Oru Devathai Paarkkum Neram Ithu - 1 in Tamil Love Stories by kattupaya s books and stories PDF | ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

Featured Books
  • तुझी माझी रेशीमगाठ..... भाग 2

    रुद्र अणि श्रेयाचच लग्न झालं होत.... लग्नाला आलेल्या सर्व पा...

  • नियती - भाग 34

    भाग 34बाबाराव....."हे आईचं मंगळसूत्र आहे... तिची फार पूर्वीप...

  • एक अनोखी भेट

     नात्यात भेट होण गरजेच आहे हे मला त्या वेळी समजल.भेटुन बोलता...

  • बांडगूळ

    बांडगूळ                गडमठ पंचक्रोशी शिक्षण प्रसारण मंडळाची...

  • जर ती असती - 2

    स्वरा समारला खूप संजवण्याचं प्रयत्न करत होती, पण समर ला काही...

Categories
Share

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது பகுதி 1

அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி வரும்போது கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான்.

இவனுடைய விருப்பமெல்லாம் அவள் கூட சகஜமாக பழக வேண்டும் என்பதுதான் ஆனால் அவள் அழகுக்கு முன்னால் இவனால் நிமிர்ந்து பார்த்து பேசக்கூட முடியவில்லை, தடுமாறிப் போனான். அவனுடைய வகுப்பில் நிறைய பெண்கள் இருந்தாலும் இவளை மட்டும் இவனுக்கு ரொம்ப பிடிக்கும் .என்னவோ அந்த நாளை அவனால் மறக்கவே முடியவில்லை, தடுமாற்றம் இல்லாமல் அவனால் பேச முடிந்ததில்லை. அவள் பேச ஆரம்பித்தால் எதிரில் இருப்பவர்கள் அவளுடைய குரலுக்கு மயங்கி விடுவார்கள். அப்படித்தான் நிறைய பேர் இருந்தார்கள். அவள் ஒரு சிறந்த பாடகி கூட சில சமயம் இவனுடைய வகுப்பு ஆசிரியர்கள் அவளை பாட சொல்லி கேட்பார்கள் இன்னும் ஒரு பாட்டு, இன்னும் ஒரு பாட்டு இன்று அந்த நாள் நீளும். விஷாலுக்கு இது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றியது ஆனால் அந்த ரகசிய தன்மை கிண்டலாக மாறிவிடும் என்று தயக்கத்துடனே தவிர்த்து வந்தான். எப்போதும் போல அன்றும் அவள் நேரத்தோடு வந்துவிட்டாள். வகுப்பில் யாரும் இல்லை இவனும் அவளும் மட்டுமே இருந்தனர் .அவள் தன்னுடைய டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், இவனை பார்த்ததும் சாப்பிட வாங்க என்றாள். இல்ல பரவாயில்லை என்றான் இவன் காலேஜ் கேண்டீன் போனான் அவளுக்கென்று ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்தான் அவனால் நினைக்க தான் முடியும் அப்படித்தான் இந்த முதலாம் ஆண்டு ஓடியது அனன்யாவை பொறுத்தவரையில் எல்லோரும் அவளுடைய நண்பர்கள், இவனும் அவ்வாறே தன்னை எப்படி தனித்து காட்டுவது என்று இவன் யோசித்துப் பார்த்தான் அப்படி ஒரு வழி கிடைத்தால் நன்றாக இருக்கும் இவனும் அனன்யாவும் மட்டும் உள்ள உலகத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்

