iravukku aayiram kaigal - 3 in Tamil Thriller by kattupaya s books and stories PDF | இரவுக்கு ஆயிரம் கைகள் - 3

Featured Books
  • तमस ज्योति - 51

    प्रकरण - ५१मेरे मम्मी पापा अब हमारे साथ अहमदाबाद में रहने आ...

  • Lash ki Surat

    रात के करीब 12 बजे होंगे उस रात ठण्ड भी अपने चरम पर थी स्ट्र...

  • साथिया - 118

    अक्षत घर आया और तो देखा  हॉल  में ही साधना और अरविंद बैठे हु...

  • तीन दोस्त ( ट्रेलर)

    आपके सामने प्रस्तुत करने जा रहे हैं हम एक नया उपन्यास जिसका...

  • फाइल

    फाइल   "भोला ओ भोला", पता नहीं ये भोला कहाँ मर गया। भोला......

Categories
Share

இரவுக்கு ஆயிரம் கைகள் - 3

டார்லிங் calling என்றே அழைப்பு வந்தது . இவன் இணைப்பை துண்டித்தான்.
பாஸ் என்ற என்னை துழாவினான் அது ஒரு வேளை சிங்காரம் நம்பர் ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது .மெசேஜ்களையும் தேடி பார்த்தான் .கால் ஹிஸ்டரி சுத்தமாக அழிக்கப்பட்டிருந்தது . மறுநாள் பேப்பரில் இது குறித்த விவரங்கள் வந்திருந்தன இறந்தவர் பெயர் சுரேஷ் என்றும் சிங்காரத்தின் நெருங்கிய கையாள் என்பதும் தெரிய வந்தது . சிங்காரம் அலெர்ட் ஆகியிருப்பான் .அவனை கைது செய்ய ஒரே வழி இந்த மொபைல்தான்.மொபைலை போலி முகவரியுடன் கமிஷனர் ஆபீஸ்க்கு அனுப்பினான்

தீபு இந்த கேஸ்ல சிங்காரம் அரெஸ்ட் ஆனாதான் எல்லாருக்கும் நல்லது .
ஆமா சார் நீங்க அப்பு வீட்டுக்கு போறேன்னு சொன்னீங்களே. இந்நேரம் சிங்காரம் எல்லா இடத்துலயும் ஸ்கெட்ச் போட்டு வெச்சிருப்பான் .அதனால அதிகம் அலட்டிக்க வேண்டாம் அவனே surrender ஆகிற மாறி போலீஸ் பிளான் பண்ணியிருப்பாங்க

எண்ணி இரண்டாவது நாள் சிங்காரம் surrender ஆயிட்டான் . இப்போ தைரியமா அப்பு வீட்டுக்கு போலாம்னு முடிவு பண்ணான் .ராகவுக்கு போன் போட்டான் .ரஞ்சனிதான் போனை எடுத்தாள். ராகவிற்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல்ல இருக்கோம் வெளில வந்ததும் கூப்பிடுறோம் என்று சொன்னாள்.சிறிது நேரத்தில் ராகவே போன் பண்ணினான் .சாரி ராம் எனக்கு fever அதான் போன் அட்டென்ட் பண்ண முடியல பரவாயில்ல ராகவ் சிங்காரத்தை அரெஸ்ட் பன்னிட்டாங்க நானும் பேப்பர்ல பார்த்தேன் . எனக்கென்னவோ encounter க்கு பயந்துதான் சரணடைய வந்திருப்பான் போல

அப்போ நானும் தீபூவும் போய் அப்பு வீட்டை பாக்குறோம் ஓகே சார் ஜாக்கிரதை

நான் உங்கள இப்படி ஒரு சூழ்நிலைல சந்திப்பேனு நெனைச்சு கூட பாக்கலே . நானும்தான் என ஆமோதித்தாள் ரஞ்சனி .வேலை விஷயம் என்னாச்சு ராகவ் .இன்னிக்கி கூட ஹெச் எம் கிட்டே பேசினேன் அவங்க மியூசிக் கிளாஸ் டீச்சர் வேணும்னு சொன்னாங்க .திங்ககிழமை 10 மணிக்கு வர சொன்னாங்க . ரொம்ப தேங்க்ஸ் ராகவ்

