Human Fertilisation in Tamil Anything by S Mathan books and stories PDF | Human Fertilisation

Featured Books
  • आखेट महल - 19

    उन्नीस   यह सूचना मिलते ही सारे शहर में हर्ष की लहर दौड़...

  • अपराध ही अपराध - भाग 22

    अध्याय 22   “क्या बोल रहे हैं?” “जिसक...

  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

Categories
Share

Human Fertilisation

எல்லா புகழும் என் தாய் தகப்பனுக்கே.

Tamil Transcript Of The Video.

Human Fertilisation | Sperms | Ovum | விந்தணுக்கள் கருமுட்டை கருத்தரித்தல் 6000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியர்களுக்கு தெரிந்திருக்கிறது. 

அசரவைக்கும் உண்மையா இல்லை பச்சை பொய்யா?

Video Link - https://youtu.be/n9gZH-wx_ho

YouTube Channel Name – Mads X13.

Channel URL - https://www.youtube.com/channel/UC4JY9KGK581qT0Z-66cxQLQ

எல்லோருக்கும் வணக்கம்,

வரலாற்று உண்மைகள் மற்றும் பண்டைய காலத்து கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான்  அறிவியலில், சயின்ஸில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். பகுத்தறிவு, ரேஷனல், லாஜிக் தர்க்கம் தான் உங்களை வழிநடத்த வேண்டும். இது போக ஒரு சிம்பிள் கான்செப்ட் ஒன்று இருக்கிறது. அது காமன் சென்ஸ் பொது அறிவு. நீங்கள் ஒரு மாபெரும் ஜீனியஸாகவோ அல்லது ஐன்ஸ்டீனைப் போல நம்பமுடியாத IQ பெற்றவராகவோ இருக்க வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 100 சதவிகிதம் சமயத்தில் நீங்கள் காமன்சென்ஸைப் பயன்படுத்தினால் எது உண்மை, எது பொய் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். உணர்ந்து கொள்வீர்கள்.

தமிழ்நாட்டின் அரியத்துறையில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டவை எனக் காட்டும் பல கட்டூரைகளையும் வீடியோக்களையும் பார்த்தேன். என்ன சொல்கிறது என்றால் சில புராண அம்சங்களின் அடிப்படையில் இந்த கோயில் 6000 ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள். இது எதனால் என்றால் ரோமர் மற்றும் முகுந்தன் முனிவர்களுடன் பழம்பெரும் தொடர்பைக் கருத்தில் கொண்டு 6000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள்.

AI Female.

இதுவே ஒரு பச்சைப் பொய். கீழடி அகழ்வாராய்ச்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப மதிப்பீடுகள் கிமு 5 ஆம் நூற்றாண்டு பழமையானது என்று சொல்கிறது. அதாவது 2500 ஆண்டுகள் பழமையானது.  2019 ஆம் ஆண்டில், கூடுதல் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் கார்பன் டேட்டிங் செய்த போது இது கிமு 580 க்கு முந்தையது என்று சொல்கிறது. அதாவது 2600 ஆண்டுகள் பழமையானது.

அங்கே மண் பானைகளின் துண்டுகள், அகேட், கண்ணாடி மற்றும் டெர்ராகோட்டா போன்ற பல  பொருட்களால் செய்யப்பட்ட பலவகையான மணிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. செப்பு ஊசிகள், வளையல்கள் மற்றும் இரும்பு ஆணிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏதாவது ப்ரம்மாண்டமான பாறையில் செதுக்கப்பட்ட கோவில்கள் இருந்ததா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை.

இப்போது உங்கள் காமன் சென்ஸ் என்ன சொல்கிறது. 2600 ஆம் ஆண்டில் இவ்வளவு தான் முன்னேறியிருக்கிறர்கள். அந்த கோவில் 6000 ஆண்டுகள் பழமையானது என்பது பச்சை பொய்.

இப்போதிருக்கும் முழு இந்தியாவையும் எடுத்துக்கொண்டால் பழமையான பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டை தான் சேர்ந்தவை. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னால். பராபர் குகைகள் போன்ற எடுத்துக்காட்டுகள் இருக்கிறது. கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில், வரமுர்தீஸ்வரர் கோவில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர், இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இது தான் உண்மை. 

சரி. அந்த கோவிலில் மனித கருத்தரித்தல். ஹியூமன் பெர்ட்டிலைசேஷன். செயல்முறையின் செதுக்கப்பட்ட  சான்றுகள் இருக்கிறது என்கிறார்கள். அந்த சிறிய செதுக்கிய இடத்தை மட்டும் காட்டுகிறார்கள். அந்த படம் இதுதான். இதை என்ன சொல்கிறார்கள் என்றால் இந்த பாம்பு போன்றது என்பது ஆணின் விந்தணு என்றும் அதற்கு முன்னால் இருப்பது பெண்ணின் சினை முட்டை என்று சொல்கிறார்கள்.

