இரவு பல ரகசியங்களை கொண்டது . மனித மனமும் தான். இதைப்பற்றி ராம் சிந்தித்து கொண்டிருந்த போது.. சார் என்ன சிந்தனைல இருக்கீங்க. தீப்தி ஏன் அடுத்தவர்களுக்காக அந்த முடிவை எடுத்தா ? உண்மையிலேயே நன்றிக்கடனுக்கு மதிப்பு இருக்குது போல . சார் அந்த கேஸ் விட்டு வெளிய வாங்க . இப்போ ஒரு புது கேஸ் வந்திருக்கு . அதுக்குள்ளயா ? பண மோசடி கேஸ் .
ஏழுமலையை பேங்க் ல பணத்தை கையாடல் பண்ணிட்டதா சொல்லி அரெஸ்ட் பண்ணி இருக்காங்க . அவர் மேல எந்த தப்பும் இல்லனு ப்ரூவ் பண்ணனும் . ஏழுமலை போலீஸ் ஸ்டேஷன்லேயே இறந்துட்டாரு. அந்த பணத்தை கட்ட சொல்லி குடும்பத்தாரையும் தொந்தரவு பண்ணிருக்காங்க. அவங்க பையனும் பொண்ணும் வேற வழி இல்லாம நம்மகிட்டே வந்திருக்காங்க. பையன் பேரு பிரதீப் ,பொண்ணு பேரு ரோகினி . ரெண்டு பெரும் காலேஜ் ல படிக்கிறாங்க . அவங்களுக்கு அம்மாவும் கிடையாது . இப்போ ரொம்ப கஷ்டத்துல இருகாங்க சித்தப்பா நந்தகுமார் வீட்ல இருக்காங்க . அவரும் பேங்க் ல தான் வேலை பாக்குறாரு . ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் ஒருபக்கம் ஏழுமலை சாவுக்கு போலீஸ்தான் காரணம்னு சொல்லி போராட்டம் நடத்திக்கிட்டு இருக்காங்க. தீபு எந்த பேங்க்? கோகோ பேங்க் .இப்படி ஒரு பேங்க் ஆ? ஏழுமலை என்னவா இருந்தாரு கேஷியர் ஆ இருந்தார். எவ்ளோ பணம் மிஸ் ஆச்சு ரெண்டு லட்சம் .
போலீஸ் அந்த பணத்தை தேடுனாங்களா எல்லா இடத்துலயும் விசாரிச்சுட்டாங்க . வீட்டுக்கு போய் சேர்ச் பண்ணி இருக்காங்க . நந்தகுமார் குடும்பம் ? அவர்க்கு ஒரு பையன் ஸ்கூல் படிக்கிறான். நாம இந்த கேஸ் எடுக்கறதுக்கு முன்னாடி ஏழுமலை பத்தி தெரியணும் . ஏழுமலை நல்ல நாணயமான மனுஷன்னுதான் சொல்றாங்க . அதுக்குள்ளே விசாரிச்சிட்டியா ? இல்லே அந்த பொண்ணும் ,பையனும் அடிச்சு சொல்றாங்க . ஹ்ம்ம் யாரு ஏழுமலை மேல complaint பண்ணது . branch மேனேஜர் பரமசிவம் . சரி நாம நேரிடையா இதுல தலையிட முடியாது . ஆனா நம்மள முடிஞ்ச ஹெல்ப் பண்ணுவோம் . சாயங்காலம் அவங்க ரெண்டு பேரையும் வரச்சொல்லு . வேண்டாம் நாம நந்தகுமாரை மீட் பண்ணலாம் . அவரை சாயங்காலம் நாமளே போய் பாக்கலாம் .
இன்ஸ்பெக்டர் ரமேஷ் போன் பண்ணினார். சொல்லு ரமேஷ் இந்த கேஸ் நீ எடுக்க வேண்டாம் ராம் . ஏன் ? ஒரு விதத்துல போலீஸ் மேலேயும் தப்பிருக்கு . அதனாலே நாங்க இந்த கேஸ் கூடிய சீக்கிரம் கிளோஸ் பண்ணப்போறோம் . நீ தலையிட்டா அது எங்களுக்கு கெட்ட பேராகும்.நான் இதை ஒரு request ஆ கேக்குறேன் . நான் யோசித்து சொல்றேன் என்றான் ராம் .
