iravukku aayiram kaigal - 41 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 41

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 41

மண்டபம் மாறி சுட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தில் பக்கத்து கல்யாண மாப்பிளை அட்ரஸ் வாங்கி விசாரித்தனர். அந்த ஆளுடைய போட்டோவை காண்பித்து மேலே உள்ள மண்டபத்துக்கு வந்தாரா என கேட்டார்கள். அங்கு எடுக்கப்பட்ட விடீயோவையும் சோதித்தார்கள் . அதிலும் இல்லை. இப்போ என்ன பண்றது ராம் என்றான். நீ ரேவதியை பாரு நான் இந்த investigation கவனிச்சிக்குறேன் என்றான். அடுத்த கட்டமாக ரேவதியின் தோழிகள் சில பேரை விசாரித்தான். அவர்கள் விக்ரம் பேரைத்தான் சொன்னார்கள். விக்ரம் பல வழிகளில் இந்த கல்யாணத்தை முடக்க முயற்சித்ததாக சொன்னார்கள்.ரவி உனக்கு love ப்ரோபோசல்ஸ் வந்து அதை ரிஜெக்ட் பண்ணினியா என்றான் ராம். ஆமாம் ஒன்னு ரெண்டு ப்ரோபோசல் வந்தது அதை அப்படியே விட்டாச்சு

ம்ம் அவங்க கல்யாணத்துக்கு வந்தங்களா . ஸ்வேதா வந்திருந்தா ஆனா கீதா வரலே . என்னாச்சு கீதாவுக்கு ? என்னவோ ஆபீஸ்ல urgent மீட்டிங் னு சொன்னா .. நான் அவங்ககிட்டே பேசலாமா ? ஓ shure.கீதா போன் நம்பர் வாங்கி போனை போட்டான். கீதா மேடம் நாம மீட் பண்ண முடியுமா என் பேரு ராம் . ரவியோட friend நான் எதுக்கு உங்களை மீட் பண்ணனும் . ரவியோட உயிருக்கு ஆபத்து யாரோ அவங்க fiancee ரேவதியை கொல்ல ட்ரை பண்ணியிருக்காங்க. கல்யாணம் நின்னுபோச்சு . all ரைட் நான் எங்க வரணும்? இங்க ரவி வீட்டுக்கு வர முடியுமா. சரி வரேன் என்றாள். கீதா உங்களுக்கு இந்த ஆளை தெரியுமா ஏதாவது ஐடியா இருக்கா? வேற யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ? எனக்கு ஸ்வேதா மேலதான் சந்தேகம் . அவதான் ரவி இல்லேன்னா செத்துருவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா ? நெஜமாவே உங்களுக்கு அன்னிக்கு மீட்டிங் இருந்ததா? இந்தாங்க நான் பேசிய meeting வீடியோ கிளிப்..ஓகே ஓகே உங்களை நான் நம்புறேன். வேற ஏதாவது information தேவைப்பட்டா உங்களை காண்டாக்ட் பண்றேன் .

