சுஜிதா கந்தசாமியின் மொபைல் போன் வாங்கி பார்த்தாள். இது அப்போ எங்கிருந்தது . கடையில ரிப்பேருக்கு குடுத்ததால இது மட்டும் திரும்ப எங்க கிட்டயே கொடுத்துட்டாங்க. ஏதாவது கால் வந்ததா? வருது . நாங்கதான் அதை ஸ்விட்ச்ஆஃ பண்ணி வெச்சிருக்கோம் . அவருக்கு இந்த ஒன்லைன் ரம்மி ,கேம்ஸ் பழக்கம் உண்டா அதெல்லாம் இல்ல. சரிம்மா உங்க போன் நம்பர் குடுங்க நான் ஏதாவது detail தேவைப்பட்ட கால் பண்றேன்.
சுஜிதா ராமுக்கு போன் செய்தாள். ஒன்னும் புரியல சார். எல்லாமே நார்மலா இருக்கு ஆனா ஏன் செத்தார்னு தெரியல . அந்த லெட்டர் ல இருக்குற கையெழுத்து அவரோடதுதானா ?ஆமா சார் அப்டித்தான் சொல்றாங்க. ம்ம் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் copy வாட்ஸாப்ப் பண்றேன். ஏதாவது clue கிடைக்குதா பாரு . சரி சார் நான் வைக்குறேன் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது . சுஜிதா பாக்டரிக்கு போனாள். அங்கிருந்தவர்கள் கந்தசாமியின் நெருங்கிய நண்பனை அடையாளம் காட்டினர். வெங்கட் என்னாலயும் நம்ப முடியல மேடம் நல்லாத்தான் இருந்தான், ஆனா யாரோ அவனை கொன்னுட்டு divert பண்றதுக்காக கடன் தொல்லை தாங்க முடியலன்னு எழுதி வாங்கிட்டு இப்படி பண்ணியிருக்காங்க . நீங்க யாரையும் சந்தேகப்படுறீங்களா எனக்கு என்னவோ ஏதோ ஒரு நிர்வாக கோளாறை கண்டுபிடிச்சதனாலே அவங்க ஆட்கள்தான் கொன்னிருக்கணும் . அப்புறம் ஏன் இங்கேயே பாடியை இங்கேயே போடணும். ஒரு வேலை எதிரி கம்பெனி வேலையை இருக்குமோ இருக்கலாம் . இங்கே நானும் அவனும் 5 வருஷமா வேலை பாக்கிறோம் . இதுக்கு முன்னாடி இதே ஒரு கெமிக்கல் பேக்டரி கிரண் கெமிக்கல்ஸ் ல ஒண்ணா வேலை பார்த்தோம் .
அந்த வேலையை ஏன் விட்டீங்க அங்க பல பிரச்னை . இவன் ரொம்ப நேர்மையான ஆளு அங்க வெளியிடற நச்சு புகையால் பல பேருக்கு கான்செர் வந்துருக்கு , அதை நிர்வாகத்துக்கு சொன்னப்ப அவங்க அதை agree பண்ணிக்கல . கோர்ட்டுக்கு கேஸ் போனப்போ அந்த மக்களுக்கு ஆதரவா சாட்சி சொன்னான் கந்தசாமி . கடைசில மக்களுக்கு இழப்பீடு கொடுக்க சொல்லியும் அந்த பேக்டரியை மூட சொல்லியும் உத்தரவு வந்துச்சு. ம்ம் புரியுது அப்போ நிச்சயம் அவங்கதான் இந்த வேலைய செஞ்சிருக்கணும் . ஈவினிங் டீக்கு ஆபீஸ் வந்துவிட்டாள் சுஜிதா . இப்போ அந்த கிரண் கெமிக்கல்ஸ் மூடி இருக்காமே ? உண்மையா என கூகுளை சர்ச் பண்ணி பார்த்ததில் வெங்கட் சொன்னது உண்மைதான் என தெரியவந்தது .
