Oru Devathai Paarkkum Neram Ithu - 3 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

Featured Books
Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

அனன்யாவிடம் இருந்து கால் வந்ததும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளே பேசினாள் விஷால், சுபா எல்லாமே சொல்லி இருப்பாள் நீங்க ஒன்னும் அவசரப்பட தேவையில்லை நிதானமா யோசிச்சு சொல்லுங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். பிரதீப் ...அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவன்கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன் அவன் இதுல தலையிட மாட்டான், அனன்யா நீங்க முழு மனசோட தான் இத சொல்றீங்களா? அவசரப்பட வேண்டாம் என்றான். விஷால் என் மனசாட்சிக்கு விரோதமா எதையும் என்னால செய்ய முடியாது நான் உங்களை விரும்புவது நிஜம் அதை தடுக்க என்னால முடியல என்றாள் . அனன்யா, காட்சிகள் மாறுவது போல் அனன்யாவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டாள். சரி அனன்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சரி விஷால்

ஃபோனை வைக்க இவனுக்கு மனம் வரவில்லை அனன்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுமையாக இருப்பதே நல்லது மறுபடி அவள் விட்டு விலகி சென்றால் தன்னால் தாங்க முடியாது என்பதை விஷால் உணர்ந்திருந்தான். இந்த விஷயத்தில் சுபாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தனக்காக அவளிடம் பேசியிருக்க வேண்டும். சுபாவுக்கு போன் செய்தான் என்ன ஆச்சு என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்றாள் அவசரமாக.. அதுதான் எனக்கும் புரியல.. என்ன பா இன்னுமா தடுமாறிட்டு இருக்கீங்க சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க என்றாள் சுபா இது பிரதீப்புக்கு நான் செய்த துரோகம் இல்லையா? நீங்களா போய் அனன்யாவை விரும்புகிறேன் என்று சொன்னால்தான் துரோகம் அவளே உங்களை விரும்பும் போது அது துரோகம் ஆகாது.. இப்போது சற்று தெளிவுபட்டவனாக இருந்தான் விஷால்.

காதலை சுமப்பது ஒரு வரம், அதே சமயம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதன் கேள்வி விஷாலை யோசிக்க செய்தது. அது எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் அதன் தாக்கம் ஆழமான காயங்களை ஏற்படுத்த வல்லது .அனன்யா இவனிடம் சகஜமாக பேசினாலும் இன்னும் நெருங்க முடியவில்லை. காதல் என்ற வட்டத்துக்குள் அவள் எளிதாக போய்விட்டாள். ஒருவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதே அற்புதமானது. அதை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்கள். அனன்யாவின் அன்புக்கு தான் தகுதி உள்ளவனாக மாறிவிட வேண்டும் .அது வெறும் பரிதாபத்தினால் வந்ததாக இருக்கக் கூடாது. பிரதிப்புக்கு போன் செய்தான். பிரதீப் உடனே போன் எடுக்கவில்லை அவன் வீட்டுக்கு போய் பார்ப்போம் என்று நினைத்தான். அவன் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என முடிவு எடுத்தான் .

