iravukku aayiram kaigal - 16 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 16

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 16

என்ன சார் ஒரு வழியா என் பேமிலி மொத்தமும் புடிச்சிட்டீங்க போல கிருபாவின் குரல்தான் அது .அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை . கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன் பை என்றான் . யாரு போன் ல ஒண்ணுமில்ல client தான் என சமாளித்தான் . அதிதியும், தீப்தியும் அமைதியாக வாழவே ராம் விரும்பினான் . லதாவின் காரில் அதிதியும் தீப்தியும் ஏறிக்கொண்டார்கள்.

என்ன சார் தீப்தி அக்கா மேல.. பார்த்து வண்டி ஓட்டு .யாருமேயில்லேன்னா அதோட துக்கம் எப்படியிருக்கும்னு எனக்கு தெரியும் .உனக்கு எல்லோரும் இருக்கிறப்ப அதோட அருமை தெரியாது . புரிஞ்சிடிச்சு சார் சாரி .கிருபா இருக்கும் இடம் தெரியாமல் போலீஸ் திணறினார்கள் .

தீப்தியை சாயங்காலம் சந்தித்தான் . என்ன லதா வீட்டை நல்ல வெச்சிருக்காங்களா . பரவாயில்லை சார் சேப்டி தான் முக்கியம் . நல்லா ரெஸ்ட் எடுங்க எதை பத்தியும் கவலை படாதீங்க என்றான் . பூர்ணிமாவுடைய டைரியையும் குடுத்தான் . அவள் அதை படித்துவிட்டு அவனிடமே கொடுத்தாள். எப்படியாவது இதுல யார் குற்றவாளின்னு கண்டு பிடிக்கணும் சார் . அப்போதான் எங்க அப்பாவோட ஆன்மா சாந்தி அடையும்.சூட்கேசை அதிதியிடம் ஒப்படைத்தான் .
லதா உனக்கொன்னும் பிரச்னை இல்லையே . அவங்க என் அண்ணி மாதிரி சார். அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே என்றான் .

இவனுக்கு கிருபா கால் செய்த நம்பரை ரூட் செய்யுமாறு தீபக்கை கேட்டான் . பண்ணிடலாம் சார் .ஆபீஸ் போன நேரத்தில் போலீஸ் ஒருவர் மப்டியில் வந்திருந்தார் . உங்களை கூப்பிட்டு வரசொன்னாரு ரமேஷ் . நம்ம வண்டியிலியே போயிடலாம் என புல்லட்டில் என்ற சொன்னார் . ரமேஷ் இன்னும் வந்திருக்கவில்லை . கிருபா உன்கிட்ட என்ன சொன்னான் . சும்மா மெரட்டுனான் அவ்ளோதான் . உன்னை இன்வோல்வ் ஆகாதேன்னு சொன்ன ஏன் கேக்க மாட்டேங்குற . சாரி ரமேஷ் . அதா விடு அவனை பத்தி ஏதாவது நியூஸ் கெடைச்சுதா. இங்கதான் டாக்ஸி ஓட்டிக்கிட்டு இருக்கான் நைட்ல . எதுக்கும் நீ ஜாக்கிரதையா இரு அதை சொல்லத்தான் கூப்பிட்டேன் .

தீபக் சார் கிருபா இங்கேதான் இருக்கான் . இருந்துட்டு போகட்டும் போலீஸ் அவனை சந்தேகப்பட்டு மட்டும்தான் இருக்காங்க . உண்மையான குற்றவாளி யாருன்னு இன்னும் பிடிபடல. தீப்தி அன்னிக்கி எங்க இருந்தாங்க ?அவங்க friend வீட்ல . அடுத்த தெருல இருந்த friend வீட்ல, எங்கிட்ட ஊர்ல இருந்து வந்ததாக சொன்னாளே. எதுக்கும் கயல்விழியை கேப்போமா . வேண்டாம் சார் அவங்க உஷார் ஆயிடுவாங்க . நீ தீப்தியை சந்தேகப்படுறியா இல்லே சார் அவங்களுக்கும் இதுல பங்கு இருக்குமான்னு நெனைக்கிறேன் . அதெப்படி சார் கொஞ்சோடு எலி மருந்து சக்கரைன்னு நெனைச்சு கலக்க முடியும் யோசிச்சு பாருங்க . லதா வீட்ல தங்க வெச்சதுக்கு காரணமே அவ நடவடிக்கை கிளோஸ் ஆ மானிட்டர் பண்ணத்தான் தீபக் .

அதிதியை உடனே பிரிச்சா சந்தேகம் வந்துடும் . நான் இந்த போட்டோவை தீப்தி ரூம்ல இருந்து எடுத்தேன் . அது குமார் தீப்திக்கு குடுத்தது. எங்கேயோ இடிக்குது சார் .அதனாலதான் அமைதியா இருக்கேன் .நீ எதுக்கும் ஆஸ்ரமத்துக்கு போய் அன்னிக்கி பூர்ணிமா வந்ததா சொன்ன து உண்மையா இல்லையான்னு தீப்தி போட்டோவை காட்டி confirm பண்ணு. அந்த டைரி டூப்ளிகேட் ஆ கூட இருக்கலாம் . எப்படியாவது தீப்தி சொத்தை அடையணும்ங்கிறதுக்காக போட்ட பிளான் ஆக இருக்கலாம் .சரி சார் நான் போறேன் .லதா கிட்ட இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்ண வேண்டாம் Deepak.