கிரண் கெமிக்கல்ஸ் நிறுவனர் அந்த கேஸ் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தார். கடந்த 15 ம் தேதி உச்சநீமன்றத்தில் அப்பீல் கிரண் கெமிக்கல்ஸ்க்கு சாதகமா தீர்ப்பு வந்திருந்தது . 14 ம் தேதி கந்தசாமி இறந்திருந்தான். இது ஏதோ திட்டமிட்ட சதி போல இருந்தது. வருகிற 30 ம் தேதி மீண்டும் திறக்க இருக்கிறார்கள் . இதனால்தான் கந்தசாமியை கொன்று போட்டிருக்கிறர்கள் . ராம் சார் இப்போது என்ன செய்யலாம் . நாம அந்த விழாவுக்கு போகலாம் ஏதாவது clue கிடைக்கும் . இந்த கம்பெனி நிறுவனரிடம் சொல்லி கிரண் கெமிக்கல்ஸ் திறப்பு விழாவிற்கு ராமும், சுஜிதாவும் போயிருந்தனர். அங்கே புதிதாக ஆட்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். நிறுவனர் இவர்களை பார்த்தும் பார்க்காதது போல போனார்.இப்பயாவது இந்த நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினா தேவலை என்று ஜனங்கள் பேசிக்கொண்டார்கள் .
ராமுக்கு கால் வந்தது . இனிமே இந்த கேஸ் விசாரிக்க வேண்டாம் . நாங்க சுமூகமா போறதா முடிவு பண்ணிட்டோம் . தொழிலாளர்களும் போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்க என்றார் வி ஐ பி . இதை சொன்னதும் சுஜிதா ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றாள். இது என் கேஸ் எப்படியும் நான் கண்டுபிடிச்சே தீருவேன் . சுஜிதா ப்ளீஸ் இது அந்த பேக்டரி சம்பந்தபட்ட விவகாரம் நாம தலையிட முடியாது . ம்ம் புரியுது சார் . வேணும்னா நான் அவங்க மனைவிகிட்ட பேசி பார்க்கிறேன் .அவங்க சொன்னாங்கன்னா நாம மேற்கொண்டு விசாரிக்கலாம் . நாளைக்கு காலையிலே அவங்க வீட்டுக்கு போறோம். போய் பார்த்த போது அவர்கள் வீடு பூட்டியிருந்தது . விசாரித்ததில் சொந்த வீடு வாங்கி கொண்டு போய்விட்டதாக சொன்னார்கள் . ஒரே வாரத்தில் சொந்த வீடா? அதான் அந்த கிரண் பேக்டரிகாரன் வந்தான் செட்டில் பண்ணிட்டான் என பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் சொன்னார்கள் .இப்போ எங்கிருக்காங்க என முகவரி விசாரித்து கொண்டான் .
வீடு வாசலில் கார் ஒன்று புதிதாக நின்றது . வாங்க வாங்க நீங்க விசாரிச்ச நேரம் எல்லாமே மாறிடுச்சு. அந்த கம்பெனிகாரங்க வந்தாங்க மன்னிப்பு கேட்டாங்க . அப்புறம் இந்த வீடு, பிள்ளைக்கு படிப்பு செலவு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்க . இந்த கார் இப்போதான் வாங்குனோம் . அந்த கடவுள் எங்களை கை விடலை என்றார், அப்புறம் என்ன சுஜிதா ? உங்க புருஷன் செத்ததுக்கு நியாயம் வேணாமா? நான் பையன பார்க்கிறேன் . அவன் நல்லா இருந்தா போதும் என்றாள். அப்புறம் நீங்க இந்த வீடு பக்கம் வராதீங்க எங்களை அந்த கம்பெனி தப்பா நினைப்பாங்க . சரி நாங்க வரலை .
