iravukku aayiram kaigal - 15 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 15

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 15

ராம் தீபக்கை அழைத்துக்கொண்டு பெங்களூரு புறப்பட்டான்.அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது . அதிதிக்கு அவளை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் .முகவரியை கேட்டு வாங்கியிருந்தான் தீபக். மலர் ஹாஸ்பிடலில் ICU வில் இருப்பதாக சொல்லியிருந்தாள். இவர்கள்போய் சேர்ந்தவுடன் விசாரித்ததில் வேலை செய்யும் அக்காதான் முதலில் பார்த்ததாகவும் பிறகு போலீஸ் வந்து கதவை உடைத்து மீட்டதாகவும் அதிதி இப்போது தீப்தியுடைய friend கயல்விழி வீட்டில் இருப்பதாகவும் சொன்னார்கள் .

டாக்டர்களிடம் விசாரித்தான் . அவங்க இன்னும் critical கண்டிஷன்லதான் இருக்காங்க 12 ஹௌர்ஸ் கழிச்சுத்தான் சொல்ல முடியும் . வேலைக்கார அக்கா இந்தாங்க சாவி தீப்தி உங்களை பத்தி சொல்லி இருக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்த கேஷ் கவுண்டர் பொண்ணுக்கும் தகவல் குடுக்க சொல்லி இருந்தாங்க . நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு வீட்டுல குழந்தைங்க தனியா இருப்பாங்க என்று விரைந்தாள் .

பெண் போலீஸ் ஒருத்தர் இரவு காவலுக்கு இருந்தார். தீபக் நீ இங்கே இரு நான் வீட்டுக்கு போய் என்னனு பாக்கிறேன் .சரி சார் என்றான். careful ஆ இரு தீபக் என்றான். வீடு அலங்கோலமாக இருந்தது . டபுள் bedroom கொண்டது . அவள் முன்பே குறிப்பிட்ட மாதிரி பூர்ணிமாவின் பொருட்கள் எல்லாம் ஒரு அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது . அதனுடைய சாவியும் வீடு சாவியுடன் சேர்ந்தே இருந்தது .

இவள் இருந்த அறையின் உடைக்கப்பட்ட கதவு அப்படியே கிடந்தது .பொருட்களை போலீசார் கலைத்துப்போட்டிருந்தனர் . அதில் குமாரின் போட்டோ ஒன்றும் கிடந்தது . குமாரை ஒரு வேலை இவள் விரும்பியிருப்பாளோ என்ற யோசனையும் எழுந்தது .போட்டோவை திருப்பி பார்த்தான் .வித் லவ் குமார் என்று எழுதியிருந்தது . வேலைக்கார அக்காவுக்கு போன் செய்து பார்த்தான் . தீப்தியுடைய போன் எங்கே என வினவினான். நான் அதை பத்திரமா பீரோக்குள்ள எடுத்து வைச்சிட்டேன் .பீரோ சாவி kitchen ல இருக்க அரிசி மாவு டப்பால இருக்கு . பீரோவில் அவளுடைய போன் இருந்தது .எடுத்து பார்த்தான் .

தீப்தி கண்விழித்து விட்டதாக தீபக் சொன்னான். தொடர்ந்து ICU வில் வைத்து கண்காணிக்க வேண்டி இருப்பதாக சொன்னார்கள் . இவன் சற்று கண் அயரலாம் என்று ஹாலில் இருந்த சோபாவில் படுத்தான் . எதற்கும் பூர்ணிமா அறையை பார்த்துவிடுவோம் என்று நினைத்தான் . பூர்ணிமாவின் அறையென்று சொல்ல முடியாது . நிறைய தட்டு முட்டு சாமான்கள் ,நோட்டு புத்தகங்கள் ,சாமி படங்கள் என குவிந்திருந்தன . அதில் handbag ஒன்றும் கிழிந்த நிலையில் கிடந்தது . அதை திறந்து பார்த்ததில் எதுவும் இல்லை . அதை விட்டெறிந்தான் கிளிங் என்ற சத்தத்துடன் சாவி ஒன்று அதிலிருந்து விழுந்தது .நிச்சயமாக ஏதோ ஓர் லாக்கர் சாவி என பட்டது .மணி காலை 5 ஆகியிருந்தது

அரைமணி நேரம் போல தூங்கினான். பிரிட்ஜ் ல் இருந்து பால் எடுத்து காபி போட்டான். காபி கசப்பாக இருந்தது . சக்கரை போட மறந்திருந்தான். சக்கரை டப்பாவை கவனமாக தேடியதில் அதில் ஏதோ கலந்திருப்பதை உணர்ந்தான்.இதை போலீசுக்கு சொன்னால் தன் மீதே சந்தேகப்படுவார்கள் . டாக்டர்களிடம் விசாரிக்கலாம் என கொஞ்சத்தை மடித்து வைத்தான் . வேலைக்கார அக்காவை போலீஸ் இன்னும் விசாரிக்க வேண்டும் என நினைத்தான் . ஜன்னல் கதவெல்லாம் சாத்திய நிலையில் எப்படி அக்கா எட்டி பார்த்தார்கள் என யோசித்தான் .

