iravukku aayiram kaigal - 29 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 29

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 29

ராமுக்கு மூன்று நாட்களாக ஜுரம் . தெருமுனை டாக்டரிடம் போய் ஊசி போட்டுகொண்டு வந்தான்.ராமுக்கு டாக்டர்ஸ் என்றாலே பயம் கலந்த அலர்ஜி. என்ன பாஸ் ஊசி போட்டார்களா என்றாள் தீபு . ஆமா ஊசின்னா எனக்கு பயம் பாரு . சின்ன பிள்ளை போல தீபு சிரித்தாள் . டாக்டர் பிரதாப் மிஸ்ஸிங் னு பேப்பர் ல வந்துதே ஏதாவது updates ?அவரு காணா போய் ஒரு வாரம் ஆகுது .இன்னும் கிடைக்கலை. ரொம்ப நல்ல டாக்டர் ஏழைகளுக்கு இலவசமா treatment பண்றவர்.

நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ் .சரி தீபு யாராவது எனக்கு போன் பண்ணா அட்டென்ட் பண்ணு. ஓகே பாஸ் . ராம் சோபாவிலேயே படுத்து தூங்கினான் . தீபு மற்றொரு செய்தியை அப்போதுதான் கவனித்தாள். பிரபல எழுத்தாளர் ரஞ்சன்குமார் கொலை .மருத்துவ கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக கட்டுரை எழுதி வந்த நிலையில் கொலை . ராமுக்கு கால் வந்தது . டேய் ராம் என்னோட காரை காணோம் டா . ஹலோ ஒரு நிமிஷம் ராம் சார் உடம்பு சரியில்லாம ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காரு .நீங்க யாரு ? நான் தீலிப் பேசறேன் ராமோட friend . தீபு தானே நீங்க நான் டீடெயில்ஸ் வாட்சாப் பண்ணியிருக்கேன் . நான் இப்போ abroad ல இருக்கிறதால என்னால வர முடியாது . என் மனைவிதான் காரை ஷாப்பிங் எடுத்துட்டு போயிருக்காங்க .போலீஸ் கம்பளைண்ட் பண்ணி பார்த்துட்டோம். ஆனா ப்ரொயஜனமில்லை .எவ்ளோ நாள் ஆகுது ? ஒரு வாரம் ஆகுது . ராமே எழுந்துவிட்டான். கொஞ்ச நேரம் தூங்க முடியலியே என்றான். தீபக்குக்கு அந்த டீடெயில்ஸ் வாட்ஸாப்ப் பண்ணு. கார் ரொம்ப costly கார் .எழுத்தாளர் ரஞ்சன்குமார் கொலையும் கவனிச்சீங்களா பாஸ். கழுத்தை இறுக்கி அவர் கதைல வர்ற மாறி பண்ணி இருக்காங்க .அவர் எந்த ஊரு திருச்சி . டாக்டர் பிரதாப் ?சென்னை. பிரதாப் பூர்விகம் கூட திருச்சி பக்கம் தான் .

என்ன மேடம் என்ன நடந்துச்சு என்றான் .முதல்லே உள்ள வாங்க என்றாள் மைதிலி. காபி குடுத்தாள் . எப்பவும் போல ஷாப்பிங் போனேன் . திரும்ப வந்து பார்த்தா காரை காணோம். பார்க்கிங் செக்யூரிட்டி கேட்டா பதில் இல்ல .போலீஸ் விசாரிச்சாங்க . கார் ல tracking வசதி இருக்கா மேடம் இருக்கு ஆனா ஒர்க் பண்ணல . பெட்ரோல் tank புல்லா இருந்துச்சா . ஆமா அப்ப கண்டிப்பா ஆந்திரா பார்டர் தாண்டியிருப்பானுக .இதுல எந்த gang involve ஆயிருக்குனு தெரியல. ஏதாவது ஸ்பெஷல் அடையாளம் இருக்கா . அப்டி எதுவும் இல்ல. யார் இந்த கேஸ் விசாரிக்கிறா? இன்ஸ்பெக்டர் புவனேஷ்.சரி மேடம் நான் வரேன், ஏதாவது பணம் கேட்டு போன் வந்ததா? இல்லை தீபக்.

