iravukku aayiram kaigal - 50 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 50

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 50

ராம் ஒரு முடிவுக்கு வந்தவங்க இருந்தான். அனால் முழு உண்மை தெரியாமல் எதுவும் செய்ய முடியாது. பரமசிவத்தை சந்தித்தான். வாப்பா ஏதாவது தகவல் கிடைச்சுதா ? கிடைச்சது ஆனால் என்னால் இப்போ ஒன்னும் சொல்ல முடியல என்றான். அப்போது கீதா வந்தால். என்ன சார் என்ன விஷயம் ?கங்காதரனுக்கு பணம் குடுத்தவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும் . அதான் யோசனை பண்றேன் என்றான். அவள் முகம் மாறியது. நீங்க எங்களை சந்தேகப்படுறீங்களா ?இதெல்லாம் அநியாயம் என்றாள். சே சே அப்படியெல்லாம் இல்லை. இப்போ அந்த ஒரு விஷயம்தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு அதைத்தான் சொன்னேன்.சரி சரி நான் வேண்ணா எல்லாருடைய அக்கௌன்ட் டீடெயில்ஸ் குடுக்க சொல்றேன் . வேணாம் வேணாம் நான் பாத்துக்கிறேன். கீதா மேடம் பிரேம் இறந்ததுக்கப்புறம் அவர் சொத்து யாருக்கு வரணும்னு ஏதாவது உயில் அவர் எழுதினாரா?அப்படியெல்லாம் இல்லை சார்.நல்லா இருந்த மனுஷன் ஆனா அடிக்கடி ஒன்னு சொல்லுவாரு சாரதாவுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன் அவளை அம்போன்னு விட்டிருக்க கூடாதுன்னு சொல்லிகிட்டே இருப்பாரு,கீதா மேடம் இப்போவும் நெறைய டைம் இருக்கு ஏதாவது இருந்தா சொல்லுங்க என்றான்.எனக்கு என்ன சார் அவசியம் உங்ககிட்ட மறைக்க என்றாள் .சரிப்பா நான் வரேன், வரேன் மேடம் என விடை பெற்றான்.
ஜெகதீசன் போன் பண்ணியிருந்தார். என்ன சார் ஆச்சர்யமா இருக்கே .. நானும் யோசிச்சு பாத்தேன் நீங்க வீட்டுக்கு வாங்க நான் எல்லாம் விவரமா சொல்றேன். உட்காருங்க சார். கொஞ்ச நாளாவே அவனுக்கு ஒரு யோசனை இருந்தது, சாரதாவுக்கு செஞ்ச பாவத்துக்குத்தான் தனக்கு குழந்தை இல்லாமல் போயிருச்சுன்னும் அதுக்காக பிராயச்சித்தம் பண்ணனும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். ம்ம் அதனால மொத்த சொத்தையும் சாரதாவுக்கு எழுதி குடுக்குறதா முடிவு பண்ணி வச்சிருந்தான், இது சம்பந்தமா வக்கீல்கிட்ட பேசி இருந்தான், எந்த வக்கீல்? வக்கீல் பாலகிருஷ்ணன்.நான் அப்பவும் சொன்னேன் நித்யாவுக்கும் ஏதாவது செய்யணும்ப்பான்னு அவன் கேக்கலை.எனக்கு தெரிஞ்சு நித்யாவும் அவங்க சகோதரரும் ஏதாவது செஞ்சு இருப்பங்களோன்னு ஒரு சந்தேகம் ஓ இருக்கலாம் சார் அவர்களுக்கோ ஆதரவு கிடையாது . அவர் வேற எதாவது சொன்னாரா ?கூடிய சீக்கிரம் நித்யாவையும் விவாகரத்து பண்ணிட வேண்டியதுதான்னு சொன்னாரு அது மூலமா atleast சாரதாவை பாக்க ஒரு வாய்ப்பாவது கிடைக்கும்னு சொன்னாரு, ரொம்ப தேங்க்ஸ் சார். இதை வெளியிலே நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க .. நிச்சயமா இல்லை.

