iravukku aayiram kaigal - 44 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 44

Featured Books
  • ઈર્ષા

      ईर्ष्यी घृणी न संतुष्टः क्रोधनो त्याशङ्कितः।  परभाग्योपजीव...

  • ફરે તે ફરફરે - 61

    ફરે તે ફરફરે - ૬૧   જુના જમાનાના લેખકો સવારનુ વર્ણન કરત...

  • રાય કરણ ઘેલો - ભાગ 10

    ૧૦ મહારાણીની પ્રેરણા   કાંધલે જે કહ્યું તે સાંભળીને કરણ...

  • ઇડરિયો ગઢ

    ઇડરિયો ગઢવર્ષોથી મનમાં તમન્ના હતી અને એક ગૂજરાતી ફિલ્મ પણ વા...

  • આકર્ષણ બન્યુ જીવનસાથી - 1

    મહિનાનો પહેલો દિવસ અને ઍ પણ સોમવાર. અમારી ઓફિસ મા કોઇ જોબ મા...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 44

ஸ்ரீஜாவும் ப்ரேமும் ராமை பார்க்க வந்திருந்தனர்.சொல்லுங்க என்ன விஷயம் ? எங்க அண்ணனை கொன்னுட்டாங்க சார். ம்ம் எப்போ போன வாரம் . என்ன நடந்தது? எப்பவும் போல டாக்ஸி ஓட்ட போனவரை யாரோ கொன்னுட்டாங்க சார்.போலீஸ் என்ன சொல்லுறாங்க?. அவங்களும் எந்த துப்பும் கிடைக்காம திணறுறாங்க சார். இவர் யாரு ? இவர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு. எப்போ கல்யாணம் அடுத்த மாசம் சார். உங்க அண்ணன் வாடகை டாக்ஸி ஓட்டுனாரா இல்லை சார் சொந்தமா டாக்ஸி வெச்சிருந்தாரு.நீங்க அவரை பத்தின டீடெயில்ஸ் குடுத்திட்டு போங்க நான் என்னால முடிஞ்சது செய்றேன்.உங்க அண்ணன் பேரென்ன குமார். சார் அப்புறம் இன்னொரு விஷயம். சொல்லுங்க எங்க அண்ணன் கூடவே சுத்திகிட்டு இருப்பாரு அவரு friend ரமேஷ் அவரையும் அண்ணா இறந்த அன்னிலேர்ந்து காணோம். உங்க அண்ணன் மேல போலீஸ் கேஸ் ஏதாவது இருக்கா ? இல்ல குடிப்பழக்கம் உள்ளவரா ?அப்படியெல்லாம் எதுவும் கிடையாது சார்.

இந்த சம்பவம் பற்றி பேப்பரில் வந்த செய்தியை தேடி எடுத்தான். கார் ஓட்டுநர் மர்ம மரணம், நண்பரை தேடுகிறது போலீஸ் . யாரோ பின் மண்டையில் பலமாக தாக்கியதில் மரணம் என போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் சொன்னது. motive என்னவாக இருக்குமென்று கணிக்க முடியவில்லை. ராம் அந்த கேஸ் handle செய்யும் இன்ஸ்பெக்டரிடம் பேசினான். இது ஏதோ friends க்குள்ள தகராறு சார் அவன் இவனை கொன்னுட்டு எஸ்கேப் ஆயிட்டான் . குமாரோட போன், ரமேஷோட போன் ரெண்டுமே dead ஆஹ் இருக்கு என்றார். ரமேஷை சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம் என்று சொன்னார்.