அடிச்சே கொன்னுட்டாங்க பாவிங்க என்றார் நந்தகுமார். ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம் சார். நீங்கதான் பார்த்து ஹெல்ப் பண்ணனும். நான் என்ன செய்யணும்னு நீங்க எதிர்பாக்கறீங்க. எங்க அண்ணன் நல்லவருன்னு நிருபீச்சாதான் அவரு ஆத்மா சாந்தி அடையும் . பணம் போகும் வரும் நாளைக்கு இந்த பிள்ளைக மேல பழி வரும் .அதுக்காகவாவது இந்த கேஸ் எடுங்க சார் . முன்னாடி நான் அதே branch ல தான் வேலை பார்த்தேன். அங்க நெறைய தப்பு நடக்குது சார். பரமசிவத்துக்கு தெரியாம என்னவோ நடக்குது .ஏதாவது emergency செலவு ,தேவை இருந்ததா?அப்டி ஒன்னும் இல்லை .நீங்க என்னவா இருக்கீங்க நானும் கேஷியர் தான் சார் . எந்த பேங்க் dfdc பேங்க்.நாளைக்கு சொல்லட்டுமா ? ஓகே சார் . போலீஸ்தான் அடித்து கொன்றது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருந்தது . அவர் ஏற்கனவே ஹார்ட் patient . அட்டாக் ஏற்பட்டுதான் இறந்தார் என போலீஸ் சொன்னது .
தீபக் அந்த பணம் எங்கேன்னு கண்டுபிடிக்கணும் . இல்லே எங்கேயாவது மிஸ் பண்ணிட்டு ஏழுமலை மேல போடறாங்களான்னு பாக்கணும் . இந்த கேஸ் நாம solve பன்றோம் . பேங்க் உள்ளே என்ன நடக்குதுன்னு நமக்கு எப்படி சார் தெரியும் . ஓபன் பன்றோம் account நாளைக்கே .அக்கௌன்ட் ஓபன் பண்ணனுமா இந்த பார்ம் பில்லப் பண்ணுங்க 10000 டெபாசிட் கட்டுங்க . மினிமம் பாலன்ஸ் 10000 .உங்களுக்கு கிரெடிட் கார்டு எதுவும் வேணுமா சார் . ரொம்ப அவசரப்படுறீங்களே உங்க பேரெண்ணனு தெரிஞ்சுக்கலாமா ?சௌம்யா. சௌம்யா அன்பழகன். ஓ லோன் எடுக்க என்னென்ன போர்மாலிட்டீஸ் . அதெல்லாம் மேனேஜர் ரங்கராஜன் கிட்டே பேசிக்குங்க.ராம் சுற்றி நோட்டமிட்டான் . இங்கே எப்படி ஏழுமலை வேலை செய்திருப்பார் என்று யோசித்தான் . பியூன் பெயர் குமரேஷ் .
பிரதீப்பும், ரோகிணியும் இவனை பார்க்க வந்திருந்தார்கள் . டீயை குடிங்க மொதல்ல என்றான் ராம் . சொல்லுங்க உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ? இல்லை சார் .எப்போ போலீஸ் வந்து அப்பாவை அரெஸ்ட் பண்ணாங்க 15 ம் தேதி . என்ன சொல்லி கூப்பிட்டு போனாங்க. ஏ டி எம் ல போட சொன்ன போது அதுல பணம் குறைச்சலா இருந்திருக்கு . கூட யாரவது போயிருந்தாங்களா வெங்கட் அங்கிள் தான் இருந்தார் . ஆனா அவருக்கும் இதுக்கும் தொடர்பில்லைனு போலீஸ் சொல்லிட்டாங்க .எப்பவுமே வெங்கட் அங்கிள் தான் கூட போவாரு . machine fault எதுவும் இருக்குமோ . அப்படி எதுவும் இருக்க வாய்ப்பில்லைனு அப்பா சொன்னாரு .சௌம்யா மேடம், எனக்கு லோன் வேணும்னு சொன்னேனே .. சும்மா தொந்தரவு பண்ணாதீங்க சார் . ரங்கராஜன் சார் இவரை கொஞ்சம் அட்டென்ட் பண்ணுங்களேன் . இங்கே வாங்க சார் எவ்ளோ லோன் வேணும்? என்ன லோன் வேணும் .உங்க பேரென்ன என்ன பண்றீங்க . எல்லாம் சொன்னான். சாரி சார் டிடெக்ட்டிவ் agencyகெல்லாம் லோன் தர முடியாது .அப்ப லோன் வேண்டாம் சார் . என்னதான் சார் வேணும் உங்களுக்கு. உங்ககிட்டே முக்கியமான விஷயம் பேசணும். என் நம்பர் நோட் பண்ணிக்குங்க
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமயிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது . ஏழுமலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது . என்ன விஷயம் சார் என்கிட்டே ஏதோ பேசணும்னு வர சொன்னீங்க அப்புறம் சைலெண்டா இருக்கீங்க . பாருங்க எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது . இப்போ ஏழுமலை மேல கேஸ் வாபஸ் வாங்கணும் . அதுக்கு என்ன செய்யணும் . நான் கிளம்பறேன் சார். எனக்கும் அதுக்கும் என்ன சார் சம்பந்தம் . ஏதோ லோன் விஷயமா பேச கூப்பிட்டிங்கன்னு வந்தேன் . கோச்சுக்காதீங்க சார் .உங்க பேருல விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட் க்கு ஒரு complaint போயிருக்கு. அது யார் கொடுத்தானு தெரியனுமா .உக்காருங்க சார் பேசுவோம் என்றான் ராம் .