ரவி நான் ஒன்னு பண்றேன் ஸ்வேதா வீட்டுக்கு போய் அவங்களையும் பார்க்கிறேன். சரி ராம் ஜாக்கிரதை என்றான். ஸ்வேதாவிடம் பேசியபோது தான் ரவியை விரும்பியது உண்மைதான் ஆனா ரேவதி அவனுக்கு சரியான பார்ட்னர்னு தெரிஞ்சுக்கிட்ட பிறகு நான் என்னையே சமாதான படுத்திக்கிட்டேன். நீங்க சொல்ற இந்த ஆளு ஒரு டூ வீலர் ல வந்தாரு . நம்பர் ஏதாவது ஞாபகம் இருக்கா அந்த டூ வீலர் ஒருவேளை அங்கேயே போட்டுட்டு போயிருக்கலாம். ரொம்ப தேங்க்ஸ் ஸ்வேதா . ஆமா நான் அவன் ஓடுனப்போ பார்த்தேன் அந்த டூ வீலர் ஸ்டார்ட் ஆகல. அவன் துப்பாக்கி வெச்சிருந்ததாலே யாரும் கிட்ட போய் பிடிக்கவும் ட்ரை பண்ணலே. ம்ம் அப்போ அந்த டூ வீலர் அங்கேயேதான் இருக்கணும் . மண்டபத்துக்காரரிடம் விசாரித்த போது அதை பின்பக்கம் போயிருப்பதாக சொன்னார்கள். அதனுடைய நம்பர் plate வைத்து விசாரித்த போது அது திருடப்பட்ட வண்டி என்றும் ரமேஷ் என்பவர் கம்பளைண்ட் பண்ணியிருப்பதாக சொன்னார்கள். அவர் வீட்டு சிசி டிவி விடீயோவையும் பார்த்தான் . அதே ஆள்தான் . வண்டியை அவர்களிடத்தில் ஒப்படைத்தான். அதில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்த போது துப்பாக்கி அப்படியே இருந்தது . அவனை மறுபடி இங்கு பார்த்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள் என்றான். துப்பாக்கி கள்ள துப்பாக்கி ,உரிமம் பெறாத துப்பாக்கி என்று தெரிந்தது . இதை வைத்து சப்ளை செய்தவர்களை ஓரளவுக்கு அடையாளம் காணமுடியும் என போலீஸ் சொன்னது. அப்போதுதான் ஒரு புதிய தகவலையும் போலீஸ்கரர் சொன்னார்கள் அது புதியதொரு துப்பாக்கி என்று. ராம் ஸ்வேதா வங்கி கணக்கையும், கீதா வாங்கி கணக்கையும் சோதிக்க விரும்பினான். இது பற்றி ரவியிடம் சொன்னபோது ரவி வேண்டாமென்று மறுத்தான்.
இடையே ரேவதி டிஸ்சார்ஜ் ஆனாள். ரேவதி சுடப்பட்ட விடியோவை மறுபடி ராம் ஓட விட்டு பார்த்தான். ரேவதி சுடப்பட்டவுடன் ஸ்வேதா எதுவும் செய்யாமல் போன் போட்டு பேசிக்கொண்டிருப்பதை கவனித்தான். ஸ்வேதாவின் கால் ஹிஸ்டரி போலீஸ் துணையுடன் எடுத்தான். அன்று அவள் கீதாவுடன்தான் பேசியிருந்தாள். இறுதியாக ஸ்வேதாவை கூப்பிட்டு போலீஸ் விசாரித்த போது தான் கீதாவுக்கு போன் செய்தது உண்மைதான் என்றும் ஆனால் எனக்கு அந்த துப்பாக்கி சுடும் நபரை பற்றி எதுவும் தெரியாது என்றாள்.கீதாவுடைய வங்கி கணக்கை செக் செய்தபோது ஸ்வேதா ரெண்டு லட்ச ரூபாய் போட்டிருந்தது தெரியவந்தது . அதை கீதா உடனடியாக எடுத்ததும் தெரியவந்தது. ரெண்டு பேரையும் விசாரணைக்கு அழைத்த போலீஸ் எதுக்காக பணம் குடுத்து வாங்குனீங்க சொல்லுங்க கீதாவுக்கு டூவீலர் வாங்க பணம் குடுத்தேன் என்றாள். நம்புறமாதிரி இல்லையே . உங்க அப்பா என்ன பண்றார் . போலீஸ் retired ஆயிட்டார். உங்க அப்பா எங்க அப்பா மிலிட்டரி .