குமார் வண்டி நிறுத்தும் ஸ்டாண்டில் குமார் பற்றி விசாரித்தான். எல்லோரும் நல்லவிதமாகவேசொன்னார்கள்.நண்பர்களுக்காக எதையும் செய்வான் என்றும் சொன்னார்கள்.போலீஸ் ரெகார்ட் எதுவும் அவன் மேல் இல்லை. அவனுக்கு விரோதிகள் யாரும் இல்லை. ஸ்ரீஜாவின் வீட்டுக்கு சென்றான். வாங்க சார் உக்காருங்க . நீங்க எங்க வேலை செய்யுறீங்க ஸ்ரீஜா. இங்க பக்கத்துலதான் ஒரு export கம்பெனில வேலை செய்யுறேன் சார். பிரேம்? அவரு ஆட்டோ ஓட்டுறாரு சார்.உங்களுது லவ் marriage ஆஹ் ?ஆமாம் சார் . எங்க அப்பா அம்மா கொஞ்ச வருஷம் முன்னாடி காலமாயிட்டாங்க. அண்ணன்தான் எனக்கு எல்லாமே. அண்ணன் சம்மதிச்சதாலதான் இந்த கல்யாண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்த போட்டோஸ் இருந்தா காட்டுங்க. அதில் இருந்த குமார், ரமேஷ் இருவரின் போட்டோவையும் எடுத்து கொண்டான். உங்க அண்ணனுக்கு நிறைய friends இருப்பாங்க போலையே? ஆமா சார்.சரிம்மா நான் வரேன் நீ எதுக்கும் கவனமா இரு . அந்த வண்டி ? போலீஸ் விசாரணை முடியற வரைக்கும் அது ஸ்டேஷன்ல தான் இருக்கும்னு சொல்லிட்டாங்க. சரி ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடும்மா என்றான் ராம்.

குமார் இறந்து கிடந்த இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தான். அதில் பெரிதாக ஒன்றுமில்லை. வாகனங்கள் வந்து போகும் சாலையில் கார் ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டிருப்பது மட்டுமே சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.மரணம் நிகழ்ந்தது விடிகாலை 2 மணி என போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் சொன்னது.அதிக நடமாட்டம் இல்லாத சமயத்தில்தான் நடந்திருக்க வேண்டும்.ராம் மேலும் சில குமாருக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தான். நாங்களும் ரமேஷை தேடிகிட்டுதான் இருக்கோம். ரமேஷுக்கும் குமாருக்கும் எவ்ளோ வருஷ பழக்கம் என விசாரித்தான். அது ஒரே ஏரியா என்பதாலே சின்ன வயசுலேர்ந்தே பழக்கம் என்று சொன்னார்கள். குமாரின் போனும் காணாமல் போயிருந்தது. குமாரின் கால் ஹிஸ்டரி ரமேஷின் கால் ஹிஸ்டரி ரெண்டிலும் சில பொது நம்பர்கள் இருந்தன. அவற்றை பற்றி போலீசார் விசாரித்தனர்.

ரமேஷ் வீட்டுக்கும் சென்றான் ராம். அவருடைய அம்மா மட்டுமே இருந்தார். போலீசார் வந்து சோதனை போட்டதாகவும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் சொன்னார். ரமேஷ் காணாமல் போய் ஒரு வாரம் ஆகிறது. ரமேஷும் ஆட்டோ ஒட்டி வந்தான் என அவருடைய அம்மா சொன்னார். சரிம்மா இது சம்மந்தமா யாராவது போன் பண்ணின எனக்கு உடனே சொல்லுங்க என்றான்.

ரமேஷுடைய சடலம் பீச் ஓரம் கிடைத்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.ஸ்ரீஜாவும் ப்ரேமும் வந்திருந்தார்கள்.ரமேஷுடைய செல்போனும் கிடைக்க வில்லை. ரமேஷ் நீரில் மூழ்கித்தான் இறந்திருந்தான். அவனுடைய கைகள் இரண்டும் பின்புறம் கட்டப்பட்டு இருந்தன. போலீஸ் ரமேஷின் ஆட்டோவை சிறிது தூரத்தில் கண்டுபிடித்தனர்.அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ரமேஷ் தனியாக வருவது மட்டுமே இருந்தது. குமார் இறந்து இரண்டு நாட்கள் கழித்தே ரமேஷ் இறந்திருக்கிறான்.ரமேஷ் குமார் இறந்த அதே தினத்தில் மூணு மணிக்கு ஆட்டோவை பீச் அருகே நிறுத்தி விட்டு சென்றிருக்கிறான்.