ராம் இந்த கோணத்தில் யோசிக்கவில்லை. நித்யாவிற்கு அந்த motive இருக்க வாய்ப்பிருந்தது. அவளுடைய பிரதர் சரவணன் பற்றி விசாரிக்கவேயில்லை. ராம் யோசனையில் ஆழ்ந்தான், சரவணனுக்கு போன் செய்தான்.கொலை நடந்த அன்று எங்கு இருந்தீர்கள் என விசாரித்தான். அன்னிக்கி சண்டேங்கிறதுனாலே வீட்லதான் இருந்தேன் . உங்களுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் பழக்கம் எப்படி. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் சார். அவர் பிரேமோட வக்கீல் அவ்ளோதான் மத்தபடி எனக்கும் அவருக்கும் எந்த சம்மதமும் கிடையாது.சரிங்க சார். அவர் கீதாவோடுதான் சகஜமாக பேசுவார் என்றார். கங்காதரன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான்.வக்கீல் பாலகிருஷ்ணன் கோட்டை விட்டு விட்டார். ராமுக்கு பரமசிவம் போன் பண்ணியிருந்தார். உடனே பாலகிருஷ்ணன் ஆபிசுக்கு போங்க அவர் உங்க மேல கோவமா இருக்காரு . நீங்கதான் கங்காதரன் நண்பரை பார்த்து பேசுனீங்களாம் அதனாலதான் இப்போ ஜாமீன் கிடைச்சிடுச்சுன்னு சொல்றாரு. ராம் பாலகிருஷ்ணன் ஆபிசுக்கு போனான்.பாலகிருஷ்ணன் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எதிர் தரப்பு ஆளை பார்த்து பேசி இருக்கீங்க.இப்போ பாருங்க அவன் ஜாமீன்ல வெளிய வந்துட்டான். எத்தனை பேரை தீர்க்க போறானோ ?இப்போ எல்லோருமே ஜாமீனில் வந்துடுவானுக. ராம் அமைதியாய் இருந்தான். என்னவோ பண்றீங்க அது என்னனு சொல்லி தொலையவும் மாட்டேங்குறீங்க என்று பாலகிருஷ்ணன் எரிந்து விழுந்தார்.ராம் எதுவும் பேசாமல் உண்மை வெளியே வரும்போது நீங்க நான் இருக்குற இடத்துல இருப்பீங்க என்றான்.
கதிருக்கு போன் பண்ணி கங்காதரனை பார்க்கவேண்டும் என்று சொன்னான். இப்போ வேண்டாம் சார் அவனே இப்போதான் வெளியே வந்திருக்கான். நானே உங்களை கூப்பிடுறேன். சரி சார். கீதா கொடுத்த அக்கௌன்ட் டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றையும் கவனமாக ஆராய்ந்தான். வரவு செலவு எல்லாம் சரியாய் இருந்தது.வக்கீல் செலவு மட்டும் அதிகமாய் இருந்தது. ரொம்ப தேங்க்ஸ் மேடம்.. அப்போது நித்யா வந்தாள்.எங்களோட அக்கௌன்ட் டாக்குமெண்ட்ஸ் இதோ இருக்கு இதையும் பார்த்திடுங்க ...அதையும் வாங்கி சரி பார்த்தான். இவர்கள் யாருக்கும் நேரிடையாக இதில் பங்கில்லை. யார் இந்த கொலையின் மூளையாக செயல்பட்டிருப்பார்கள் என்பதில் தெளிவில்லாமல் இருந்தது. ஒருவேளை கூட்டு சாதியாக இருக்குமோ என நினைத்தான்.