புவனேஷ் பழைய கிரிமினல் கோப்புகளை ஆராய்ந்தான். எல்லா செக்போஸ்டுக்கும் காரின் போட்டோவை அனுப்பி தேட சொன்னான். 3 தனிப்படைகள் அமைத்தான். ராம் இந்த டாக்டர் கேஸ் ம் எழுத்தாளர் ரஞ்சன்குமார் கேஸுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ என்றாள் தீபு. மொதல்ல காணாம போன காரை கண்டுபிடிப்போம் .
பார்க்கிங் ஏரியாவுக்கு அருகிலே வேற பார்க்கிங் இருக்கான்னு பாக்கணும் . எல்லா பார்க்கிங் ம் செக் பண்ணனும் . ஷாப்பிங் complex உள்ளேயிருந்து வெளியே யாராவது சந்தேகப்படுறமாரி வரங்களான்னு பாக்கணும் .ஓகே சார் . எல்லா பார்க்கிங்களையும் செக் செய்ததில் கார் கண்டுபிடிக்கப்பட்டது . கார் அதே பார்க்கிங்கில் வேறொரு கோடியில் நின்றது.மைதிலி தான் கதவை திறந்தாள் . அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று நழுவி சரிந்தது .அடையாளம் தெரியாத அளவு அந்த ஆள் மாறி இருந்தார் .

என்ன ராம் சொல்லறீங்க மைதிலி கார்ல ? மை god ..காரை அந்த ஆளை கடத்தத்தான் எடுத்திருக்க வேண்டும் . காரிலேயே வைத்து லாக் பண்ணி விட்டு போனதில் உயிர் போயிருக்கிறது .காணாமல் போனவர்கள் பட்டியல் வைத்து விசாரிக்கும் போது அது டாக்டர் பிரதாப் என தெரிய வந்தது . மைதிலியை சந்தேகத்தின் பேரில் அரெஸ்ட் செய்து சிறையில் அடைத்தார்கள்.திலீப் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டான் . அவ ஏண்டா டாக்டரை கொல்லனும். கொஞ்சம் பொறு போலீஸ் விசாரிச்சுட்டு தானாவே ஜாமீன்ல விடுவாங்க . நல்லா யோசிச்சு சொல்லுங்க மேடம் ,உங்களுக்கும் பிரதாப்புக்கும் என்ன connection அவர் கிட்டே treatment ஏதாவது எடுத்தீங்களா .இல்ல எனக்கு அவரை தெரியாது . வெளியூர் எங்கேயும் போகக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது . கார் ஓடிய தூரம் செக் பண்ணிய போது அது அதிக தூரம் ஓடி இருக்கவில்லை . தீலிப் இந்த கேஸ் எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தினான் . போலீஸ்தான் விசாரிக்கிறாங்களே ? இருந்தாலும் மைதிலியை விட்டா எனக்கு யாரும் இல்லடா ப்ளீஸ் என்றான். ஆல் ரைட் ஆனா மைதிலி cooperate பண்ணனும் ஓகே. Shure டா என்றான் தீலிப் .

எல்லா விடியோவும் செக் பண்ணியாச்சு . இந்த கார் எப்படி அங்க வந்ததுன்னு தெரியல . அவர் கையிலே இருந்த பையிலே சில research papers இருந்ததாகவும் அது health பார்மா நிறுவனத்தை பத்தி இருந்ததாகவும் போலீஸ் சொல்றாங்க .ஹெல்த் பார்மா நிறுவனம் ஸ்கின் கேர் மெடிசன்களை தயாரித்து வந்தது. அதற்கான தயாரிப்பு ஆலோசனை குழுவில் டாக்டர் பிரதாப் இருந்தார். சமீபத்தில்தான் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்தார். நிறுவனத்திடம் இருந்த நம்பிக்கை போய்விட்டது என குறிப்பிட்டிருந்தார்.இப்போ என்ன சார் பண்றது . இதை செஞ்சது யார்னு தெரியலியே . மோட்டிவ் clear ஆஹ் இருக்கு . ஹெல்த் பார்மா நிறுவனம்தான் இதுல சம்பந்தப்பட்டிருக்கனும். பிரேக்கிங் நியூஸ் ஹெல்த் பார்மா நிறுவனம் அறிக்கை எங்களுக்கும் டாக்டர் பிரதாப்புக்கும் இதுல எந்த தொடர்பும் கிடையாது . அவர் இறந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். எங்களுடைய ஆழ்ந்த அஞ்சலிகள் என்று CEO குருமூர்த்தி அறிக்கை கொடுத்திருந்தார்.