பிரதீப் இவனை பார்த்ததும் ஏன் மச்சான் இங்க எல்லாம் வர இனி உனக்கு என்னை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி நீ பார்க்க வேண்டியது அனன்யாவை மட்டும்தான். சாரி பிரதீப் நான் வேணும்னே இத செய்யல. நீ எதுக்கு சாரி கேக்குற? அவளும் இதுதான் சொன்னா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க இல்ல அது போதும் நீங்களாவது கடைசி வரைக்கும் சேர்ந்து இருங்க மேற்கொண்டு பேச முடியாமல் பிரதீப் தடுமாறினான். இவன் சோகத்துடன் அங்கிருந்து கிளம்பினான்
விஷால் ஒரு முடிவுக்கு வந்தவனாக இருந்தான் அவன் அனன்யாவை கடைசிவரை நேசிப்பது என்ற முடிவுக்கு வந்தான். அன்றும் காலை 8 மணிக்கு காலேஜுக்கு சென்றான். அவள் அமைதியாக உட்கார்ந்து நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்தாள் . இவன் வருவதை பார்த்ததும் நிமிர்ந்து பார்த்துவிட்டு இன்னுமா யோசிக்கிறீங்க என்றாள் இல்லை அனன்யா. அவள் எழுதுவதை நிறுத்திவிட்டு இவனைநோக்கி வந்தாள் . இந்த முறை இவனுடைய கை கால்கள் உதறவில்லை நிதானமாக அவளை கட்டி அணைத்தான். அவள் மென்மையாக விடுவித்துக் கொண்டாள். தேங்க்ஸ் விஷால் என்றவாறு வெளியே சென்றாள். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அனன்யா கண்களாலே சொல்லிவிட்டு போய்விட்டாள். ஒரு முட்டாள் தனமான அன்பிலிருந்து ஒரு தீர்க்கமான அன்பிற்கு விஷால் நொடி பொழுதில் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

சுபா அனன்யாவையும், விஷாலையும் வீட்டுக்கு அழைத்து இருந்தாள் . அந்த ஞாயிற்றுக்கிழமை இன்னுமொரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது. அதிர்ச்சி, மயக்கம் ,தடுமாற்றம் ஏதும் இல்லாத முழுமையான நாளாக இருந்தது .விஷால் எங்க நீ தடுமாறி விடுவாயோ என அனன்யா பயந்து கொண்டே இருந்தாள் . நல்ல வேளை நீ சரியான முடிவு எடுத்தாய் அனன்யா இவனுடைய கைகளை கோர்த்துக் கொண்டாள் இனி எப்பவும் இது பிரியக்கூடாது என்று சுபா சொன்னாள் . சிறியதொரு டின்னர் அரேஞ்ச் பண்ணி இருந்தாள். விஷால் பிரதீப்பை நாம தவிர்த்து விடக்கூடாது என்றான். அதுவும் சரிதான் என்றாள் அனன்யா
அடுத்த வாரம் பிரதிப்பை பார்க்க அனன்யா சுபா விஷால் சென்றிருந்தனர். அவன் முந்தைக்கு இப்போது எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தான் . அனன்யா எதுவும் பேசவில்லை. பிரதீப் அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே பிறகு என்ன விஷயமா வந்தீங்க .அவசரப்படாத பிரதீப் என்றாள் சுபா. நாங்க எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா தான் இருப்போம் நாங்க வரோம் என்றவாறு மூவரும் கிளம்பினர். இந்த விஷயத்தை எப்படி கையாளுவது என்று விஷாலுக்கு புரியவில்லை. அநேகமாக நாளைக்கு காலேஜ் வருவான் பிரதீப் என்று மற்ற நண்பர்கள் சொல்லி கேட்டிருந்தான். பிரதீப் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டான், அப்படியே செய்தாலும் அதை சமாளிக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டான்.

அன்று இரவு அனன்யா போன் செய்தாள். என்ன ஆச்சு ஏன் அப்செட்டா இருக்குறீங்க என்றாள். அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றான் விஷால். பிரதீப்பை நெனச்சு கவலைப்படாதீங்க, சுபா எல்லாம் பாத்துக்குவா.. சரி அனன்யா ,கவலைப்படாம தூங்குங்க நாளைக்கு பாக்கலாம். இவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தாலும் நாளைய பொழுது அனன்யாவுடன் இருக்கப் போகிறோம் என்பதே மகிழ்ச்சியை தந்தது. எதிர்காலம் இன்னும் மகிழ்ச்சியாய் இருக்க போகிறது என்ற நம்பிக்கை அவனுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது.பிரதீப் காலேஜுக்கு வந்துவிட்டான். இவன் போய் அவனுடைய வகுப்பில் பார்த்தான் . சோகமே உருவாக அமைதியாய் அமர்ந்திருந்தான் பிரதீப். விஷாலை பாரததும் எழுந்து வெளியே செல்ல முயன்றான் சற்றே தடுமாறினான். விஷால் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான். சுபாவை கேண்டீன் இல் பார்த்து நடந்ததை சொன்னான். விடு விஷால் எல்லாம் தானா சரியாகிவிடும்.அப்போது அனன்யா அங்கு வந்தாள் என்ன டிஸ்கஷன் இன்னுமா அவனை பத்தி பேசிட்டு இருக்கீங்க .. சுபாவும், விஷாலும் அமைதியாய் இருந்தனர்.