தீபக் அங்கிருந்த பெஞ்சில் தூங்கி கொண்டிருந்தான் . ராம் வந்து பார்த்த போது கயல்விழியும் ,அதிதியும் வந்திருந்தார்கள் . இன்னிக்கி சாயங்காலம் சாதாரண வார்டுக்கு மாத்திடுவாங்க என தீபக் சொன்னான் . அதிதியை ஜாக்கிரதையா பாத்துக்குங்க கயல்விழி என்றான் ராம் . என்ன நடந்தது தீப்தி எதுவும் சொல்லியிருந்தாங்களா .. ஆமா கிருபா தன்னை மிரட்டுவதாக சொன்னா கிருபவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துனதாவும் சொன்னா . தீப்தி யாரையாவது லவ் ? சே சே அப்படியெல்லாம் எதுவுமில்லை. கயல்விழி தீப்தி உடம்பு சரியாகுற வரை இவை எங்கூடையே இருக்கட்டும் என்றாள்

தீபக் நீ கிளம்பு சென்னைக்கு போ .நான் பார்த்துக்கிறேன் . ஓகே சார் சாயங்காலம் உனக்கு அப்டேட் பண்றேன் . இந்த key பூர்ணிமாவோடது எதோட key யா இருக்கலாம்னு பார்த்து வை . நான் வந்ததும் பாக்குறேன் . ஓகே சார் .தீப்தி கண் விழிப்பதற்கும் போலீஸ் வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது . இவன் மடித்து வைத்திருந்த பேப்பரில் இருந்ததை காட்டியபோது டாக்டர் இது எலி மருந்துதான் என சொன்னார். எப்படி இருக்கீங்க தீப்தி என்றான். வாங்க சார் எப்படியோ என்னை பிழைக்க வெச்சுட்டாங்க .கண்களை மூடிக்கொண்டாள்.நீங்க ரெஸ்ட் எடுங்க . சார் என் போன்? இங்கே இருக்கு இதோ என்று அவளிடம் நீட்டினான். நீங்க பக்கத்துலேயே இருங்க சார் என்றாள் .

இவன் வெளியே வந்து போலீசிடம் விசாரித்ததில் நைட் பால் சாப்பிட்டு படுத்திருக்காங்க .சக்கரைக்கு பதிலா தவறுதலான எலிமருந்தை போட்டுட்டாங்க என்றார்கள். கிருபாவை இன்னும் தேடி கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள் .வேலைக்கார அக்காவிடம் சொல்லி வீட்டை சுத்தம் செய்ய சொன்னான் . நாளை காலையில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள் . நீங்க என்கூட வந்துடுங்க தீப்தி . கொஞ்ச நாள் கயல் வீட்டுல இருக்கேன், நான் சென்னைக்கு transfer கேட்டிருக்கேன் அது கிடைச்சதும் வரேன் . சரி உங்க விருப்பம் . கயல்விழி வீட்டில் தீப்தியை கொண்டு சேர்த்த பின்புதான் அவனுக்கு நிம்மதியாயிற்று .

சென்னை வந்ததும் தீபக்கிற்கு போன் செய்தான் . ஏதாவது தகவல் கெடைச்சுதா அந்த key ஏதோ ஒரு suitcase key சார் அவ்வளவுதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது . மதியம் ஆபீஸ்க்கு போயிருந்த போது ஹாப்பி பர்த்டே சார் என்ற தீபுவின் குரல் ஒலித்தது . surprise surprise என்றார்கள் . ரஞ்சனி , ராகவ், தீபு , அவள் கணவர் எல்லோரும் வந்திருந்தார்கள் . லதாவும், தீபக்கும் கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள் . எல்லாம் தீபுவின் ஏற்பாடுதான் .தேங்க்ஸ் தீபு என்றான். ரஞ்சனியும் ராகவும் இவனை கட்டியணைத்து வாழ்த்தினார்கள் . இன்னைக்கி நாங்க நிம்மதியா இருக்கோம்னா நீங்கதான் காரணம் . போதும் போதும் உங்க அன்பே போதும் . கேக் வெட்டலாமா போன் ஏதும் வரதுக்குள்ள கேக் வெட்டுங்க பாஸ் என்றான் தீபக் . அந்த நாளை கொண்டாடி ராம் மறக்கமுடியாத நாளக்கினார்கள் .

தீபு அந்த தீப்தி கேஸ் பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள் . தீபக் அந்த சாவி பற்றி சொல்லி கொண்டிருந்தான் . எல்லோரும் விடை பெற்றுக்கொண்டார்கள் . தீபுவுக்கு குழந்தை பிறந்தவுடன் ஒரு ட்ரிப் அடிக்கவேண்டும் வேண்டும் என தீபக் சொன்னான் .இவனுக்கு இருக்குற ட்ரிப்பே முடிக்க முடியலே இதுல தனியா ட்ரிப் வேற என லதா சிரித்தாள்.கண்டிப்பா காஷ்மீர் போறோம் என்றாள் தீபு .

