தீபு கங்காதரன் ப்ரொபைல் ரெடி பண்ணியாச்சா? இல்ல பாஸ் அவனை பத்தி அதிக அதிகமா டீடெயில்ஸ் கிடைக்கல. நான் அவங்க சம்பத்தப்பட்ட ஆளுங்கள்ட்ட பேசி எடுத்து வைக்கிறேன். சரி தீபு. பேக்கரி உரிமையாளரை சந்தித்தான் அன்னிக்கி கடையில கூட்டம் அதிகமில்லை டீ மாஸ்டர் வெளியே போயிருந்தார்.நான் மட்டும்தான் இருந்தேன்.கடையில உட்கார்ந்திருந்த ஒரு ஆள்தான் அவங்களுக்கு தகவல் சொன்ன மாதிரி இருந்துச்சு. அவ பேசுனத நான் கேட்டேன். அவன் வந்துட்டான்டானு சொன்னன உடனே எங்கிருந்தோ டூ வீலர்ல வந்தவனுக வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டானுங்க தம்பி. நான் உடனே வெளியே ஓடிட்டேன், நல்ல மனுஷன் தம்பி. போலீஸ் வேற என்னை அடையாளம் காட்ட சொன்னாங்க அதிலே எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
வேற ஏதாவது அவனுக வெட்டும்போது சொன்னார்களா ?இல்ல தம்பி எல்லாம் full போதையில வந்திருந்தாங்க. இதை எதோ பிளான் பண்ணித்தான் பண்ணி இருக்கானுங்க தம்பி. பாலகிருஷ்ணனை சந்திப்பது சம்மந்தமாக போன் செய்த போது பரமசிவம் சொன்னாரு ஆனா இந்த கேசுல நீங்க பண்றதுக்கு ஒண்ணுமில்லை.அவனுங்களை போலீஸ் பிடிச்சிடுச்சே .என்ன motive சார் அதான் ஏற்கனவே பேப்பர்ல வந்ததே .. சரி சார்.எதுக்கும் சண்டே எல்லாரையும் மீட் பண்றப்போ நாமளும் அங்கே மீட் பண்ணலாம் என்று சொன்னார் பாலகிருஷ்ணன்.ஓகே சார். ஏரியா இன்ஸ்பெக்டரிடம் பேசியபோது அவங்க கால் ஹிஸ்டரி எல்லாம் செக் பண்ணியாச்சு சார் .அதுல கங்காதரன்கிட்டத்தான் கொலை நடந்த அன்னிக்கி எல்லாரும் பேசி இருக்காங்க.பிரேம் கிட்ட இவங்க யாரும் போன் பேசல. ப்ரேமும் கடைசியா வக்கீல் பாலகிருஷ்ணன் கிட்டேதான் பேசி இருக்கிறாரு..என்ன பேசினார் அதை பத்தி அதிகம் தெரியல சார்.
ராம் சாரதாவிடம் பேசினான் ஏதாவது குடும்ப பிரச்னை இல்லை சொத்து பிரச்னை இருந்ததா ? அப்படியெல்லாம் இல்லை சார் ஆனா அவர் அப்பா சாதாரண கிளெர்க் . இவர் சுயமா சம்பாதிச்சதுதான் இப்போ வாங்குன வீடு, மத்த சொத்தெல்லாம். ஏன் சார் கேக்குறீங்க எனக்கு அவர் கொலைக்கான எந்த நோக்கமும் பிடிபடல.அவரோட க்ளோஸ் friends யாராவது இருக்காங்களா ? .ஜெகதீசன்னு ஒருத்தர் அவர் கூட ஒர்க் பண்ணுனவரு இருக்காரு .ஆனா பிரேம் இறந்ததற்கு அப்புறம் அவர் அந்த பக்கமே வரலை. அவர் போன் நம்பர் மெசேஜ் பண்றேன் பேசி பாருங்க.சரிங்க மேடம். ஜெகதீசனை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது .பரமசிவத்திடம் பேசி ஜெகதீசனின் அட்ரஸ் வாங்கினான். ஜெகதீசன் சற்றே பயந்து போயிருந்தார். பயப்படாதீங்க சார் நான் போலீஸ் இல்லை. நான் போலீஸ்கிட்டே ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்டேன். ஜெகதீசன் தனக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா உங்ககிட்ட ஷேர் பண்ணினாரா ? அப்படி எதுவும் இல்லை சார். வேற ஏதாவது மிரட்டல்கள் அவருக்கு வந்ததா ? அதை பத்தி எனக்கு தெரியல. சரி சார் உங்களுக்கா
தோணும்போது என்னை கூப்பிடுங்க இது என்னோட கார்டு என்று கொடுத்துவிட்டு வந்தான்.
