Oru Devathai Paarkkum Neram Ithu - 6 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 6

Featured Books
  • तुझी माझी रेशीमगाठ..... भाग 2

    रुद्र अणि श्रेयाचच लग्न झालं होत.... लग्नाला आलेल्या सर्व पा...

  • नियती - भाग 34

    भाग 34बाबाराव....."हे आईचं मंगळसूत्र आहे... तिची फार पूर्वीप...

  • एक अनोखी भेट

     नात्यात भेट होण गरजेच आहे हे मला त्या वेळी समजल.भेटुन बोलता...

  • बांडगूळ

    बांडगूळ                गडमठ पंचक्रोशी शिक्षण प्रसारण मंडळाची...

  • जर ती असती - 2

    स्वरा समारला खूप संजवण्याचं प्रयत्न करत होती, पण समर ला काही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 6

மறுநாள் காலையில் சுபாவும் விஷாலும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்றிருந்தனர். இருவரும் அனன்யா வேகமாக குணமாக மனம் உருகி பிரார்த்தனை செய்தனர் .பிறகு அனன்யா வீட்டுக்கு போயினர். அனன்யா இப்போ எப்படி இருக்க? பரவால்ல விஷால் கொஞ்சம் தேவலாம். சுபா நீ தைரியமா இரு அனன்யா எல்லாம் சரியாகிவிடும் இந்தா கோயில் பிரசாதம் என்று கொடுத்தாள் . விஷால் எனக்காக கோயிலுக்கு எல்லாம் போனியா என்று சிரித்தாள். உனக்காக சர்ச், மசூதிக்கு கூட போவேன் என்று சொன்னான்.சரி அனன்யா ரெஸ்ட் எடுத்துக்கோ நான் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்றான் விஷால்.
இரண்டு நாளில் அனன்யாவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது பழையபடி காலேஜுக்கு வந்தாள் . சுபாவும், விஷாலும் ஏன் அதுக்குள்ள வந்த இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே என்றனர். என்னால முடியாதுப்பா என்னவோ இத்தனை நாள் ரெஸ்ட் எடுத்தது போதும் என்றாள் அனன்யா.சுபாவும் அனன்யாவும் ஏதோ கதைகளை பேச தொடங்கினர் இவன் அங்கிருந்து கிளம்பினான்.

