iravukku aayiram kaigal - 22 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 22

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 22

இது ரொம்ப ரிஸ்க் ஆன வேலை நேஹாவுக்கு பதிலாய் லதாவை அனுப்பலாமா என யோசித்தான் .எப்படியும் யாராவது ஒருவர் போய்தான் ஆகவேண்டும்.நேஹா கெளதம் போட்டோவை வாட்ஸாப்ப் செய்யுமாறு கேட்டிருந்தாள். அந்த போட்டோவை போலீசிடம் காட்டி விசாரித்த போது இவனும் அவனை போல் தேடப்படும் போலி மாப்பிள்ளை என தெரிய வந்தது . நேஹா குறிப்பிட்ட நேரத்துக்கு போய்விட்டாள் . கெளதம் இன்னும் வரவில்லை . உல்லாசுக்கு போன் செய்தாள் . அவன் இன்னும் 10 நிமிடத்தில் வந்துவிடுவான் . பணம் விஷயத்தில் விளையாண்டால் என்ன வேணா நடக்கும் என எச்சரித்தான் .

போலீசுக்கு இது பற்றி தெரியப்படுத்தவில்லை . கெளதம் வந்துவிட்டான். இவள் பணத்தை ஒப்படைத்தாள். வீடியோவை ஒப்படைத்தான். ஒன்றும் பேசாமல் போய்விட்டான் .பார்க்கிங் ல் கெளதம் இறந்து கிடந்தான் . அருகிலேயே பணப்பெட்டி கிடந்தது யாரோ சுட்டிருந்தார்கள் . நேஹா துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வந்து பார்த்தாள். செக்யூரிட்டி வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்கள் . போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது . தூரத்தில் இருந்துதான் சுட்டிருக்க வேண்டும் . நேஹாவிடம் போலீசார் விசாரித்த போது அவள் நடந்ததை சொன்னாள். விடீயோவையும் , பணத்தையும் எடுத்துக்கொண்டனர். நேஹாவை ஸ்டேஷனுக்கு வருமாறு அழைத்தனர். அதற்குள் ராம் வந்துவிட்டான் .இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தை சொன்னான் . நாளைக்கு ஸ்டேஷன்ல வந்து எழுதி குடுத்துட்டு பணத்தை வாங்கிக்குங்க .

முதலில் திருப்பதி , இப்போது கெளதம் யார் வேலையாய் இருக்கும் . யாரோ இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இந்த கொலைகளை செய்திருக்கிறார்கள் . கடைசியாக கெளதம் திருமணம் செய்த பெண்ணை விசாரிக்கலாம் என முடிவெடுத்தான் ராம் . வீடு வளசரவாக்கத்தில் இருந்தது பெயர் குழலி . குழலியிடம் விசாரித்தபோது முதலில் கோபப்பட்டாலும், 50 பவுன் அடிச்சிட்டு போயிட்டான் சார் . அவனை புடிக்க போலீசால் முடியல . அவனை கொன்னுட்டாங்க மேடம் யாரோ சுட்டுட்டாங்க என்ற போது எந்த ரியாக்ஷனும் இல்லை . உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிஞ்சா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க . கண்டிப்பா சார் . சார் அந்த உல்லாஸ் எங்கே இருப்பான்னு எனக்கு தெரியும் என்றாள்.

உல்லாஸ் பெரும்பாலும் பப்ளிக் இன்டர்நெட் சென்டரில் இருந்துதான் இயங்குவான் என கூறினாள். பெங்களூரு இன்டர்நெட் சென்டர் சிசிடிவி காமெராக்களை செக் பண்ணா போதும் மாட்டிக்குவான் .சரி குழலி நீங்க எதுக்கும் உஷாரா இருங்க . இனிமே ஏமாற என்கிட்டே என்ன இருக்கு
நீ சொன்ன மாறி அவன்கிட்டே சொல்லிட்டேன் என் அக்கௌன்ட் ல பணம் போட்டுடு உல்லாஸ் என்றாள் குழலி .அவன் மறுபடி வருவான் ஜாக்கிரதையா பேசு . யார் வந்தாலும் வீட்டுக்கு வெளியவே வெச்சு பேசு என்றபடி உள்ளிருந்து வந்தான் உல்லாஸ் .

நான் கௌதமை கொன்னுட்டாங்கன்னு சொல்றேன் அந்த பொண்ணு கிட்டே எந்த ரியாக்ஷனும் இல்லை . ஏதோ தப்பா இருக்கே . இப்போ பெங்களூரு இன்டெர்நெட் சென்டர் ல போய் தேடணும் என்றான் ராம் .குமரேசன் ஓரளவுக்கு தேறி விட்டார் . நேஹாவுக்கு ஒரு திருமணம் செய்து விட்டால் தன கவலை தீருமென்று சொன்னார் . அவர் மேல் கீர்த்தனா குடுத்த கேஸ் வாபஸ் வாங்கியதால் பிரச்னை இல்லை .