சண்டே அன்று எல்லோரும் பரமசிவம் வீட்டில் ராமுக்காக காத்திருந்தார்கள். பரமசிவம் எல்லாரையும் ராமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நீங்க எல்லோரும் இந்த formal enquiry க்கு நீங்க எல்லோரும் cooperate பண்ணுவீங்கன்னு நம்புறேன். கீதா எங்களை விசாரிக்க என்ன இருக்கு ? நாங்க ஏன் எங்க அண்ணனை கொல்ல போறோம் என்றாள். கீதா எடுத்தெறிஞ்சு பேசாதம்மா.. எல்லாம் இந்த சாரதா பண்ற வேலை என்று கீதா சொன்னாள்.நித்யா கலங்கிய முகத்துடனே இருந்தார். அவளுடைய சகோதரர் சரவணன் நீங்க தாராளமா விசாரிங்க நாங்க full cooperate பண்ணுறோம் என்றார். பிரேமின் சகோதரர் எதுவும் பேசாமல் இருந்தார்.சரி எதுவும் information தேவைப்பட்ட நானே உங்களுக்கு போன் பண்றேன் இப்போ நான் கிளம்புறேன் என்றான் ராம். அப்போதுதான் பாலகிருஷ்ணன் வேகமாக உள்ளே வந்தார்.என்னாச்சு சார் ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா என்றார். அவங்க இன்னும் பிரேம் இறந்த அதிர்ச்சியில் இருக்காங்க அதனால ஒன்னும் பேசல. சரி சார் என்று விடை பெற்றான். தீபு கங்காதரனுடைய ப்ரொபைல் ரெடி செய்து விட்டதாக சொன்னாள்.கங்காதரன் டிகிரி முடிச்சிருக்காரு .கொஞ்ச நாள் ஆட்டோவும் ஓட்டி இருக்காரு . அவரு friends கூட சேர்ந்து குடி பழக்கத்துக்கு அடிமை ஆகி இப்போ கொலை வரைக்கும் வந்திருக்காரு. கங்காதரன் பிரேம் கொலை நடந்தப்போ அந்த gang ல இருந்தானா? இல்லை சார். சரி அவன்தான் இந்த சம்பவத்தை ஸ்கெட்ச் போட்டானு வெச்சுக்குவோம் . அவனுக்கு பணம் யாரு கொடுத்திருப்பா? எவ்ளோ கொடுத்திருப்பாங்க அதை பத்தின டீடெயில்ஸ் போலீஸ்கிட்டேயிருந்து வாங்கணும். சரி தீபு anyway தேங்க்ஸ் for யுவர் hard ஒர்க் என்றான்.
ராம் அந்த பேக்கரி கடையின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தான். சந்தேகப்படும்படி யாரும் இல்லை. பிரேம் வீட்டு முன்பாக இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தான். ஒரு பலனும் கிடைக்கவில்லை. கங்காதரனுடைய போட்டோவை மொபைலில் ஏற்றி கொண்டான். வக்கீல் பாலகிருஷ்ணன் பிரேம் சார்பாக இந்த கேஸ் எடுத்து நடத்தி கொண்டு இருந்தார். அவர் வாதாடுகிற வேகத்தை பார்த்தால் குற்றவாளிகள் அனைவர்க்கும் தூக்கு தண்டனை கிடைக்கும் என்ற ரீதியில் இருந்தது.ராமுக்கு நித்யாவிடம் இருந்து கால் வந்தது.வணக்கம் நான் பிரேமோட
wife நித்யா பேசுறேன் சொல்லுங்க மேடம்,
அன்னைக்கி என்னால சரியா பேச முடியல ரொம்ப எமோஷனலா இருந்தேன். எனக்கு தெரிஞ்சு அவர் யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லை சார். என் பிரதர் சரவணனுக்கு கூட அவர்தான் வேலை வாங்கி கொடுத்தார். ஆனா அவங்க சிஸ்டர் கீதா அவங்களுக்கு அப்போ முதலே சாரதாவை பிடிக்காது . அவங்கதான் ரெண்டு பேர் விவாகரத்து வாங்கறதுக்கு மொத காரணம். பிரேமோட பிரதர் ரவி ரொம்ப நல்லவரு. எங்களுக்கு குழந்தைகள் கூட இல்லை. இப்போ அவரும் போயிட்டாரு . சரி மேடம் அவர் மொபைல், போன் ,டைரி இதுல ஏதாவது முக்கியமானது இருந்துதுன்னா உடனே என்னை கூப்பிடுங்க.. சரிங்க சார்.