அந்த பாதர் கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டார் சார். நான் அங்கே வேலை செய்யுற வாட்ச்மன்கிட்டேயும் விசாரிச்சேன் .அவங்களுக்கு சரியா தெரியல . கிருபாவும் தீப்தியும் சேர்ந்தே நம்ம கூட வெளையாடறாங்களோ .நீ எதுக்கும் லதா கிட்ட சொல்லி தீப்தி போனை டேப் பண்ண சொல்றியா . வேண்டாம் அது அதிதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் .அதிதியை பூப்போல பிரிக்கிறேன். அதிதியை அருகிலுள்ள போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டான் ராம் . தீபுவிடமும் இதை பற்றி பேசினான் .பேசாம போலீஸ்கிட்ட handover பண்ணிட்டா என்ன .அது சரியா வராது . தீப்திகிட்டயே கேளுங்களேன் . அவளே சொல்லுவா சொல்ல வைக்கிறேன். கிருபாவை அரெஸ்ட் செய்து விட்டார்கள் . இவனை கூப்பிட்டு ரமேஷ் சொன்னான் . ஆனால் தனக்கும் அந்த கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னான் .

நான் ஆசைப்பட்டது தீப்தி மேலதான் . அதே சமயம் சொத்து மேலேயும் எனக்கொரு கன்ணு அதுக்காக மனோகரை தொந்தரவு பன்னினேன் . வேற எதுவும் பண்ணல . அப்போ எதுக்காக இவ்ளோ நாள் தலைமறைவா இருந்த அது வந்து சொல்லுங்க கிருபா அப்போதான் ஏதாவது செய்ய முடியும் .பூர்ணிமாவின் போன் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட போனை போலீசார் செக் செய்ததில் அது நனையாமல் இருக்க பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்ற பட்டிருந்தது . அதை ஓபன் செய்து பார்த்தத்தில் லாஸ்ட் கால் தீப்தியிடம் இருந்து வந்திருந்தது . குமாருடைய போன் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை .

தீபக் குமாருடைய போன் கிடைத்தாலும் நன்றாக இருக்கும் . அவன் வீட்டுக்கு சென்று விசாரித்து பாரேன் என்றான் . ஓகே சார் . குமாருடைய வீடு அதே தெருவில் கடைசியில் இருந்தது . குமார் குடும்பம் வீட்டை காலி பண்ணிட்டாங்களேப்பா. அதுவும் குமார் செத்ததுக்கப்புறம் யாரும் கண்டுக்க கூட இல்லை . ரமேஷிடம் சொல்லி குமார் நம்பர் வாங்கினான் .

தீபக் போன் செய்து பார்த்தான். யாரும் எடுக்கவில்லை .சிம் கார்டு லொகேஷன் பார்த்தான் அதுவும் வேலை செய்யவில்லை . அவ்வப்போது அதிதியை பார்த்து வந்தான் ராம் . அதிதி உனக்கு யாரை ரொம்ப புடிக்கும் அம்மாவை . ஓ சித்தியை பிடிக்காதா? பிடிக்குமே குமார் அங்கிள் ? குமார் அங்கிள் ?குமார் அங்கிள் தான் செத்து போயிட்டாரே.. இதை யார் சொன்னா ?நான்தான் பார்த்தேனே ஓ மை காட் .

லதாவிடம் தீப்தி எப்படி இருக்கிறாள் என விசாரித்தான் .ஒரு ப்ரோப்ளேமும் இல்ல . அவங்க அவங்க வேலைய பாக்குறாங்க . ஹ்ம்ம் எதுக்கும் அந்த செத்து போன பாதிரியார் வீட்டுக்கு போய் பாரேன் தீபக் லதாவையும் கூட்டிட்டு போ . அந்த வீட்டில் ஏழ்மை இருந்தது . பாதிரியார் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே பட்டது . தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாக தெரிவித்தார்கள் லதாவும் , தீபக்கும் . அநாதை குழந்தைகளை தத்தெடுக்க உதவி செய்ததிற்க்காக நன்றி சொல்ல வந்தோம் என்றான் தீபக். அப்போது வேண்டுமென்றே தீப்தியின் படம் செல்போனிலே தெரியுமாறு இவங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமாம் என்றான் . பூர்ணிமாவுக்குத்தான் அதிதி இருக்காளே .இவங்க நல்லா பார்த்து சொல்லுங்க இது பூர்ணிமாவேதான் . இங்க வந்து போயிருக்காங்களே .