அப்பு வீடு அமைதியாய் இருந்தது . அவனுடைய ஆன்மா அந்த வீட்டையே சுற்றி வந்து கொண்டிருக்கும் .தீபுவும் ராமும் அதிகம் பேசிக்கொள்ளாமல் சுற்றி வந்தார்கள் .அவர்கள் அப்புவின் மனைவியையும் அழைத்து கொண்டு வந்திருந்தார்கள் . அவள் முதலில் உள்ளே சென்ற பின்பு இவர்கள் சென்றார்கள் .கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டின வீடு சார் .இப்போ யாருக்கும் ப்ரொயஜனமில்லாம கெடக்கு .அவருக்கு மியூசிக் நா ரொம்ப இஷ்டம் சார் ஏதாவது பாடிக்கிட்டேதான் இல்லே கேட்டுக்கிட்டேதான் வேலை செய்வாரு .

எதிர்பார்த்தபடி எதுவும் கிடைக்கவில்லை .அப்பு இருந்த தண்ணி டேங்க் வெளியில் வைத்து சீல் இடப்பட்டு இருந்தது .இவன் சீலை பிரித்து உள்ளே கை விட்டு துழாவினான் . செயின் ஒன்று அகப்பட்டது எஸ்ஸார் என ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டது

 

அந்த செயின் யாருடையதாக இருக்கும் என யோசித்தான் . அதை பத்திரப்படுத்தினான். செயின் போட்டோவை ராகவ்வுக்கு வாட்ஸாப்ப் செய்தான் . ஒன்னும் பெருசா கிடைக்கலை ராகவ் இதான் கிடைச்சுது .
ஓகே சார் நான் இந்த ஹார்ட் டிஸ்க் ஓபன் பண்ண ட்ரை பண்றேன்
சிங்காரம் ஜாமீன்ல வரதுக்குள்ள எவிடென்ஸ் ரெடி பண்ணியாகணும்.

அப்பு என்ன சொன்னான் என்பதையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான். யார் அவனை துரத்தியிருப்பார்கள் சிங்காரம் ஆட்களா ?இல்லை வேறு யாராவது இருக்குமோ .அவனுக்கு ஞாபகம் வந்து விட்டது அவன் சொன்ன மாதிரி password அனுப்பியிருக்கிறான். அவனுடைய மெசேஜ் களை படித்து பார்த்தான் ஆனால் வாய்ஸ் மெசேஜ் தவற விட்டிருந்தான் அதுதான் தேங்க்ஸ் மச்சான்

அதுதான் password . ஹார்ட் டிஸ்க் ஓபன் ஆனது பல்வேறு தேதியிட்டு cctv footage பதிவு செய்யப்பட்டிருந்தது .அது வெவ்வேறு டோல் பிளாசா அருகில் எடுக்கப்பட்டு இருந்தது . குறிப்பிட்ட கார் எண்ணை பின்தொடர்ந்து எடுக்கப்பட்டது.அதனுடைய டூப்ளிகேட் காப்பி உருவாக்கி
ராமுக்கு அனுப்பி வைத்தான்.

ரஞ்சனி இப்போதுதான் பழசை மறந்து வருகிறாள் அவளிடம் இதை பற்றி கேட்க வேண்டாமென நினைத்தான் .அவளுக்கு ஒன்றும் தெரியாமல் இருப்பதே safety என்றும் நினைத்தான் .யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே கண்ணனோடுதான் ஆட ரஞ்சனி மெய் மறந்து பாடி கொண்டிருந்தாள் .இந்த வேலை அவளுக்கு பிடித்திருப்பதாக சொன்னாள்.

ராம் அந்த கார் எண்ணை trace செய்து பார்த்ததில் அது சிங்காரத்தின் கார் என்று தெரிய வந்தது . கார் ஒரு குறிப்பிட்ட டோல் பிளாசாவில் நிற்பதும் ஒரு ஆள் அதிலிருந்து பெட்டியுடன் ஓடுவதும் பதிவாயிருந்தது. அடுத்த நிமிடம் அந்த கார் மீது லாரி மோதி தீப்பற்றி எரிவதும் இருந்தது
ராம் அந்த தேதியை பல்வேறு நாளிதழ் செய்திகளோடு ஒப்பிட்டு பார்த்தான்.ஒன்றும் பிடிபடவில்லை.

ரஞ்சனி ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.இறந்து போன ஷ்யாமுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் ஆன்மா சாந்தி அடைய ஹோமம் .அய்யர் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார் .ஷ்யாமுடைய போட்டோ பூமாலை சூட்டி வைக்கப்பட்டிருந்தது அதில் இறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தது .

