iravukku aayiram kaigal - 39 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 39

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 39

ராம் எப்போதும் போல ஷாப்பிங் போயிருந்தான். தினசரி தேவைக்கு பொருட்கள் வாங்க போயிருந்தான். அப்போதுதான் ஸ்வேதாவை பார்த்தான் . கூடவே அவளுடைய மகள் அஞ்சலியும் வந்திருந்தாள். ஸ்வேதா இவனுடைய classmate . இந்த அங்கிள் யாரு தெரியுமா பெரிய டிடெக்ட்டிவ் என அறிமுகப்படுத்தி வைத்தாள்.நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லம்மா என்றான். சாக்லேட் வாங்கி கொள்ள அஞ்சலி மறுத்தாள். ஸ்வேதா இவனுடைய போன் நம்பரை மறக்காமல் கேட்டு வாங்கிகொண்டாள். ஏன் சாக்லேட் புடிக்காதா என்றான். சற்று தள்ளி வந்து அவ friend ஒருத்தி recent ஆ suicide பண்ணிக்கிட்டா அதிலிருந்து இவ அப்செட்டா இருக்கா . யாரை பார்த்தாலும் இப்படித்தான் behave பண்றா.என்ன கிளாஸ் படிக்கிறா 9th . சரி சரி நான் போன் பண்றேன் என்றவாறு ஸ்வேதா கிளம்பினாள் . அஞ்சலி இவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தாள். நெஜமாவே அந்த அங்கிள் டிடெக்ட்டிவ் ஆ அம்மா என்றாள். ம்ம் அதுக்கு என்ன இப்போ .. நம்ம திவ்யா செத்ததுதுக்கு என்ன reason னு கண்டுபிடிப்பாரா ? அதெல்லாம் போலீஸ் கண்டுபிடிப்பாங்க . அப்போ இவரு ? போலீசால் முடியலேன்னா கண்டுபிடிப்பார் .. நிச்சயமா ம்ம் பேசாம போய் விளையாடு ..

ரெண்டு நாள் கழித்து ஸ்வேதா போன் செய்திருந்தாள், உன்கிட்ட என் பொண்ணு பேசணுமாம் ரெண்டு நாளா ஒரே தொல்லை. நீயே பேசு என்று போனை குடுத்துவிட்டு ஸ்வேதா கிட்சேனுக்குள் நுழைந்தாள். சொல்லும்மா என்ன விஷயம் .. என் friend திவ்யா suicide பண்ணிக்கிட்டா..suicide ரொம்ப தப்புமா எதுவா இருந்தாலும் parents கிட்ட ஷேர் பண்ணனும் . சரி நான் சொல்றத கேளுங்க .. சொல்லு அது suicide இல்ல யாரோ திவ்யாவை suicide பண்ண போர்ஸ் பண்ணியிருக்காங்க . உனக்கெப்படி தெரியும் அவ லாஸ்ட் டே எங்கிட்ட சொன்னா. நீ அம்மா கிட்ட சொன்னியா சொன்னேன் . என்னை அம்மா பேசவே விடலை. சரி இப்போ நான் என்ன பண்ணனும் . நீங்கதான் அந்த ஆளை கண்டுபிடிக்கணும் . சரி போனை அம்மாகிட்ட குடு . மாட்டேன் நீங்க ப்ரோமிஸ் பண்ணுங்க நான் கண்டுபிடிச்சி தரேன்னு .அதான் போலீஸ் இருக்காங்களே அஞ்சலி . அவங்க ஒன்னும் கண்டுக்கலை . எங்களுக்கெல்லாம் கிளாஸ் எடுத்ததோட சரி , சரிம்மா நான் விசாரிக்கிறேன் .