விடியோதான் கிடைச்சுடுச்சே அவனை ஏன் சார் தேடணும் . அவன் ஒரு விஷ கிருமி மாதிரி . அவனையெல்லாம் விட்டு வைக்க கூடாது . அவனை நாம பிடிக்கலேன்னா அவனையும் கொன்னுட சான்ஸ் இருக்கு, ஒரு வேலை கீர்த்தனா ஆள் வெச்சு இதை செய்திருப்பாளோ . அவ ஏன் கௌதமை கொல்ல போறா .கெளதம் பேரையே இப்போதான் கேள்வி பட்டிருப்பா . கெளதம்கிட்டேயிருந்து ஏதாவது எவிடென்ஸ் கிடைச்சுதா . அதுல ரமேஷ் ஸ்டுடியோஸ் னு ஒரு காண்டாக்ட் நம்பர் புடிச்சு அந்த ஸ்டுடியோவை Raid பண்ணி அவனை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க .

உல்லாஸ்க்கு இப்போ யாரு அடைக்கலம் கொடுப்பாங்க .அவனை மாறி தொழில்ல இருக்கறவங்க .அவனோட friends யாரும் இருக்காங்களா

இல்லே கேர்ள் friends யாரும் இருக்காங்களா ? அவனோட இன்ஸ்டாகிராம், facebook ஹேக் பண்ணா முடியுமா , கீர்த்தனாகிட்டயே கேப்போம் .எனக்கு அவன் இன்ஸ்டா password தெரியும் என் பேரையும் அவன் பேரையும் சேர்த்துதான் password வெச்சிருந்தான் . சரி இப்போ லொகின் பண்ணி பாக்க முடியுமா . ட்ரை பண்ணி பார்த்தாள். லொகின் ஆகி விட்டது . நல்ல வேளை அவன் password மாத்தவில்லை. அவன் புது அக்கௌன்ட் ஓபன் பண்ணியிருப்பான் . இல்லே இப்போ எந்த பொண்ணோட பேசிகிட்டு இருக்கான்னு பாரு . மெசேஜ் history செக் செய்தபோது குழலி தான் அந்த ராம் கஃபே கஃபே வா அலைஞ்சிகிட்டு இருப்பான் . ஆனா நீ என் மடியிலே படுத்து கெடப்பேனு கனவுலயும் நெனைச்சிருக்கமாட்டான் . ஓ அப்டி போகுதா கதை என ராம் நினைத்தான் . இப்போது அவன் திவ்யா என்ற பெண்ணுடன் டேட்டிங் ல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தன . திவ்யாவும் அவனும் கூடிய சீக்கிரம் எங்கேஜ்மெண்ட் செய்யப்போவது போல பேச்சுவார்த்தை இருந்தது .

திவ்யாவுக்கு, கீர்த்தனா உல்லாஸ் திருமண போட்டோக்களை வாட்ஸாப்ப் செய்தாள். திவ்யாவிடம் இருந்து கால் வந்தது . கீர்த்தனா இந்த ட்ரிக்ஸ் எல்லாம் ஒன்னும் நடக்காது . அவர் என்கிட்டே எல்லாம் சொல்லிட்டாரு உனக்கு affair இருந்ததை. திவ்யா நாம மீட் பண்ணலாமா இது கொஞ்சம் அவசரம் . உல்லாஸ் உயிருக்கு ஆபத்து . நடந்ததை விளக்கினாள் கீர்த்தனா . சரி இன்னைக்கி ஈவினிங் 5 மணிக்கு என் வீட்டுக்கு வாங்க . ஆனா நீங்க சொல்றது உண்மை இல்லேனு தெரிஞ்சா நான் எந்த எல்லைக்கு போவேன்னு எனக்கே தெரியாது . ஓகே ஓகே நான் 5 மணிக்கு வரேன் . நாம இப்போ குழலி வீட்டுக்கு லதாவை அனுப்புவோம் . லதாவோட பேக்கப் கு ரெண்டு போலீஸ் அனுப்புவோம் என்றான் ராம் .

லதா காலிங் பெல் அமுக்கினாள் . யாரும் வரவில்லை .மெதுவாக கதவை தள்ளினாள்.கதவு திறந்தே கிடந்தது . குழலி என குரல் கொடுத்தாள். குழலி என கூப்பிட்டவாறே பெண் போலீசும் உள்ளே நுழைந்தது . அக்கா கடைக்கு போயிருக்காங்க என்றாள் சிறுமி . அவள் பார்வை சரியில்லை உணர்ந்த லதா சட்டென பாய்ந்து அந்த room கதவை திறந்தாள் . உல்லாஸ் குழலியின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான். ஒரு செகண்டில் குழலியை தள்ளிவிட்டு தெருவில் இறங்கி ஓடினான் . கார் ஒன்றில் மோதி கீழே விழுந்தான் . காரிலிருந்து நிதானமாக ராம் இறங்கினான் . ஏண்டா இவ்ளோ அவசரம் என்றவாறு அவனை போலீஸ் இழுத்து சென்றது .