நான் படித்த பல கட்டுரைகளிலும் வீடியோக்களிலும் காட்டப்பட்ட படம் இது. ஒவ்வொருவரும் இது ஒரு பெண் முட்டையை நோக்கி நீந்துவது ஒரு விந்தணு என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒரு வட்ட செதுக்கல் அதற்குள் ஒரு வளைவான பிறை போன்ற செதுக்கல் தான் இருக்கிறது. இதை கருமுட்டை என்று சொல்கிறார்கள்.

ஒரு மனித விந்தணு ஸ்பெர்மட்டோசூன் என்று அழைக்கப்படுகிறது.  ஒரு பெண்ணின் ஒற்றை முட்டை கருமுட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒரு குண்டூசியின் தலை ஒரு விந்தணுவை விட 50,000 மடங்கு பெரியது. ஒரு பால் பாய்ண்ட் பேனாவை வைத்து காகிதத்தில் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறிய புள்ளியானது விந்தணுவை விட 100 மடங்கு பெரியது.

அதனால் மனிதனின் கண்ணால் ஒரு மனித விந்தணுவைக் கண்டிப்பாக பார்க்க முடியாது. விந்தணுக்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறியவை. சுமார் 5 மைக்ரோமீட்டர் நீளம் மட்டுமே இருக்கும், அதாவது ஒரு மீட்டரில் 5 மில்லியன்கள்! இதை ஒப்பிட்டு பார்க்கும் போது, ஒரு மனித முடியின் அகலம் சுமார் 50-100 மைக்ரோமீட்டர்கள். அதனால் விந்தணு எவ்வளவு சிறியது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

மைக்ரோஸ்கோப்பின் தொழில்நுட்பம்  குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நடந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகள் முழுவதும் விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் இரண்டையும் விரிவாக ஆய்வு செய்வதற்கு முக்கியமானதாக இருந்தது. அது கிபி 1800 முதல் கிபி 2000 வரை. அதாவது அது 200 ஆண்டுகள் பழமையானது. இப்போது காமன் சென்ஸை உபயோகித்தால் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் இவைகள் இருந்திருக்குமா.

Mads X13.

அதே போல பெண்ணின் கருமுட்டையை மனிதனின்  கண்ணால் பார்க்க முடியாது. விந்தணுவைப் போலவே, மனித கருமுட்டைகளும் நுண்ணியவை. அவை சுமார் 120 மைக்ரோமீட்டர் விட்டம் இருக்கும். மனித முடியை விட பல மடங்கு சிறியது.  விந்தணுவைப் போலவே, விஞ்ஞானிகள் மனித கருமுட்டைகளைப் பார்க்க படிக்க சக்திவாய்ந்த மைக்ரோ ஸ்கோப்பை பயன்படுத்துகிறார்கள்.

உங்கள் காமன் சென்ஸ் என்ன சொல்கிறது. அவ்வளவு நவீன மைக்ரோ ஸ்கோப்புகள் 6000 ஆண்டுகள் முன்னால் இருந்ததா. அல்லது 1000 ஆண்டுகளுக்கு முன்னால் சோழர்கள் அந்த கோவிலை கட்டும் போது அவர்களிடம் மைக்ரோ ஸ்கோப் இருந்ததா?

அறிவியல், தர்க்கம் மற்றும் பகுத்தறிவை நம்புங்கள். அல்லது குறைந்தபட்சம் காமன் சென்ஸுடன்  விஷயங்களை பகுப்பாய்வு செய்யுங்கள்.

எந்த ஒரு நாட்டிலும் வாழ்பவர்கள் அவர்களின் நாட்டை பற்றி தற்பெருமைய சொல்லி மார்தட்டி கொள்ளலாம். ஆனால் இந்த காலத்தில் அவர்களின் முட்டாள் தனத்தை இன்டர்நெட் மூலம் உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏளனமாக சிரித்துக்கொண்டிருக்கிறது.

சிரித்து வாழவேண்டும் ஆனால் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று தான் சொல்லியிருக்கிறது.

சயின்ஸ், லாஜிக் ரேஷனல் காமன் சென்ஸை யூஸ் பண்ணுங்க.

Please like, comment and subscribe to the videos. Most importantly, share the videos widely.

Thanks.

Take care.

Mathan.