iravukku aayiram kaigal - 42 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 42

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 42

கிரீஷ் ராம் ஆஃபீஸிற்கு வந்திருந்தான் . என்ன சார் ஏதாவது clue கெடச்சுதா சார். நானும் அவங்க வீட்டு பக்கத்துல எல்லாம் விசாரிச்சேன் யாருமே எதுவும் அந்த பொண்ணை பத்தி குறையா சொல்லலே . அந்த பொண்ணு நல்ல பொண்ணுனுதான் சொல்றாங்க. உங்க சைடு யாராவது?. நான் எங்க வீட்டுக்கு ஒரே பையன். எங்க அப்பா போன வருஷம் இறந்துட்டார் சார். வேற யாரும் எங்க கூட இல்ல சார். எனக்கு கொஞ்சம் time கொடுங்க கிரீஷ். எப்படியும் அவனை புடிச்சிடலாம். போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் குடுத்தாங்களா . இந்தாங்க சார் அதோட copy .வினிதாவுக்கு brothers ,சிஸ்டேர்ஸ் யாராவது இருக்காங்களா .ஒரே ஒரு சிஸ்டர் அவ காலேஜ் படிக்கிறா. வினிதாதான் மூத்தவ. ரொம்ப பொறுப்பா இருந்தா. அப்பா அம்மா கிடையாது. கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது நீங்களோ இல்லை அவர்களோ லவ் பண்ணீங்களா இல்ல சார் எனக்கு அதுக்கெல்லாம் நேரம் இல்ல சார். அவளுக்கும் அப்படிதான். சரி கிரீஷ் ஏதாவது developments இருந்தா நானே உங்களுக்கு போன் பண்றேன். வினிதாவோட போன் கெடைச்சுதா ,டைரி,லெட்டர் இப்படி ஏதாவது? போன் போலீஸ் கிட்ட இருக்கு ,லெட்டர்,டைரி எல்லாம் இல்லை சார். அந்த பொண்ணு அதான் அவங்க சிஸ்டர் அவங்களை நான் மீட் பண்ண முடியுமா? ஓகே சார். அவங்க பேரு கீதா. நம்பர் தரேன் நோட் பண்ணிக்குங்க. அவங்க இப்போ என் வீட்டுல தான் இருக்காங்க.நீங்க எப்போ வேணா வந்து பாக்கலாம் .சரி கிரீஷ்.

போலீசிடம் விசாரித்த பொது வினிதா கொலை செய்யப்பட்ட நேரம் நைட் 10 மணி .வீட்டில் யாருமில்லை, கொல்லை பக்கம் கதவு வழியாகத்தான் யாரோ வந்திருக்கிறார்கள். முதுகில்தான் கத்தி சொருகப்பட்டிருந்தது, அந்த நேரத்தில் வினிதா சிஸ்டர் கீதா friend வீட்டுக்கு போயிருந்ததாகவும் தகவல் சொன்னார்கள். கீதாவை சந்தித்தான் ராம். நீங்க எத்தனை மணிக்கு போனீங்க சரியாய் 11 மணி இருக்கும். அப்போ டிவி ரொம்ப சத்தமா ஓடிக்கிட்டு இருந்தது, அக்கா எந்த எடத்துல இறந்து கிடந்தாங்க. kitchen ல. kitchen கத்தியதான் கொல்லவும் பயன்படுத்தி இருக்காங்க.உங்களுக்கு லவ் அப்டி ஏதாவது ?அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். அக்காவும் நானும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் படிச்சோம். எங்க மாமாதான் சப்போர்ட் பண்ணாரு,இப்போ அவரு ? அவரு இறந்து ரெண்டு வருஷம் ஆச்சு. அவருக்கு பிள்ளைகள்? இல்லை அவருக்கு குழந்தைகள் இல்லை. சரி கீதா ஏதாவது விவரம் தேவைப்பட்டா நானே கூப்பிடறேன். சரி சார். உங்க வீட்டுல வேலைகாரங்க யாரவது வருவார்களா? இல்லை சார். உங்க வீடு சொந்த வீடுதானே . ஆமா சார்.

