iravukku aayiram kaigal - 11 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 11

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 11

 தீபுவுக்கு லதாவை தெரியும் ஆனால் லதாவுக்கு தீபு பற்றி தெரியாது .ஆபீஸ் அட்ரஸ் வாட்ஸாப்ப் செய்திருந்தாள் . அடுத்த ஒரு மணி நேரத்தில் லதா அங்கிருந்தாள். வாங்க உள்ளே வாங்க என வரவேற்றாள் தீபு. இவங்கதான் லதா டிடெக்ட்டிவ் என ராமுக்கு அறிமுகம் செய்தாள். அவனும் புன்னகையோடு வரவேற்றான் . என்னை உங்களுக்கு தெரியுமா என்றாள் லதா . நல்லா தெரியும் .என்ன விஷயம் சொல்லுங்க. அப்பு murder கேஸ் ல விடியோவை ஜட்ஜ் வெங்கடாச்சலம் வீட்டுக்கு அனுப்ப சொன்னது யார்னு கண்டுபிடிக்க சொல்லி எங்க agency கிட்டே அசோக் ஒர்க் குடுத்திருக்காரு .நாங்க ஏன் அதை செய்யணும் இவ ஆபீஸ் யூஸ்கு பெண் டிரைவ் வாங்க போனா என்றான் ராம். ஓ நான் நீங்கதான்னு தப்பா நெனச்சுட்டேன் . சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் வண்டியை எடுத்துக்கொண்டு விரைந்தாள் லதா.

இந்த முறை ஷியாம் தப்பித்ததில் போலீஸ் ஹெல்ப் நிறையவே இருந்தது . சிறையில் கைதிகளுக்கு இடையில் மோதல் போல் சித்தரித்து ஷ்யாம் தப்பினான் . அவனுக்கு மாற்று உடை முதற்கொண்டு போலீஸ் ஏற்பாடு செய்தது .அவனை பாதுகாப்பதும் கஷ்டம் .அவனால் மற்ற கைதிகளுக்கு ஆபத்து என யோசித்து அவனை தப்பிக்க விட்டனர் .அசோக்கின் பண்ணை வீடு யாரும் அணுக முடியாத கோட்டை .அதில் தங்கி கொள்ள முடிவெடுத்தான்.அசோக்கின் ஆட்கள் அவனை அங்கு அழைத்து சென்றனர் .இவ்ளோ ரிஸ்க் எடுத்து உன்னை எதுக்கு காப்பாத்துறேன்னா உன்னால எனக்கு நெறைய காரியம் ஆக வேண்டியிருக்கு ஷ்யாம் என்றான் அசோக் .

லதாவுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும் அதான் ஒன்னும் சொல்லாம போயிட்டா . அத விடு ஷியாம் தப்பிச்சுட்டானாமே இப்போ என்ன பிளான் பண்ணியிருப்பான் . அவனுக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் murder அடுத்த murder யாரை பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருப்பான் .ரொம்ப insecure அவன் .அசோக் வீட்டுக்கு போயிருப்பானோ இருக்கலாம் . நாமளும் அசோக் ,லதா கிட்டே ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

என்ன ஏதாவது information கெடைச்சுதா. இல்லே சார் . பரவாயில்ல நீ payment அப்புறம் வந்து வாங்கிட்டு போ .சரி சார் உன் பேரென்ன சொன்ன லதா சார் .
ராம் சொன்ன மாதிரி அசோக்கின் எதிரிகளை கொல்ல ஷியாம் ஸ்கெட்ச் போட தயாரானான் .

கொஞ்ச நாள் பொறு ஷியாம் நிலைமை வெளியே சீரானதும் நானே உனக்கு சொல்றேன் அப்புறம் நீ உன் வேலைய காட்டலாம் என்றான் அசோக் . அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு அதெல்லாம் வேண்டாம் ஷியாம் . கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்புறம் பாத்துக்கலாம்

தீபுவுக்கும் அவள் கணவருக்கும் பாஸ்போர்ட் வந்து விட்டது . ஷியாம் எஸ்கேப் ஆனது தீபுவுக்கு வருத்தம்தான் .யு எஸ் சுத்தி பாக்கலாம்னு நெனைச்சா அதையும் கெடுத்துட்டானே என்றாள். இப்போ அதுதான் ரொம்ப முக்கியம் போய் வேலைய பாரு அவன் எங்கிருக்கான்னு கண்டு பிடிக்க வழி இருக்கான்னு பாக்கணும்.

ஒரு வழி இருக்கு அசோக் கூட இருக்கறவங்களோட காண்டாக்ட் கிடைச்சா? ஏன் நம்ம லதா இருக்காளே அது சரியா வராது . அட்லீஸ்ட் அசோக் போன் கிடைச்சா போதும். இது ரொம்ப ஈஸியா இருக்கே .

