iravukku aayiram kaigal - 33 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 33

Featured Books
  • तमस ज्योति - 51

    प्रकरण - ५१मेरे मम्मी पापा अब हमारे साथ अहमदाबाद में रहने आ...

  • Lash ki Surat

    रात के करीब 12 बजे होंगे उस रात ठण्ड भी अपने चरम पर थी स्ट्र...

  • साथिया - 118

    अक्षत घर आया और तो देखा  हॉल  में ही साधना और अरविंद बैठे हु...

  • तीन दोस्त ( ट्रेलर)

    आपके सामने प्रस्तुत करने जा रहे हैं हम एक नया उपन्यास जिसका...

  • फाइल

    फाइल   "भोला ओ भोला", पता नहीं ये भोला कहाँ मर गया। भोला......

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 33

எது நிலைத்திருக்க போவதில்லையோ அதுவே உன் ஆசை . எது உன்னை நிர்கதியாய் நிறுத்தப்போகிறதோ அதுவே உன் ஆசை . ஆசையை துறந்திட எல்லா உயிர்களையும் சமமாய் நடத்து. குருஜி கண்களை மூடி கொண்டார். இன்னிக்கி பிரசங்கம் முடிஞ்சது எல்லாம் போங்க. அமைதியா போங்க என்றார் தலைமை சீடர். ராம், தீபு, தீபக் , லதா எல்லோரும் தியானத்துக்கு வந்திருந்தார்கள் . எல்லாவற்றிலும் இருந்து விடுபட தியானமே சிறந்ததென்று யாரோ சொல்லி இருந்தார்கள் . ஸ்வாமி.. சே சார் என்ன இது வேஷம் உங்களுக்குத்தான் இதுலெல்லாம் நம்பிக்கை இல்லையே . நம்பிக்கை இல்லைதான்.. ஆனா ஏதோ ஒன்னை நோக்கி மக்கள் போறாங்கன்னா அந்த நம்பிக்கையை நாமளும் மதிக்க வேண்டி இருக்கு . இப்போ என்ன சொல்ல வரீங்க? இந்த குருஜி மேல complaint வந்துருக்கு . அதானே பார்த்தேன் . அது உண்மையா பொய்யான்னு கண்டுபிடிக்கணும் . அதுக்கு தியானம்தான் ஒரே வழி . என்ன சார் கம்பளைண்ட். குருஜி தன்னோட பொண்ணை வசியம் பண்ணிட்டதாகவும் அதுலேர்ந்து தான் காலேஜ் படிக்கிற பொண்ணு தீப்தி வீட்டுக்கு வராம ஆசிரமத்திலேயே தங்கிட்டதா ஜெகநாதன் புகார் குடுத்துருக்கார். போலீஸ் என்ன சொல்றாங்க பொண்ணு மேஜர் . குருஜி யாரையும் கட்டாயப்படுத்தலைன்னு சொல்றாங்க .

நமக்கு குருஜி மேல மரியாதையை இருக்கு ஆனா பொண்ணோட எதிர்காலம் , சூழ்நிலை எல்லாம் நெனைச்சு பார்த்தாஅந்த பொண்ணு காலேஜ் படிப்பை முடிச்சு ஒரு நல்ல வேலைக்கு போகணும்ங்கிறதுதான் என்னோட ஆசை.என்ன பண்ண போறோம் சார் . எல்லோரும் உரக்க சொல்லுங்கள் சாமி குருஜிக்கே ஜெ ஸ்வாமி குருஜிக்கு ஜெ .. ராம் மத நம்பிக்கைகளை மதிப்பவன். ஆனால் fraudகளை வெறுப்பவன். இது அவனுக்கொரு சோதனைக்காலம் . நாம என்ன பண்ண போறோம்னா சாதாரண மெம்பெர்ஸ் லேயிருந்து premium மெம்பெர்ஸ் ஆகிறதுக்கு என்ன உண்டோ அதை செய்ய போறோம் . அதுக்காக நாம ஆபீஸ் ல பூஜை பண்ண போறோம் .பூஜைக்கு குருஜியை வர சொல்லி invite பண்ணுவோம் . அவர் கூட பேசி பாப்போம் . அவர் கூட அந்த பொண்ணு நிச்சயம் வெளியே வரும். அப்படி வரலன்னா நாம அடுத்த பூஜையை ஆசிரமத்துல நடத்த வைப்போம் .வேற வழி இல்ல . அங்கே பூஜை நடக்குறப்போ நாமளே அந்த பொண்ணை தேடி கண்டுபிடிப்போம் . தேவைப்பட்டா போலீஸ் ஹெல்ப் வாங்கிக்குவோம் . நமக்கு தேவை எவிடென்ஸ் . அங்கே கஞ்சா புழங்குறதா ஒரு தகவலும் இருக்கு .

