iravukku aayiram kaigal - 8 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 8

Featured Books
Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 8

தீபுவின் இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்தது . மயங்கி சரிந்தாள்.தீபு தீபு என ராம் அரற்றினான். அவசரமாக அள்ளி எடுத்து கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தான் . சின்ன பொண்ணு சார் எப்படியாவது காப்பாத்துங்க என ராகவ் டாக்டர்களிடம் மன்றாடினான் . ரஞ்சனியும் ஊரிலிருந்து வந்து விட்டாள். ஆபரேஷன் செய்து குண்டை அகற்றினார்கள் .deepu கொஞ்ச நாள் ஆஸ்ப்பிடல்லேயே இருக்கட்டும் அதுதான் நல்லது என மருத்துவர்கள் சொன்னார்கள் . தீபு இன்னும் கண் விழிக்கவில்லை .ராஸ்கல்ஸ் என்று கறுவினான் ராம் . செத்தீங்கடா என்று தனக்கு தானே பேசிக்கொண்டான்.

போலீஸ் வந்து விசாரித்தார்கள் . மூணாம் நாள்தான் தீபு கண் திறந்து பார்த்தாள். வெரி சாரி தீபு என்றான் ராம் உணர்ச்சி வசப்பட்டவனாய் இருந்தான் . நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ராம் நாங்க தான் இங்க இருக்கோம்ல என்றான் ராகவ். எல்லாரும் இருக்கறப்ப தானே இது நடந்துச்சு . நீங்க கூட போயிடுங்க ராகவ் நான் மட்டும் பார்த்துகிறேன் .சே சே அப்படி எல்லாம் சொல்லாதீங்க இந்த காபியாவது குடிங்க என்றான்.ரஞ்சனி ஆறுதலாய் deepu கையை பிடித்துகொண்டாள் அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இது ஏதோ லோக்கல் gang வேலைதான் ஆள் மாறி சுட்டுவிட்டார்கள் என கேஸை கிளோஸ் செய்ய பார்த்தது போலீஸ் .ராம் தீபுவுக்கு குணமாகி சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி விடவேண்டுமெனெ எண்ணிக்கொண்டான் .

தீபு தொடர்ந்து மயக்கத்திலே இருந்து வந்தாள் .மிகுந்த சிரமத்துடன் கண் விழித்தாள் ராம் சார் எங்கே என கேட்டாள். அவரு மெடிசின் வாங்க போயிருக்காரு என்றாள் ரஞ்சனி .ஏதாவது வேணுமா அதெல்லாம் ஒண்ணுமில்ல அவரை என் பக்கத்திலேயே இருக்க சொல்லுங்க என்று சொன்னாள். சொல்றேம்மா நீ ஸ்ட்ரைன் பண்ணாதே

10 வது நாள் வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் . எப்படி இருந்த பொண்ணை இப்படி படுக்க வைத்து விட்டார்களே என ராகவ் குமைந்தான் .ரஞ்சனியை ஊருக்கு அனுப்பி வைத்தான் . மிகுந்த கவனமுடன் இருக்கும்படி சொன்னான் . இவர்களுடைய திருமணமும் தள்ளி போகிறதே என்று ராம் கவலை பட்டான் . அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை சார் ரஞ்சனி புரிஞ்சுப்பா . ராம் தீபுவின் அருகிலேயே இருந்தான் . வேற வீட்டுக்கு போயிடலாம் தீபு இங்கே இருக்க வேண்டாம் . இங்கதான் சார் இருக்கணும் அப்போதான் அவனுக மறுபடி வருவானுக அப்போ உங்க பிஸ்டல் என்கிட்டே குடுங்க சார் .இதுக்கு மேலே உன்னை இன்வோல்வ் பண்ண விட மாட்டேன் தீபு .உனக்கொரு கல்யாணம் அப்புறம் உன் இஷ்டப்படி எது வேணா செய். தீபு வீட்டில் சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லிவிட்டான் .ராமுக்கு சந்தோசம் என்றால் அவளுக்கும் சந்தோசம்தான் . மாப்பிள்ளை மிலிட்டரி என்றாலும் பரவாயில்லை என்றாள் தீபு.வெளிநாட்டு மாப்பிளை வேண்டாம் என்றாள் .

ராகவ் அன்னைக்கி வந்தவனுக வண்டி நம்பர் வெச்சு விசாரிச்சதுல பக்கத்துல இருக்கிற லோக்கல் பசங்கதான் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வெச்சு சுட்டிருக்கானுக . அவங்க வேணும்னு செஞ்சாங்களோ எனக்கு தெரியாது யாருன்னு துல்லியமா தெரியும்போது கவனிச்சிக்கலாம் .ராமுக்கு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது . என்ன ராம் ரொம்ப துடிச்சு போயிட்ட போல இது வெறும் ஆரம்பம்தான் நான் யாருன்னு தெரியல அதான் பா நீ நிழல் போல சுத்தி வரியே அதேதான் அதே ஷியாம் தான்.ராம் பொறுமையாக அந்த நம்பரை ஆராய்ந்தான் .எந்த ப்ரொயஜனமும் இருக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான் அவன் நம் பார்வையில் இருப்பது கூட நல்லதுதான் என நினைத்தான்.

