Hi, நான் உங்கள் சிவா..
Please முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்..
நான் ரவி...
உண்மையிலேயே எனக்கு மலர் மேல் பயங்கர கோபம் கோபமாக வந்தது. என்ன இவள் எதுக்கும் ஒத்து வரமாட்டேங்கிறாள்.. எவ்வளவு நாள் தான் பொறுமையாக Wait பண்றது, மனசு மாறுவாள் னு? Normal ஆக மலரை பார்த்தால் அவ நடவடிக்கைகளை கவனிச்சா.. என்னை அவளுக்கு பிடிச்சிருக்கிற மாதிரியே தோணுது, என் கிட்ட Close ஆ தான் இருக்கிறா.. பழகுறா.. சரி என்று Love, Marriage னு பேச்சை எடுத்தாலே.. பிடி கொடுத்து பேச மாட்டேங்கிறா.. என் கிட்ட நெருக்கமாக வருவது போல தோணுது. ஆனால்.. விலகியும் போறா.. என்ன நடக்குதுனே எனக்கு புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு. B'day அன்னைக்கு அவ்வளவு தூரம் எவ்வளவோ convince பண்ணாலும் கொஞ்சம் கூட மனசு மாறின மாதிரி தெரியலை. என்னதான் அவள் மனசில ஏதோ பெரிய மறக்கவே முடியாத Problem இருந்தாலும் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு நல்ல லைஃப் யை தேர்ந்தெடுத்துகிட்டா என்ன? மனசில் இருக்கிற கஷ்ட்டத்தை தனக்கு Close ஆ இருக்கிறவங்கள் கிட்ட சொன்னால் தானே தன்னுடைய மனசில் இருக்கிற பாரம் குறையும். மலரை பொறுமையாக உட்கார வச்சு எல்லாத்தையும் கேட்கணும். ஏன் இப்படி பண்றனு? எதுவும் வாயை திறந்து சொல்ல மாட்டேங்கிறாள். பிரச்சினை என்ன னு தெரிந்தால் தான் அதை அணுகி Solution தேட முடியும். எப்ப கேட்டாலும் நம்ம Relation.. வயசு அதிகம்.. Main ஆ past life.. என்ன past life problem னு தெரியவில்லை. முதல்ல ஒரு இரண்டு நாள் Office க்கு Leave போட்டுட்டு, மலர் ஊருக்கு போயி என்ன அவ past life னு தெரிஞ்சக்கணும்னு decide பண்ணேன்.
ஆனால் அவளோட Angle லேயிருந்து யோசித்து பார்த்தால் ஏதோ ஒரு problem யார்கிட்டேயும் சொல்ல முடியாத ஒரு Problem த்தில் மலர் சிக்கிகிட்டு வெளியே வரமுடியாத புதைகுழி போல ஏதோ ஒண்ணுல மாட்டிகிட்டு இருக்காள்னு மட்டும் தோணுது. அவளை நினைத்தால் பாவமாகவும் இருக்கிறது. அவளுக்கென்று எனக்கு தெரிஞ்சு இங்கே யாரும் இல்லை. எங்களை தவிர.. இங்கே கவிதா டன் Flats Share பண்ணிகிட்டு இருக்காள். என்னோடு தான் கொஞ்சம் Close இப்போதைக்கு. அவளை பற்றி நினைத்தால் அவளின் அழகான முகம், ஆனால் அதில் ஒரு சோகமான சாயல் தான் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் மலரின் கிராமத்துக்கு போய் விசாரிப்பது நல்லது என எனக்குப் பட்டது.
அடுத்த வாரம் சனிக்கிழமை Office Leave ஆக அமைய நானும் நந்தாவும் என் Car ல் பொள்ளாச்சி மலர் கிராமத்திற்கு சென்றோம். Address வழி எல்லாம் கவிதாவிடம் முன்பே வாங்கியிருந்தேன். நாங்கள் அவள் வீட்டுக்கு போவது மலருக்கு தெரிய வேண்டாம் என்று கவிதாவிடம் சொல்லியிருந்தேன்.
