iravukku aayiram kaigal - 43 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 43

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 43

ப்ரவீனா ரூமை பார்க்கலாமா ? பார்க்கலாம் சார். மாடியிலேதான் அவ ரூம் இருக்கு. என்ன நடந்துச்சு ? நீங்க அப்போ எங்க இருந்தீங்க ? நைட் மணி 11 இருக்கும் திடீர்னு யாரோ வந்து என் ரூம் கதவை தட்டுனா மாதிரி இருந்தது. பார்த்தா ப்ரவீனா என்னாச்சுன்னு கேட்டேன் ? வயிறு ரொம்ப வலிக்குது, வொமிட் பண்ணிட்டேன்,மயக்கமா வருதுன்னு சொன்னா.. உடனே ஹாஸ்பிடல் போலாம்னு நானும் அப்பாவும் கிளம்பினோம் . கார்ல போகுறப்பையே அவ மயக்கமாயிட்டா. வேற ஏதாவது அதுக்கு முன்னாடி சொன்னார்களா . என்ன சாப்பிட்டேன்னு கேட்டதுக்கு கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன்னு சொன்னா . அதான் அவ கடைசியா சொன்னது. ஹாஸ்பிடல் ல எவ்வளவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல . கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க ப்ரவீணாவுக்கு boyfriend யாரும் இருந்தாங்க ? அப்படியெல்லாம் யாரும் இல்லை சார்.எதுக்கும் நான் அவ கூட படிக்கிற என் cousin காவ்யா கிட்ட கேட்டு சொல்றேன். நீங்க நல்லா விசாரிச்சுட்டு சொல்லுங்க . நான் ப்ரவீணாவோட போனை பார்க்கலாமா ? ப்ரவீனா போனில் நண்பர்களுடன் எடுத்த selfie தான் அதிகம் இருந்தது.

ப்ரவீனாவின் friends கூட பேசணும் நாளைக்கு என் கூட காலேஜ் வரைக்கும் வர முடியுமா . ஜீவன் சார் அங்கேதான் இருக்கார் அவரே உங்களை கைடு பண்ணுவார். நான் இப்போதான் லீவு எடுத்தேன் அதனாலே மறுபடியும் லீவு எடுக்கறது கஷ்டம் சார் தப்பா நினைக்காதீங்க. சரி ரம்யா நான் ஜீவனை காண்டாக்ட் பண்றேன். வேற கூல் ட்ரிங்க்ஸ் வாங்குன பில் ஏதாவது இருந்ததா ? அப்படியெதுவும் கிடைக்கலே .சரி நீங்க தேடி பாருங்க ரம்யா அது கெடைச்சுதுன்னா முக்கியமான எவிடென்ஸ் ஆஹ் இருக்கும். வேற ப்ரவீணாவுக்கு டைரி எழுதுற மாதிரி பழக்கம் உண்டா ? இல்ல சார் அவ இன்ஸ்டாக்ராம்லதான் அதிக நேரம் ஸ்பென்ட் பண்ணுவா. உங்களால அவங்க அக்கௌன்ட் அக்சஸ் பண்ண முடியுமா ? காவ்யாவை கேட்டால் தெரியும் சார். அவதான் ப்ரவீணாவோட திக்கெஸ்ட் friend . சரி அவங்க என்ன வேணும்னு சொன்னீங்க .அவங்க எங்களுக்கு cousin முறை வேணும் சார். அவங்க வீடு எங்க இருக்கு, அடுத்த தெருல. அவங்க அட்ரஸ் வாட்சாப் பண்றீங்களா ? கண்டிப்பா சார். நானும் வேணா வரவா? வேண்டாம் ரம்யா நானே பார்த்துக்கறேன். ரொம்ப தேங்க்ஸ் ராம் சார் இந்த கேஸ் எடுத்துகிட்டத்துக்கு.

ராம் ப்ரவீனாவின் வகுப்பு தோழிகளிடம் விசாரித்தான். ப்ரொபெஸர் ஜீவன் காவ்யாவை ராமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். காவ்யாவும் அதே வகுப்புலதான் படிக்கிறா . காவ்யா எனக்கு ப்ரவீனாவோட இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் பார்க்கணுமே முடியுமா? அவ கொஞ்ச நாளா அதை use பண்றதில்லை. deactivate பண்ணி வெச்சிருந்தா . எதுக்கும் நான் ட்ரை பண்ணி பாக்குறேன், நாளைக்கு சண்டே எங்க வீட்டுக்கு வரீங்கலா ப்ரவீனா லேப்டாப் கூட என்கிட்டத்தான் இருக்கு . அங்கிள் அதை என்கிட்டே குடுத்துட்டாரு. நாளைக்கு எத்தனை மணிக்கு ஈவினிங் 5 மணிக்கு.