உண்மையா சொல்லுங்க . ரெண்டு பேருல யார் இந்த பிளான் போட்டீங்க ..சத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது சார்..இடையே ரேவதி டிஸ்சார்ஜ் ஆனாள். ரேவதி சுடப்பட்ட விடியோவை மறுபடி ராம் ஓட விட்டு பார்த்தான். ரேவதி சுடப்பட்டவுடன் ஸ்வேதா எதுவும் செய்யாமல் போன் போட்டு பேசிக்கொண்டிருப்பதை கவனித்தான். ஸ்வேதாவின் கால் ஹிஸ்டரி போலீஸ் துணையுடன் எடுத்தான். அன்று அவள் கீதாவுடன்தான் பேசியிருந்தாள். இறுதியாக ஸ்வேதாவை கூப்பிட்டு போலீஸ் விசாரித்த போது தான் கீதாவுக்கு போன் செய்தது உண்மைதான் என்றும் ஆனால் எனக்கு அந்த துப்பாக்கி சுடும் நபரை பற்றி எதுவும் தெரியாது என்றாள்.கீதாவுடைய வங்கி கணக்கை செக் செய்தபோது ஸ்வேதா ரெண்டு லட்ச ரூபாய் போட்டிருந்தது தெரியவந்தது . அதை கீதா உடனடியாக எடுத்ததும் தெரியவந்தது. ரெண்டு பேரையும் விசாரணைக்கு அழைத்த போலீஸ் எதுக்காக பணம் குடுத்து வாங்குனீங்க சொல்லுங்க கீதாவுக்கு டூவீலர் வாங்க பணம் குடுத்தேன் என்றாள். நம்புறமாதிரி இல்லையே . உங்க அப்பா என்ன பண்றார் . போலீஸ் retired ஆயிட்டார். உங்க அப்பா எங்க அப்பா மிலிட்டரி .உண்மைய சொல்லுங்க . ரெண்டு பேருல யார் இந்த பிளான் போட்டீங்க ..சாத்தியமா எங்களுக்கு எதுவும் தெரியாது சார்.. அவங்கள விட்டுடுங்க சார் என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.
நான் ஸ்வேதாவோட அப்பா நான்தான் அந்த ஆளை வெச்சு சுட சொன்னேன்.யாரு அவன் ? அவன் ஒரு police அதிகாரி. அவன் பேரு ஜெகன். பணத்துக்காக எதையும் செய்வான் .அதனாலதான் உங்களால கண்டு பிடிக்க முடியல . ஏன் இப்படி பண்ணீங்க என் பொண்ணு படுற வேதனையை தாங்க முடியாமதான் இதை செஞ்சேன். போலீஸ் ஜெகனையும், ஸ்வேதா அப்பாவையும் கைது செய்தனர்.

எப்போதும் போல ஆபீஸ் வந்த ராமுக்கு reception இல் யாரோ காத்திருப்பது போல தோன்றியது. ஆமா சார் ரொம்ப நேரமா வெயிட் பன்றார். பார்த்தா சின்ன பையன் மாதிரி இருக்கார் என்றாள் தீபு. உள்ளே வர சொல்லு என்றான். வாங்க சார் உக்காருங்க . என் பெரு கிரீஷ் எனக்கு ஒரு problem.. என்னாச்சு கிரீஷ். கல்யாணம் ஆகி ரெண்டு வாரம்தான் ஆகுது அதுக்குள்ள என் மனைவி விவாகரத்து கேக்குறாங்க . ம்ம் உங்களுது arranged marriage இல்ல லவ் marriage ? arranged marriage தான் சார்.அப்போ அப்பா அம்மா கிட்ட சொல்லி பேச வேண்டியதுதானே . சார் அவ ரொம்ப பிடிவாதமா இருக்கா . இதுக்கு ஏதாவது வக்கீல் கிட்ட தான் போகணும்.எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு அவளை மிரட்டி இருப்பாங்களோ அப்டின்னு. அதெல்லாம் ஒன்னும் இருக்காது தைரியமா போங்க. ஒரு நல்ல வக்கீலா பாருங்க. மனசே இல்லாமல் கிரீஷ் கிளம்பி போனான்.