எக்ஸாம்ஸ் துவங்க இன்னும் சிறிது நாட்களே இருந்தன எல்லோரும் பரபரப்பாய் இருந்தனர். இவன் கணக்கு பாடத்தில் மோசமானவன் என்ற பெயர் பெற்றிருந்தான். அப்போதுதான் பிரதீப் அந்த ஐடியாவை கொடுத்தான்.அனன்யாவிடம் ஹெல்ப் கேக்கலாம் என்று சொன்னான்.முதலில் தயங்கினாலும் வேறு வழி இல்லை என்பதாலும் விஷால் ஒத்துக்கொண்டான் . பிரதீப் வேறு டிபார்ட்மெண்ட் என்றாலும் இவனுடைய நெருங்கிய நண்பனாக இருந்தான். இவனும் அனன்யாவும் எலக்டிரிக்கல் டிபார்ட்மெண்ட் . பிரதீப் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட். பிரதீப் அனன்யாவிடம் பேசினான். மச்சான் ரொம்ப கஷ்டப்பட்டு அவ கிட்ட உனக்காக பேசி இருக்கிறேன் . வர சண்டே அவ வீட்டுக்கு போறோம் என்றான்.இது சரியா வருமா என்றான் விஷால். உனக்கு பாஸ் ஆகனுமா வேண்டாமா ? கண்டிப்பா பாஸ் ஆகியே தீரனும் அப்ப பேசாம நான் சொல்லுறத கேளு .. நீ கணக்குல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணு பிறகு எல்லாம் தானா நடக்கும்.

பிரதீப்க்கு ஃபோன் செய்தான், மச்சான் எனக்கு ஃபீவர் டா நான் வரலை நீ மட்டும் போயிட்டு வா என்றான் பிரதீப் .விஷால் ,பிரதீப், அனன்யா எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அனன்யா வீடு தென்றல் நகரில் இருந்தது.அவளுடைய அப்பா டெலிஃபோன் டிபார்ட்மெண்ட் இல் வேலை பார்த்து வந்தார். அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான் . அவளே பேசினாள் . பிரதீப் சொன்னான், நீங்க ஈவினிங் 4 மணிக்கு வந்திடுங்க.அவளை சந்திக்க போகிறோம் என்பதே அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது .உடைகளை ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்து கொண்டான் .இவன் சரியாய் நாலு மணிக்கு அவள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான். கதவை திறந்தது சுபா . சுபாவும் இவனுடைய வகுப்புதான். உள்ளே வாங்க விஷால் என்றாள் . அனன்யா இல்லையா அவ கடைக்கு போயிருக்கா இப்போ வந்துடுவா சுபா அனன்யாவுடைய அப்பாவிடம் இவனை அறிமுகபடுத்தி வைத்தாள் . தம்பி கணக்கெல்லாம் நீங்களே முயற்சி பண்ணி படிக்கணும் என்றார். சரிங்க சார் என்றான்.

அனன்யா வந்து விட்டாள் . சாரி விஷால் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு . பரவாயில்லை என்றான் விஷால் . அவளுடைய கணக்கு குறிப்புள்ள புத்தகங்களை இவனிடம் கொடுத்தாள் . எதுக்கு எடுத்தாலும் பயப்படாதீங்க நல்லா confident ஆ இருங்க என்றாள் . சுபா headset இல் ஏதோ பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். அவர்கள் வீட்டு மாடியில் அமர்ந்திருந்தார்கள்.அவள் சொல்லி கொடுக்க முதலில் எதுவும் பிடிபடாமல் அவளை பற்றிய சிந்தனையிலேயே மனம் மூழ்கி இருந்தது . பிறகு இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்பதால் அவளிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றான்.ரொம்ப தாங்க்ஸ் அனன்யா என்றான் . பிரதீப் வந்து சொன்னதால் தான் நான் இதுக்கு ஒத்துகிட்டேன். பிரதீப்புக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் நீங்க என்றாள் .சுபா எதுவும் பேசவில்லை. அடுத்த சண்டே நான் வெளில போறேன் சுபா இருப்பா நீங்க அவ கூட டிஸ்கஸ் பண்ணுங்க என்றாள் . இவனுக்கு உள்ளூர ஏமாற்றமாய் இருந்தாலும், சரி அனன்யா என்றான்.சுபாவிடம் அதிகம் பேசியதில்லை அவளே அவனிடம் மொபைல் நம்பரை கொடுத்தாள்.