ப்ரவீனா அக்கௌன்ட் ஓபன் ஆயிடுச்சு . சில messages delete பண்ணியிருக்கா.அவங்க லேப்டாப் ல ஏதும் தகவல் இருந்ததா . காலேஜ் நோட்ஸ் தான் இருந்தது. ரம்யாகிட்ட கேட்டதுதான் உங்ககிட்டேயும் கேக்குறேன் ப்ரவீணாவுக்கு லவ் ப்ரோபோசல்ஸ் வந்திருக்கா? ஓ நெறைய வந்திருக்கு ஆனா அதையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டா . அவங்க யாரையும் விரும்புனாங்களா இல்லை அது வந்து அவங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவரு அதனாலே யாருக்கும் அவ்வளவா தெரியாது . கிரண்னு ஒரு பையனை ஆறுமாசம் முன்னாடி லவ் பண்ணினா. அப்புறம் என்னாச்சு ? என்னவோ breakup பண்ணிகிட்டாங்க. அதுக்கு என்ன காரணம்னு சொல்லலியா அந்த பையனும் எங்க வகுப்புதான். நானும் கிரண்கிட்ட கேட்டேன், ப்ரவீனா ரொம்ப போஸ்சஸிவ் ஆஹ் இருக்கானு மட்டும் சொன்னான்.கிரண் உங்க வீட்டுக்கு வருவானா, அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவான் . அவன் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா ? அவனை மீட் பண்ணனுமா வர சொல்லவா? இப்போ வேண்டாம் நானே பேசிக்குறேன். உங்களுக்கு நெறைய friends இருக்கிறதா ரம்யா சொன்னாங்களே . நமக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாது சார் ஒன்லி friendship தான் என்றாள் . ப்ரவீனா இறந்தப்போ நீங்க எங்க இருந்தீங்க . நானும் உடனே ஹாஸ்பிடல் போயிருந்தேன்.. ஆனா அவ கூட கடைசியா ஒரு தடவ கூட பேச முடியல.எந்த ஹாஸ்பிடல் அது ? ஜோதி ஹாஸ்பிடல். உங்க அப்பா? அம்மா ? அப்பா வெளிநாட்டுலே இருக்காரு அம்மா டீச்சர் .

கிரனிடம் பேசும்போது நாங்க லவ் பண்ணது உண்மைதான் சார் ஆனா அது சில பேருக்கு பிடிக்கல . அவ கிட்ட என்னை பத்தி தப்பா சொல்லி எங்களை பிரிச்சுட்டாங்க . ப்ரவீனா இறந்தப்போ நீங்க எங்க இருந்தீங்க . friends கூட movie பார்த்துட்டு இருந்தேன். யார் உங்களுக்கு ப்ரவீனா இறந்த நியூஸ் சொன்னது. காவ்யாதான் . அவதான் எங்க friends circle முழுக்க வாட்ஸாப்ப் பண்ணியிருந்தாள்.ஒரு முக்கியமான விஷயம் சார் நாங்க breakup பண்ணிட்ட பிறகு ப்ரவீனா ஜாக்கிங்கிற பையனோட friendship ல இருந்தா. அவனையும் விசாரிங்க .

ஒரு வழியாக கூல் ட்ரிங்க்ஸ் கடைக்காரர் கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கி கடையை திறந்து விட்டார். ராம் அவரிடம் பில் குறித்து விசாரித்தான். போலீஸ் எல்லாத்தையும் அள்ளிட்டு போய்ட்டாங்க சார் என்று பதில் வந்தது.சிசிடிவி footage பார்க்க முடியுமா என்று கேட்டான்.ரெண்டு நாள் கழிச்சு வாங்க சார், எடுத்து வைக்கிறேன் என்றார். ஜாக்கிடம் பேசிய பொது ஆமா சார் நான் ப்ரொபோஸ் பண்ணியிருந்தேன் அவ ரிஜெக்ட் பண்ணிட்டா .friends ஆகவே இருப்போம்னு சொல்லிட்டா . நீங்க அவங்கள லவ் பண்ண சொல்லி போர்ஸ் பண்ணினீங்களா ?சே சே அவ நல்ல போல்ட் ஆன பொண்ணு சார். காவ்யா மாதிரி இலை என்றான். ஏன் அப்படி சொல்லறீங்க . காவ்யா என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணினா நான் அவளை ரிஜெக்ட் பண்ணிட்டேன். அன்னைக்கி அழுதுகிட்டே போனவதான் என்னை பத்தி இல்லாததெல்லாம் ப்ரவீணாகிட்ட சொல்லி இருக்கா.. ஓ.. சரிங்க சார் சீக்கிரம் அவ சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடியுங்கள் சார் என்றான்.