என்னை எதிர்த்து நின்னு போராட முடியுமா ? இவன் போனா வேற ஆளா இல்ல என்று கொக்கரித்தான் குருமூர்த்தி .அந்த research papers ல பகுதி மிஸ் ஆயிருக்கு என்றான் புவனேஷ் . புவனேஷ் நேர்மையான அதிகாரி என்ற போதும் உயர் மட்ட அதிகாரிகளின் பிரஷர் காரணமாக இதை கேஸ் கண்டும் காணாமல் விட்டான். இறுதியில் டாக்டர் பிரதாப் தற்கொலைதான் செய்துகொண்டார் என்ற அறிவிப்பு வந்தது .ராம் இதற்கு மேல் இந்த கேசில் செய்வதற்கு ஒன்றுமில்லை . கேஸ் மூடிவிட்டார்கள் . ராம் எதற்கும் பிரதாப் குடும்பத்தாரை சந்திக்க விரும்பினான் . அவர்களும் சந்திக்க மறுத்தார்கள் . ஹெல்த் பார்மா கம்பெனி யால் மிரட்டபட்டிருக்கலாம் . அவருடைய மருமகன் போன் செய்திருந்தார் . சாரி சார் கடந்த முறை நீங்க கூப்பிட்ட போது கடுமையான மனா உளைச்சலில் இருந்தோம் . இப்போ கொஞ்சம் பரவாயில்லை . என்ன விஷயமா பாக்கணும்னு சொன்னீங்க என்றான். உங்க பேரு? என் பேரு மணி . சரி இன்னைக்கு உங்களை மீட் பண்ண முடியுமா . சரி மதியம் 1 மணிக்கு என் ஆபீஸ் வாங்களேன் . ஓகே thankyou .

வாங்க சார் நீங்க ஏன் இதுல இவ்ளோ ஆர்வம் காட்டறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ராம். என்னுடைய friend மனைவி கார்லேதான் இந்த சம்பவம் நடந்தது . இப்போ நாங்க யாருமே நிம்மதியா இல்லே . மீடியா வேற எங்களுக்கும் பார்மா கம்பெனிக்கும் பிரச்னைங்கிற மாதிரி கிளப்பி விடுறாங்க . அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை . எனக்கு அவரோட recent research papers வேணுமே . சரி ஈவினிங் 7 ஓ கிளாக் வாங்க அவரோட ரூம்ல ஏதாவது இருந்தா எடுத்து தரேன் . தேங்க்ஸ் ஆனா எதுவா இருந்தாலும் என்னை கேக்காம நீங்க proceed பண்ணக்கூடாது . shure.

வேறு வேலைகள் இருந்ததால் தீபக்கை அனுப்பி research பேப்பர்களை வாங்கி வர சொல்லியிருந்தான். இன்னும் மணி வந்திருக்கவில்லை அவருடைய மனைவி கொஞ்ச நேரம் பொறுங்க அவர் வர்ற நேரம்தான் என்றாள்.இந்த ரூம்ல இருக்குற பிசி ல தான் அவரோட papers எல்லாமே இருக்கு நீங்க படிச்சு பார்த்து எடுத்துட்டு போங்க .நான் ஒன்னு செய்யறேன் என் பென் டிரைவ் ல copy பண்ணிக்குறேன் . சரி உங்க இஷ்டம் என்றான் மணி. அவருக்கு எதிரிகள் நெறைய . இலவசமா சேவை பண்றதை நெறைய பேருக்கு புடிக்கல என்றாள் மணியின் மனைவி . சிறிய ஒலி பதிவு செய்யும் கருவியை மறைத்து வைத்து இருந்தான் தீபக். என்னங்க எல்லா papers இவன்கிட்டே கொடுத்துட்டா பார்மா கம்பெனிக்கு யார் பதில் சொல்லுவா ? நான் அதெல்லாம் தனியா பிரிச்சு எடுத்துட்டேன் . அவங்க பணத்தை செட்டில் பண்ணவுடனே குடுத்துத்துடுவேன். அது எங்க இருக்குனு உனக்கு கூட தெரிய வேண்டாம் .உயிருக்கே ஆபத்தாய் முடியும் . இதை கேட்ட தீபக் சற்றே அதிர்ச்சி அடைந்தான். ராமிடம் விஷயத்தை சொன்னான் . சார் பார்மா கம்பெனி கூட மணி டீல் பேசி இருக்காரு .சரி தீபக் நீ ஆபீஸ் வந்துடு பேசிக்கலாம் .

அப்போ இதுல இருக்குற டீடெயில்ஸ் எல்லாம் வேஸ்ட்ட்டா . இல்ல சார் நான் சில முக்கியமான மெயில் லிஸ்டை காபி பண்ணிட்டு வந்திருக்கேன் அதுல யாராவது சில பேருக்கு தெரிஞ்சிருக்கலாம் . ஒவ்வொரு காண்டாக்ட்டையும் செக் பண்ணினான். கடைசி காண்டாக்ட் நிரஞ்சன் குமார் என்று இருந்தது . நிரஞ்சன் குமார் போன் நம்பர் இருந்தது . அப்போது மணியிடம் இருந்து அழைப்பு வந்தது .. சார் என்னை காப்பாத்துங்க சார்.. என்ன விஷயம் மணி? என் மனைவியை கடத்திட்டாங்க சார் என்றான். யாரு? பார்மா கம்பெனிகாரங்க..என்ன நடந்துச்சு மணி என்பதற்குள் போன் துண்டிக்கப்பட்டது .