தலைமை சீடரிடம் சொல்லி ஒரு சிறப்பு பூஜை நடத்துவதாகவும் அதற்க்கு குருஜி அவசியம் வரவேண்டும் என சொன்னான் ராம். எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் கொஞ்சம் பேர்தான் குருஜி . அப்படியென்றால் பரவாயில்லை நான் வருகிறேன் . கூட்டம் என்றால் எனக்கு அலர்ஜி என்று உனக்கு தெரியுமல்லவா . நன்றாக தெரியும் குருஜி . தீப்தியை அழைத்து போவோமா குருஜி? அவள் விருப்பத்தை அவளிடமே கேள் . தீப்தி நீங்கள் அந்த டிடெக்ட்டிவ் பூஜைக்கு வருகிறீர்களா ? டிடெக்ட்டிவ் பூஜையா ? ஆம் அவர் ஒரு தனியார் டிடெக்ட்டிவ் நிறுவனம் நடத்துகிறார் . அவசியம் வருகிறேன் . என்றைக்கு பூஜை? வருகிற வெள்ளிக்கிழமை

குருஜிக்கு ஜெ குருஜிக்கு ஜெ என்ற கோஷத்துடன் வந்து இறங்கினார்கள் . தீப்தியை காணவில்லை. சுருக்கென்று இருந்தது ராமுக்கு. குருஜி தங்கள் சிஷ்ய பிள்ளைகள் வரவில்லையா இல்லை அவர்கள் வேறொரு விழாவிற்கு சென்றுவிட்டார்கள் என்று தலைமை சீடர் சொன்னார். லதாவுக்கு சைகை காண்பிக்க எல்லோரும் குருஜியின் காலில் விழுந்தார்கள் . பூஜை முடிந்தவுடன் குருஜி ராமிடம் தனியாக பேச விரும்புவதாக சொன்னார். ராம் கேபினுக்குள் அழைத்து சென்றான். சொல்லுங்கள் குருஜி கொஞ்ச நாளாய் கனவு ஒன்று துரத்துவதாகவும் அதில் தனக்கு போட்டியாக உள்ள மற்றொரு குருஜி தன்னை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டுவதாகவும் அதற்காக ஜெகநாதன் என்பவரை ஏவி விட்டதாகவும் சொன்னார். நான் என்ன செய்தென் தெரியுமா ? அவர் பெண்ணையே எனக்கு பாதுகாவலாக வைத்துள்ளேன் . என் மீது அவன் நடவடிக்கை எடுத்தால் அடுத்த நிமிடம்..புரிகிறது குருஜி . அந்த பெண் இப்போது என் கட்டுப்பாட்டில் இருக்கிறாள் . கொஞ்ச நாளைக்கு அவள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .ஆசிரமித்தில் அவ்வளவு பாதுகாப்புமில்லை. அவர்கள் உன்னிடத்தில் வேலை செய்பவர்களோடு சேர்ந்து இருக்க முடியுமா ? அதற்கென்ன குருஜி நிச்சயமாக முடியும் .நான் அதற்குள் அந்த ஜெகநாதனை ஒரு வழி பண்ணிவிட்டு வருகிறேன்.ஆகட்டும் குருஜி . அந்த பெண் பெயர் தீப்தி . நாளை மாலை அந்த பெண் இங்கு வருவாள் . கவனமாக பார்த்துக்கொள் .
ஜெகநாதனிடம் பேசினான் . ரொம்ப தேங்க்ஸ் ராம் . அவசரப்படாதீங்க நீங்க இப்போ பேசினா உங்க பொண்ணு மறுபடியும் ஆசிரமத்துக்கே போயிடுவா . நாங்களே கொஞ்ச கொஞ்சமா புரிய வைக்கிறோம் . இது நடக்குமா சார். கண்டிப்பா நடக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க சார் . தீப்தி விலை உயர்ந்த காரில் வந்து இறங்கினாள். லதாவும் , தீபுவும் அவசரப்பட்டு கை குலுக்க முயன்றார்கள் . ராம் எங்கே என்று கேட்டாள். ராம் அப்போதுதான் வெளியில் இருந்து உள்ளே வந்தவன் . என்ன சாப்பிடுகிறீர்கள் தீப்திஜி என்றான். ஒன்றும் வேண்டாம் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொள்கிறேன் .வாருங்கள் என் கேபினுக்கு செல்வோம் என்றான் . தீப்தியும் ராமும் பேசி கொண்டிருந்த போதே அவள் உறங்கிவிட்டாள். அங்கே இருந்த சோபா ஒன்றில் அவளை படுக்க வைத்தான்.