இதை எப்படி அணுகுவது என்று குழப்பமாய் இருந்தது . சின்ன பிள்ளை மனசுல எப்படி தற்கொலை எண்ணம் தோணும் . பேப்பரை பார்த்தான் . திவ்யா பற்றிய நியூஸ் வந்திருந்தது . எக்ஸாம் ரிசல்ட் பயத்தில் மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை. அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை. சாவதற்கு முன் கடிதம் எழுதி வைத்த விவரம் யாதெனில் அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் .என்னால் படிக்க முடியவில்லை . நிச்சயம் பெயில் ஆகி விடுவேன் ஆகவே நான் போகிறேன். ஏன் தீபு இந்த கேஸ் எடுக்கலாமா வேண்டாமா ? இது ரொம்ப சென்சிடிவ் ஆன விவகாரம். அந்த பொண்ணு அஞ்சலி மட்டும் சொன்னா போதாது. அவங்க parents சொல்லணும் . ம்ம் புரியுது. யோசிச்சு முடிவெடுப்போம்.

ரெண்டு நாட்கள் கழித்து ஸ்வேதா நம்பரில் இருந்து வாட்ஸாப்ப் மெசேஜ் வந்தது . ஏற்கனவே திவ்யா அஞ்சலிக்கு அனுப்பியிருந்த மெசேஜ் screen ஷாட் வந்திருந்தது . என்னை அவன் ரொம்ப torture பண்றாண்டி . நான் போறேன் பை என்று இருந்தது . ஸ்வேதாவை தொடர்பு கொண்டபோது அவள் எடுக்கவில்லை. எதுக்கும் திவ்யாவோட parents மீட் பண்ணலாமா என தீபூவை கேட்டான். போன் பண்ணி பார்ப்போம் . மெசேஜ் வந்திருந்த நம்பரை டயல் செய்தான் . திவ்யாவோட அப்பா இருக்காங்களா ? ஆமா திவ்யாவோட அப்பாதான் பேசறேன் ..உங்களுக்கும் அந்த மெசேஜ் வந்துச்சா ? சாரி சார் அந்த பொண்ணு அஞ்சலி இப்டிதான் ஒரு வாரமா பண்றா. நீங்க யாரு சார் டிடெக்ட்டிவ் ராம். ஓ உங்களை பத்தி நேத்தி சொன்னா ..anyway நாங்க இப்போ ஊரை விட்டு போக போறோம் . வைக்கிறேன் சார் என்று வைத்துவிட்டார்.
ஸ்வேதா போன் பண்ணினாள் . என்ன ராம் போன் பண்ணியிருந்தியா இந்த வாலு ஏதாவது மெசேஜ் பண்ணியிருந்ததா ? இல்லை ஸ்வேதா ..நீ கூட உன் பொண்ணு மனச புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. அப்புறம் உன் இஷ்டம்.அவங்க ஊரை விட்டு போறாங்க ராம் . அவங்க போனா என்ன அந்த பையனோ ஆளோ இன்னும் இங்கேதான் சுத்திகிட்டு இருக்காங்க . நாளைக்கு உன் பெண்ணுக்கே அவனால ஆபத்துன்னா சரி ராம் என் husband கிட்ட பேசிட்டு சொல்றேன்.திவ்யாவுடைய அப்பாவே போன் செய்தார். நீங்க proceed பண்ணுங்க சார் என் பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்க கூடாது . கண்டிப்பா சார் . தீபு ஓகே சொல்லிட்டாங்க . நீயும் லதாவும் இந்த கேஸ் handle பண்ணுங்க. இதனால யார் மனசும் வருத்தப்படாத மாதிரி நடந்துக்குங்க.