பிரதீப் என்ன மச்சான் எல்லாம் தெளிவாயிடுச்சா என்றான் . அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா அப்புறம் என்ன ஆச்சு அவ கணக்குலதான் கவனமா இருந்தா .. இந்த சுபா வேற என்றான் விஷால். கவலைபடாதே அடுத்த வாரம் நான் நிச்சயமா வரேன்.. எதுக்கு சுபாவை கரெக்ட் பன்னவா ? சே சே நமக்கு படிப்புதான் முக்கியம் என்றான் கிண்டலாக .சுபாவே அவனுக்கு ஃபோன் செய்தாள் அவள் வீட்டு location whatsapp பண்ணியிருந்தாள். முதலில் அனன்யா வீடு இப்போ சுபா வீடு இது எங்கு போய் முடியுமோ என எண்ணினான் விஷால். சுபா இவனுக்கு காப்பி கொடுத்தாள். பிரதீப் இந்த வாரமும் வரவில்லை . சுபாவுக்கு டான்ஸ் என்றாள் உயிர். அவள் ஏராளமான பரிசுகளை வாங்கியிருந்தாள் . நான் அனன்யா அளவுக்கு இல்லை என்றாள் .. என அப்படி சொல்றீங்க? என்னவோ தோனிச்சு... சரி வாங்க கணக்கை கவனிப்போம் என்றாள் .இவ்ளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?அப்பா வெளிநாட்டுல இருக்காரு, அம்மா டீச்சர் என்றாள் .சரி சுபா நான் வரேன் என்றான்.


Exams முடியும் வரை அனன்யாவை பார்க்க கூடாது என்று நினைத்தான். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை ஒரு வழியாக எக்ஸாம் எல்லாம் முடிந்தவுடன் ஆவலுடன் அவளை பார்ப்பதற்காக வகுப்புக்கு சென்றான் .அவளே வந்து அவனிடம் பேசினாள் எப்படி பண்ணீங்க எக்ஸாம்ஸ் எல்லாம் என்றாள். ஓரளவுக்கு பண்ணி இருக்கிறேன் பாஸ் ஆகி விடுவேன் என்றான். விஷால் பிரதீப் எங்கே? அவனை அதிகம் பார்க்க முடியவில்லை நான் அவனை பார்க்க வேண்டும் என்று சொன்னாலள் . இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது ஒருவேளை அனன்யா பிரதீப்பை விரும்புகிறாளோ என்று நினைத்தான். அன்று மாலையே பிரதீப்பும் அனன்யாவும் பஸ் ஸ்டாண்டில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்

இவன் அவர்களை தவிர்த்து விட்டான். உள்ளுக்குள் பயம் எங்கே அனன்யாவை பிரதிபிடம் இழந்து விடுவோமோ என்ற பயம் இருந்தது. பிரதீப்புக்கு போன் செய்தான் மச்சான் எங்கடா இருக்க நீ இப்ப தான்டா அனன்யா கூட உன்னை பத்தி பேசிகிட்டு இருந்தேன் நானும் அவளும் சின்சியரா லவ் பண்றோம் மச்சான் என்றான். பிரதீப் குரலைக் கேட்டு அதிர்ந்தான் விஷால்.வாழ்த்துக்கள் மச்சான் என்றான் விஷால். ஒரு நிமிடம் எல்லாமே முடிந்து விட்டது போல் தோன்றியது விஷாலுக்கு. நான் மறுபடி கூப்பிடுறேன் மச்சான் என்றவாறு போன் இணைப்பை துண்டித்தான்

இனி செய்வதற்கு ஒன்றுமில்லை அனன்யா ஒரு முடிவு எடுத்து விட்டாள் என்றால் அதில் உறுதியாக இருப்பாள் சுபாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று அவளுக்கு போன் செய்தான் சுபா போன் எடுத்தவுடன் சாரி விஷால் நான் முன்னாடியே இதை உங்ககிட்ட சொல்லி இருக்கணும் பிரதீப் உங்களை பயன்படுத்தி விட்டார், உங்களை ஏமாத்திட்டாரு அப்படி எல்லாம் இருக்காது சுபா என்றான் விஷால். உங்கள காயப்படுத்துவதற்காக அப்படி சொல்லல, உண்மை அதுதான் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எல்லாமே மாறிடும் நீங்க வருத்தப்படுகிற அளவுக்கு எதுவும் நடந்து விடவில்லை. சரி சுபா..
பிரதீப் இவனுக்கு தெரிந்தே துரோகம் செய்துவிட்டான் என்று நினைக்க முடியவில்லை இவனுடைய கோழைத்தனத்தினால் அனன்யாவை இழந்து விட்டான் இனி எப்போதும் போல் பிரதிபிடமோ, அனன்யாவிடமோ பழைய மாதிரி பழக முடியாது என நினைத்தான்.