கேபினை விட்டு வெளியே வந்து என்ன சார் சொல்றாங்க ? அவளுக்கு கடுமையான தலைவலியும் காய்ச்சலும் இருந்ததால் நேத்தே வர முடியல அப்படின்னு சொன்னாங்க . லதா உன் வீட்ல எல்லா பாதுகாப்பும் பண்ணி இருக்கில்ல . பக்கா சார். கொஞ்ச நேரத்தில் எழுந்து விட்டாள் தீப்தி.
ராம் எனக்கு பசிக்குது அவசரத்தில் பிரியாணி வாங்கி வரட்டுமா என்றான். மன்னியுங்கள் தீப்திஜி என்ன வேண்டும் உங்களுக்கு என்றான் . இட்லி போதும். என்னை சாதாரணமாக நடத்துங்கள் அதுவே போதும் என்றாள்.தீப்தி லதாவோடு நன்கு பழகிவிட்டாள்.

முதல் ரெண்டு நாட்கள் உம்மென்று இருந்தவள் இப்போது சகஜமாகிவிட்டாள். ஜெகநாதன் இடையிடையே போன் செய்து விசாரித்தார். அவ்வப்போது தீப்தி பூஜை செய்து பக்தி பாடல்களை பாடி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள். அவர்கள் அதிசயமாக சினிமாவுக்கு போனார்கள் . கடைசியா எப்போ போனே தீப்தி என்று விசாரித்தான் . அப்பா கூட என்று சொல்லிவிட்டு மௌனமானாள். இவன் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் விட்டு விட்டான்.தீப்தி ஆசிரமத்தில் எப்பவுமே என்ன பண்ணுவீங்க . ஒரே டான்ஸ் தான் . எப்பவுமே பஜனைதான் . பூஜை பண்ணுவோம் . எப்படி குருஜி உனக்கு பிடிச்சி போச்சு ? அவர் எங்க காலேஜ் வந்து பிரசங்கம் பண்ணினார் . அப்போ நான் ஸ்டுடென்ட்ஸ் லீடர். அவர் என்கிட்டே வந்து துஷ்ட சக்தி கிட்டே இருக்காதே வந்துடுன்னு சொன்னார். துஷ்ட சக்தி அதான் அந்த ஜெகநாதன் . இதுக்கு மேல கேக்காதீங்க .சரி தீப்தி உங்களுக்கு இங்க இருக்க பிடிச்சிருக்கா ? ரொம்ப . ஆமா உங்களுக்கு கேஸ் எதுவும் இல்லையா ஏன் இருக்கே , என்னையே சுத்தி வரீங்களே. அது ஒன்னும் இல்லை . நீங்க எங்க ஸ்பெஷல் கெஸ்ட் . நீங்க பிஸ்டல் வெச்சிருக்கீங்கனு தீபு சொன்னா ? அதை காட்டுங்களேன் . இப்போ வேண்டாம் தீப்தி. குருஜி போன் செய்திருந்தார் . தீப்தியிடம் பேசினார். என்னாச்சு தீப்தி குருஜி என்ன சொல்லுறார். என்னை ரொம்ப மிஸ் பண்ணுனதா சொன்னார். அப்புறம் ஒரு விஷேஷ பூஜை இருக்கு அதுக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரணும்னு சொன்னார். நீ என்ன சொன்னே . வரேன்னு சொன்னேன் வேறென்ன சொல்ல முடியும் . உன் விருப்பம் என்ன . எனக்கு உங்க கூட இருந்தா போதும் ராம் என்று கட்டிக்கொண்டாள் . அவள் அழுது கொண்டிருந்தாள் . என்னை எப்படியாவது காப்பாத்துங்க ராம் என்று அழுதாள் . மயங்கிவிட்டிருந்தாள். அவளை டாக்டரிடம் அழைத்து போனான். கடுமையான depression . இப்போ கொஞ்சம் டேப்ளெட்ஸ் கொடுத்திருக்கேன் .இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன் . ரெண்டு மணி நேரத்துல அவங்கள கூட்டிபோகலாம் .