லதாவிடம் இந்த key மாடல் சூட்கேசை பத்தி விசாரி . இது கொஞ்சம் urgent .பூர்ணிமா,மனோகர்,குமார் இவர்கள் மூவருமே ஏதோ ஒரு விஷயத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும் . அதிதியை தத்து எடுத்த இடத்தில் விசாரித்தால் ஏதாவது கிடைக்கலாம் தீபக்கை அனுப்பி வைத்தான் .அதிதிக்கு என சூட்கேசை பூர்ணிமா கொண்டு வந்து வந்ததாகவும் அதை பத்திரமாக வைத்து இருப்பதாகவும் சொன்னார் பாதிரியார் . அதிதி யை கொண்டு வந்து விட்டது மற்றுமொரு பாதிரியார் எனவும் அப்போது மனோகர் இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக சொல்ல குடுத்து விட்டோம் என்றார் . தன்னிடம் இருந்த key கொண்டு சூட்கேசை திறந்தான் தீபக்.டைரி ஒன்று இருந்தது . குழந்தைக்காக தைக்கப்பட்ட ஸ்வெட்டர் ஒன்று இருந்தது .கொஞ்சம் குழந்தை துணிகள் இருந்தன . பாதிரியார் முதலில் அதை கொடுக்க மறுத்தார் . பூர்ணிமாவும் மனோகரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக சொன்னவுடன் சூட்கேசை குடுக்க சம்மதித்தார் . தீப்தியிடம் விஷயத்தை சொன்னான் ராம் .

வெரி good தீபக் அந்த டைரி பத்திரம்.சீக்கிரம் ஆபீஸ்க்கு வா என்றான். அந்த டைரியில் எல்லாமே இருக்க கூடும் என ராம் நம்பினான். அன்புள்ள அதிதிக்கு நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே போகும் நேரம் வந்து விட்டதாக நினைக்கிறேன் . உன்னை எடுத்த போது நான் அடைந்த மகிழ்ச்சி விலை மதிப்பற்றது. கிருபாவின் குறையை என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை . அதே சமயம் என் அப்பாவின் பிடிவாதமும்தான் உன்னை எடுத்து வளர்க்க காரணம் . இந்த டைரி எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் உன் கைகளில் கிடைக்கும் . கிருபா என் மீது சந்தேகப்பட தொடங்கி விட்டான் .அப்பாவையும் சொத்து எழுதி தர வற்புறுத்துகிறான் ,என்னால் இது கிருபாதானா என நம்ப முடியவில்லை.
சொத்துக்காக தினமும் அவன் என் அப்பாவுடன் மல்லுக்கட்டுவதை நான் விரும்பவில்லை . உன்னை நல்லவிதமாக ஆளாக்க நினைத்தேன். குமார் அண்ணனும் எனக்கு சப்போர்ட் பண்ணுகிறார்கள் .ஆனால் அவரையும் என்னையும் சேர்த்து பேசுகிறான் கிருபா. எனவே நீ திரும்பி பத்திரமாக பாதிரியாரிடம் போய் மகிழ்ச்சியாய் இரு . ஒரு வேளை இவன் திருந்தினால் நான் மறுபடி உன்னை மீட்டுக்கொள்கிறேன் . என்னுடைய எல்லாமும் முழு சொத்தும் உன்னை சேரும் .அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன் . என்றும் உன் அன்பை மறவா பூர்ணிமா .

பூர்ணிமாவை ,குமாரை கொன்றதற்கு சாட்சிகள் இல்லை . மனோகர் மனமுடைந்து போய் தூக்கு போட்டிருக்கலாம் என்றான் . மனோகருக்கும் ,கிருபாவுக்கும் கூட தெரியாமல் இந்த சூட்கேசை பூர்ணிமா கொடுத்திருக்கிறாள் . சாவியை handbag இல் மறந்து விட்டிருக்கிறாள் . வேண்டுமென்றே விட்டிருக்கலாம் என்றான் தீபக்.
தீப்தியிடம் இருந்து போன் வந்தது தனக்கு transfer கிடைத்துவிட்டதாகவும் நாளையே தான் சென்னை வர இருப்பதாகவும் சொன்னாள்.அதிதியையும் , தீப்தியையும் அழைத்து வர ராம்,தீபக் ஏர்போர்ட் போயிருந்தார்கள் . லதாவும் போயிருந்தாள். இவனை கண்டதும் அதிதி ஓடி வந்து கட்டிக்கொண்டாள் . தீப்தி தற்காலிகமாக லதா வீட்டில் தங்கி கொள்ள ஏற்பாடு செய்திருந்தான் . கிருபாவிற்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி மண்டைக்குள் குடைய ராமினுடைய போன் ஒலிக்க தொடங்கியது .