இரண்டு நாட்கள் எங்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தான். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். பிரதிப் போன் செய்த போது ஒன்னும் இல்ல மச்சான் கொஞ்சம் உடம்புக்கு முடியல என்றான் இரண்டு நாட்கள் கழித்து காலேஜுக்கு போயிருந்த போது எல்லாமே மாறிவிட்டது அனன்யா புதியதொரு பெண்ணாக தெரிந்தாள். இவனைப் பார்த்ததும் உற்சாகம் மிகுதியில் சிரித்தாள். பிரதீப் சொன்னானா என்று கேட்டாள் . சொன்னான்.. வாழ்த்துக்கள் அனன்யா என்றான் விஷால். வகுப்புகள் ஏதும் அவன் மனதிலும் ஏறவில்லை. ஒருவித சலனமற்ற மனநிலைக்கு போய்விட்டான். மதியம் இடைவெளியில் பிரதீப் வந்து அனன்யாவை அழைத்துப் போனான். இவனையும் கூப்பிட்டான் மச்சான் சினிமாக்கு போறோம் வரியா என்றான் நான் எதுக்கு மச்சான் நீங்க போயிட்டு வாங்க என்றான் விஷால்.

விஷாலுக்கு தன் மீதே பரிதாபம் உண்டாயிற்று. தான் ஒரு வார்த்தையாவது சொல்லியிருந்தால் அனன்யா யோசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் இப்போது அதுவும் கை நழுவி போய் விட்டது .பிரதீப் புத்திசாலி, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டான்.அனன்யாவிடம் இருந்து ஃபோன் வந்தது அடுத்த வாரம் நம்ம கிளாஸ் டீச்சர் ரேணுகாவுக்கு கல்யாணம் நாம எல்லோரும் திருச்சி போறோம் பிரதீப், சுபா எல்லோரும் வராங்க நீங்களும் அவசியம் வரணும் என்றாள் . இவனும் மையமாக சரி என்றான்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு ரயிலில் போவதாக ஏற்பாடு செய்திருந்தான் பிரதீப். சுபாவும் வந்திருந்தாள் .இவன் அமைதியாய் இருப்பதை பார்த்து இன்னமுமா நீ பீல் பண்ணுறே என்றாள் . நானும்தான் பிரதீப்பை விரும்பினேன் உன்னை மாதிரி அழுத மூஞ்சியாவா இருக்கேன் என்றாள் . சும்மா சொல்லாதே என்றான் . நான் ஏன் உன்கிட்ட மறைக்கணும் . பிரதீப் என்னை reject பண்ணி விட்டான் . அப்போ நீயா போய் அவன் கிட்ட ப்ரபோஸ் பண்ணியா ? ஆமாம் பண்ணுனேன் இதுல என்ன தப்பு இருக்கு என்றாள் . இது அனன்யாவுக்கும் தெரியும். விஷால் நீ ரொம்ப நல்லவனா இருக்கே காதல் அதெல்லாம் பார்க்காது என்று சிரித்தாள் .அனன்யா இவன் பக்கதில் அமர்ந்து கொண்டாள் . சுபா பிரதீப் பக்கம் அமர்ந்திருந்தாள் .
பிரதீப் அனன்யாவிடம் இடம் மாறி உட்காருமாறு கண்களால் கெஞ்சி கொண்டிருந்தான் . அவளோ என்ன விஷால் எதுவும் வேண்டுதலா ஏன் அமைதியா வரீங்க? என்றாள் . அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை என சமாளித்தான். பிரதீப் புன்னகையுடன் இதை பார்த்துகொண்டிருந்தான்.