அடலீஸ்ட் லதாவை வெச்சு அசோக் ஆபீஸ்ல microphone fix பண்ண சொன்னா என்ன .அதென்ன லேசுப்பட்ட விஷயமா .லதா நெனைச்சா செய்யமுடியும் வேணும்னா நீயும் கூட போ . நான் போனால் சந்தேகம் வந்துடும் . அப்போ லதாவை ஈவினிங் வர சொல்லு பேசுவோம் .

லதா எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டாள் . அது ரொம்ப ரிஸ்க் என்றும் தொழில் தர்மத்துக்கு எதிரானது என்றெல்லாம் சொன்னாள். அப்புவுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பை சொன்னதும் சம்மதித்தாள் .நீங்க என்னை காட்டிக்குடுத்துட மாட்டீங்களே. நிச்சயமா இல்லே என்றான் .

லதா payment வாங்க போனது போல போனாள் .reception இல் வெயிட் பண்ண சொன்னார்கள் . சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த கோடியில் அசோக்கின் ரூம் இருந்தது . அசோக் அப்போதுதான் வெளியே வந்தான்.என்னம்மா payment ஆ yes சார் பாத்து குடுத்து விடுமா என்று சொல்லிவிட்டு வெளியே போனான் . அசோக் ரூமுக்கு வெளியிலும் சிசிடிவி இருந்தது . இவள் payment அப்புறம் வாங்கிக்குறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.

நிச்சயமா முடியாது சார் .அங்க இருக்க சிசிடிவி ஆப் பண்ணாத்தான் உள்ளே போக முடியும் அப்போ நைட் டைம்தான் கரெக்ட் . இல்லேன்னா அசோக்குக்கு gift மாதிரி ஏதாவது குடுக்க ட்ரை பண்ணி பாக்கலாமா . இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்னு நெனைக்கிறேன் . நீ அந்த receptionist கிட்டே சொல்லிட்டு இந்த காலெண்டரை அங்க மாட்டிடு. காலெண்டர் எடுத்து பார்த்துட்டா சரி வேற gift செலக்ட் பண்ணுவோம் .

இதய வடிவிலான பொம்மை ஒன்றை தயார்படுத்தி அதன் மேல் கம்பெனி ஸ்டிக்கர் ஒட்டி அதற்குள்ளாக மைக்ரோபோனை வைத்தார்கள் . மறுநாள் அவன் வெளியே புறப்பட்ட பின்பே உள்ளே போனாள் லதா . ஏ சி அறையிலும் வேர்த்து கொட்டியது. சாருக்கு ஒரு சின்ன complement என்று சொன்னாள். குடுங்க நான் குடுத்துடறேன் . நானே அவர் ரூம்ல வெச்சுடறேன் அப்போதான் சரியா இருக்கும் . என்னமா என குரல் கேட்டு அதிர்ந்தாள் .gift சார் சரி சரி வாங்கி வெச்சுக்கோ என்றான் அசோக் . அவன் ரூமை பூட்டாமல் சாவியை அதிலேயே விட்டு சென்றுவிட்டான் .லதா அவன் ரூமுக்கு போய் மேஜைக்கருகில் இதய பொம்மையை வைத்தாள். அவன் எப்போது பேசினாலும் கேட்க முடியும்.சூப்பர் லதா . தேங்க்ஸ் என்றான் ராம் . நானே போன கூட இவ்வளவு கச்சிதமா செஞ்சிருக்க முடியாது. தீபு பார்த்து கத்துக்க என்றான் .லதாவை unofficial ஆக இந்த கேஸ் முடியும் வரை ஒர்க் பண்ண அழைத்தான் . அவளும் சம்மதித்தாள் .

யாரு இந்த பொம்மையை இங்கே வைத்தது அவன் கத்திய கத்தில் செக்யூரிட்டி ஓடி வந்தனர் . செக் பண்ணு சிசிடிவி செக் பண்ணு . அதான் சார் ஏஜென்ட் லதாதான் அத வெச்சாங்க . ஓ அந்த பொண்ணா அப்போ வேண்டாம் விடு .மயிரிழையில் தப்பித்தோம் என இதை கேட்டுக்கொண்டிருந்த லதா சொன்னாள். payment கொடுத்தாச்சா இல்லியா அதெல்லாம் அப்பவே வாங்கிட்டு போயிட்டாங்க .நமக்கு இன்னும் செக்யூரிட்டி கேமரா தேவை லதாவை நான் வீட்டுக்கு வரசொன்னேனு சொல்லு .எந்த வீட்டுக்கு சார் ம்ம் பண்ணை வீட்டுக்கு.அவனை பற்றி நன்கு தெரிந்ததால் லதா போகாமலிருந்தாள்.லதா இந்த விஷயத்தை ராமிடம் சொன்னாள் . நான் வேணா கூட வரேன் .சந்தேகம் அதிகமாயிடும் சார் .இதுவரைக்கும் என்ன பேசி இருக்கான் ? டெய்லி பிரியாணி ஆர்டர் போடுறான் அவ்ளோதான் . அவனை trigger பண்ற மாதிரி ஏதும் பண்ணனும் .அப்போதான் அவன் வாயை தொரப்பான் .