தான் இரவு, பகலாக கனவு கண்டுகொண்டிருந்த காதல் சக்ஸஸ் ஆனது ஒரு விவரிக்க முடியாத உணர்வாக இருந்தது விஷாலுக்கு. இனி பொறுப்புகள் கூடி விட்டதாகவே நினைத்தான்.எதிர்கால திட்டங்கள் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை.அனன்யாவுடன் எப்போதும் இருந்தாலே போதுமானது, அவளே இவனை வழி நடத்தி செல்வாள்.சுபாவின் ஆசைக்காக டான்ஸ் வகுப்பில் சேர்ந்தான். அவளை போல ஸ்டைல் ஆக ஆட வரவில்லை என்றாலும் ஓரளவுக்கு ஆடினான். அனன்யா அன்று டான்ஸ் கிளாஸ் வந்திருந்தாள் . இவர்கள் இருவரும் ஆடியதை பார்த்து வெகுவாக உற்சாக படுத்தினாள் . அவளையும் ஆட சொல்லி விஷால் கேட்டு கொண்டான்.அவள் மறுத்து விட்டாள் . பிரதீப் காலேஜ் சரி வர வருவதில்லை என்பதை கேள்விபட்டான் விஷால். அவனால் என்ன செய்ய முடியும் இவன் பேச போனாலே பிரதீப் விலகி போனான்.

அவனுடைய எலக்டிரிக்கல் டிபார்ட்மெண்ட் ஹெச்ஓ டி இவனை கூப்பிட்டு அனுப்பினார். என்னப்பா படிக்கதானே வந்தே இப்போ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கற ?இவன் அமைதியாய் இருந்தான் அனன்யா அதே அறையில் ஒரு ஓரமாக நின்றிருந்தாள் . ரொம்ப நல்ல பொண்ணு இவ .இவ வாழ்க்கைல விளையாடி விடாதப்பா என்றார். அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் சார் என்றான் . நல்லா படிக்கணும் ரெண்டு பெரும், அப்புறம்தான் மத்ததெல்லாம் .. சரிங்க சார். ஜாக்கிரதையா இருப்பா. அனன்யா அவர் கூட பேசி கொண்டிருந்தாள் . இவன் வகுப்புக்கு வந்து விட்டான். சுபா இதெல்லாம் காலேஜ் வாழ்க்கையிலே சகஜம் என்றாள். எல்லா டீச்சர்களுக்கும் இந்த காதல் விவகாரம் போய் சேர்ந்தது . அவர்கள் இவனை பாரததும் எப்போதும் இல்லாத அளவு புன்னகை செய்தார்கள் .

யார் சுபா ஹெச் ஓ டி கிட்டே சொல்லி இருப்பா ? அதுதான் நானும் ஹெச் ஓ டி கிட்டே கேட்டேன் என்றாள் அனன்யா. பிரதீப் வேலையா இருக்குமோ . இருந்தால் என்ன நடந்தது ஒரு வகையில் நல்லதுக்குதான் என்றான் விஷால்.ம்ம் அப்படிதான் தைரியமா இருக்கணும் என்றாள் சுபா.இன்னைக்கு ஈவினிங் டான்ஸ் கிளாஸ் இருக்கு வரியா அனன்யா நிச்சயமா வரேன் . இவன் ஆடுறது ஒரு மாதிரி இருந்தாலும் அந்த மியூசிக் அட்மாஸ்ஃபியர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள் . பிரதீப் அன்று டான்ஸ் கிளாஸ் ஜாயின் பண்ண வந்திருந்தான். இவர்கள் மூவரை பார்த்ததும் எப்படி இருக்கடா விஷால் என்றான் . இந்த ரெண்டு பேரை நம்பி படிப்பை விட்டு விடாதே என்னை மாதிரி என்றான். விஷால் ஏதோ பதில் சொல்ல முயற்சிக்க சுபா அவனை தடுத்தாள் .