முடிச்சுகள் இறுகிக்கொண்டிருந்தன . ரமேஷும் இறந்து விட்டதால் மேற்கொண்டு விசாரணையை போலீஸ் இரட்டை கொலை என்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடியது.ரமேஷ் பலவந்தமாக தாக்கப்பட்டதற்கான எந்த தடயமும் இல்லை.ரமேஷ் ஆட்டோவில் இருந்து அந்த ஆயுதத்தை எடுத்தனர். இரும்பு rod ஒன்று கிடைத்தது . அதில் உள்ள கைரேகைகளை ஆய்வு செய்ததில் அதில் ரமேஷின் கைரேகையும் வேறு சில கைரேகையும் இருந்தது. அதில் இருந்த ரத்த துளிகளை ஆய்வு செய்ததில் அது குமாருடைய ரத்த மாதிரியோடு ஒத்து போனது.

ரமேஷ் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால் திட்டமிட்டு போலீசை குழப்பவே இதை செய்திருக்கிறார்கள் என்று போலீஸ் சொன்னார்கள். ரமேஷ் என்ன காரணத்திற்காக பீச்சுக்கு வந்தான் என்பதும் புதிராக இருந்தது. அருகிலிருந்த மீனவர்கள் சிலரை பிடித்தும் போலீசார் விசாரித்தனர். ராம் ஸ்ரீஜாவிடம் மீண்டும் விசாரணையை தொடர்ந்தான். உங்க அண்ணனை ரமேஷ் கொன்னிருப்பாருன்னு நிச்சயம் நம்பறீங்களா ? நிச்சயமா இல்ல அதோட அவர் அப்படிபட்டவரே கிடையாது என்றாள். ஸ்ரீஜா ரமேஷுக்கு யார் கூடவாவது முன் விரோதம் இருந்ததா ? இல்ல சார் எனக்கு எதுவும் தெரியல.ரமேஷுடைய அம்மாவிடம் கேட்ட போதும் விவரங்கள் கிடைக்கவில்லை. ரமேஷுடைய ஆட்டோ ஸ்டாண்டில் விசாரித்தான்.ரமேஷ் சொந்த ஆட்டோ வாங்குறதுக்கு கூட குமார் உதவி செஞ்சான் அப்படி இருக்குறப்போ ரமேஷ் இந்த கொலையை செஞ்சிருக்க வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். ரமேஷ் ரெகுலராக பீச்சுக்கு போவாரா ? இல்லை சார் என பதில் வந்தது .

ராம் ஒரு வேலை குமாருக்கு தொழில் போட்டியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்தான். அப்படி எதுவும் இருக்கவில்லை. ஸ்ரீஜாவை சந்தித்து பேசினான். ஒன்னும் பிடிபடலம்மா வேற ஏதாவது போன் நம்பர் உங்க அண்ணன்கிட்டே இருக்குதா ? இல்ல சார். அவர் லாஸ்ட்டா எப்போ உங்ககிட்டே பேசினார் . 9 மணி இருக்கும். சவாரி ஒன்னு இருக்கு ஈஞ்சம்பாக்கம் பக்கத்துலே அப்படின்னு சொன்னாரு.
ராம் மறுபடியும் சம்பவ இடத்துக்கு போனான் .அந்த இடத்தில்தான் கடைசியாக பார்க் செய்திருந்தான். அவனுடைய கடைசி சவாரி ஒரு பெண்ணினுடையதாக இருந்தது. அந்த பெண்ணிடம் பேசினான். அவள் பெயர் ஸ்வேதா. எப்பவும் போலதான் இருந்தார்.ஏதாவது unusual ஆஹ் இருந்ததா ?இல்ல சார் . அப்ப ஒரு ஆட்டோ காரர் இவர் கிட்டே வந்து பேசிட்டு போனார். ஏதாவது பிரச்னை சம்பந்தமாவா? இல்ல சார் சாதாரணமாதான் பேசினார். இவரை பாருங்க என ரமேஷின் போட்டோவை காட்டினான். அம்மா சார் இவரேதான் கொஞ்ச நேரம் பேசிட்டு போனாரு.என்ன பேசுனாங்கனு தெரியல சார். பார்க்க அவர் friend மாதிரி தான் இருந்தது. சரிங்க மேடம் ஏதாவது தகவல் தேவைப்பட்டா கூப்பிடுறேன் . ரமேஷ் பேசுனப்போ எத்தனை மணி இருக்கும் 11 மணி இருக்கும் சார். வண்டியிலே யார் யார் travel பண்ணீங்க நானும் என் சின்ன பொன்னும். சின்ன பொண்ணுனா என்ன வயசு இருக்கும். 6 வயசு .