ஜோதி ஹாஸ்பிடல் போயிருந்தான் . அங்கிருந்த reception பெண்ணிடம் பேசி சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகளை வாங்கிக்கொண்டான்.காவ்யா மறுபடி போன் பண்ணியிருந்தாள் . ஏதாவது clue கிடைத்ததா என்று?இல்ல காவ்யா நான் ட்ரை பண்ணி பாக்குறேன் . காவ்யா ப்ரவீணாவோட இன்ஸ்டாகிராம்ல blocked லிஸ்ட் இருக்கும்ல அதை பாக்க முடியுமா . இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா ? வாங்க சார் . காவ்யாவின் அறை நன்கு பெரியதாகவும் காற்றோட்டமுள்ளதாகவும் இருந்தது. laptopல் இருந்து blocked லிஸ்டில் இருந்த ஒவ்வொருவர் பெயரையும் காவ்யா சொல்ல சொல்ல ராம் குறிப்பெடுத்து கொண்டான். அதில் கிரண் பெயரும் இருந்தது. ஆச்சர்யமாக அதில் professor ஜீவன் பெயரும் இருந்தது.காவ்யாவிடம் கேட்டபோது எனக்கும் இப்போதான் தெரியும் எதனால பிளாக் பண்ணியிருக்கான்னு தெரியலியே ? உடனே ஜீவனுக்கு போன் பண்ணி என்ன சார் உங்க பேரும் blocked லிஸ்ட் ல இருக்கு உண்மையை சொல்லுங்க என்ன செஞ்சீங்க. சாத்தியமா எனக்கு எதுவும் தெரியாது சார். நான் ஒரு தடவை அவ கிட்ட தப்பா பேசிட்டேன் அதுக்கப்புறம் அவ என்னை பிளாக் பண்ணிட்டா .மறுபடி நான் யார் கூடவும் பேசறதில்ல சார்.

காவ்யா வீட்டை நீட்டாக வைத்திருந்தாள். கடைக்காரர் சிசிடிவி footage ரெடி ஆக இருப்பதாக சொன்னார். சரி காவ்யா கடையில சிசிடிவி footage தரேன்னு சொல்லிட்டாங்க நான் போய் பார்க்குறேன். அந்த சிசிடிவி காட்சியிலும் உருப்படியாய் எதுவுமில்லை. பில் copy இருக்கும் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆக இருக்கிறதென்று சொன்னார். ராமுக்கு மிக பெரிய ஏமாற்றமாக இருந்தது.ஜோதி ஹாஸ்பிடல் சிசிடிவி footage ஓட விட்டு பார்த்தான். முதலில் ரம்யா , அவள் அப்பா அழுதுகொண்டே வருவது தெரிந்தது . இன்னும் சற்று நேரம் கழித்து காவ்யாவும் அழுதுகொண்டே வருவதும் தெரிந்தது. அவள் கூட ஒரு பையன் இருந்தான். காவ்யாவிடம் கேட்டபோது அது என் friend விஷால்தான் என்றாள்.அன்னிக்கி லேட் நைட் ஆனதால் அவனை கூட்டிகிட்டு போனேன் என்றாள்.அவனை நான் பாக்கணுமே என்றான்.நாளைக்கு அவனை வர சொல்லவா உங்க ஆபீஸ்க்கு . சரி வர சொல்லுங்க காவ்யா 10 மணிக்கு,

விஷால் நல்ல ஸ்டைல் ஆக இருந்தான். விலை உயர்ந்த பைக் வைத்திருந்தான்.நீங்க எங்க ஒர்க் பண்றீங்க என ராம் விசாரித்தான். கோடம்பாக்கத்துல உள்ள பிரைவேட் கம்பெனில .ம்ம் எவ்ளோ நாளா காவ்யாவை உங்களுக்கு தெரியும் ஒரு 3 வருஷமா? உங்க வீடு எங்க இருக்கு கோடம்பாக்கத்துலதான். ப்ரவீனாவை உங்களுக்கு தெரியுமா ஓ நல்லாவே தெரியும்.நீங்க ப்ரவீனா இருந்தப்போ எங்க இருந்தீங்க காவ்யா வீட்டுல. சரி உங்க போன் நம்பர் குடுத்துட்டு போங்க . வேற ஏதாவது detail தேவைப்பட்ட கூப்பிடுறேன் என்றான்.