திவ்யாவுடைய அப்பா ராஜாராம் ஒரு வாரம் அவர் வீட்டை காலி செய்வதை தள்ளி போட்டிருந்தார். லதாவும் தீபுவும் அவரிடம் பேசினர். திவ்யாவுடைய திங்ஸ் இருக்கும் அறைக்கு கூட்டி சென்று காட்டினார். நாங்க பாக்குறோம் சார். தீபு மொதல்ல இந்த ரூம்ல ஏதாவது hidden கேமரா இருக்கானு செக் பண்ணு . சில சமயம் அதனாலேயே கூட பல பேர் பாதிக்கப்படுறாங்க. இந்தாங்க மேடம் அவளோட லேப்டாப், போன் . இதுலதான் அவ எப்பவுமே கேம்ஸ் விளையாடுவா.. தேங்க்ஸ் சார். இந்த வீட்டுக்கு யார் யாரெல்லாம் வருவாங்க . என் பையனோட friends எல்லாம் வருவாங்க . அப்புறம் cousin ஒருத்தன் வருவான் பேரு தீபன். அவங்க எல்லாம் சின்ன பசங்க மேடம் .
உங்க பெரிய பையன் என்ன படிக்கிறான். பிளஸ் டூ . அஞ்சலியும் வந்திருந்தாள் . தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் .திவ்யாவுக்கு டைரி எழுதுற பழக்கம் எதுவும் இருக்கா சார்.. அப்டி எதுவும் இல்ல எதுவா இருந்தாலும் அஞ்சலிகிட்டே உடனே சொல்லிடுவா ஆன இந்த விஷயத்தை ஏன் சொல்லலைனு தெரியல . சமீபத்துல ஏதாவது நிகழ்ச்சி நடந்துச்சா சார். அதாவது பர்த்டே பார்ட்டி. ஆமா எங்க பெரிய பையன் ஆகாஷோட பர்த்டே பார்ட்டி. அந்த போட்டோஸ் ,விடீயோஸ் இருந்தா குடுங்க. சரி சார் நாளைக்கு ஸ்கூல்லேயும் விசாரிக்கிறோம். நாங்க கிளம்புறோம் என்றார்கள் தீபுவும் ,லதாவும் .

ஸ்கூலில் விசாரித்த போது எங்களுக்கே ஷாக்கிங் ஆஹ் இருந்தது . இத்தனைக்கும் அவ நல்லா படிக்க கூடிய பொண்ணு. பெரும்பாலான டீச்சர்கள் திவ்யாவை பற்றி நல்லா விதமாகவே சொன்னார்கள் . தீபுவும் ,லதாவும் திவ்யாவுக்கு மன நல சிகிச்சை அளித்த டாக்டர் பிரேமாவை சந்தித்தனர். அப்போ ரொம்ப பயந்து போயிருந்தா . கேட்டா எக்ஸாம் நினைச்சு கவலையா இருக்குனு சொன்னா . நான் எவ்ளவோ வற்புறுத்தி கேட்டப்பவும் ஒன்னும் சொல்லல . ம்ம் திவ்யாவுக்கு உடல் ரீதியா ஏதாவது தொந்தரவு இருந்ததா டாக்டர். அப்படியெல்லாம் இல்லை . யாரோ அவ கூட நெருங்கி பழகுனவங்க தான் அவளை மிரட்டி இருக்கணும் . திவ்யாவுடைய கிளோஸ் friends மேலும் சிலரிடம் விசாரித்த போதும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை . திவ்யா போனை வாங்கி பார்த்தாள் தீபு.

அஞ்சலி இன்ஸ்டாகிராம்ல திவ்யா இருந்தாளா . ஆமா இருந்தா ஆன திடீர்னு uninstall பண்ணிட்டு அக்கௌன்ட் deactivate பண்ணிட்டா . கேட்டப்ப பசங்க சில பேர் அசிங்கமா பேசுறாங்கனு சொன்னா. நீ திரும்பி அதை activate பண்ணி குடேன். உனக்கு password தெரியுமா ? தெரியும் . திவ்யா நிறைய பேரை பிளாக் செய்திருப்பது தெரிந்தது . உனக்கும் அவளுக்கும் mutual friends இருந்தார்களா . ஆமாம் . ஆனா நீ ஏன் அவளோட cousin தீபனை சேர்க்கலை. என்னவோ அவனுக்கு என்னை கண்டாலே புடிக்காது. எப்போ பார்த்தாலும் காமெராவும் கையுமா இருப்பான். எனக்கும் அவனை புடிக்காது. அவன்கிட்டேயிருந்து ஏதாவது மெசேஜ் திவ்யாவுக்கு வந்திருக்கானு பாரு. இல்ல அவன் அக்கௌன்ட் deactivate ஆயிருக்கு. ஓ அவன் மேல உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா அஞ்சலி. இல்லை ஆண்ட்டி.தீபனை பார்க்க வேண்டுமே என திவ்யா அப்பாவிடம் லதா சொன்னாள். அஞ்சலி இறந்ததுலேந்து அவன் இந்த பக்கமே வரதில்லே. சரி நான் போன் பண்ணி பாக்குறேன். நாளைக்கு சண்டே அவன் வரேன்னு சொல்லி இருக்கான். ரொம்ப தேங்க்ஸ் சார். ஒரு பக்கம் அவர்கள் ஊரை விட்டு போவதற்காக பேக் செய்து கொண்டிருந்தனர். பெரிய பையன் பிரதீப் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான் . தீபனிடம் கேட்ட போது அவ ரொம்ப நல்ல பொண்ணு சார். வேற எதுவும் சொல்றதுக்கில்லை என்றான். தீபன் போன் நம்பரை வாங்கி கொண்டார்கள் .