ரமேஷ்தான் குற்றவாளியென்றால் என்ன காரணமாக இருக்க முடியும் ? இதை பற்றியே ராம் யோசித்து கொண்டிருந்தான். ஒருவேளை ஸ்ரீஜாவை விரும்பியிருக்கலாமோ என்ற எண்ணத்தில் ரமேஷ் வீட்டுக்கு சென்று விசாரித்தான், அப்படியெல்லாம் எதுவமில்லை தம்பி அவன் அவளை தங்கச்சியைத்தான் பார்த்தான், தவிர ரமேஷுக்கு தேவி என்கிற பெண்ணோடு பழக்கம் உண்டு என்று என்று சொன்னார். தேவியை தொடர்பு கொண்டு பேசியபோது சாத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார். அன்னிக்கி யாரோ சவாரி பீச்கிட்டே வரசொன்னாங்கனு சொன்னார். அவரு ஒரு ரெகுலர் கஸ்டமர் னு சொன்னார் அவ்ளோதான். ரமேஷ் இறந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால வெளியே வர முடியல.வேற ஏதாவது மெசேஜ் அனுப்புனரா? goodnight மட்டும்தான் அனுப்புனாரு, அதுதான் அவர் அனுப்புன கடைசி மெசேஜ். மெசேஜ் வாங்கி பார்த்தான் god நைட் என்று இருந்தது. ரமேஷ் என்ன படிச்சிருக்காரு ? அவரு டிகிரி பாதியிலேயே நிறுத்திட்டாரு சார். படிக்கிற காலத்துலே ரமேஷ் எப்படி? ரமேஷ் படிக்கிற காலத்துலே ரொம்ப முரட்டு பையனா இருந்தாரு சார்.டெய்லி ஒரு பிரச்னையோடதான் வீட்டுக்கு வருவாரு. அதான் படிப்பை பாதியிலே விட்டுட்டு ஆட்டோ ஓட்டுற வேலைக்கு வந்துட்டாரு. என்னோட லவ் ஆனதுக்கு அப்புறம்தான் திருந்தி வாழ ஆரம்பிச்சாரு.ஆனா அவருக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்தது உண்மை பழைய ஆளுங்க அவரை எப்ப வேணா கொல்ல முயற்சி பண்ணலாம்னு ஒரு இரும்பு ராடை வண்டியிலேயே வச்சிருந்தார். எந்த காலேஜ்ல படிச்சார். குமரன் காலேஜ் ல? எந்த வருஷம்? வருஷத்தை சொன்னாள். அவரோட professor பரமசிவம்னு ஒருத்தர் அவர்தான் அவருக்கு நெறய அட்வைஸ் பண்ணுவாரு. அவரோட காண்டாக்ட் நம்பர் தரேன் விசாரிச்சு பாருங்க என்றாள். தேங்க்ஸ் தேவி என்றான் ராம்.