கடைக்காரர் ஆபீஸ் உள்ளேயிருந்து வந்தார்.இந்த பையனும் நீங்க போட்டோல காட்டுன பொண்ணும்தான் வந்து cooldrinks வாங்கிட்டு போனாங்க. எப்படி அவ்ளோ உறுதியா சொல்லறீங்க. இவனோட பைக் ரோட்டை அடைச்சு நிறுத்துனதால டிராபிக் constable என்னை சத்தம் போட்டார். நானே அவசர அவசரமா பில் போட்டு குடுத்தேன். ரொம்ப நன்றி சார்.காவ்யாதான் இந்த வேலையை செஞ்சுருக்கா என்று தீபுவிடம் சொன்னான். அவ இதை ஏன் செய்யணும் . பொறாமை.. ஏற்கனவே ஜாக்கும் ,கிரணும் இவளை ரிஜெக்ட் பண்ணி இருக்காங்க .அந்த கோவத்தில் பண்ணியிருக்கலாம். கிரணுமா ? ஆமாம் கிரன்கிட்டேயும் ப்ரொபோஸ் பண்ணியிருக்கா காவ்யா .காவ்யாகிட்டேயே கேட்டுடுவோம் .

காவ்யா உண்மையை சொல்லுங்க நீங்கதானே அந்த cooldrinks பாட்டில் வாங்கி வந்தது . ஆமா நாந்தான் வாங்கினேன். ஆனா நான் ஏன் சார் அவளுக்கு விஷத்தை குடுக்கணும் அவ எனக்கு பெஸ்ட் friend மட்டுமில்ல அவ எனக்கு சிஸ்டர் மாதிரி. அன்னிக்கி வேற என்ன நடந்திச்சி என்றான். நாங்க வாங்கி பிரிட்ஜ்ல தான் வெச்சிருந்தோம் . அப்புறம் 8 மணி போலத்தான் விஷால் அதை எடுத்துக்கிட்டு ப்ரவீனா வீட்டுக்கு போனான்.அப்போ வீட்டுல யாரு இருந்தாங்க ?? எங்க அம்மா ? அம்மா அம்மா என அலறினாள்.ஏம்மா இப்படி பண்ணினே என்று கேட்டாள். என் பொண்ணுக்கு கிடைக்க இருந்த எல்லா வாய்ப்பையும் அவ தட்டி பறிச்சிகிட்டா.. என் பொண்ணு டெய்லி அழறத என்னால பாக்க முடியல. எனக்குதான் ப்ரவீனா கால் பண்ணி அங்க விஷால் இருக்கானான்னு கேட்டா இருந்தா போனை குடுக்க சொல்லி சொன்னா. என்ன விஷயம்னு கேட்டேன். வீட்டுக்கு கெஸ்ட் வராங்கன்னு கூல் drinks வேணும்னு 5 மணிக்கு சொன்னா.விஷாலுக்கு போன் பண்ணி சொன்னேன். அவனும் வாங்கிட்டு வந்து வச்சான். விஷால் கிட்டே கெஸ்ட் வந்திருக்காங்கன்னு சொன்னேன். ஆனா அன்னைக்கி கெஸ்ட் யாரும் வரலே கான்செல் ஆயிடுச்சுனு ப்ரவீணாவே என்கிட்ட சொன்னா. அப்போதான் அந்த பிளான் போட்டேன். எட்டுமணிக்கு மறுபடி போன் பண்ணப்ப நான் அதுல பூச்சி மருந்தை கலந்துட்டேன். எனக்கு என பொண்ணு சந்தோசம்தான் முக்கியம் என்றாள் காவ்யாவின் அம்மா. நான் விஷத்தை கலந்தது விஷாலுக்கும் தெரியும் என சொன்னாள்.