iravukku aayiram kaigal - 35 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 35

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 35

ராம் எப்போதும் போல இல்லாமல் சற்றே சோர்வாக காணப்பட்டான்.இதை பார்த்த தீபு என சார் டல்லா இருக்கீங்க. நான் , தீபக்,லதா எல்லாம் ஆர்ட் கேலரி போறோம் வரீங்களா என்றாள். நீங்க போய்ட்டு வாங்க பெயிண்டர் சுகேஷ் பெயிண்டிங்ஸ் எல்லாம் அவ்ளோ நல்லா இருக்கும் . சும்மா வாங்க சார். அரை மனதாக சரி வரேன் என்றான் ராம். என்ன தீபக் நீயும் இவங்க கூட சேர்ந்துட்ட போல என கிண்டல் செய்தான். நாம எப்பவுமே டூட்டில தான் இருக்கோம் ஒரு சேஞ்சுக்கு ?சரி சரி போவோமோ . பெயிண்டிங்கில் எத்தனை வகை உண்டோ தெரியாது அதன் வண்ணங்கள் சொல்லும் செய்தி அற்புதமானது என்றார் சுகேஷ்.

தீபு எல்லோரையும் சுகேஷுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். ரொம்ப சந்தோசம் வந்ததுக்கு என்றார் சுகேஷ்.இவங்க என் wife லட்சுமி என அறிமுகப்படுத்தினார். இவங்க தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் தான் என்றார். சூப்பர் சார் என்று பாராட்டினான் ராம். நாளைக்கு ஏதாவது கமிட்மென்ட் இருக்கா ராம் ?இல்லை சார்.. அப்டின்னா என்னை நாளைக்கு வீட்டுல வந்து பாக்க முடியுமா . கண்டிப்பா.என்ன விஷயம் சார். நாளைக்கு சொல்றேன் . ஆர்ட் கேலரி சிறப்பாக இருந்தது தீபுவுக்கு நன்றி சொல்லி கொண்டான் ராம்.

ராம் சுகேஷ் வீட்டுக்கு போக கொஞ்சம் லேட்டா ஆகிவிட்டது. போன் பண்ணி சொன்னான். சாரி சார் டிராபிக் ல மாட்டிகிட்டேன் .இட்ஸ் ஓகே என் பொண்ணும் உங்களை மீட் பண்ண வெயிட் பண்றா கொஞ்சம் சீக்கிரம் வாங்க . வாங்க ராம் இது என் மகள் சுஜிதா . இவளுக்கு துப்பறியணும்னு ரொம்ப ஆசை . அதாவது crime novels ஒன்னு விடாம படிப்பா.. வேற ஒன்னும் தெரியாது . இவளை கொஞ்ச நாள் உங்க கூட ட்ரைனியா சேர்த்துக்குங்க ப்ளீஸ். எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் என்றார். என்ன சார் திடீர்னு இப்படி கேக்கறீங்க . திடீர்னு இல்ல உங்க டீம் இவளுக்கும் எங்களுக்கும் ரொம்ப புடிச்சி போச்சு. நீங்க என்ன சொல்லறீங்க? . மொதல்ல ஆபீஸ் வரட்டும் அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு வெளில போகலாம் . டிடெக்ட்டிவ் சுஜிதா பேரே சூப்பரா இருக்குல்ல டாடி. அது சரி கவனமா இருக்கனும் சுஜிதா . அவங்க வேலையே ரிஸ்க் தான் . நீயம் சேர்ந்து அதை அதிகப்படுத்த கூடாது. சரி டாடி. நாளைக்கு மார்னிங் வந்துடுங்க இல்லை வந்து பிக்கப் பண்ணிக்கவா . அதெல்லாம் வேணாம் நானே வந்துடுவேன் .

சுஜிதா ஆபீஸ் வந்துவிட்டாள். ராம் அன்றைய அலுவல்களில் மூழ்கி இருந்தான். தீபக் வெளியே கிளம்பி கொண்டிருந்தான் . ராம் எல்லோரும் ஒரு நிமிஷம் வாங்க என்றவாறு சுஜிதாவை அறிமுகப்படுத்தினான். இனிமே சுஜிதாவும் நம்ம டீம்ல ஒரு மெம்பெர். சுஜிதா சில போன் நம்பர்ஸ் தரேன் அவங்களை பத்தி விசாரிக்கணும். ஆனா நாம டிடெக்ட்டிவ் ஆபீஸ்லேயிருந்து பேசுறோம்னு தெரிய கூடாது. ஓகே வா சரி என்றாள் சுஜிதா . அதே மாதிரி இந்த லேண்ட் லைன் ல வர கால்ஸ் யார் பேசுனாலும் அவங்க பேர் போன் நம்பர் பதிவு பண்ணிக்கணும் . மொபைல் நம்பரும் இருக்கு . சரி ஓகே . தீபுவும்,லதாவும் பழைய பைல்களை அடுக்கும் பணியில் இருந்தனர்.