சுஜிதா மிகுந்த வருத்தத்தில் இருந்தாள்.சரி கடைசியா அந்த வி ஐ பி கிட்டேயே பேசி பாப்போம் . அது முடியுமா ? சுஜிதா கடைசியா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாப்போம். 2 நாட்கள் கழித்து கூப்பிட்டு இருந்தார்கள் . பண்ணை வீடு . வாங்க என சாபிட்ரீங்க அதெல்லாம் ஒன்னும் வேணாம். திவ்யா இவங்ககிட்ட கொடுத்த டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிக்க . நாங்க அண்ணன் ,தம்பி மாதிரி தம்பி இப்போ அங்கே வேலை பார்த்தவன் இங்க வேலை பார்ப்பான் . இங்கே வேலை பார்த்தவன் உதாரணத்துக்கு நம்ம வெங்கட் இப்போ அவங்க கம்பெனி ல திரும்பவும் சேர்ந்துட்டான். நாந்தான் சரினு சொல்லிட்டேன் . இப்போ அவனுக்கு எல்லா வசதியும் பின்னி கொடுத்திருக்காங்க . யாரு கந்தசாமி நண்பன் வெங்கட்டா ? ஆமா அவனேதான்.போய்ட்டு வாங்க தம்பி. ராம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. சுஜிதா கொஞ்சம் யோசனை செய்தாள்.நாமளே இந்த கேஸ் reopen பண்ணினா என்ன சார். ம்ம் அதெல்லாம் பண பலத்தோட நம்மால மோத முடியாது .
இந்த வெங்கட் திரும்பவும் அதே கம்பெனி லே சேர்ந்துட்டான் . அவனுக்கு போன் போட்டாள். என்ன சார் என்னென்னவோ சொன்னீங்க இப்போ நீங்களே போய் அங்கே சேர்ந்துடீங்களே . எனக்கும் ரெண்டு பசங்க இருகாங்க மேடம். ரெண்டும் பொம்பளை புள்ளைங்க. நல்ல சம்பளம் தரேன்னு சொன்னாங்க. போனை வைத்துவிட்டான். இனி இந்த கேஸ் மறந்துட்டு வேற வேலை இருந்தா பார்க்க வேண்டியதுதான் . இனிமேதான் இந்த கேஸ் ஆரம்பம் சார். ரெண்டு கம்பெனியும் சேர்ந்துதான் இதை பிளான் பண்ணியிருக்காங்க. சுஜிதா இதோட விட்டுடு . இன்னைக்கு என்னோட treat . இந்த கேஸ் இவ்ளோ தூரம் வந்ததுக்கு நீதான் காரணம். cheerup சுஜிதா என்றான் ராம்.
சுகேஷ் போன் பண்ணியிருந்தார். ரொம்ப நன்றி சார் சுஜிதாவுக்கு மாப்பிளை பார்த்திருக்கோம் . அடுத்தவாரம் நிச்சயதார்த்தம் . உங்க கிட்ட வேலை பார்த்தப்போ நல்ல experience . நாளைக்கு நம்ம வீட்டுல விருந்து. எல்லோரும் வந்துடுங்க . வாழ்த்துக்கள் சுஜிதா என்று எல்லோரும் வாழ்த்தினர். அந்த கேஸ் ராம் அதெல்லாம் இருக்கட்டும் . உங்க பொண்ணு ரொம்ப தைரியமான பொண்ணு . கம்பெனி காரங்களையே எதிர்த்து நிக்குறா? ம்ம் அதனால்தான் இந்த alliance பேசி முடிச்சேன். நீ ஒன்னும் வருத்தப்படாதே சுஜிதா எது நடந்தாலும் நன்மைக்கே என்றான் ராம். லதா, தீபக், தீபு எல்லோரும் விடை பெற்றுக்கொண்டனர்.