பரமசிவம் நான் அவன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் . சண்டைக்கெல்லாம் போகாதேன்னு அவன் கேக்கலை படிக்கிறப்போவே எல்லா பிரச்னையும் பண்னினான். போலீஸ் கேஸ் ஆகாம நான்தான் தடுத்தேன். அவரால பாதிக்கப்பட்டவங்க specific ஆஹ் யாரவது இருக்காங்களா ?இல்ல தம்பி எனக்கு ஞாபகம் இல்லை. ஸ்ரீஜாவின் கல்யாண ஏற்பாடுகளை தேவி முன்னின்று நடத்திவந்தாள். professor தெரிந்தே எதையோ மறைக்கிறாரா இல்லை வயதானதால் எல்லாம் மறந்து விட்டதா என ராமுக்கு புரியவில்லை. அப்போதுதான் ஸ்வேதாவிடம் இருந்து கால் வந்தது .என் சின்ன பொண்ணு அன்னிக்கி வீடியோ எடுத்துருக்காரு அன்னிக்கி அந்த ஆட்டோவில ரெண்டு பேரு வந்திருக்காங்க சார்.அந்த விடியோவை உடனே வாட்ஸாப்ப் பண்ணி விடுங்க. விடியோவை பார்த்ததும் ராம் அதிர்ந்து போனான்.

professor பரமசிவம் அந்த விடியோவை பார்த்ததும் உறைந்து போனார். இவன் எப்படி இவன் எப்படி ரமேஷ் கூட ஒண்ணா இருக்க முடியும் இவன்தான் எல்லா பிரச்னைக்கும் காரணம். இவனாலதான் ரமேஷ் படிப்பை கைவிட்டான். professor நல்லா பார்த்து சொல்லுங்க இவன்தான் நிச்சயமா கொலை பண்ணையிருப்பான். இவன் ஏற்கனவே ஒரு கேஸ் ல ஆறுமாசம் உள்ளே இருந்துட்டு வந்தவன். ராம் ஸ்ரீஜாவுக்கு போன் போட்டு உடனே புறப்பட்டு ஆபிசுக்கு வாங்க என்றான்.
ராம் ஒன்றும் சொல்லாமல் அந்த விடியோவை காண்பித்தான் . அதில் ப்ரேமும் ரமேஷோடு இருந்தான். professor பரமசிவம் ஸ்ரீஜாவிடம் நடந்ததை சொன்னார்.எனக்கு தெரிஞ்சு பிரேம் கொலைகாரனா இருக்க வாய்ப்பில்லை ஏன்னா அவர் இப்போ திருந்திட்டாரு .அந்த விடியோவை நல்லா பாருங்க குமாரும் ரமேஷும் பேசிக்கொண்டிருக்கும் போது பிரேம் ரமேஷுடைய ஆட்டோவில் இருந்து அந்த ராடை எடுத்து அவனுடைய ஆட்டோவில் சொருகிக்கொள்வது தெளிவாக இருந்தது.

பிரேமை பிடித்து விசாரித்ததில் தான் தான் ரெண்டு பேரையும் கொன்றதாக ஒப்புக்கொண்டான். ரமேஷ் இந்த கல்யாணத்தை நிறுத்தும்படி தொடர்ந்து குமார் கிட்டே சொல்லி வந்தான். அன்னிக்கி இது சம்மந்தமா குமார் கிட்ட பேச ரமேஷ் அழைச்சுக்கிட்டு போனான். அப்போ பேசி பேசி என் கல்யாணத்தை நிறுத்த குமார் முடிவு பண்ணிட்டான்.எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தில் ரமேஷுக்கு போன் பண்ணி பீச் வர சொல்லி அவனை ரெண்டு நாள் வெச்சிருந்து முடிச்சேன்,குமாரையும் நான்தான் முடிச்சேன் என்றான். போலீசை குழப்ப ரமேஷை ரெண்டு நாள் கழிச்சுத்தான் கடலிலே தள்ளி கொன்னேன். அந்த சின்ன பொண்ணு எடுத்த விடியோவாலே மாட்டிகிட்டேன் என்றான். ஸ்ரீஜா நம்ப முடியாமல் அழுது கொண்டிருந்தாள்.professor இரண்டு பேருமே என் ஸ்டூடெண்ட்ஸ்தான் ஆனா கடைசியில் இப்படி ஆயிடுச்சே என்றார் வேதனையோடு.