ஷியாம் வெளிநாட்டு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன். அவனையுடைய வினோத பழக்கங்களால் அவனை அவன் பெற்றோர் கை விட்டு விட்டார்கள் . அவன் ரஞ்சனியை விரும்பி கல்யாணம் செய்ததே ஒருவகை அதிர்ஷ்டம்தான் . அதுவும் அவனுக்கு நீடிக்கவில்லை.
ஷியாம் buisness என்ற பேரில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தான் .அப்போதுதான் சிங்காரத்தை சந்தித்தான் . மீராவுடன் பழக்கம் ஏற்பட்டு அவள் மூலமாக பல கோடி பணத்தை சுருட்டினான் . மீராவை கொலை செய்தான் .

ஷ்யாமுக்கு சிங்காரத்தின் மரணம் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது அவனுக்கு இருந்த syndrome பயத்தில் என்ன செய்கிறோம் என்றே அவனுக்கு தெரியாது . அவனுக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் வெறியனாகி விடுவான் .
மறுபடி வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது ஹலோ ராம் நாம மீட் பண்ணலாமா வெப்பன்ஸ் இல்லாம எங்கே எப்போன்னு நீயே மெசேஜ் பண்ணு -ஷியாம்
ராமுக்கு தயக்கமில்லை ராகவுக்கும் தயக்கமில்லை அவனை நேருக்கு நேர் சந்தித்தாக வேண்டும் . இடத்தையும் நேரத்தையும் fix செய்தார்கள்.ஷியாம் ஒரு குழந்தை மாதிரி எப்போது என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது . வள்ளுவரகோட்டம் அருகே ஒரு 3 ஸ்டார் ஹோட்டல் ல் சந்திப்பதென முடிவாயிற்று .மதியம் 3 மணிக்கு வர சொல்லியிருந்தான் .இவன் எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பவில்லை .தீபுவிடமும் இதை பற்றி சொல்லவில்லை .

ஷார்ப்பாக 3 மணிக்கு அங்கிருந்த 4 ம் நம்பர் reserved டேபிளில் அமரந்தார்கள் . ராகவ் இது சரியா வருமா என்றான் . வேறு வழியில்லை இல்லாவிட்டால் அவனுடைய கொலைகளை தடுத்து நிறுத்த முடியாதென்றான்.

ஷியாம் வந்து விட்டான் .அவனுடைய இயல்பான தோற்றத்திலேயே வந்திருந்தான் . சாப்பிடத்தான் வந்தது போல இவர்களையும் கேட்டு உணவு ஆர்டர் செய்தான் . அப்புறம் ராம் உன்னால நான் ஓடாத தூரம் இல்ல . சாரி ஷியாம் நான் வேணும்னு அப்டி செய்யல. இட்ஸ் ஓகே
ரஞ்சனியும் திவ்யாவும் எப்படி இருகாங்க .. நல்லா இருகாங்க அவங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் . எனக்கு வேண்டியது அந்த 25 கோடி .நீ create பண்ண குரூப்பாலே அங்கே இப்போ என்னால போக முடியலே . தவிர என் பாஸ்போர்ட் பிளாக் ல இருக்கு.

இனி நீ என் விஷயத்திலே தலையிடாம இருக்க என்ன வேண்டும் .நீ தீபூவை சுட்டிருக்கக்கூடாது அவ ஏன் கண்ட எடத்துல கமெராவை வெக்குறா அதான் சுட்டேன் . சாரி ராம் நான் அவளை சுட்டிருக்க கூடாது .இட்ஸ் ஓகே இனி நீ எங்களை எதுவும் செய்யமாட்டேனு அஸுரன்ஸ் குடு .நாங்க உன் விஷயம் சம்பத்தப்பட்ட எல்லாத்தையும் ஒப்படைகிறோம் . டீல் ராம் சிறிய சூட்கேசை குடுத்தான் . எல்லாம் சரியாய் இருக்கிறது .என்னால உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது . கிளம்பி போய்விட்டான் .

நம்பிக்கையே இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . அவன் இன்னும் இந்த ஏரியா விட்டு போயிருக்க மாட்டான் நம்மளை கண்காணிச்சிக்கிட்டேதான் இருப்பான் . எதுவா இருந்தாலும் ஆபீஸ் போய் பேசிக்கலாம் என கிளம்பினர்.

ராம் தீபுவுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கினான் .அவள் அதிகம் டிமாண்ட் வைக்கவில்லை எனினும் நல்ல மாப்பிள்ளை தேடும்படி ரஞ்சனியிடமும் சொல்லி வைத்திருந்தான் .

