iravukku aayiram kaigal - 17 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 17

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 17

ஒரு கணம் ஸ்தம்பித்து போயிருந்தான். சுதாரித்து கொண்டு பாப்பா பர்த்டே எப்போ என்றான் ?ஆகஸ்ட் 13th . நாம இந்த தடவ கண்டிப்பா செலிப்ரட் பன்றோம் . தீபக் அதிதியை அழைச்சுட்டு போய் chocolates ,பொம்மை எல்லாம் வாங்கி குடு . brave கேர்ள் என சொன்னான் .

இன்ஸ்பெக்டர் ரமேஷ் அதிதி சொன்னதை ஆடியோவில் பொறுமையாக கேட்டார் . என் பொண்ணு பாவம் சார். அவளையும் கொன்னுடுவான்னு பயந்துதான் தலைமறைவா இருந்தேன் . தீப்தியும் குமாரும் லவ் பண்ணினாங்க . நாங்க அதை ஏத்துக்கலை. ஏன்னா குமாருக்கும் என் மனைவிக்கும் காண்டாக்ட் இருந்தது உண்மை . இதை ஊர்லயிருந்து வந்த தீப்தி பாத்துட்டா . வேற வழி இல்லாம ஆத்திரத்துல கொன்னுட்டா .

மனோகர்க்கு தான் சின்ன பொண்ணு மேல அவ்ளோ நம்பிக்கை . ஒரு வேலை அதிதி அவர்கிட்டேயும் சொல்லி இருக்கலாம் .என்னையும் என் குழந்தையும் விட்டுடுங்க சார் நாங்க எங்கேயாவது போயிடறோம். ரமேஷ் ஒரு முடிவுக்கு வந்தவனாக ராமிடம் சைகை செய்தான் .

லதாவிடம் சொல்லி தீப்தியை ஆபீஸ்க்கு அழைத்து வந்தார்கள் . தீப்தி ரெஸ்ட் எடுத்து பிரெஷ் ஆக இருந்தாள். என்ன விஷயம் ஆபீஸ் கு வர சொல்லி இருக்கீங்க . ஒண்ணுமில்லை .ஓ அதிதி ஏதாவது சொன்னாளா சொல்லுங்க நானும் மூணுமாசமா அவ கிட்டே கேட்டேன் அவ ஒன்னும் சொல்லலியே . தீப்தி calm டௌன். நாம பேச ஒண்ணுமில்லை . கடைசியா ஒரு தடவை கேக்குறேன் எதுக்காக அவசரப்பட்டு கொன்னே . நான் குமார sincere லவ் பண்ணேன் . என் அக்கா அது தெரிஞ்சும் சே சே அவ அப்படி பண்ணியிருக்க கூடாது . கூடாது என அழுதாள் .

தீப்தியை அரெஸ்ட் செய்து கூட்டி போனார்கள் . ராம் எல்லோரையும் சமாதானப்படுத்தினான் . அதிதியிடம்,தீப்தியிடம் இருந்த பிரியத்தை ராமால் வெகுகாலத்துக்கு மறக்க முடியாது .அதிதி கிருபாவிடம் ஒப்படைக்கப்பட்டாள். அவளும் ஆசிரமத்துக்கு போக வேண்டிய அவசியமும் இல்லை .இவன் மனோகர் ஆன்மா அமைதி அடைய வேண்டிக்கொண்டான்.
என்ன எல்லாம் இன்னுமா சோகமா இருக்கீங்க என்றான். பின்ன என்ன சார் ஒரு 23 வயசு இருக்குமா அதுக்குள்ள எவ்ளோ துரோகம் ,ஜெயில் பாக்கணும் என்றாள் லதா . ப்ச் அதை விடும்மா ஏன் அதை ஞாபகப்படுத்தறே செக்யூரிட்டி கேமரா அசோக் அதுக்கு போகலையா . சே நீங்க வேற சார் அவன் ஆளும் பாக்குற பார்வையும் , நான் தீபக்கை அனுப்பி விட்டேன் . இன்னிக்கி அதிதியை போய் பார்ப்போமா? கண்டிப்பா சார்.எத்தனையோ முறை மனு போட்டும் தீப்தி இவர்களை சந்திக்க மறுத்துவிட்டாள்.ஒரு வழியாக ஷ்யாமை அமெரிக்கா கொண்டு போனார்கள்.அசோக்கிற்கு 8 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. தீபக் சார் நம்ம அடுத்த கேஸ் என்ன? சொல்றேன்பா..

ஓல்ட் friends மீட்டிங் இருக்கு போய்ட்டு வந்து சொல்றேன் . நுங்கம்பாக்கத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் சகலவிதமான ஐட்டம்களோடு பார்ட்டி தொடங்கியது . விழா ஹாலில் ஒருபுறம் பவன் ,ரமேஷ், ரஞ்சித் அமர்ந்திருந்தனர் . மறுபுறம் ராம் ,மணி, தீபன் உட்க்கார்ந்திருந்தனர் . கோபி வந்தவுடன் விழா களை காட்டியது . அனைவரும் ஆடி பாடினார்கள் . இவன் எல்லாமும் சரியாய் இருக்கும் போதே கிளம்பி விட வேண்டுமென்று நினைத்தான் . போதை தலைக்கேறி விட்டால் இவர்களை கையில் பிடிக்க முடியாது . ரமேஷுக்கும் மணிக்கும் ஆகாது என்னவோ இப்போதும் அப்படியே இருந்தனர் . கோபி நடுநிலையானவன்.