கிரீஷ் வினிதாவுக்கு வேற யாரும் friends இருந்தாங்களா ? குறிப்பா வேலை பாக்குற இடத்துல. ருத்ரான்னு ஒரு பொண்ணு இருந்தா சார். எங்க கல்யாணத்துக்கு வந்திருந்தா . அவ நல்ல டைப். அவங்க போன் நம்பர் கிடைக்குமா .நோட் பண்ணிக்குங்க . தேங்க்ஸ் கிரீஷ். கல்யாண வீடியோ வந்துச்சா ? அதை நான் பாக்கலாமா. நானும் அதை ஸ்டுடியோல கேட்டிருக்கேன் வந்தவுடனே கால் பண்றேன். ராமுக்கு வினிதாவுக்கு எதிரிகள் எங்கிருந்து வந்திருப்பார்கள் என்று கணிக்க முடியவில்லை. ஒரு வேலை யாரோ பொறாமையால் செய்த வேலையாக இருக்குமோ என நினைத்தான். வினிதாவோடு அப்படி என்ன பகை இருக்க முடியும். ருத்ராவிடம் பேசிய போது அவ எல்லோருக்கும் ஹெல்ப் பண்ற மனசுள்ளவ சார். அவளை போய் இப்படி பண்ணிட்டாங்களே என்றாள்.சரி ஆபீஸ்ல ஏதாவது தொந்தரவு இருந்ததா ? அப்படியெல்லாம் இல்லை சார் அவ வேலையிலே ரொம்ப ஸ்மார்ட்.

அக்காவோட போன் ,நகை எல்லாம் போலீஸ் திரும்ப கொடுத்துட்டாங்க. சார் நீங்க அந்த போனை பாக்கணும்னு சொன்னீங்களே. சரி வரேன் கீதா. போன் லேட்டஸ்ட் மாடல் போன் ஆக இருந்தது.அதில் கவர் புகைப்படம் கிரீஷுடன் சேர்ந்து எடுத்த கல்யாண போட்டோவும் இருந்தது. போனில் கால் ஹிஸ்டரி செக் பண்ணிய போது கடைசி கால் கீதாவுடையதாக இருந்தது .அன்னைக்கு நாந்தான் சார் போன் பண்ணினேன். ஆனா அக்கா போனை எடுக்கலை, என்கிட்டே இன்னொரு சாவி இருந்ததாலே நானே திறந்தேன். உங்க மாமாவோட wife இப்போ எங்க இருக்காங்க . சென்னைலதான் இருக்காங்க. அவங்க அடிக்கடி வந்து உங்களை பார்ப்பார்களா . பார்ப்பாங்க அக்கா மாசா மாசம் அவங்களுக்கு பணம் அனுப்பிகிட்டு இருந்தா. ஆல் right அவங்களையும் பாக்கணுமே சரி சார் நாளைக்கு வர சொல்றேன்.

உங்க பேரு என்னமா சரோஜா . உங்க வீட்டுகாரர் ? அவரு இறந்துட்டாரு . உங்களுக்கு சொந்தமா கடை இருக்குனு கீதா சொன்னாங்க. ஆமா சின்ன பூக்கடை ஒன்னு இருக்கு. அதுல வர வருமானத்தை நம்பித்தான் நான் இருக்கேன். வினிதா இறந்த அன்னிக்கி நீங்க எங்க இருந்தீங்க. என் வீட்டுலதான். என்ன பண்ணீட்டிருந்தீங்க டிவி பார்த்துட்டு இருந்தேன். எப்போ உங்களுக்கு தகவல் தெரிஞ்சது.12 மணிக்கு கீதாதான் போன் பண்ணா . ம்ம் சொல்லுங்க நான் உடனே புறப்பட்டு வந்துட்டேன். சரி வினிதா கல்யாணத்துக்கு ஏன் வரல. அது வந்து கொஞ்சம் வீடு பிரச்னை. என்ன பிரச்னை. இருக்குற வீட்டை காலி பண்ண சொல்லீட்டாங்க. நான் இப்போ எங்க போவேன் தம்பி அந்த சமயத்துல எனக்கு எங்கேயும் போக முடியலே. உங்களுக்கும் வினிதாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை எதுவும் இருந்ததா அப்படி எதுவும் இல்லை தம்பி.