எந்த துப்பும் கிடைக்கலையா ? ம்ம் ஏதாவது லவ் மேட்டர் அந்த மாதிரி சே சே ஸ்கூல் லேயும் விசாரிச்சோம். அன்னைக்கி ஸ்கூல் லேயிருந்து யாராவது அழைச்சுட்டு போனாங்களான்னு ஏதாவது தெரிஞ்சுதா . அந்த வாட்ச்மென் போன் நம்பர் இருக்கு . விசாரிக்கிறேன் . இப்பவே போன் போடுங்க . ஆமா சார் அவ cousin தீபன் தான் அழைச்சிட்டு போனான். எத்தனை மணி இருக்கும் மதியம் 2 இருக்கும் .ஆமா சார் அவளுக்கு உடம்பு சரி இல்லேனு மெசேஜ் பண்ணி இருந்தா. சரின்னு நான்தான் அவளை பிக்கப் பண்ணேன். நேரா எங்க போனீங்க. திவ்யா வீட்டுக்குத்தான் போனோம் . வீட்ல ட்ராப் பண்ணிட்டு நான் போயிட்டேன். அன்னிக்கி யார் யாரெல்லாம் திவ்யா பிளாட்டுக்கு வந்தார்கள் என செக் செய்த போது திவ்யாவுடைய சித்தப்பா அந்நேரத்துக்கு வந்தது தெரிய வந்தது . அவரை விசாரித்த போது நான் வந்தது உண்மைதான். திவ்யாவுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னவுடனே போய் பார்த்தேன் அப்புறம் போய்டேன். அப்போ வீட்டுல யாருமே இல்லையா ? இல்ல சார். திவ்யா எத்தனை மணிக்கு இறந்தா? ஈவினிங் 6 மணிக்கு . அஞ்சலிக்கு எத்தனை மணிக்கு மெசேஜ் வந்தது . 5 30 .அப்போ இந்த ரெண்டு மணிலேயிருந்து 5 மணிக்குள்ளதான் ஏதோ நடந்துருக்கு . வாட்ச்மென் யார் டூட்டி ல இருந்தாங்க அதை செக் பண்ணுங்கள் .அன்னைக்கு டூட்டில மணி அங்கிள்தான் இருந்தாரு என்றான் தீபன். சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது என்றார் மணி . எங்ககிட்ட எவிடென்ஸ் இருக்கு நீங்கதான் கால் பண்ணி பேசி இருக்கீங்க என்றான் ராம். நான் எதுக்கு சார் பேச போறேன் உங்க போன்லேயிருந்துதான் கால் போயிருக்கு அப்போ உங்களுக்கு தெரியாம போயிடுமா. நல்லா யோசிச்சு சொல்லுங்க ஆமா சார் என் பையன்தான் போன் வச்சிருந்தான் . நான் அப்போ சாப்பிட்டுட்டு இருந்தேன் , உங்க பையன் பேரென்ன குமார். அவனை உடனே பார்க்கணும் .