ராம் மறுபடி அந்த பேக்கரி உரிமையாளரிடம் பேசி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தான். திடீரென அவனுக்கு ஒன்று தோடன்றியது கொலை நடந்ததற்கு முந்தைய தின காட்சிகளை பார்க்க தவறி இருந்தான். முந்தைய தின காட்சிகளை பார்த்த போதுதான்ஒரு
உண்மை உறைத்தது. ராம் அந்த சிசிடிவி பதிவுகளை கடைக்காரரிடம் காட்டி உறுதிப்படுத்தினான். அந்த சிசிடிவி பதிவுகளை தீபுவிடம் காட்டினான். ஓ இவரா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கினாள்.அந்த விடியோவை பரமசிவத்திடம் மட்டும் காட்டினான்.இவனை எனக்கு தெரியும் இவனால்தான் என் பொண்ணு வாழ்க்கை நாசமா போக இருந்துச்சு .. உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். இவன் பேரு கங்காதரன் என்றார். கீதாவோடு அவன் இருந்த புகைப்படத்தையும் காண்பித்தான். நீங்க என்ன செய்யணுமோ செய்யுங்க சட்டப்படி என்றார் பரமசிவம்.ராம் அந்த போட்டோவை பற்றி கீதாவிடம் பேசவில்லை, இதற்கு பிறகு அவர் எதற்காக இதை செய்தார் என்ற காரணம் தேவைப்பட்டது. பாலகிருஷ்ணன் வீட்டுக்கு போனான்.என்ன சார் வீட்டுக்கெல்லாம் ?அவர் வீட்டில் அவருடைய அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றும் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்றும் சொன்னார்.கீதாவுடன் கங்காதரன் இருக்கும் போட்டோவை காட்டியவுடன் அவர் முகம் வெளுத்தது. இது எப்படி சார் உங்களுக்கு கிடைச்சது. நாளைக்கு எல்லோரையும் வீட்டுல வச்சி சந்திக்கிறேன்னு சொல்லி இருக்கிறேன். நீங்களும் வாங்க அங்க வெச்சு கீதாவோட முகத்திரையை கிழிக்கிறேன் என்றான். அதுவரைக்கும் நீங்க யார்கிட்டயும் சொல்லாதீங்க என்றான்.
கதிரிடம் பேசினான் ராம் இந்த முறை கங்காதரனை சந்தித்தான். அவன் எடுத்தவுடன் எதுவும் பேசவில்லை. கீதா கேட்டுக்கொண்டதற்காகதான் இதை செய்தென் என ஒப்புக்கொண்டான். சொத்துல ஒரு பகுதி கூட தனக்கு கிடைக்காது என கீதா அழுததாகவும், எப்படியாவது தன் அண்ணண் பிரேமை தீர்த்து விடும்படி கெஞ்சியதாகவும் தெரிவித்தான். அப்புறம் ராம் அந்த சிசிடிவி காட்சிகளை காட்டிய போது அது உண்மைதான் என கூறினான். ராம் பிரேம் வீட்டுக்கு போனான். கீதா உட்பட எல்லோரும் அமைதியாய் இருந்தார்கள்.கீதா உங்களை அரெஸ்ட் பண்ண போலீஸ் வர போகுது . நீங்களே என்ன நடந்துச்சுனு சொல்லறீங்களா ? ஆமா எவளோ ஒருத்திக்கு என் அண்ணண் சம்பாதிச்ச சொத்து மொத்தமும் போகணும்ன்னு யாருதான் விடுவா? அதுக்காக உங்க சொந்த அண்ணனையே கொல்லுவீங்களா? கீதா அமைதியாய் இருந்தாள். பரமசிவம் கீதா நீ உள்ளே போ என்றார்.வக்கீல் இன்னும் வந்திருக்கவில்லை.சற்று தாமதமாக வந்தார்.நித்யா எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தார். இந்த வீடு இப்போ உங்களுக்குத்தான் சந்தோசமா வக்கீல் சாரே? ஏன் அப்படி சொல்லறீங்க என்றார் பரமசிவம்.அப்படிதான் கீதா சொல்லியிருக்காங்க.வக்கீல் மூலமா இந்த சொத்து சாரதாவுக்கு போகப்போறது தெரிஞ்சுக்கிட்ட கீதா பிரேமை கொன்னா பாலகிருஷ்ணனோட பூர்விக வீடான இதை அவருக்கே திருப்பி தரேன்னு வாக்கு கொடுத்திருக்காங்க .உயிருக்காக போராடுற அவங்கப்பாவோட கடைசி ஆசைக்காக இந்த கொலைக்கான பணத்தை வக்கீல் பாலகிருஷ்ணன் கொடுத்திருக்காரு.இது அபாண்டம் என்றார் பாலகிருஷ்ணன். ராம் அந்த பேக்கரி கடையின் சிசிடிவி காட்சிகளை காண்பித்தான். அதில் கங்காதரனுடன் வக்கீல் பாலகிருஷ்ணன் இருந்தார். அதில் அவர் பணம் கொடுப்பதும் பதிவாகி இருந்தது .போலீஸ் வந்து பாலகிருஷ்ணனையும், கீதாவையும் அரெஸ்ட் செய்தது .சாரதா ராமுக்கு நன்றி தெரிவித்தாள். ராம் தீபுவிற்கு நன்றி தெரிவித்தான்.

நிறைந்தது ... நன்றி !மீண்டும் சந்திப்போம்