ரஞ்சனியும் இவனும் சேர்ந்து விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.ஒருவரை ஒருவர் மனமார விரும்ப தொடங்கியிருந்தனர் .
அய்யர் தட்ஷனை வாங்கி கொண்டு சென்றார்.இன்னும் இவனுக்கு ரஞ்சனி அப்பா தற்கொலைக்கான காரணம் பிடிபடவில்லை . அவருடைய அறைக்கு சென்று பார்த்தான் .அவ்வளவு ஒழுங்கு ,நேர்த்தி அவருடைய போனும் மிஸ்ஸிங் .ரஞ்சனியும் அவனும் அதை தேட தொடங்கினார்கள்

சிங்காரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் வைத்தார்கள் .அவனை சிறையிலேயே முடித்து விட சில போலீஸ் உயரதிகாரிகள் நினைத்தாலும் 25 கோடி அவனுக்கு பாதுகாப்பை அதிகரிக்க செய்தது

ரஞ்சனி அப்பாவின் போன் கிடைத்துவிட்டது . போன் அதில் வாட்ஸாப்ப் uninstall செய்யப்பட்டிருந்தது .வாட்ஸாப்ப் இன்ஸ்டால் செய்தவுடன் அதில் நீ கட்ட வேண்டிய லோனை கட்டாமல் விட்டால் உன் மகளுடைய போட்டோவை morphing செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியிருந்தார்கள் .இதுவும் சிங்காரத்தோட வேலையாத்தான் இருக்கும்
ராமிடம் விவரமாக சொன்னான் .ஷியாம் இறந்த தேதியும் footage தேதியும் ஒத்துபோவதையும் சொன்னான் .ஷ்யாம் உயிரோட இருக்க வாய்ப்பிருக்கு சிங்காரம் கஸ்டடியில் ஷியாம் இருக்க நிறையவே சான்ஸ் இருக்கு ராகவ் இதற்காக சந்தோசப்படுவதா வேண்டாமா என்று ராகவுக்கு தெரியவில்லை.நம்ம next move என்ன ராம் சொல்றேன் ராகவ்

சிங்காரம் என்னங்கடா பண்றீங்க ஹார்ட்டிஸ்க் கெடைச்சுதா இல்லையா
இல்ல பாஸ் அவனை பொல்லொவ் பண்ணிக்கிட்டுதான் இருக்கோம் . அவனை எதுவும் பண்ண வேண்டாம் ரஞ்சனியை தூக்குங்க வேணாம் வேணாம் அந்த குழந்தையை தூக்குங்க சரிங்க பாஸ்

ரஞ்சனி ,ராகவ் ,குழந்தை திவ்யா மூவரும் திருப்பதிக்கு போயிருந்தனர் இருவரிடையே பரஸ்பர நெருக்கம் இருந்த போதும் சொல்லிக்கொள்ளவில்லை

ராமிடமிருந்து அழைப்பு வந்தது . எப்படி இருக்குது சாமி தரிசனமெல்லாம்
நல்லா போயிட்டிருக்குது சார் . நேத்து என்ன அரெஸ்ட் பண்ணிட்டாங்க ராகவ் என்ன சார் சொல்லறீங்க சுரேஷ் செத்த கேசுல .ஜாக்கிரதையா இருங்க ராகவ் குழந்தை பத்திரம்.ஒரு வாரத்துல வெளில வந்துடுவேன் ஓகே சார்

ராம் சாரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம் .நான் இப்டியே சென்னைக்கு போறேன் .நீ ஊருக்கு போ. குழந்தை பத்திரம்.

தீபு அதெல்லாம் ஒன்னும் ஆகாது சார் வக்கீல்கிட்டே பேசிகிட்டு தான் இருக்கேன் .ஒன் வீக்ல வெளியே வந்துடுவாரு . உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா என் வீட்லயே தங்கிக்கலாம் அப்பா அம்மா தம்பி எல்லாம் இருகாங்க சரி தீபு

சுரேஷ் பத்தி வேற ஏதாவது தெரிஞ்சதா ?சிங்காரத்தோட நெருங்குன கை ஆள் அப்டின்னு ராம் சொன்னாரே அவன் எதுக்கு அங்க போயிருப்பான்
ஒரு வேளை பணம் இன்னும் அங்கேதான் இருக்குதோ?exactly நாம இன்னைக்கி நயிட் போவோம் .ராமிடம் பேசி permission வாங்கிகொண்டாள்

தீபு வீடு எளிமையாய் இருந்தது மாடியில் தங்கிக்கொண்டான்.சார் போலாமா அவள் கார் ஓட்டும் லாவகம் பார்த்து ஆச்சரியப்பட்டான் .
பார்க் ஓரமாக நிறுத்திவிட்டு அலுவலகம் அருகே கேசுவளாக நடந்தாள். ஒரு போலீஸ் நின்றுகொண்டே தூங்கிக்கொண்டிருந்தார்.