அன்று மதியமே அனன்யா வீட்டுக்கு கிளம்பிவிட்டாள் . என்ன ஆச்சு என்று சுபா கேட்டாள். ஒன்னும் இல்லை என்னவோ போல இருக்கு என்றாள் அனன்யா. சரி நானும் வரட்டுமா வேண்டாம் சுபா நான் விஷாலை அழைத்துக் கொண்டு போகிறேன் என்றாள். சரி ரெஸ்ட் எடுத்துக்கோ அனன்யா என்று சொன்னாள். விஷாலும் அவளும் பஸ்ஸிலேயே போவதாக முடிவெடுத்தனர் . என்ன திடீர்னு கிளம்பிட்ட என்று கேட்டான் விஷால். ஏன் நாம கொஞ்ச நேரம் தனியா இருக்க கூடாதா எப்பவுமே அந்த சுபா கூட தான் இருக்கணுமா? இதைக் கேட்டு லேசாக புன்னகைத்தான். என்ன சிரிக்கிற உனக்கு அவ கூட இருக்க தான் பிடிச்சிருக்கு இல்ல என்றாள் அனன்யா. இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு எதிர்பார்க்கிறே? நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் எனக்கு எல்லாம் தெரியும்.
அவள் கூட டான்ஸ் ஆட ப்ராக்டிஸ் பண்ணியே என்னைக்காவது என் கூட பாட ட்ரை பண்ணி இருக்கியா.. நானா பாடவா சும்மா கிண்டல் பண்ணாத அனன்யா நான் என்ன செஞ்சு என்னுடைய காதலை நிரூபிக்க முடியும். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நிரூபிக்கிறேன் உனக்கு ஓகேவா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. மதியம் ஏதாவது படத்துக்கு போவோமா அதெல்லாம் வேண்டாம் அனன்யா உனக்கு ரெஸ்ட் தேவை..நீ தேவையில்லாமல் குழப்பிக்கிற .சரி அப்போ என் வீட்டுக்கு வா. வரேன் ஆனா நீ மறுபடியும் இதே டாபிக் எடுக்க கூடாது சரி எடுக்கல. அனன்யா வீட்டில் இப்போது யாரும் இருக்க மாட்டார்கள் இவன் சற்று தயக்கத்துடனே போனான்
அனன்யா கொஞ்சம் தண்ணி கொடு என்றான் விஷால் தண்ணி மட்டும் போதுமா இல்ல காபி போடவா என்றாள் அனன்யா. சரி நானும் வரேன் சேர்ந்து காபி போடுவோம் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அப்புறம் ஏடாகூடமா ஏதாவது ஆயிடும் அப்புறம் நீ என்ன குறை சொல்லுவ என்றாள் அனன்யா. காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் சூப்பரா இருக்கு அவன் மடியில் சாய்ந்து கொண்டாள். இப்படியே இருந்தா போதும் எனக்கு சீக்கிரம் குணமாயிடும். யாராவது பார்த்தா எனக்கு பிரச்சனை ஆயிடும் என்றான் விஷால். பயந்தாங்கோலி பயந்தாங்கோலி என்று சிரித்தாள் அனன்யா. ஏதாவது நல்ல ரொமான்டிக் படமா பார்க்கலாமா என்று கேட்டாள். சரி பார்க்கலாம் போடு என்று சொன்னான். படம் பாதி ஓடும் போதே அனன்யா தூங்கிவிட்டாள். அவளை மென்மையாக தூக்கி படுக்கை அறையில் வைத்தான். இவன் கிளம்பலாம் என நினைக்கும் போது எங்க போற என்ன விட்டு என்று தூக்கத்தில் அனன்யா புலம்பினாள.. இவன் அவள் அருகிலேயே நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டான். சுபாவிடம் இருந்து போன் வந்தது என்ன பண்றீங்க ரெண்டு பேரும் என்ன விட்டுட்டு. அது ஒன்னும் இல்ல சுபா அவ தூங்குகிறாள் நான் சும்மா மொபைல் நோண்டிட்டு இருக்கேன். சரி வந்து கதவைத் திற எங்க இருக்கிற நீ? உன் வீட்டு வாசல்ல தான் இருக்கேன் ஓவர் என்று சிரித்தாள் . கதவை திறந்தான் எப்படி என்னை விட்டுட்டு போக உங்களுக்கு மனசு வந்தது நான் இடைஞ்சலா இருக்கேனா இப்பதான் அவ புலம்புனா அதுக்குள்ள நீயுமா உள்ள வா என்றால் விஷால்.

சத்தம் கேட்டு விழித்து விட்டாள் அனன்யா .. சுபா தான் நீ தூங்கு என்றான் விஷால் மறுபடியும் உறக்கத்துக்கு போனாள் . சுபாவும் இவனும் ஹாலில் அமர்ந்திருந்தனர். என்ன சொன்னா அனன்யா என்னை திட்டினாளா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே நீ எதையோ என்கிட்ட மறைக்கிற. உனக்கு வேற வேலை இல்ல அவளுக்கும் வேற வேலை இல்ல, என் கூட சண்டை போடுறதே வேலையா வச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேருமே இல்லன்னா நான் இல்ல அதை முதலில் புரிந்து கொள்ள மாட்டேங்கிறீங்க இதெல்லாம் நல்லா பேசு என்றாள் சுபா. சரி நான் போகட்டுமா? எங்க போற? வேற எங்க வீட்டுக்கு தான், போலாம் என்று அவள் கையை பிடித்து இழுத்தான். அவன் மடியில் விழுந்தாள் மென்மையாக அவள் முகத்தை திருப்பினான். என்ன பண்ண போற அவ வந்தா பிரச்சனை ஆயிடும். நீ வேற என்றவாறு முத்தமிட்டான் போதும் விடு, ஏன் நீ கொடுக்க போறியா உனக்கு ரொம்ப ஆசைதான் என்றாள் சுபா.

அனன்யா எழுந்து வந்த போது மணி ஆறாகி இருந்தது விஷால் வெளியில் இல்லை. ஃபோனை எடுத்து விஷாலுக்கு போன் செய்தாள் என்ன அப்படியே விட்டுட்டு போயிட்ட. நீ எழுந்து இருக்கிற மாதிரி தெரியல இங்க பக்கத்துல டீ கடையில தான் நிக்கிறேன். அப்பா வர நேரம் ஆயிடுச்சு இல்ல என்றான் விஷால். சரி சரி 7:00 மணி போல வந்து உன்னை பார்க்கிறேன். எங்க மீட் பண்ணலாம் . பக்கத்தில் இருக்கிற ரெஸ்டாரண்ட் வரியா என்றான் சரி ஓகே. 7 மணிக்கு ரெஸ்டாரண்ட் வந்து விட்டாள் அனன்யா .சுபாவும் நீயும் ஒரே ரொமான்ஸ் போல என்று கிண்டல் செய்தாள் . சேச்சே அதான் அத்தனை கிஸ் குடுத்தியா. அப்ப நீ தூங்கலையா? எங்க நீ என்னை தூங்க விட்ட என்று சிரித்தாள்.