நாம எதோ ஒன்னு மிஸ் பன்றோம் அது என்னனு தெரியல . வெங்கட்டை இன்னும் விசாரிக்கணுமோ. அதெல்லாம் ஒன்னும் வேணாம் . வெங்கட் சுயநலவாதிதான் ஆனா கொலை பண்ற அளவுக்கு என்ன motive இருக்கு.ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஏதோ ஒரு விஷயம் கிரண் கம்பெனிகாரனோடது கந்தசாமிக்கு தெரிஞ்சுருக்கு . அது டேட்டாவா இருக்கலாம், போட்டோவா இருக்கலாம் . சரி அவர் மொபைல் வாங்கித்தான் சுஜிதா பார்த்தாளே . சுஜிதாவுக்கு போன் போட்டான் . என்ன சுஜிதா பிஸி ஆ என்றான்.அதெல்லாம் ஒண்ணுமில்லை. கந்தசாமி மொபைல் தரவா செக் பண்ணியா ? செக் பண்ணினே அதுலே போட்டோ, டாக்குமெண்ட் எதுவும் இல்லே . மை god அது ரிப்பேருக்கு போய் வந்ததுன்னு சொன்னாங்க ஒருவேளை அங்க ஏதாவது பண்ணி இருப்பாங்களோ . சரி அந்த கந்தசாமி நம்பர் குடு நான் பேசறேன் .கந்தசாமி நம்பருக்கு கால் செய்தான். யாரும் எடுக்கவில்லை. பிறகு சிறிது நேரம் கழித்து போன் வந்தது . ஹலோ யார் பேசுறீங்க நாங்க உங்க அப்பா friend பேசுறேன் . சொல்லுங்க அங்கிள் இந்த மொபைல் மெமரி கார்டு இருக்காப்பா ? அது அப்போவே தொலைஞ்சு போச்சு எப்போ ? வெங்கட் அங்கிள் கொண்டு வந்து குடுத்தப்பவே. நீ போய் கடையில போனை வாங்கலியா இல்லை வெங்கட் அங்கிள்தான் தொலைச்சிட்டாரு . சரிப்பா
அப்போ அந்த வெங்கட்தான் ஏதோ செய்திருக்கணும். வெங்கட்டுக்கு போன் செய்தான். வெங்கட் போனை எடுக்கவில்லை . நேரில் போய் பார்க்கலாம் என முடிவு செய்தான் . வெங்கட் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தான் . வாங்க சார், மேடம் வரல்லே என்றான். அவங்களுக்கு கல்யாணம் . ஓ வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லுங்க . அந்த போன் நீங்கதான் கடையில் இருந்து வாங்கிட்டு வந்து குடுத்ததா கந்தசாமி பையன் சொன்னான் . ஆமாம் . அதுல என்ன இருக்க போகுது ? அதுல ஒரு மெமரி கார்டு இருந்ததா ? ஆமா மறந்தே போய்டேன் . கீர்த்தி அந்த கார்டு கொஞ்சம் கொண்டாம்மா என்று சொன்னான். அதை வாங்கிக்கொண்டு ரொம்ப நன்றி என்று சொன்னான் ராம். இதுலே என்ன இருக்கு? நீங்க பார்த்தீங்களா என்றான் ராம். பழைய கம்பெனி டேட்டா.
அதான் அந்த கம்பெனி கேஸ் ஜெயிச்சுடுச்சே . இனிமே தேவைப்படாது .
ராம் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினான். அந்த மெமரி கார்டை மொபைலில் போட்டு பார்த்தான். அதில் emergency காண்டாக்ட் நம்பர்களும் இருந்தன . அதில் வி ஐ பி உதவியாளர் திவ்யாவுடைய நம்பரும் இருந்தது .திவ்யாவுக்கு போன் செய்தான். அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே சார் என்றாள் . உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க அந்த கந்தசாமியை கொன்னதே வெங்கட்தான் .உங்களுக்கு எப்படி தெரியும் ? எல்லாம் கம்பெனி விவகாரம் .ராமுக்கு அதிர்ச்சியும் வேதனையுமாய் இருந்தது . மறுநாள் காலையில் எப்போதும் போல பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தான் . ஒரு மூலையில் வந்திருந்த செய்தி பார்த்து துணுக்குற்றான். மர்மமான முறையில் வாலிபர் மரணம் கிரண் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெங்கட் லாரி மோதி மரணம் என்றிருந்தது . திவ்யாவுக்கு போன் செய்தான். என்ன இது அநியாயம் என்றான், நான்தான் ஏற்கனவே சொன்னனே எல்லாம் முடிஞ்சி போச்சுன்னு என்றாள். ராம் சுஜிதாவுக்கு போன் செய்தான்.