசிக்கிட்டு இருக்கோம் என்றான் விஷால். அதெல்லாம் முடியாது . நீங்க ரெண்டு பேரும் ஏன் கூடவே இருக்கணும் என்றாள் அனன்யா. அப்போ ஹால்லேயே படு . சரி. சுபாவும் அவள் அருகிலே தலையணை போட்டு படுத்து கொண்டாள். இவன் அருகில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டான். அனன்யா தூங்கி விட்டாள் . சுபா எழுந்து வந்து இவன் மேல் படுத்து கொண்டாள். சுபா மரியாதையா கீழ வந்து படு என அனன்யாவிடம் இருந்து குரல் வந்தது .