சுபாவுக்கு பிடித்தது ஏதாவது வாங்கிக் கொண்டு போகலாம் என நினைத்தான். அனன்யாவும் இவனும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் பிறகு அனன்யாவை வீட்டில் விட்டான். சுபாவுக்கு பிடித்திருந்த ஸ்வீட்டை வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக்கு போனான்.. சுபாவுடைய அம்மா வாசலிலே நின்று கொண்டிருந்தார் இவனைப் பார்த்ததும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் உள்ளே வா என்று கூப்பிட்டார் இவன் தயங்கியவாறே உள்ளே சென்றான் அடுத்த வாரம் சுபா அப்பா வராங்க. நீ என்ன முடிவு பண்ணி இருக்க. சுபா உன் மேல பைத்தியமா இருக்கா, ஆனா நீ அந்த அனன்யா கூட சுத்திகிட்டு இருக்க என்ன நினைச்சுகிட்டு இருக்க.. ஏதாவது ஒரு நல்ல முடிவா எடு இரண்டு பேரையும் காதலிக்கிறது சாத்தியமில்லை இதை புரிஞ்சுகிட்டு. ஒரு முடிவை சொல்லு.. சரி ஆன்ட்டி இந்த ஸ்வீட்ட சுபா கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பினான்


என்ன ஒரே மூட் அவுட்டா இருக்க என்றாள் சுபா. அம்மா ஏதாவது சொன்னாங்களா? அவங்க சொல்றது நியாயம்தானே நடைமுறைக்கு ஒத்து வருமா. நாம இங்கே இருக்க வேண்டாம் பாரின் போயிடுவோம். அது சரியா வராது சுபா. நடக்காத ஒன்றை நினைச்சுக்கிட்டு மூணு பேரும் ஏமாந்து போயிடுவோமோ அப்படின்னு கவலையா இருக்குது. பைத்தியம் பைத்தியம் நான் இருக்கிற வரைக்கும் அப்படி ஒன்னு நிச்சயம் நடக்காது உயிரை விட்டாலும் விடுவேனே தவிர உன்னையும் அனன்யாவையும் விட மாட்டேன் நீ எமோஷனலா யோசிக்கிற பிராக்டிகலா யோசிக்க மாட்டேங்குற. இப்ப என்ன பண்ண போற ?அதான் எனக்கும் புரியல.


அனன்யா சுபா இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். காலேஜ் முடிந்து போகும்போது சுபா எல்லா விஷயத்தையும் சொன்னாள் நீ வேணா சுபாவ கல்யாணம் பண்ணிக்க நான் இப்படியே இருந்து விடுறேன் என்றால் அனன்யா. ஏன் இப்படி எல்லாம் பேசுற நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரல குழப்பத்தில் இருக்கிறேன் நானே தெளிவானதும் அப்புறம் உங்க கிட்ட சொல்றேன் நிச்சயம் உங்க ரெண்டு பேரையும் நான் கைவிட மாட்டேன் .

இரண்டு நாட்களில் சுபா அப்பா வெளிநாட்டிலிருந்து வந்து விட்டார் சுபா ஃபோன் செய்திருந்தாள் . அப்பா வந்திருக்காரு உன்ன பாக்கணும்னு சொல்றாரு அனன்யாவையும் கூட்டி வா என்று சுபா சொன்னாள்.
அனன்யாவையும் அழைத்துக் கொண்டு சுபா வீட்டுக்கு போனான். வாங்க தம்பி வாம்மா என்று வரவேற்றார் தம்பிக்கு காப்பி கொடு சுபா என்று சொன்னார். எப்படி இருக்கீங்க நல்லா இருக்கேன் தம்பி சுபா எல்லாம் சொன்னா இந்த பொண்ணு தானா, நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க தம்பி படிக்கிற வயசுல இது எல்லாம் தேவையா ஒரு மூணு வருஷம் படிங்க படிப்பு முடிச்சுட்டு என்ன வந்து பாருங்க. இப்போ என் பொண்ண விட்டுடுங்க. சுபா வந்து காபி கொடுத்தாள் அவளுடைய கண்கள் கலங்கி இருந்தன ஒன்றும் பேசாமல் மாடிக்கு போய்விட்டாள் அனன்யாவும் மாடிக்கு போனாள் . நான் இன்னும் ஒரு வாரம் இங்க இருப்பேன், அதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லுங்க தம்பி , சரி அங்கிள்.

மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் மறுநாள் சுபா காலேஜுக்கு வரவில்லை. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை போன் செய்த பொழுது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது அவர்கள் எங்கோ வெளியூருக்கு சென்றிருக்கலாம் என நினைத்தான் அனன்யாவிடம் விசாரித்த போது அவளுக்கும் எதுவும் தெரியவில்லை அடுத்த நாள் சுபா வந்தாள் என்ன ஆச்சு சுபா ஏன் போன எடுக்கல என்றாள் அனன்யா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அப்பா போனை வாங்கி வச்சுட்டார் ரொம்ப அடம் பிடித்து தான் காலேஜுக்கு வந்தேன் என்றாள் சுபா.
நாம மூணு பேரும் எங்கேயாவது ஓடிப் போயிடலாம் என்று சுபா சொன்னாள். இதுக்கெல்லாம் பயந்துகிட்டு எதுக்கு ஓடணும் முதல்ல அவர் சொன்ன மாதிரி படிப்பு முடியட்டும். அதுவரை கொஞ்சம் பொறுமையா இருப்போம் என்று சொன்னான் விஷால். உன்னை நம்பி தான் நாங்கள் இருக்கோம் என்று அனன்யா சொன்னாள் அப்பா என்னைக்கு ஊருக்கு போறாரு? நாளை மறுநாள். நான் வந்து பேசுறேன் என்றான் விஷால்

சுபாவுக்கு போன் பண்ணினான் எப்ப வந்து பாக்கட்டும் நானே போன் பண்றேன் என்றாள் சுபா. என்ன பேசுவது எப்படி பேசுவது என்று தன்னை தயார்படுத்திக் கொண்டான் . மாலை 5 மணி போல சுபா ஃபோன் செய்தாள் .வாங்க தம்பி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கேன் அங்கிள். என்ன முடிவு பண்ணி இருக்கீங்க நீங்க சொன்ன மாதிரி படிப்பு முடிஞ்சதுமே நீங்க சொல்ற மாதிரி செய்கிறேன் அங்கிள் என்றான் விஷால். நான் சுபாவை வேறு காலேஜுக்கு மாத்த ஏற்பாடு பண்ணிட்டேன். அதோட ஹாஸ்டல்லையும் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன். அதனால இனி அவ கூட பேச ட்ரை பண்ண வேண்டாம் என்றார் சுபாவின் அப்பா. இவனுக்கு அதிர்ச்சியில் கை கால் ஓடவில்லை. சுபா இதை எப்படி தாங்க போகிறாளோ என்று யோசனையில் ஆழ்ந்தான். என்ன தம்பி யோசிக்கிறீங்க என் பொண்ணு வாழ்க்கை தான் எனக்கு முக்கியம் என்றார் சுபாவின் அப்பா.

அனன்யாவிடம் இதைப்பற்றி சொன்னான் விஷால். இப்போ என்ன பண்றது விஷால்? நாம பொறுமையா தான் இருக்கணும். நீ தான் சுபா கிட்ட எடுத்து சொல்லணும்.. நீ எப்படி இதை சமாளிக்க போற அவ இல்லாம உன்னால இருக்க முடியுமா? வேற வழி இல்லையே அனன்யா சரி நான் அவளை சமாதானப்படுத்துறேன்.அனன்யாவிடம் இருந்து போன் வந்தது சுபா நாளைக்கு சாயங்காலம் என் வீட்டுக்கு வரா நீ ஒரு அஞ்சு மணி போல வந்துடு நாளைக்கு நைட்டே அவ ஊருக்கு போறா சரி அனன்யா வந்துவிடுகிறேன். மறுநாள் 5 மணிக்கு போன போது அனன்யா வீட்டில் இல்லை சுபா மட்டுமே இருந்தாலள் இவனை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுதாள் . கடைசியில் என்னை ஏமாத்திட்டியே என்று அழுதாள். இப்ப எதுக்கு சின்ன பிள்ளை மாதிரி அழுவுற பக்கத்துல தானே போற நான் வந்து நிச்சயம் பார்ப்பேன். நீ படிப்பை முடி நானே வந்து உன் வீட்டில் பெண் கேட்கிறேன். உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான்.