அக்கா போட்டிருந்த நகையே இல்லை இது என போலீசிடம் கீதா புகார் அளித்திருந்தாள். அக்கா போட்டிருந்த நகையை காணோம். அக்காவும் நானும்தான் கடையில் போய் வாங்கினோம் இப்போ அதை யாரோ மாத்தியிருக்காங்க. அதையும் அந்த கொலை பண்ணவங்கதான் பண்ணி இருக்கணும். கிரீஷ் நீங்க எங்க இருந்தீங்க அப்போ ? என்றான் ராம். நான் ஆபீஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ணிட்டு இருந்தேன். வேற யார்கிட்டயாச்சும் இந்த பிரச்னையை ஷேர் பண்ணீங்களா ?இல்லை சார் . எதுக்கும் வினிதாவோட Facebook பக்கத்தை பாப்போம் . ஏதாவது தகவல் கிடைக்கும். கீதாவும் வினிதாவும் ஒரே அக்கௌன்ட் பயன்படுத்தியதால் ஓபன் செய்ய முடிந்தது. அதில் இருந்த கல்யாண போட்டோக்களில் ஒரே ஒருத்தர் எல்லா போட்டோக்களையும் dislike பண்ணியிருந்தார். அவர் ப்ரொபைல் செக் பண்ணி பார்த்த போது விஜயகுமார் என்று இருந்தது , மேற்கொண்டு ஆராய்ந்த போது அவர் சரோஜாவின் கணவரின் friend என தெரிய வந்தது. சரோஜாவுக்கும் வினிதாவுக்கும் mutual friend ஆக இருந்தவர் என தெரிந்தது, கிரீஷ் உடனே இவரை காண்டாக்ட் பண்ணுங்க. நீங்க இதை முன்னமே பாக்கலையா ? பார்த்தேன் ஆனா பெருசா எடுத்துக்கலை என்றான் .

விஜயகுமார் ஏன் dislike போட்டீங்க. எனக்கு புடிக்கல அதான் போட்டேன். அதான் கேக்குறோம் ஏன் உங்களுக்கு மட்டும் கல்யாணத்துல விருப்பம் இல்லயா .எனக்கு என்னவோ பிடிக்கலை dislike போட்டேன். வினிதா செத்த அன்னிக்கி எங்க இருந்தீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க ..வீட்லதான் இருந்தேன் யார் வீட்டுல சரோஜா வீட்டுல . வினிதா எத்தனை மணிக்கு செத்தாங்கன்னு தெரியுமா 10 மணிக்கு. 10 மணிக்கு செத்தாங்கன்னு நாங்க யாருக்கும் விவரம் சொல்லலியே உங்களுக்கு எப்படி துல்லியமா தெரிஞ்சது ?வினிதாவோட கால் ஹிஸ்டரி ல உங்க நம்பர் தான் அதிகமா இருந்தது . எதுக்காக வினிதாவை கொன்னீங்க சொல்லுங்க ?நானா கொலை பண்ணலை சரோஜா சொல்லித்தான் பண்ணினேன்.வினிதாவுக்கு கல்யாணம் நடந்தா சொத்தெல்லாம் அந்த மாப்பிள்ளைக்கு அப்படின்னு அவங்கப்பா உயில் எழுதிட்டு போயிட்டார். அந்த வீட்டை வித்து தனக்கு ஒரு பாகம் கிடைக்கும்னு சரோஜா நெனைச்சா . அது நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் அவளை மெரட்டுனேன். கிரீஷை கொன்னுடுவேன்னு சொன்னேன், அதுக்கு பயந்துகிட்டு டிவோர்ஸ் பண்ண சம்மதிச்சா. ஆனா கிரீஷ் விடுற மாதிரி தெரியல . சரோஜாவுக்கு போன் பண்ணி நாளைக்கு மறுபடியும் கிரீஷ் வந்து கூப்பிட்டா போக போறேன்னு சொன்னா. அந்த நேரத்துல எங்களுக்கு வேற வழி தெரியல . அப்போதான் அவளை தீர்த்து கட்ட முடிவெடுத்தோம். சரோஜாதான் கொல்லை கதவு திறந்து இருக்கும்னு சொன்னா. நானும் போய் பேசி பார்த்தேன். கிரீஷ பிரிஞ்சு என்னால வாழ முடியாதுன்னு சொன்னா . கிச்சேன்ல இருந்த கத்தி எடுத்து குத்திட்டேன். சொத்துக்காக அநியாயமா ரெண்டு பேரையும் பிரிச்சிடீங்களே என்றான் ராம்.