பின்பு இவனிடம் சைகை காண்பிக்க இருவரும் பின்பக்கம் நுழைந்தனர்
இவன் தீபுவின் கைகளை பிடித்துக்கொண்டான் .மெல்ல ஒவ்வொரு பகுதியாக சோதித்தாள். சுரேஷ் விழுந்து கிடந்த இடம் வந்ததும் பொறுமையாய் கீழே குனிந்து பார்த்தாள்.அந்த இடத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை .திடீரென ராகவுடைய செல்போன் அடிக்க தொடங்கியது .போலீஸ் அலெர்ட் ஆகி உள்ளே வந்தார் .இவர்கள் மாடிக்கு ஓடி ஒளிந்தனர் .சாரி தீபு என்றான் ராகவ் . மாடிக்கு வந்ததும் சுரேஷ் விழுந்து கிடந்த இடத்துக்கு நேராக தீபு வந்தாள். இந்த தூண்லதான் பணம் இருக்கு என்றாள் அதில் வால்பேப்பர் சுற்றப்பட்டு இருந்தது மொபைல் வெளிச்சத்தில் அதை மெதுவாக பிரிக்க தொடங்கினாள் .கொஞ்சம் பகுதியை இவனும் பிரித்தான் .அழுகிய கை ஒன்று தட்டுப்பட்டது .தீபு
மயங்கி சரிந்தாள் .இவன் வாயை பொத்திக்கொண்டு வாஷ்பசின் நோக்கி விரைந்தான் .தீபு முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான். அவளை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் .திரும்ப வீட்டுக்கு வரும்போது மணி 3 ஐ தொட்டிருந்தது .

தீபு ரொம்ப தேங்க்ஸ் சார் என்றாள் .வேற யாராவது இருந்தா ஓடி போயிருப்பாங்க .இட்ஸ் ஓகே தீபு அது யாராயிருக்கும் நிச்சயம் அது ஓர்
லேடீஸ் கைதான் . இந்நேரம் போலீஸ் அத அப்புறப்படுத்தி இருப்பாங்க

நியூஸ் பேப்பரை ஆராய்ந்ததில் எந்த செய்தியும் வரவில்லை .ராம் வந்ததும் மறுபடி போலாம்னு சொன்னாரு .நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் அப்டின்னு தீபு சொன்னா
காலையில் மொபைல் சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி கிடந்தது
சார்ஜ் போட்டுவிட்டு குளிக்கப்போனான் . தீபு காஃபீ கொண்டு வந்தது கொடுத்தாள். ரஞ்சனிதான் போன் அடித்தது நானும் திவ்யாவும் ஷாப்பிங் வந்தோம்
சொல்லி முடிப்பதற்குள் போன் பிடுங்கப்பட்டது மரியாதையா ஹார்ட் டிஸ்க் குடுத்துட்டு திவ்யாவை கூட்டிகிட்டு போ போன் துண்டிக்கப்பட்டது.

இவனுக்கு கை கால் உதற தொடங்கியது சரி தீபு நான் வரேன் என்று தலை தெறிக்க ஓடினான் .திவ்யாவை இழக்க அவன் தயாராய் இல்லை .
தீபு அவசரமாய் ராமுக்கு போன் செய்து விஷத்தை சொன்னாள் கவலைப்படாத தீபு நாளைக்கி ஜாமீன்ல வந்துடுவேன் நீ போய் எதுக்கும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கிட்ட விஷயத்தை சொல்லு அவர் ஹெல்ப் பண்ணுவாரு. ரஞ்சனி இவனை பார்த்ததும் அழ தொடங்கினா.ப்ளீஸ் அழாதே நாம இப்போதான் தைரியமா இருக்கணும். எந்த நம்பருக்கு கால் பண்ண சொன்னான் இல்லே அவனே என் நம்பருக்கு கூப்பிடறேனு சொன்னான்.ராகவ் பொறுமையாக போனை வெறித்தபடி காத்திருக்க தொடங்கினான்