இன்னக்கி நைட் அவன் பண்ணை வீட்டுக்கு போறோம்.வேண்டாம் சார் அவன் ரொம்ப danger ஆன ஆளு .நாம கொஞ்சம் பொறுமையா இருப்போம் .
என்னடா சொல்ற ஷியாம் வீட்ல இல்லியா ஆமா சார் .எப்புட்றா வெளிய போனான் . டேய் அவனை தேடுங்கடா அவனை நம்பி எக்கச்சக்கமா இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் .அப்புவினுடைய மனைவி செல்வியை காணவில்லை என ராகவ் சொன்னான் . தீபுவை விட்டுவிட்டு அவன் மட்டும் மன்னார்குடிக்கு கிளம்பினான் . ராகவ் என்ன நடந்துச்சு . நேத்து நைட் மாவு வாங்குறேன்னு போயிருக்காங்க இப்போ வரைக்கும் திரும்ப வரல .நானும் எல்ல இடத்துலயும் தேடி பார்த்தேன் கிடைக்கல போலீசுக்கு இன்போர்ம் பண்ணியாச்சு . அவங்களும் தேடுறாங்க .ஷியாம் போன் நம்பர் சுவிட்ச் ஆப் பண்ணியிருந்தது .

அவங்க போன் எதுவும் எடுத்து போனார்களா ? இல்லை இங்கேதான் இருக்கு லாஸ்ட் கால் யார்கிட்ட பேசி இருகாங்க ?அவங்க friend ரேவதிகிட்டே . அவங்க வீட்ல பார்த்தீங்களா விசாரிச்சுட்டோம் அங்கேயும் போகலை .

செல்வி போட்டோவை வாட்ஸாப்ப் பண்ணுங்க .செல்வி வழக்கமா போற எல்லா இடமும் செக் பண்ணுங்க. நான் வந்துட்டே இருக்கேன். அவங்க ஸெல்ப் ல இல்ல டேபிள் ல ஏதாவது எழுதி இருக்கா பாருங்க .பாக்குறேன் சார் .ஏதோ ஒரு போன் நம்பர் எழுதி இருக்கு சார் .அதுக்கு கால் பண்ணுங்க எனக்கும் அந்த நம்பர் அனுப்புங்க உடனடியா அந்த நம்பரை locate பண்ணுங்க.
சாயங்காலம் போல ராம் வந்து சேர்ந்தான் அந்த நம்பெறும் சுவிட்ச் ஆப் டவர் லொகேஷன் trace பண்ணிட்டாங்க வாங்க போலாம் இங்கேருந்து 10km தூரம் இருக்கு .

செல்வி கடைசியா உங்ககிட்ட எப்போ பேசினாங்க நேத்து சாயங்காலம் . என்ன சொன்னாங்க . அப்பு போன பின்னாடி வாழவே பிடிக்கலை குழந்தைக்காகவும் அவங்க அப்பாக்காகவும்தான் வாழ வேண்டியிருக்குனு சொன்னாங்க .ம்ம் இன்னும் 5km . அந்த போன் யாரோடதுன்னு தெரிஞ்சுதா யாரோ குமாரசாமின்னு பேருல வாங்கி இருகாங்க .இன்னும் 2km .

செல்வியை முதலில் இருந்தே எச்சரிக்கையாக இருந்திருக்க சொல்லி இருக்க வேண்டும்.ஷியாம் ரிலீஸ் ஆனதை அலட்சியமாக எடுத்துக்கொண்டுவிட்டோமோ என நினைத்தான் .இது ஏதோ கடத்தல் வேலையுமில்லை .காட்டுக்குள் இறங்கி போலீஸ் குறிப்பிட்ட திசை நோக்கி ஓடிஓடிணார்கள்கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எனினும் செல்விக்கு எதுவும் ஆயிருக்க கூடாதென வேண்டிக்கொண்டான் . ஒன்றும் பிடிபடவிலலை இந்த லொகேஷன் தான கரெக்ட் லொகேஷன் தான் சார் . கொஞ்ச தூரத்தில் செல்வியின் செருப்பு கிடந்தது அதை ராகவ் உறுதி செய்தான் .இங்கேதான் எங்கேயோ இருகாங்க கம் ஆன் சேர்ச் /போலீஸ் வேகமாக சுற்ற தொடங்கினர்.ஆளுக்கொரு திசையில் நகர்ந்தனர் .

எங்க போன ஷியாம் நேத்து நயிட் முழுக்க உன்னை தேடி இருக்கோம் .எங்க போன ஷியாம் என்றான் அசோக் . ஒரு சின்ன வேலை இருக்குனு சொன்னேனே அதை முடிச்சிட்டு வந்தேன் .அப்டி என்ன எங்கிட்ட சொல்லாம இனிமே போகாதே . சரி அசோக் இனி ஒரு வேலையும் பாக்கி இல்லை . என்னவோ தோன ராம் அண்ணாந்து பார்த்தான் செல்வி மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தாள்.