காலாவதியான கூல் ட்ரிங்க்ஸ் குடித்து கல்லூரி மாணவி பலி என்ற செய்தியை ராம் வாசித்துக்கொண்டிருந்தான், ப்ரவீனா என்ற மாணவி குடித்த கூல் ட்ரிங்க்ஸ் காலாவதியானது என தெரியாமல் வாங்கி குடித்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மரணம். ஏன் தீபு இது உண்மையாக இருக்குமா?இருக்கும் சார் அந்த கடைக்கு சீல் வெச்சிருக்காங்களே . பாவம் சின்ன பொண்ணு இப்போதான் காலேஜ் first இயர் சேர்ந்திருக்கா.கூல் ட்ரிங்க்ஸ்ல பல்லி கில்லி விழுந்திருக்குமோ ? அது எப்படி சார் நமக்கு தெரியும் . ம்ம் அந்த கூல் ட்ரிங்க்ஸ் கம்பெனிகாரன் ஒத்துக்கமாட்டான்.இந்த கடைக்காரன் சும்மா விடமாட்டான். அநியாயமா ஒரு உயிர் போயிடுச்சே, இந்த கேஸ் நம்ம கிட்டே வந்தா எடுப்பீங்களா சார். நிச்சயமா அந்த பொண்ணு suicide பண்ணிக்க கூட செய்திருக்கலாம் இல்லியா? இல்லேனா யாரவது பாய்சன் பண்ணி இருக்கலாம். ம்ம் அப்போ ஒரு முடிவுக்கு வந்துடீங்க.

ரெண்டு நாட்கள் கழித்து ரம்யா என்ற பெண் ராமை பார்க்க வந்திருந்தாள் . கூடவே ஜீவன் என்பவரும் வந்திருந்தார். அவர் தன்னை ப்ரவீனாவின் ப்ரொபஸர் என சொன்னார். ரம்யாவின் தங்கைதான் ப்ரவீனா.எங்களுக்கு அவள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது நீங்கதான் விசாரிக்கணும் என்றனர். போலீஸ் இந்த கேஸ் கிளோஸ் பண்ணிட்டாங்க நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் என்றார் ஜீவன். ரம்யா இது ரொம்ப சென்சிடிவ் ஆனா கேஸ் போலீஸ் கிட்டயே handle பண்ண சொல்லலாமே ? இல்ல சார் அவங்க ஏதோ wrong direction ல முடிவு எடுத்திருக்காங்க.போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்ல என்ன சொல்லியிருக்காங்க. இந்தாங்க சார் அந்த ரிப்போர்ட். ஏதோ விஷம் கலந்திருக்கறதா சொல்லி இருக்காங்க.சரி ரம்யா ரெண்டு நாள் டைம் குடுங்க நான் யோசிச்சிட்டு சொல்றேன். உங்க காண்டாக்ட் நம்பர் குடுத்துட்டு போங்க என்றான் ராம். ராம் ப்ரவீனாவின் அக்கம் பக்கத்து வீடுகளிலும் விசாரித்தான். ப்ரவீனா நல்ல தைரியமான பொண்ணு என்றும் அவள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றும் சொன்னார்கள்.

ராம் ரம்யாவை தொடர்பு கொண்டான். ரம்யா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தாள்.நான் இந்த கேஸ் எடுத்துகிறேன் ஆனா என்கிட்டே எதையும் மறைக்க கூடாது என்றான். சார் என் தங்கச்சி நல்லவ அவ சாவுக்கு காரணமானவர்களை சும்மா விடக்கூடாது என்றாள். ஈவினிங் நானே உங்க வீட்டுக்கு வரேன்.. வாங்க சார் .. ரம்யாவின் அப்பா சோகமே உருவாக உட்கார்ந்திருந்தார்.ராம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். வாங்க சார் என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டார். ரம்யா coffee குடுத்தாள்.