சித்திதான் குமார் அங்கிள் தலையிலே சுத்தியலை கொண்டு அடிச்சுட்டா ஒரே பிளட் என்றாள். அதுக்கப்புறம் கிணத்துல கொண்டு போய் தள்ளிட்டா . நீ எங்கிருந்து இதை பார்த்தே . மாடியிலே தாத்தாவும் நானும் தூங்கும் போது பாத்ரூம் போக எழுந்தேனா அப்போ . தாத்தா கிட்ட சொல்லலியா?. பயமா இருந்துச்சு அதான் சொல்லலே .

ராம் நடுங்கி விட்டான் . அதிதியை பத்திரமாக இருக்கும்படி சொன்னான் . யாரிடமும் இது பற்றி சொல்ல வேண்டாம் என்று சொன்னான் . ரமேஷுக்கு போன் பண்ண போனான் . வேண்டாம் பூர்ணிமாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் . அது வரை பொறுமையாக இருப்போம் .

தீபக்கிடம் இதை சொல்லும்போது தீபக் பதறிவிட்டான் . எதற்காக இவ்வளவு பெரிய கொலையை தீப்தி செய்தாள்.பூர்ணிமாவா இல்லை தீப்தியா இருட்டிலே பூர்ணிமாவை பார்த்துவிட்டு தீப்தி என்று சொல்லுகிறாளா ஒன்றும் புரியவில்லை . தீப்தியிடம் கேட்பதற்கு முன் ஆதாரங்களை திரட்டியாக வேண்டும் . லதாவை அலெர்ட் ஆக இருக்க சொன்னான் . லதா எப்போதும் போல இருக்க முயன்றாள் .

ராம் நடுங்கி விட்டான் . அதிதியை பத்திரமாக இருக்கும்படி சொன்னான் . யாரிடமும் இது பற்றி சொல்ல வேண்டாம் என்று சொன்னான் . ரமேஷுக்கு போன் பண்ண போனான் . வேண்டாம் பூர்ணிமாவை கொன்றது யார் என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் . அது வரை பொறுமையாக இருப்போம் .

தீப்தி எல்லோரையும் டின்னருக்கு அழைத்திருந்தாள். எல்லாரும் ஏன் அமைதியா இருக்கீங்க . என்னவோ இந்த கேஸ் இப்படி இழுக்கிறதே என்றான் தீபக் . இப்போவும் கேஸ் பத்தி பேசணுமா அதுவும் சரிதான் சாப்பிடுங்க . சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே மயங்கி சரிந்தாள் தீப்தி . அவளை அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டு அருகில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு விரைந்தான் . டாக்டர் பரிசோதித்ததில் ரெண்டு நாட்களாக சரியாய் தூங்கவில்லை அதுதான் என்றாள் . வேற ஒன்னும் பிரச்னை இல்லை பிரஷர் அதிகமாயிருக்கு . ஒர்க் பண்றப்போ பிரேக் எடுத்துக்காம இருந்துருக்கணும் . அதான் இப்படி ஆயிருக்கு . கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தப்புறம் கூட்டி போங்க.

இப்போ என்ன பண்றது தீபக். கொஞ்சம் பொறுமையாதான் டீல் பண்ணனும் . அதிதியை இன்னும் கொஞ்சம் விசாரிச்சு பார்ப்போமா . அதுவும் சரிதான் . மறுநாள் அதிதியை ஆபீஸ்க்கு அழைத்து வந்திருந்தான் . அன்னிக்கி என்னம்மா நடந்துச்சு . அன்னிக்கி என் பர்த்டே . ஊர்லேயிருந்து சித்தி , குமார் அங்கிள் எல்லாம் வந்திருந்தாங்க ஒரே ஜாலியா இருந்துச்சு . இந்த வருஷம் celebrate பண்ணவே இல்லை . நாம கண்டிப்பா செலிப்ரட் பண்ணுவோம் . தேங்க்ஸ் அங்கிள் . அப்போ அப்பா குடிச்சிட்டு வந்தாரா அம்மா அவரை திட்டுனாங்க . நான் அப்பா தாத்தா மூணு பேரும் மொட்டை மடியில தூங்கிட்டோம் . அம்மா வந்து அப்பாவையும் என்னையும் எழுப்பினாங்க நாங்க போலை . அப்போ சித்தி வந்து அம்மாவை கூட்டிட்டு போனாங்க .


தீப்தி விழித்து பார்த்தாள். லதா நாற்காலியில் அமர்ந்தபடி தூங்கி கொண்டிருந்தாள் . லதா லதா ஆஹ் சொல்லுங்க தீப்தி நேத்து என்ன ஆச்சு . திடீர்னு மயங்கி விழுந்துட்டீங்க .அப்புறம் ஹாஸ்பிடல் சேர்த்தோம் .

சித்தி குமார் அங்கிள் கிணத்துல தள்ளுனாங்களா நான் மெதுவா போய் கீழ ஜன்னல் வழியா பார்த்தேன். அம்மா தலையிலேயும் ரத்தம் சித்தி ரத்தத்தை ஒரு துணியால தொடைச்சு எடுத்தா அதுக்குள்ள அப்பா வந்துட்டார் . என் வாயை அடைச்சு இதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னார் . ராம் அதிதியை அனைத்துக்கொணடான் .