ராம் ஜெகதீசனை தொடர்பு கொண்டான் அவர் போனை எடுக்கவில்லை. கங்காதரன் பற்றிய விவரங்களை ஆராய்ந்தான்.அவனுடைய குடும்பத்தாரை சந்தித்தான் .என்ன தம்பி பண்றது எல்லாம் நல்ல படிப்புதான் ஆனா சகவாசம் சரியில்லையே என்றார்கள். அவருக்கு கிளோஸ் friends யாரும் இருக்கிறார்களா ?கதிர்னு ஒருத்தன் இருக்கான் தம்பி இப்போ அவன் நல்ல வேலையில இருக்கான். அப்பப்போ எங்களை வந்து பார்த்து செலவுக்கு பணம் குடுத்துட்டு போறதும் அவன்தான். அவன் படிச்ச கல்லூரியிலேயே professor ஆக இருக்கான் . இப்போயும் அங்கேதான் ஒர்க் பன்றாரா ? ஆமா சார் அவனை கேட்டா ஏதாவது தகவல் கிடைக்கும் . யார் என் புள்ளைய இப்படி தூண்டி விடுறாங்களோ தெரியலியே தம்பி என்றார் கங்காதரன் அப்பா.
கதிர் நம்பருக்கு போன் செய்தான். ஹலோ நான் ராம் பேசுறேன் பிரேம் கேஸ் விஷயமா விசாரிக்கிறேன் . உங்களை மீட் பண்ண முடியுமா ? சரி காலேஜ் ல வேண்டாம் வீட்டுக்கு வாங்க. என் வீட்டு அட்ரஸ் மெசேஜ் பண்றேன், சில பழைய ஆல்பம் காட்டினான் கதிர். அதில் அவனும், கங்காதரனும் அவனுடைய நண்பர்களும் இருந்தனர். அவனுக்கு படிக்கிறப்போ எந்த பிரச்னையும் இல்லை. அவன் லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போனப்புறம்தான் குடிக்கு அடிமை ஆகிட்டான்.அதுக்கப்புறம் அவனால சுத்தி என்ன நடக்குறதுங்கிறதையே உணர கூட முடியல.யார் யாரோ அவனை மூளை சலவை செய்து அவனை தங்களோட சொந்த பகையை தீத்துக்க பயன் படுத்திக்கிட்டாங்க.ம்ம் அவர் கிட்டே இந்த கேஸ் சம்பந்தமா பேசுனீங்களா ? நானும் அவனுக்கு ஜாமீன் கிடைக்கும்னு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன், ஒருவேளை அவன் approver ஆனா குறைந்த பட்ச தண்டனை கிடைக்கும். நீங்க சொல்றது சரிதான் என ராம் ஆமோதித்தான். அங்கிருந்த ஆல்பம் ஓன்றிலிருந்த புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ந்தான்.
யார் இவங்க ?இவங்கதான் கங்காதரன் காதலிச்ச பொண்ணு. வசதியான இடத்துல மாப்பிள்ளை வந்ததும் இவனை கழட்டி விட்டுட்டா. இவங்க போட்டோவை எடுத்துக்கலாமா? அதில் கங்காதரனும் அந்த பெண்ணும் இருந்தனர்.