குமரேசன் ரொம்ப நன்றி ராம் என்றார் . இவனால் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கை நாசமா போயிருக்கும் . கீர்த்தனாவுக்கு திவ்யா நன்றி சொன்னாள். குழலியையும் அரெஸ்ட் செய்தார்கள் . சாட் history பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் லிஸ்ட் எடுத்து , அவர்கள் தைரியமாக புகார் குடுக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.கௌதமை கொன்றது ,திருப்பதியை கொன்றது யார் என்ற கேள்விக்கு உல்லாசிடம் விடையில்லை . குழலியிடமும் பதிலில்லை .

உல்லாசிடம் ஏமாந்த பெண்கள் பட்டியல் நீண்டது. அதில் யார் கௌதமை கொன்றிருப்பார்கள் என கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருந்தது . அதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . கெளதம் உடம்பில் இருந்த குண்டு வைத்து அது எந்த வகை துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது என்பது கண்டறியப்பட்டது . பெண் போலீஸ் அதிகாரியும் சுற்றி வளைக்கப்பட்டபோது தான் உல்லாசயே கொல்ல நினைத்ததாகவும் கெளதம் அதை விட மோசமானவன் என்பதால் அவனை கொன்றதாகவும் சொன்னார் .

ராம் இந்த கேஸ் முடிவடைந்து விட்டதாக நினைக்கவில்லை . யார் திருப்பதியை கொன்றிருப்பார்கள் என்ற கேள்வியும் இருந்தது . அது அந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது திருப்பதி என் லிஸ்டில் இருந்தான் ஆனால் யாரோ எனக்கு முன்னமே முந்தி கொண்டார்கள் என்றார் .

லதா ஒரு ஆலோசனை சொன்னாள் . திருப்பதி வீட்டுக்கு போய் பேசி பார்க்கலாமா வேண்டாம் அவர்களுக்கு இவர் செய்த செயல்கள் தெரியாமலே போகட்டும் என்றான் ராம் . நேஹாவுக்கு மாப்பிளை பார்க்க தொடங்கினார்கள் . ராமையே verify பண்ணா சொன்னார்கள் .
கல்யாணம் கோயம்பத்தூரில் நடந்தது . மாப்பிளை சொந்தத்திலேயே பார்த்திருந்தார்கள் .

கல்யாணத்துக்கு பெண் பார்க்கும் ப்ரோக்கர்கள் சிலர் வந்திருந்தனர். இவன் அவர்களிடம் புரோக்கர் திருப்பதி பற்றி துக்கம் விசாரிப்பது போல் விசாரித்தான் . அவன் சும்மா சாகலே அவனோட பிள்ளையே சொத்துக்கு ஆசைப்பட்டு அடிச்சி கொன்னுட்டானுக என்றார்கள் . இவனுக்கு அது நம்பும்படியாய் இல்லை .சரி தீபக் நாளைக்கு போய் திருப்பதி பையனை பார்த்துட்டு வரலாம் என்றான் .அவர் போன் நம்பர் இங்கே இருக்க புரோக்கர் கிட்ட வாங்கிக்க . அவர் பையன் பெரு கதிரேசன். எதுக்கும் போன் பண்ணி பார்ப்போமா . பாக்கலாமே சார் . கதிரேசன் உங்களை உல்லாஸ் refer பண்ணினாரு எங்களுக்கு படிச்ச வேலைக்கு போற பொண்ணுக்கு மாப்பிள்ளை வேணும் . நாங்க அந்த தொழிலை விட்டுட்டோம் சார் . சரி என்று ஆசுவாசமடைந்தான். கல்யாணத்துக்கு கீர்த்தனா வந்திருந்தாள்.

நான் வெளிநாடு போறேன் சார் . இனிமே என் லைப் ல கல்யாணம்லாம் இல்லை சார் என்றாள் கீர்த்தனா . கல்யாண மேளம் களை கட்டியிருந்தது . செண்டை மேள சத்தம் அதிர்ந்தது . நேஹா ராமை மேடைக்கு வரும்படி சொன்னாள் . ராம் என்னம்மா என்றான் . நீங்க மட்டும் இல்லேன்னா என்றாள் . என்னமா நீ உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்குமா என்றான்.தாலி ஏறியது . ராமின் காலிலும் விழுந்து வணங்கினாள் நேஹா . திருப்பதியை தான்தான் கொன்றதாக மெதுவாக ராமின் காதுகளில் சொன்னாள் . ராம் சத்தமாக ஒன்னும் கேக்கலை, எனக்கு எதுவும் கேக்கலை என்றான் . செண்டை மேள சத்தம் இனிதே ஒலிக்க தொடங்கியது.