ரெண்டு வாரத்துல விவாகரத்து நாடு நல்லா முன்னேறிக்கிட்டு வருது என சொல்லி கொண்டான் ராம். தீபு அந்த பையன் வேற ஏதாவது டீடெயில்ஸ் குடுத்தானா ?அவங்க wife ப்ரொபைல் ஒன்னு குடுத்துட்டு போயிருக்காரு. உங்க மனசு மாறுனா அதை பாக்க சொல்லி. ம்ம் நீ எதுக்கு அதை வாங்குனே . நான் வேண்டாம்னுதான் சொன்னேன் அவர்தான் வற்புறுத்தி குடுத்துட்டு போனார். சரி பத்திரமா எடுத்து வை தீபு. ஓகே சார் .கிரீஷ் மறுநாள் காலையில் போன் செய்திருந்தான். என் wife அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா சார்.இப்பயாவது கொஞ்சம் ட்ரை பண்ணுங்க சார். அவ உயிருக்கு ஆபத்து சார்.ராம் போனை வைத்து விட்டான். அந்த கிரீஷ் wife பைலை கொண்டு வா தீபு என்றான். கிரீஷ் wife பெயர் வினிதா படிப்புபி எஸ் சி கம்ப்யூட்டர் சைன்ஸ் . மற்ற விவரங்கள் இருந்தன.வினிதாவுக்கு போனை போட்டான். யார் சார் நீங்க உங்களுக்கு எதுக்கு இந்த வேலை வைங்க சார் போனை என்றாள்.ராம் மறுபடி கிரீஷை தொடர்பு கொண்டான், அவங்க ரொம்ப பிடிவாதமா இருகாங்க. உங்களுக்கு எதனால சந்தேகம் வந்துது கிரீஷ். எங்களுக்கு முதலிரவே நடக்கலே சார். அவ என்னை தொட கூட விடல .நான் போக போக சரியாகிடும்னு நெனச்சேன் . ஆனா சரி ஆகல. ம்ம் அவங்க விருப்பப்பட்டுதான் கல்யாணம் பண்ணுனாங்களா. ஆரம்பத்துல டெய்லி போன் பேசுவா. கிப்ட்ஸ் எல்லாம் கொடுப்பா. எங்க கல்யாண நாளை ரொம்ப expect பண்ணுனதா சொல்லி இருக்கா . சரி கிரீஷ் ஒன்னு பண்ணுங்க . நாளைக்கு போய் நேர்ல பாருங்க.அவங்கள சமாதானப்படுத்துங்க. அப்புறம் வீட்டுக்கு கூட்டி வாங்க. வேற வழியே இல்லை. நான் அதுக்குள்ள background செக் பண்றேன். ரொம்ப தேங்க்ஸ் சார்.
மறுநாள் மதியம் போல கிரீஷுக்கு போன் செய்தான், கிரீஷ் என்னாச்சு. கிரீஷ் இல்ல . நீங்க யார் பேசறீங்க. டிடெக்ட்டிவ் ராம் பேசுறேன். அவர் wife murder சம்பந்தமா அவரை அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்கோம். என்ன சார் சொல்லறீங்க. ஆமா சார் அந்த பொண்ண நேரத்து நைட் யாரோ கத்தியால் குத்தி கொன்னுட்டாங்க சார். சரி சார் நான் கிரீஷ் கிட்டே பேசமுடியுமா. இப்போ முடியாது சார் . அவர் வக்கீல் வரட்டும் பார்க்கலாம். எந்த ஸ்டேஷன் என்பதை கேட்டுக்கொண்டு விரைந்தான். கிரீஷ் மனைவியை யாரோ murder பண்ணிட்டாங்களாம்.நீ அந்த பைலை குடு.நான் போய் கிரீஷ் மீட் பண்றேன்.ஓகே சார். கிரீஷ் ராமை பார்த்ததும் அழ தொடங்கினான் . எல்லாம் போச்சு எல்லாம் போச்சு என்று தேம்பினான். ராம் சமாதானப்படுத்த முடியாமல் தவித்தான். சார் சும்மா விடக்கூடாது சார் அவளை கொன்னவங்கள சும்மா விடக்கூடாது சார் என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான். கிரீஷ் வக்கீல் வந்து பேசிய பிறகு 15 நாள் கழித்து ஜாமீனில் வந்தான் கிரீஷ். அவன் பழைய கிரீஷ் ஆகவே இல்லை.