ஷியாம் வெளிநாட்டுக்கு தப்பி ஓட போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்தான் . அதற்கான வேலைகளில் மும்முரமாய் இருந்தான் .

திருத்தணியில் இருந்து பெண் பார்க்க வந்தார்கள் . பையன் ரஞ்சித் . தீபு இதுவரை இல்லாத வெட்கத்தில் இருந்தாள். கல்யாணத்துக்கப்புறமும் வேலைக்கு போவேன் என்று சொல்லித்தான் மாப்பிளை வந்திருந்தான் . சிறியதொரு சூப்பர்மார்கெட் வைத்திருந்தான் . தீபுவும் ரஞ்சித்தும் பேசிக்கொண்டார்கள் . எனக்கு எல்லாமே ராம் சார்தான் . அவர் என்கிட்டே நேத்தே பேசிட்டாரு உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கு . உங்க அளவுக்கு நான் படிக்கலை பரவாயில்லையா . அதெல்லாம் பரவாயில்ல .

தேதி நிச்சயிக்கப்பட்டது. தேதி நெருங்க நெருங்க ராமுக்கு பதட்டம் அதிகமானது . ரஞ்சனி வந்து பார்த்து சென்றாள். திருத்தணியில் ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் அப்புறம் சென்னை வந்துக்கலாம் என ராம் சொல்லியிருந்தான்.ராமுக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்தது ஷியாம் கேஸ் விஷயமாக பேசலாம் என்று . இவன் அழைப்பை நிராகரித்து விட்டான் .

தீபுவின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடைபெற்றது . ராகவும் ராமும் ஓடி ஓடி வேலை செய்தார்கள் எங்க வீடு பொண்ணு கல்யாணம் சார் என்றார்கள் . பொண்ணு மாப்பிள்ளையை திருத்தணிக்கு அனுப்பி வைத்தார்கள் . ஷியாம் சம்மந்தமான எல்லாவித இன்வோல்வ்மெண்ட்களையும் குறைத்துக்கொண்டான் ராம் . இனி நாமளும் இந்த investigation தொழிலை விட்டு விடலாமா என யோசித்தான் . ராகவ் ரஞ்சனியோடு ஊருக்கு போயிருந்தான் .


மறுநாள் செய்தித்தாளில் மோசடி மன்னன் ஷியாம் கைது என்று வந்திருந்தது . போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற போது பிடிபட்டான் . ஷ்யாமை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் வைத்திருந்தார்கள் .இவனுக்கு நிம்மதியாக இருந்தது . ஷ்யாமை பற்றிய உண்மைகளை அவனே சொன்னால்தான் உண்டு . சாட்சிகள் எல்லாரையும் கொன்று விடுவான் என்ற அச்சமும் ராமுக்கு எழுந்தது .அவனிடம் போலீஸ் வாக்குமூலம் வாங்குவதற்குள் அவன் கதையை முடிக்கவும் பார்ப்பார்கள்.
ராகவ் இவனிடம் ஷியாம் அரெஸ்ட் ஆனது பற்றி பேசினான் . இனி அவன் வெளியில் வர முடியாது . அப்போதுதான் அசோக் என்பவனை பற்றி ராமுக்கு நினைவு வந்தது . இன்னும் முடியல ராகவ் இவனுக்கு பின்னாடி அசோக் னு ஒரு தொழிலதிபர் இருக்கான் அவன் க்ரானைட் business பண்ணிகிட்டு இருக்கான் . அவனும் இவனும் சேர்ந்து ஏகப்பட்ட frauds செஞ்சிருக்காங்க . அவ்வளவு லேசுல அசோக் ஷ்யாமை விட்டுட மாட்டான் .

அன்று இரவே அசோக் பற்றின விவரங்களை ராம் ஒழுங்கு படுத்த தொடங்கினான் . ஒரு புதிய யுத்தத்துக்கு தயாரானவன் போல எல்லாவற்றையும் சரி செய்தான் .
நாளை கோர்ட்டில் ஷ்யாமை ஆஜர் படுத்த போகிறார்கள் . இந்த கேஸ் ராமுடைய வாழ்க்கையே மாற்றிவிடும் என்பதை உணர்ந்தான் . வக்கீல் ரகுராமன்தான் ஆஜர் ஆக போவதாக செய்தி கிடைத்தது . ரகுராமன் ஒரு பிரபல கிரிமினல் வக்கீல் .கோஸ்டலி வக்கீல் . எப்பேர்ப்பட்ட கிரிமினல் கேஸ் கூட அவர் வாதாடி ஜெயித்திருக்கிறார்.ஒருபுறம் ஷியாம் மறுபுறம் அசோக் கூடவே ரகுராமன் இந்த கூட்டணியை எதிர்த்து நிற்க முடியுமா காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . ராம் மலைத்து நின்றான்