லதாவும், தீபுவும் தீப்தியின் பக்கத்திலேயே இருந்தார்கள் . ஜெகநாதனுக்கு விஷயத்தை சொன்னார்கள் . ரொம்ப நன்றி ராம். உங்க ஹெல்ப்பை என் வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன் . இன்னும் நெறைய வேலை இருக்கு சார். அத முடிச்சதும் நானே கூப்பிடுறேன். அடுத்த வெள்ளிக்கிழமை பூஜைக்கு தீப்தி போகக்கூடாது காலேஜீக்குத்தான் போகணும் . என்ன செய்யலாம் . மொதல்ல ஜெகநாதன் கொடுத்த கேஸ் வாபஸ் வாங்க சொல்லணும் . மறுநாள் போன் செய்த போது ஜெகநாதன் போன் எடுக்கவில்லை . சுவிட்ச் ஆப் என்று வந்தது . நேரில் போய் பார்க்கலாம் என நினைத்த போது குருஜியிடம் இருந்து போன் வந்தது . தீப்தி இப்போதைக்கு இங்கே வரவேண்டாம் . ஏன்னா அவங்க அப்பனை தூக்கிட்டேன். என்ன சொல்லறீங்க குருஜி . இந்நேரம் அவனை கடத்துனவங்க என்ன பண்ணுவாங்கனு சொல்ல முடியாது . நான் அவனை கடலிலே போட சொல்லிட்டேன் . நான் வேணா ஒரே ஒரு தடவை பேசி பார்க்கட்டா ? எதுக்கு வீணா ஒரு கொலை பழி . சரி பேசி பாரு இனிமே அவன் என் விஷயத்திலயும் தீப்தி விஷயத்திலேயும் தலையிட கூடாது .

சரி என்று சொன்னான் . தலைமை சீடர் கொஞ்ச நேரத்தில் போன் செய்தார். அவனை விட்டாச்சு . உங்களுக்கு அவன் நம்பர் அனுப்பியிருக்கேன் பேசி பாருங்க .. என்னாச்சு ஜெகநாதன் . எவனோ நாலு ரவுடி பசங்க என்னை தூக்கிட்டு போய்ட்டாங்க சார். என்ன நெனைச்சாங்களோ விட்டுட்டாங்க . குருஜி வேலையாதான் இருக்கும் . நீங்க நாளைக்கே குருஜி மேல குடுத்த complaint வாபஸ் பண்ணுங்க சார்.நான் குருஜிக்கிட்டே பேசிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் பொண்ணு உங்க கூட இருப்பா .