ஏழுமலை நல்லவன்தான் நான் ஒத்துக்கிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்ஸ்பெக்டர் பவித்ரன் நகையை அடகு வைக்க வந்தப்ப அது போலி நகைன்னு கண்டு பிடிச்சிட்டாரு. அப்போலேயிருந்து அவருக்கும் போலீசுக்கும் ஆகலை. இதுக்கு முன்னாடி இருந்தவங்க அட்ஜஸ்ட் பண்ணி போனாங்க . ஆனா ஏழுமலை போகலை. பவித்ரன்தான் இப்போ ஏழுமலை கேஸ் விசாரிச்சாரு அவரே பழி தீர்த்துக்கிட்டாரு . ஏழுமலைய torture பண்ணப்ப அவரு ஸ்டேஷன் ல இல்லாத மாதிரி பார்த்துக்கிட்டாரு . இதெல்லாம் உங்களுக்கெப்படி தெரியும். நமக்கு எல்லா இடத்துலயும் ஆள் இருக்குப்பா. எனக்கு வெங்கட் மேல தான் சந்தேகம் எனக்கும் அவன் மேலதான் சந்தேகம் ஆனா அவன் transfer வாங்கிட்டு போயிட்டான்.இப்போ என்ன தீபு பண்றது . வெங்கட் இப்போ திருவண்ணாமலைக்கு transfer ஆகி போயிட்டானாம் . ஏ டி எம் ல இருக்கிற கேமரா எல்லாம் செக் பண்ணியாச்சாம் . ரெண்டு லட்சம் . நான் நாளைக்கே திருவண்ணாமலை போறேன் . வெங்கட்டை நேரில் பார்த்து பேசுறேன். வேண்டாம் சரியான ஆதாரம் இல்லாம போய் என்ன பண்ண போறீங்க . போய் அவனை பார்த்துட்டு வரேன் ஒரு வேளை மனசாட்சி உள்ளவனா இருந்தா ஒத்துப்பான் .
வெங்கட் பொரிந்து தள்ளிவிட்டான் ..யார் சார் நீங்க ? நீங்க ஏன் இந்த விஷயத்துல என்கிட்டே விசாரிக்கிறீங்க . போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன். சரி ஒன்னும் சொல்ல வேண்டாம் . என்ன நடந்ததுன்னு சொல்லுங்க அதை போய் போலீஸ் ல கேளுங்க . நீங்கதான் அவர் பணம் எடுத்துட்டு போனதா சாட்சி சொல்லி இருக்கீங்க . ஆமா நான் பார்த்ததை சொன்னேன் . சரி நான் வரேன் . இது யாரு நம்ம குழந்தையா ? என்றவாறு அங்கிருந்து கிளம்பினான் ராம்.
kumaresh என்னை எதுவும் கேக்காதீங்க சார் . எனக்கு எதுவும் தெரியாது சார். அடுத்த ஸ்கெட்ச் சௌம்யாவுக்குத்தான் என்றவுடன் என்ன சார் சொல்றீங்க . ஆமாம் ரங்கராஜனை பத்தி விஜிலன்ஸ்க்கு லெட்டர் போட்டது சௌம்யான்னு தெரிஞ்சு போச்சு அதனால அடுத்து ஜெயிலுக்கு போக போறது சௌம்யா . அவங்கதான் லெட்டர் போட்டாங்கன்னு தெரியுமா உங்களுக்கு. லெட்டரை காட்டட்டுமா . வேண்டாம் சார். நானே எல்லாம் சொல்றேன் . இந்த பேங்க் ல நல்ல டீம் கெட்ட டீம் ரெண்டு டீம் இருக்கு . நான் ,சௌம்யா மேடம் ,பரமசிவம் எல்லாம் ஒரு டீம். ரங்கராஜன், வெங்கட் மத்தவங்க எல்லாம் மற்றொரு டீம். ஏழுமலை எங்ககூடத்தான் இருந்தாரு .
அன்னிக்கி வெங்கட்தான் முதல்ல ரெண்டு லட்ச ரூபாய் காணோம்னு சொன்னான். அவனே அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ஏழுமலை மேல சந்தேகத்தை கிளப்பினான். நான் விசாரிச்சப்போ அந்த பணம் வெங்கட் கிட்ட தான் இருக்கு . ஆனா அது எந்த லாக்கர் ல இருக்குனு தெரியல . அதோட அவன் transfer ஆகி போயிட்டான். வெங்கட் மனைவி பேர்ல ஒரு லாக்கர் இருக்கு சார். வேண்டாம் சார் அது ரொம்ப ரிஸ்க்கு . அவங்க இல்லாம அதை ஓபன் பண்ணவும் முடியாது . நான் பேசி பார்க்குறேன். அவங்க சம்சாரம் போன் நம்பர் குடுங்க . எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க நான் எடுத்து தரேன் . ராம் நிம்மதி பெருமூச்சுவிட்டவனாக அவ்விடத்தை விட்டு அகன்றான் .