பொள்ளாச்சி City' தாண்டி கொஞ்ச தூரம் Main Road லிருந்து கொஞ்சம் உள்ளே போனவுடன் Atmosphere யே மொத்தம் மாறிப்போனது. கிராமத்து Style அப்படியே எங்களுக்கு தெரிந்தது. எனக்கே ஆச்சரியம். இன்னும் நந்தா வுக்கு பயங்கர ஆச்சர்யம் தன் வாழ்நாளில் இந்த மாதிரி அழகான அமைதியான Pollution இல்லாத, City வாகனங்களின் சப்தமே இல்லாத ஊர்களை கிராமத்து வழியை பார்க்க பார்க்க அவனுக்கு ஆச்சர்யம் சந்தோஷம். நன்கு அனுபவித்தபடியே Drive பண்ணியபடியே இயற்கை காட்சிகளை கண்குளிர பார்த்தபடியே சென்றோம். எங்கும் பச்சை போர்வை போர்த்தி படி வயல் நிலங்கள். சில நிலங்களில் கதிர் முற்றி வீசும் காற்றுக்கு அசைந்தாட, இன்னும் சில வயல் வெளியில் கதிர்களின் மேல் காற்று அலை, அலையாய் பரவி படர்ந்து செல்ல பார்க்க மனதிற்கு குதுகாலமாக இருந்தது. சில வயல்களில் ஏதோ மஞ்சள் பூ பூத்து எங்கும் மஞ்சள் புடவை போர்த்தியது போல் இருந்தது. ஆடு மாடுகளின் பவனியும் மாட்டு வண்டிகள் நகரும் சப்தமும் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தது. பறவைகளின் ஆரவாரமும் தூரத்து பம்பு செட்டுகளிலிருந்து தண்ணீர் வந்து விழும் காட்சி அதோடு வயலில் பாடிக்கொண்டே வேலை செய்து கொண்டிருக்கும் மனிதர்களை காணும் போது காதுகளுக்கும் மனதிற்கும் ரம்மியமாக இருந்தது. இதெல்லாம் எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
போகும் வழியெல்லாம் சிறு சிறு ஓடைகள், கால்வாய்கள், குளங்களும் தென் பட, அதைதொடர்ந்து அப்படியே பச்சை போர்வை போர்த்திய வயல் வெளியில் ஆங்காங்கே நாரைகள் ஜிவ்வென்று வானில் எகிறி கும்பல் கும்பலாக பறக்க, பின் புற மலைத்தொடரின் காட்சியில் அவற்றைப் பார்க்கும் போது மனதை கொள்ளை கொண்டது.
எல்லாவற்றையும் அனுபவித்து கொண்டே காரில் மலர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தோம். வழியில் பெரிய பெரிய ஆலமரமும் அரசமரங்களும் படர்ந்து இருக்க அதன் கீழே, கிராம தேவதைகளின் சிலைகளும், அரசமரத்தடியில் விநாயகர் சிலைகளும் தென்பட, ஆங்காங்கே மரங்களில் கட்டியிருந்த தூக்கணாங்குருவி கூடுகள் காற்றிற்கு ஆட பிரமிப்பாக இருந்தது. ஊருக்குள் சில ஆலமரத்தடியில் மேடை போன்றவை இருந்து ஜனங்கள் உட்கார்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்க, அவசர City Life ல் வாழும் எங்களுக்கு இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்பவும் ஆச்சரியமாகவும் எதையோ வாழ்க்கையில் நாங்கள் ரொம்பவும் Miss பண்ணுவது போல தோன்றியது. கிராமத்திற்குள் நுழைந்து மலரின் அப்பா ராகவன் வீட்டுக்கு வழி கேட்டு வந்து சேர்ந்தோம். ஒரு பெரிய கோவில் இருந்து அந்த தெருவில் மூன்றாவது வீடாக மலரின் வீடு இருக்க, எனக்கு நாங்கள் விளையாண்ட தெரு, இடம், கோவில், பக்கத்தில் குளம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய ஞாபகங்கள் வந்தது. ஆனால் எல்லாம் காலப்போக்கில் பெரிதும் மாறியிருந்தது. காரிலிருந்து இறங்கி பார்க்க, கொஞ்சம் தூரத்தில் வீதி ஓரத்தில் பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்த பழங்கால பெரிய மரத்தேர் இருக்க எனக்கு அதை சிறு வயதில் பார்த்த, அதன் மீது ஏறி விளையாண்ட ஞாபகம் வந்தது. பின் மலர் வீட்டிற்கு பக்கத்தில் போய் பார்க்க அது பூட்டியிருக்க.. நானும் நந்தாவும் முழித்தோம். அப்போது பக்கத்து வீட்டிலிருந்து இருந்து ஒரு 25 வயது மதிக்கத்தக்க பெண் வெளியே வந்து..
யாருங்க அது? பூட்டியிருக்கிற வீட்டை நோட்டம் பார்க்கிறிங்க? என்ன வேணும் உங்களுக்கு?
நான் உடனே இங்கே ராகவன் சார், மலர் வீடு இதானே?
ஆமாம் அவங்க வீடுதான். ஆனா அவங்கள்ளாம் இப்ப இல்லையே நீங்க யாரு?