சுஜிதா கவனமாக கால்களை அட்டென்ட் செய்தாள். திடீரென அவளிடம் பதட்டம் ஏற்பட்டது . என்னாச்சு சுஜிதா? யாரோ ஒருத்தர் என்னை இன்னைக்கி ஈவினிங் கொல்ல போறாங்க காப்பாத்துங்க அப்டின்னு சொன்னார். ஏதாவது prank கால் ஆஹ் இருக்கும். மறுபடி அதே நம்பரில் இருந்து போன் வந்தது . சார் உங்க பேர் சொல்லுங்க எந்த ஏரியா அட்ரஸ் சொல்லுங்க என்றால் சுஜிதா . பொறுமையாக குறித்துக்கொண்டாள். இப்போ என்ன சார் பண்றது. நீயும் லதாவும் போய் விசாரிங்க . நானா ? சும்மா போ சுஜிதா ஒன்னும் ஆகாது யாராவது மிரட்டி இருப்பாங்க .நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே வீடு என்று சொன்னார். அங்கே போய் போன் பண்ணியபோது அவரே வந்தார் . நான்தான் போன் பண்ணேன் என் பேரு மாரியப்பன் . வாங்குன கடனோட வட்டியும் கட்டிட்டேன் ஆனா இன்னும் நான் குடுக்க வேண்டியதை சொல்லி மெரட்டிட்டு இருக்காங்க இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள நான் பணத்தை குடுக்கலேன்னா என்னை கொன்னுடுவேன்னு மெரட்டுறாங்க. போலீஸ் போன் பண்ணீங்களா . அவங்க இதை பெருசா எடுத்துக்கலை. நீங்க எதுக்கும் கமிஷனர் ஆபீஸ் போய் பாருங்க. இல்ல மேடம் போகாதீங்க . இப்போ நாங்க என்ன செய்ய முடியும் . நீங்க எவிடென்ஸ் குடுத்தா போலீஸ் அரெஸ்ட் பண்ணுவாங்க. சரி வாங்க உங்க வீட்டுக்கு போவோம் . அவரிடம் எல்லா பேப்பர்களுமே சரியாய் இருந்தது. அதை போட்டோ எடுத்து வாட்ஸாப்ப் செய்தாள்.யார் கிட்ட கடன் வாங்குனீங்க தமிழ்துரைகிட்ட ..சரி அவனுக்கு போன் பண்ணுங்க பேசி பார்ப்போம்.

தமிழ்துரை போனை எடுத்தான் . நான் மாரியப்பன் பேசுறேன் . இன்னும் நீ உயிரோடுதான் இருக்கியா ? நான்தான் எல்லா கடனையும் குடுத்துட்டேனே . ம்ம் கணக்குப்படி இன்னும் ரெண்டு லட்சம் தரணும் அதை தந்துட்டு உன் பையனை கூட்டி போ . அடப்பாவி என் பையனை என்னடா பண்ணீங்க ? சும்மா கூப்டு வெச்சு பேசிகிட்டு இருக்கோம் . நீ இன்னும் சாயங்காலத்துக்குள்ள கொடுக்கலேன்னா பையன் .. வேண்டாம் நான் எப்படியாவது கொடுத்துட்றேன் என்றார் மாரியப்பன். இதை கவனமா ரெக்கார்டர் ல் பதிவு செய்து கொண்ட சுஜிதா ராமுக்கு வாட்ஸாப்ப் செய்தாள். ராம் அதை அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கும், கமிஷனருக்கும் வாட்ஸாப்ப் செய்தான். பையன் அவன்கிட்ட இருக்கான் இப்போ நான் என்ன செய்வேன் என புலம்பினான் மாரியப்பன்.