அதிசயமாக ஸ்ரீதேவி வந்திருந்தாள்.தன்னுடைய கணவரை கூட்டிக்கொண்டு அது இவனுடைய கிளோஸ் friend பத்ரி தான் . படிக்கும் போதே வீட்டை எதிர்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணியவர்கள் .அதை முன்னின்று நடத்தியதில் இவனும் ஒருவன் .பத்ரி மேல் எல்லோருக்கும் பொறாமை . கோபிக்கு உள்ளூர புகைச்சல் இருந்தாலும் வா மச்சான் வா வா இப்போவாவது வந்தியே என்றான். மீனா வந்திருந்தாள் .மதுவந்தி அவள் கணவனோடு வந்திருந்தாள் .மதுவந்திக்கு ரெண்டு கோஷ்டியையும் பிடிக்காது . மொத்தத்தில் கலவையான கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது ராமுக்கு . பவன்தான் எல்லாரையும் வரவழைத்திருந்தான் .

பவன் எல்லோரையும் வரவேற்று பேசினான். 10 வருஷமாச்சு காலேஜ் முடிஞ்சு இன்னும் செல பேர் வீராப்பா இருக்காங்க. அவங்களும் அடுத்த மீட்டப் ல திருந்தனும் என்றான் நகைச்சுவையாக . ஸ்ரீதேவியுடன் எல்லோரும் செல்பி எடுத்தனர் . அவரவர் குழுவுடன் போட்டோஸ் எடுத்துக்கொண்டனர். மீனா,மதுவந்தியும் ரொம்ப நேரம் தனியாக உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் . மச்சான் என் பொண்ணு சரியாய் படிக்க மாட்றா நீ சொல்லி குடுத்தா எப்படிடா படிப்பா போன்ற மொக்க ஜோக்குகள் உலா வந்தன , இவன் கிளம்பும் நேரம் எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டான் . அப்போது ஸ்ரீதேவி வந்து ராமிடம் ஒரு நிமிஷம் என்றாள்.
நம்பர் குடு என கேட்டு வாங்கிகொண்டாள் . missed கால் குடுத்து அதை உறுதி செய்தாள். எல்லோருடைய கண்களும் ராமையும் ஸ்ரீதேவியையும் மாறி மாறி பார்த்தன அப்போதுதான் ஏழரை ஹரி வந்தான் அவன் பெயரே ஹரிஹரன்தான் . செய்யும் வேலையெல்லாம் ஏழரையாகத்தான் இருக்குமென்பதால் அவன் பெயர் ஏழரை ஹரி .

மணியும்,தீபனும் நாங்களும் வரோம் மச்சான் என்றார்கள். இருங்கடா இப்போதான் ஹரி வந்திருக்கான் . ஏதாவது பிரச்னைனா யார் பார்ப்பாங்க பவன் கடைசி வரை உங்கள இருக்க சொன்னான். ரமேஷ் போதை தலைக்கேற தனக்கு தானே கை குலுக்கி கொண்டிருந்தான் . இவனுகளோட எத்தனை tour போயிருப்போம் . பர்த்டே பார்ட்டி அப்படிங்கிற பேர்ல எவ்ளோ வன்மமோ அத்தனையும் இறக்குவானுக .
பவன் நன்றி தெரிவித்தான் . பெரிய பொறுப்பா நீ என்று ரமேஷ் அவனிடமிருந்து மைக்கை பிடுங்கினான் . ஏய் ஸ்ரீ எங்கிட்டெல்லாம் நம்பர் வாங்கமாட்டியா நாங்க எல்லாம் friends இல்லையா என மைக்கில் குமுறினான். அவனிடத்தில் மைக்கை பிடுங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது . ஸ்ரீதேவி, மீனா ,மதுவந்தி எல்லோரும் கிளம்பினார்கள் . பவன் வந்து தடுத்தான் இப்போதான் வந்தீங்க கொஞ்ச நேரம் இருங்க ஹரி சொல்லுடா ஆமா ஸ்ரீ இப்போதான் ஒவ்வொருத்தரும் உண்மையான முகம் காட்டுறானுக .ரமேஷ் அவனை அடிக்க பாய்ந்து தரையில் விழுந்தான் .