ராகவன் சார்?
அவரு ஊருக்கு போய் 10, 15 நாளாகுதே.
நான் அந்த பெண் கிட்ட போயி என் பேர் ரவி இவன் நந்தா என் ஃப்ரண்ட், நாங்க கோவையிலிருந்து வர்ரோம் . நான் மலருக்கு சொந்தம் தான் என்று சொல்ல,
அந்த பெண் என்னை உற்று நோக்கி ஏய் நீ ரவிகுமார் தானே. டேய் நான் மல்லிகாடா. சின்ன வயசில நீங்கள்லாம் இங்கே வந்தபோது நாமளாம் ஒண்ணா சேர்ந்து விளையாடுவோமே. ஞாபகம் இல்லை. உன் தங்கச்சி பேரு கூட கல்யாணி தானே.
எனக்கு அப்போது தான் எல்லாம் ஞாபகத்துக்கு வர.. ஆமாமாம் நான் தான் ரவி, இது என் ஃப்ரண்ட் நந்தா என்று அறிமுகப்படுத்திய பின் எல்லா குசலங்களும் நல விசாரிப்புகளும் முடிந்து மல்லிகா வீட்டிற்கு உள்ளே போய் உட்கார.. மோர் எல்லாம் குடித்த பிறகு மல்லிகா என்ன விஷயம்? ஏது என்று கேட்க, நான் நந்தாவைப் பார்க்க, அவன் எனக்கு கையை ஆட்டி Green signal கொடுக்க, மெல்ல தயக்கத்துடன் மலர்.. என் லவ்.. அவள் Marriageக்கு மறுப்பது என்று எல்லாம் சொல்ல, மல்லிகா சந்தோஷமாகி கண்ணீருடன் ரவி நீ நல்ல Decision எடுத்திருக்க, எப்படியாவது மலரை கல்யாணம் பண்ணிக்கோ.. மலர் ரொம்ப நல்லவ. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.
மேலும் மல்லிகா ரவி, அவளோட அக்கா செத்துப்போனதிலிருந்து மலர் ஒரு மாதிரி ஆயிட்டா என்றவுடன் எங்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.
மலருக்கு அக்காவா? அதுவும் இறந்துட்டாங்களா? என்று இருவரும் கேட்டவுடன்,
மல்லிகா திகைப்புடன்
உங்களுக்கு அந்த விஷயமெல்லாம் தெரியாதா? என்று கேட்கும் போதே மல்லிகா வின் அப்பா பெருமாள் நாயுடு உள்ளே வர, மல்லிகா எங்களை அவருக்கு அறிமுகபடுத்தி வைத்துவிட்டு எல்லா விஷயங்களையும் சொல்ல..
பின் நாயுடு எல்லா வற்றையும் விவரமாக எங்களுக்கு சொல்ல ஆரம்பித்தார்.
அதன் சாராம்சம்...
நாயுடு அந்த கிராமத்து Police station ல் ஹெட் கான்ஸ்டபிள் ஆக இருந்து 4 வருடங்களுக்கு முன்தான் Retired ஆனவர். மலருக்கு கூடப்பிறந்த அக்கா மாதவி மலரை விட 10 வயது மூத்தவள். மலரின் அப்பா ராகவனின் தங்கைக்கு பெண் குழந்தை இல்லாததால் அவர்கள் வற்புறுத்தி கேட்டுக்கொண்டதினால் மாதவியை சிறு வயதிலிருந்தே தேனி க்கு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க அங்கேயே வளர்ந்தாள் மாதவி. அதுதான் அவர்கள் செய்த முதல் தப்பு. மாதவி ரொம்ப அமைதியான அழகான யாருடனும் அதிகம் பேசாத, தனக்குள்ளே எதையும் பூட்டி வைத்துக் கொள்ளும் Chatecter. எப்போதாவது அவள் இங்கே வந்து போக இருக்க.. மாதவிக்கு மலர் என்றால் உயிர். எப்ப இங்கே கிராமத்திற்கு வந்தாலும் திரும்ப தேனி போக மாட்டேன் என்று மலரை விட்டு பிரிய மனமில்லாமல் அழுவாள். எங்களுக்கும் பார்க்க பாவமாக இருக்கும்.
மலருக்கு 10 வயதிருக்கும் போது மலரின் அம்மா இறந்து போக, ராகவன் உடைந்து போனார். வாழ்க்கையில் ஏதும் பிடிப்பில்லாமல் இருக்க, இந்த சமயத்தை பயன் படுத்திகொண்டு ராகவனின் தங்கை தன் உருப்படாத, குடிகார பையன் கதிர் க்கு மாதவியை கல்யாணம் செய்து வைக்க, அங்கே ஆரம்பித்ததுதான் எல்லா வினையும்.