ராம் இது ஒரு prank கால் தான் நீங்க ஆபீஸ் வந்துடுங்க என்றான் . என்னாச்சு சார் அவனுக்கு பையன் கிடையாது ஒரே ஒரு பொண்ணுதான்னு ஆதார் கார்டு வெரிஃபிகேஷன்ல தெரிஞ்சு போச்சு . எதுக்காக இப்படி பண்ணினானு தெரியல . நாம உதவி செய்வோமா மாட்டோமா அப்டினு நெனச்சிருக்கலாம். அப்ப தமிழ்துரை அவனும் டூபாக்கூர்த்தான் . ரெண்டு பேரும் பேசி வெச்சிக்கிட்டு இந்த வேலை பார்த்திருக்கானுக. என்னால நம்ப முடியலை என்றால் சுஜிதா. இந்த வேலையோட சுவாரஸ்யமே அதுலதான் இருக்கு என்றான் ராம்.என்ன prank கால் ஆஹ் என்று அலுத்துக்கொண்டாள் தீபு. ஆமா ஆனா நல்ல experience. என்னமா நடிக்கிறான் அந்த ஆளு மாரியப்பன். அந்த பேருகூட உண்மையோ என்னவோ ..இன்னைக்கி லஞ்ச் என் treat என்று சொன்னாள் சுஜிதா. அப்ப தீபக்கையும் வர சொல்லி சொல்லிடு . சரி பாஸ். அந்த prank கால் மறந்திடு சுஜிதா உனக்கு confidence வந்துடுச்சா ? அடுத்த தடவை நீயே அவங்களை handle பண்ணு. அடுத்த தடவை யாரவது இப்படி ஏமாத்தட்டும் அப்புறம் பாருங்க இந்த சுஜிதாவோட வேலையை. எல்லோரும் சிரித்தார்கள்.சுஜிதா ட்ரைனீ ஆக வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று . என்ன சுஜிதா உனக்கு நெஜமாவே இந்த profession பிடிச்சிருக்கா என்றான் ராம் . பிடிச்சிருக்கு ஆனா எப்போ பார்த்தாலும் எப்ப என்ன நடக்குமோன்னு இருக்க வேண்டி இருக்கே . அந்த த்ரில் தான் முக்கியம் என்றான். சுஜிதா நீ என்ன பண்ற நாளைக்கு தீபக்கோட போற . அவனை ஒரு முக்கியமான விஷயமா ஒருத்தர் கூப்பிட்டிருக்காரு . நீயும் கூட போய் observe பண்ணு. ஓகே பாஸ் .
மறுநாள் தீபக்கோடு போன இடம் வி ஐ பி ஒருவரின் பண்ணை வீடு . வாங்க தீபக் என்று அமர வைத்தார் . இவங்க புதுசா சேர்ந்துருக்காங்க பேரு சுஜிதா. நாம பேசலாமா. கண்டிப்பா சார்.கொஞ்சநாளைக்கு முன்னாடி என் பேக்டரி ல வேலை பார்த்த ஒருத்தர் மர்மமான முறையிலே இறந்து போயிட்டார். நாங்களும் விசாரிச்சு பார்த்தோம் அது சம்பந்தமா அவங்க குடும்பத்துக்கும் எதுவும் தெரியல . எங்க பேக்டரி ஆளுங்களுக்கும் தெரியல . நீங்கதான் விசாரிக்கும் டீடெயில்ஸ் என் secretary திவ்யா கிட்ட கொடுத்திருக்கேன் வாங்கிக்குங்க . இப்போ தொழிலாளர்களெல்லாம் போராட்டம் பண்றாங்க அதனால இந்த கேஸ் சீக்கிரமா முடிச்சு குடுத்தா தேவலாம். போலீஸ் என்ன சொல்றாங்க . ஒரு துப்பும் கிடைக்கல. ஒரே ஒரு லெட்டர் தான் கிடைச்சது. அதையும் குடுக்க சொல்லி இருக்கேன் வாங்கிக்குங்க .திவ்யா எதுவாயிருந்தாலும் என்னை காண்டாக்ட் பண்ணுங்க என்றாள் . நாங்க ஏற்க்கனவே செத்துப்போன தொழிலாளிக்கு 5 லட்சம் குடுத்துட்டோம் . ஆனா இப்போ அது பத்தாதுன்னு சொல்றாங்க . ஒருவேளை இவரே பண்ணிட்டு நம்மளை வெச்சு செக் பன்றாரோ என்றாள் சுஜிதா . சே சே அப்படியெல்லாம் இருக்காது . நல்ல reputation உள்ள கம்பெனி அது . என்னாச்சு சுஜிதா ? நடந்ததை சொன்னாள் . இந்த கேஸ் சுஜிதாவே handle பண்ணட்டும் . நாம எல்லோரும் சப்போர்ட் பண்ணுவோம் ஓகே என்றான் ராம்.இதை ஒரு challenge ஆஹ் எடுத்துக்குறேன் என்றாள் சுஜிதா.

சுஜிதா இறந்து போன தொழிலாளி வீட்டுக்கு போயிருந்தாள். அவர் பெயர் கந்தசாமி . கொஞ்ச நாளைக்கு முன்னாடி காணாம போய்ட்டார் . நைட் டூட்டி முடிஞ்சு பஸ் ல வந்துருக்காரு . வந்தவரை காணலை . எல்லா இடமும் தேடுனோம். போலீசும் தேடுனாங்க . கடைசில லெட்டரோட பேக்டரி பின்பக்கம் பிணமா கெடந்தாரு . அந்த லெட்டர் ல என்ன எழுதி இருந்துச்சுன்னா கடன் தொல்லை தாங்காமல் சாகிறேன் . என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை . அவருக்கு கடன் வாங்குறதே பிடிக்காது. அவருக்கு கடனே கிடையாது என அடித்து சொன்னாள் அவர் மனைவி. பாக்டரிகாரங்களே ஏதோ பண்ணிட்டு இப்போ நாடகம் ஆடுறாங்க என்றாள். நீங்கதாம்மா உதவி செய்யணும் . ம்ம் நிச்சயமா உதவுறேன் என்றாள் சுஜிதா .