பிரதீப் இப்படி ஆனதற்கு தானும் ஒரு வகையில் காரணம் என தனக்கு தானே கூறி கொண்டான் விஷால். அனன்யா ஃபோன் செய்தாள் வர சண்டே எங்கேயாவது போவோமா ? போவோமே சுபா வரவில்லையென்று சொல்லிவிட்டாள் . மூவி போகலாமா ? சரி போகலாம். இப்போதுதான் முதல் முறையாக வெளியே ஒன்றாக செல்கிறார்கள். இவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் மனதிற்குள் சொல்லி கொண்டான். முக்கியமாக பிரதீப் பற்றி பேச்சே எடுக்க கூடாது . இயல்பாக இருந்தாள் அனன்யா எந்த பதட்டமும் இல்லை . மழை வலுவாக பெய்ய தொடங்கியது. இவன் வீட்டிலும் எல்லோரும் வெளியே போயிருந்தார்கள். அனன்யா இவன் வீட்டுக்கு வந்து விட்டாள். மழை ரொம்ப பெய்யுது நீ உள்ளே வா என்றான். அவள் தயங்குவதை பார்த்து மொதல்ல உள்ள வா அப்புறம் யோசிக்கலாம் என்றான். இன்னைக்கு நாம மூவி போன மாதிரிதான். என்றாள் அனன்யா . டிவியில் ஏதோ ஓடி கொண்டிருந்தது . அதை அணைத்தான். அனன்யா ஒரு பாட்டு பாடு என்றான். இப்போ அதான் முக்கியமா என்றாள் . சரி தெரியாமல் சொல்லிட்டேன் என்றவாறு அவளை இழுத்து பிடித்து உதட்டில் முத்தமிட்டான். அவள் தயங்கியவாறே இவனை அணைத்து கொண்டாள் . அனன்யா மலர்களே மலர்களே என்ற பாட்டை பாடினாள் .

சுபா ஃபோன் செய்திருந்தாள் நான் ஒரு நாள் இல்லை என்றால் போதுமே, ரொம்ப குறும்பு நீ என்றாள்.. நான் ஒண்ணும் பண்ணல என்றான் விஷால் . அதைதான் அனன்யாவும் சொன்னா சரியான ஆளு நீ .. எல்லாத்தையும் சொல்லிட்டாளா ? அப்புறம் நான் யாரு துருவி துருவி கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் . சுபா சிரித்து கொண்டே இருந்தாள் . ஆசைக்கு எல்லை ஏது ? அனன்யா மீது அவன் வைத்திருந்த காதலை எப்படி வெளிப்படுத்துவது ?அதை சொல்லித்தான் தீருமா ? காதல் திசை அறியாது... நடக்க போகும் சம்பவங்கள் பற்றி அறியாமல் அன்றும் டான்ஸ் கிளாஸ் போனான் விஷால். சுபா வரவில்லை. பிரதீப் மற்றும் இன்னும் சிலர் இருந்தனர் . டேய் இவந்தானடா அந்த ஹீரோ அனன்யா சரி சுபாவையும் ஏண்டா விட மாட்டேங்குர ? என்று இவனை கேட்டனர்.நல்ல பீஸ் எல்லாத்தையும் நீயே எடுத்துகிட்டா நாங்கல்லாம் என்ன பண்றது ..?இவன் பிரதீப்பை பார்த்தான் . அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் இவனை தாக்க தொடங்கினார்கள்.மயங்கி விழுந்தான் விஷால்.