அவன் சம்பாதிக்க துப்பில்லாமல் மாதவியை கொடுமை படுத்தி அவள் மூலமாக இங்கே இருந்த நிலங்களை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி எழுத வைத்து, அதையும் விற்று எல்லாவற்றையும் குடிக்கு தாரைவார்க்க, கடைசியில் ஒண்ணுமே கையில் மிஞ்சாமல் போனது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பவும் அதே குடி தான். மறுபடியும் இங்கே கிராமத்தில் இருக்கிற வீட்டை ஏதோ Buisness பண்ண பணம் வேணும், எழுதி கொடுக்க சொல்லி கதிரும் அவன் அம்மாவும் மாதவியை அடித்து சித்திரவதை பண்ண. மாதவி அவர்களுடன் சண்டை போட்டு விட்டு இங்கேயே தன் கிராமத்திற்கே வந்து விட்டாள்., ஆனால் பின்னாலயே கதிரும் வந்து பிரச்சினை பண்ண., நாயுடு தான் தன் Police power Use பண்ணி முன்னின்று எல்லாவற்றையும் சமாளித்தார். அப்போதிலிருந்து அவனுக்கு நாயுடு என்றால் பயம். அப்ப மலருக்கு ஒரு 14 வயதிருக்கும். அவள் தன் வீட்டுக்கே போகாமல் நாயுடு வீட்டிலேயே பெரும்பாலும் இருப்பாள். அதுவும் மல்லிகா வும் மலரும் ஒரே Batch நல்ல ஃப்ரண்ட்ஸ் ஆனதால் இங்கேயே இருந்து விடுவாள். அதுவும் அவளின் மாமா கதிர் வீட்டில் இருந்தால் ஏனோ பயந்து தன் வீட்டுக்கு போகாமல் எவ்வளவு நாளானாலும் மல்லிகா வீட்டிலேயே இருப்பாள். நாயுடுவும் இருவரையும் பாரபட்சமின்றி தன் சொந்த மகளாகவே நடத்தி வந்தார்.
ஒரு நாள் காலை மாதவியின் பெரிய அலறல் அவள் வீட்டிலிருந்து கேட்க, நாயுடு எல்லோரும் ஓடிப்போய் சாத்தியிருந்த கதவை உடைத்து பார்க்க ஹாலில் மாதவி தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்க, பக்கத்தில் சாத்தியிருந்த ரூமில் ஓர் மூலையில் அழுது கொண்டிருந்த மலரும் இருந்தாள்.
நாங்க தான் போய் ரூம் கதவை திறந்து மலரை வெளியே கொண்டு வந்தோம். இதற்குள் பின் வாசல் வழியாக கதிர் கைகளில் தீக்காயங்களுடன் தப்பித்து ஓட, ஊர் மக்கள் அவனை துரத்தி பிடித்து இழுத்து வந்தனர். கடைசியில் கதிரை போலிஸ் அரெஸ்ட் செய்து கொண்டு போக, மாதவி யை காப்பாற்ற முடியாமல் இறந்து போனாள். எவ்வளவு கேட்டாலும் மலர் வாயிலிருந்து ஒண்றும் வரவில்லை. பெரும் அதிர்ச்சியில் இருந்தாள். இதையெல்லாம் நாயுடு சொல்லி முடித்து, அந்த பாவி கதிர் எப்படியோ ஒரு 6 மாசத்தில ஜெயில்லேயிருந்து வெளியே வந்துட்டான். அவன் அப்பறமா மலேஷியா எங்கேயோ Welder வேலைக்கு போனதா கேள்வி. மலர் அப்பா ராகவனும் மகள் போன துக்கத்துல ரொம்ப உடைஞ்சி போயி கோயில் குளம் னு சுத்திகிட்டிருக்கார் பாவம் . இப்ப கூட எங்கோ சார்தாம் யாத்திரை போயிருக்கார். மலர் கொஞ்ச நாளையிலேயே தன்னைத்தானே தேற்றிகிட்டு நல்லா படிச்சு, Degree லாம் பண்ணி நிறைய கோச்சிங் போயி Exams எழுதி இப்ப அங்க கோவையில் Job கிடைச்சி Work பண்றா.
மறக்காமல் மலர் என் பிறந்த நாள் மல்லிகா பிறந்த நாளுக்கு அப்புறம் மாசம் ஒருதடவை யாவது எங்க இருந்தாலும் ஃபோன் பண்ணிடுவா.