கோபி எல்லாரையும் சமாதானப்படுத்தினான் . டிஜே பாட்டு போடுப்பா என்றான் . இவன் கிளம்பி விட்டான் . இதற்கு மேல் இங்கே இருந்தால் சரியாய் வராது என நினைக்கும் போதே கார் ஸ்டார்ட் ஆகவில்லை. இல்லையே இது தப்பாச்சே பார்க்கிங்கில் பேசும் குரல்கள் கேட்டது தீபனும் மதுவந்தியும் . நீ வராம போயிடுவியோன்னு நெனச்சேன் உன்னை பாக்காம இருக்க முடியல எப்படிடி என்னை மறந்து இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு குழந்தையும் பெத்துட்டு இப்போ வந்து சொல்ற . இவன் மறுபடி ஸ்டார்ட் செய்தான் . சே இது வேற நேரம் காலம் தெரியாம . உள்ளே போன பொது பத்ரிதான் தெளிவாக இருந்தான் மச்சான் என்னை பக்கத்துல drop பன்றியா? ஸ்ரீ தனியா வுட்டுட்டு.. நீ போ நான் வெயிட் பண்றேன் என்றாள் .

வா மச்சான் போகலாம் எங்கட உன் ஆபீஸ் . ராயபேட்டைல அவ்ளோ தூரமா? வேண்டாம் மச்சான் நான் இங்கேயே டாக்ஸி புடிச்சிக்கிறேன் பஸ் ஸ்டாப் கிட்டே எறங்கிக்குறேன். அப்போ ஓகே வா? ஓகே தான் மச்சான் . பார்த்து ஜாக்கிரதை . நான் உன்கிட்டே பேசணும் ஆனா எங்க இங்க பேச உட்டானுக . நான் பிரச்னையில் இருக்கேன் மச்சி . சரி நாளைக்கு பேசுறேன் . கால் பண்றேன் . ஓகே டா பை என்றான் .

ஒருவழியா வீட்டுக்கு வந்துவிட்டான். ஒர்ஸ்ட் behavior என்று எண்ணிக்கொண்டான். இவன் எப்போதும் அப்படித்தான் ,இண்ட்ரோவேர்ட் ராம் என்று கிண்டல் செய்வார்கள் . காரை எடுக்க மெக்கானிக் இங்கே செய்தான். இப்படி பயந்து பயந்து தான் காலேஜ் லைப் ஓடியது .

ஹரியிடம் இருந்து கால் வந்தது . என்ன மச்சான் எப்போவும் போல ஓடிட்டே .இப்போதான் ஸ்டார்ட் ஆச்சு என்றான் . ரெண்டு ரவுண்டு போட்டு போயிருக்கலாம்ல .

மெக்கானிக் இவனை கூப்பிட்டான் மணி 11 ஆகி இருந்தது . சார் ஷெட்டுக்குத்தான் எடுத்து போகணும் . சரிப்பா என்றான் .
ஸ்ரீயிடமிருந்து கால் வந்தது . பத்ரி இன்னும் வல்லியே உங்கூட இருக்கானா அப்போவே போயிட்டானே. போன் பண்ணி பார்த்தியா சுவிட்ச் ஆப் னு வருது . ஒரு வேளை சார்ஜ் இல்லாம போயிருக்குமோ . காரிலேயே போட்டிருக்கலாம் . சரி நான் பவன் கிட்டே பேசுறேன் வேண்டாம் நானே பாத்துக்கிறேன் . எங்கேயாவது போய் குடிசீங்களா இல்லையே நாந்தான் அதை நிருத்திட்டேனே அவன் நிறுத்தலையே .இப்போ எங்க போய் தேடுவேன் அவனை . நீ ஒன்னும் கவலைப்படாத வந்துடுவான் .

ஸ்ரீ பதட்டத்துடன் பவனுக்கு விஷயத்தை சொன்னாள். போய் ரெண்டு மணி நேரம் ஆகுது இன்னும் காணோம் . ஆளுக்கொரு திசையில் தேட தொடங்கினர் . பத்ரி ரொம்ப நல்லவனும் இல்லை ரொம்ப கெட்டவனும் இல்லை அதனாலேயே எதிரிகள் அதிகம் . சொந்தமாக இன்ஜினியரிங் construction நிறுவனம் வைத்திருந்தான் . படிக்கிற காலத்தில் கடுமையான எதிர்ப்பை மீறித்தான் ஸ்ரீயை திருமணம் செய்திருந்தான் இவன் வேறு ஜாதி ஸ்ரீ வேறு ஜாதி . குழந்தைகள் இருக்கவில்லை . அந்த கவலையே அவனை குடியனாக்கியது . ஒரு மாற்றம் இருக்கட்டும் என்பதற்காக இந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தாள் .parking ஏரியா வில் பத்ரியின் காரை தேடினான் . மழை தூற துவங்கியது .

ரமேஷ் தன காரை reverse எடுக்க முயன்று கொண்டிருந்தான் . செம போதை பின்னாடி மோதி டிக்கி கதவு திறந்து கொண்டது . டேய் ரமேஷ் என கத்திகொண்டே ராம் ஓடினான். கொஞ்சம் இறங்கு என்றான், நானே உன்னை ட்ரோப் பண்றேன் . ரொம்ப தேங்க்ஸ் மச்சான் என்று மயங்கி சரிந்தான். ஏதோ சந்தேகம் தோன்ற காரின் டிக்கியை சரியாய் மூட இறங்கியவன் அதிர்ந்து போனான் . பத்ரி ...கத்தி அவன் நெஞ்சில் சொருகப்பட்டிருந்தது .