நான் மெதுவாக நாயுடு விடம் மலரை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவது, மலர் என்னை விரும்பினாலும் ஆனால் அவள் தன் வாழ்க்கையில் ஏதோ மறக்க முடியாத ஒரு சோகமான சங்கடம் இருப்பதனால், கல்யாணம் வேணாம்னு என்று மறுப்பது எல்லாம் சொல்ல, நாயுடு கண்கலங்கி எழுந்து என் கைகளை பிடித்து கொண்டு தம்பி, எனக்கு மலரும் மல்லிகா மாதிரி ஒரு பொண்ணுதான். மலர் வாழ்க்கையில் ஏதேதோ நடந்து போச்சு. அவ ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு சந்தோஷம் னாலே என்னனு தெரியாத அளவிற்கு வாழ்க்கையில் அத்தனை கஷ்ட்டங்கள். நீ தான் எப்படியாவது மலரை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு ஒரு நல்ல சந்தோஷமான வாழ்க்கையை அமைச்சி கொடுக்கனும். அதுக்கு எங்க Side லேருந்து என்ன உதவியோ இல்ல வேற எதுவா இருந்தாலும் சரி பண்ண தயாரா இருக்கோம் என்று உணர்ச்சி வசப்பட..
நான் Uncle, உங்க ஆசிர்வாதமும், உங்க இரண்டு பேரோட அன்பும் துணையும் இருந்தால் போதும். நான் மலரை எப்படியாவது Convince பண்ணி கல்யாணம் பண்ணிக்குவேன். எங்க கல்யாணத்தை நீங்க தான் தலைமையேற்று நல்லபடியா நடத்தி தரணும் என்று நான் சொல்ல என்னை அப்படியே ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்.
மல்லிகாவும் ஆமாம் ரவி, நீங்க இரண்டு பேரும் நல்ல அருமையான Pair. மலரை எப்படியாவது Convince பண்ணி Marriage பண்ணிக்கோ. நீ சொல்றது லேயிருந்து பார்த்தா அவ கண்டிப்பா உன்னய லவ் பண்றா, ஆனா ஏதோ ஒரு Reason னால அவ Marriage க்கு ஒத்தக்க மாட்டேங்கிறா.
ஏதோ ஒண்ணு இருக்கு அதை நாம கண்டுபிடிக்கனும்.
அதற்குள் நாயுடு, அன்னைக்கி மாதவி நெருப்புல எரிஞ்சப்ப ஏன் மலர் அந்த வீட்ல இருந்தாள்? ஏன் அங்க போனானு தெரியலை. நாங்க எவ்வளவு கேட்டாலும் சொல்லவே இல்லை. ஒரு இரண்டு வாரம் பிரம்மை பிடிச்ச மாதிரியே இருந்தாள். அப்பறம் நார்மலாயிட்டா.
ஏம்மா மல்லிகா உனக்கு ஏதாவது தெரியுமாம்மா?
இல்லப்பா, எனக்கும் அப்ப மலர் கிட்ட Difference தெரிஞ்சது. அதைப்பத்தி கேட்டாலே Mood swings க்கு போயிடுவா. அதனால நான் Maximum அந்த Incident பத்தி அவகிட்ட கேட்கறதையே விட்டுட்டேன்.
அதான் தம்பி.. மாதவியோட அகால மரணம் அத மலர் நேரிடையாக பார்க்கலை. பார்த்திருந்தால் கூட இப்ப வரைக்கும் ஏன் Marriage செய்துக்க மாட்டேன்னு சொல்லனும். அதான் புரியவில்லை.
சரி Uncle, மல்லிகா நாங்க அப்ப கிளம்பறோம். நல்ல வேளை இங்கே வந்ததினால நிறைய Information எங்களுக்கு கிடைச்சது. இது வச்சி மலருக்கு என்ன Problem னு தெரிஞ்சிக்க முயற்சி பண்றேன். இன்னொன்னு நாங்க இங்க வந்து விசாரிச்சது மலருக்கு தெரிய வேண்டாம்.
மல்லிகா வும் நாயுடு வும் எங்களை பலவந்தம் பண்ணி மத்தியானம் சாப்பிட வைத்து பின் எங்கள் Contact number, Address எல்லாம் வாங்கிகொண்டு அவர்களும் எங்களுக்கு Share பண்ணி கடைசியில் பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
அவர்களின் அன்பிற்கும் உபசரிப்பிற்கும் நிறைந்த மனசுடன் அங்கிருந்து இருவரும் புறப்பட்டோம்.
தொடரும்..
உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் அனுப்ப please Mail to siva69.com@gmail.com
உங்கள் சிவா.