Sivavin Malare Mounama.. Part 4 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் மலரே மௌனமா.. Part 4

The Author
Featured Books
  • चाळीतले दिवस - भाग 6

    चाळीतले दिवस भाग 6   पुण्यात शिकायला येण्यापूर्वी गावाकडून म...

  • रहस्य - 2

    सकाळ होताच हरी त्याच्या सासू च्या घरी निघून गेला सोनू कडे, न...

  • नियती - भाग 27

    भाग 27️मोहित म्हणाला..."पण मालक....."त्याला बोलण्याच्या अगोद...

  • बॅडकमांड

    बॅड कमाण्ड

    कमांड-डॉसमध्ये काम करताना गोपूची नजर फिरून फिरून...

  • मुक्त व्हायचंय मला - भाग ११

    मुक्त व्हायचंय मला भाग ११वामागील भागावरून पुढे…मालतीचं बोलणं...

Categories
Share

சிவாவின் மலரே மௌனமா.. Part 4


Hi, நான் உங்கள் சிவா..
இந்த தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.. please..

நான் அவளை பார்த்து புன்னகைத்து மேலும் Build up கொடுத்து, இன்னைக்கு உன் கூட இப்படி வெளியே வந்து Enjoy பண்றது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதான் Correct Situation and Time. So நான் என் மனசிலிருக்கிறதை சொல்லிடறேன்
என்று Gift Box யை Open பண்ணி மலரிடம் Rose டன் சேர்த்து கொடுக்க, ஒண்றும் புரியாமல் வாங்கி Gift Box ல் இருந்த Platinum Chain யை பார்த்து இன்னும் குழம்பிய போது..

Happy Birthday Malar.

என்று நான் சொன்னவுடன்.. அவள் திகைப்பில் இருந்து மீள்வதற்குள் அவள் பின்னால் நான் முன்பே ஏற்பாடு செய்திருந்த Cafe Staffs Balloon யை பட் டென்று உடைத்து.. Cake ல் Candle ஏற்றி மலர் முன்னால் வைத்து B'day Wishes சொல்லி cake cut பண்ண சொல்ல.. மலருக்கு ஒண்றும் புரியாமல் Stun ஆகி நிற்க, நான் சிரித்து கொண்டே அவள் கையில் Knife கொடுத்து Cake யை Cut பண்ணு என்று சொன்னேன்.

அப்போதுதான் அவளுக்கு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. வெட்கத்துடன் Knife வாங்கி, Candle யை ஊதி அணைக்க, Staffs B'day wishes Song நடுவில் ஆனந்த கண்ணீருடன் மலர் Cake Cut பண்ணினாள். இதெல்லாம் என்னுடைய முன் ஏற்பாடு என்று அவளுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்தது. Cake யை இருவரும் ஊட்டி கொள்ள.. Staffs மலருக்கு Wishes சொல்லி முடித்து எல்லோரும் போன பின் கலங்கிய கண்களுடன் என்னை ஏறிட்டு.. சிரித்துக்கொண்டே இதெல்லாம் உன் வேலையா? நான் என்னமோ ஏதோ சொல்ல போறியோ னு பயந்துட்டேன்.
என்று என் இடக்கையை இழுத்து என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பிய படியே Thanks ரவி, இந்த B'day இந்த moment என்னோட Life ல மறக்கவே முடியாது. எப்படிறா இவ்ளோ Arrangements? Staff க்கு முன்னாடியே inform பண்ணி பக்கா Plan பண்ணி..
ஏண்டா இவ்ளோ Costly Gift?. அதுவும் Platinum Chain..

அதெல்லாம் ஒண்ணும் இல்ல சித்தி.. உனக்கு அதுவும் உன்னோட B'day அன்னைக்கு Special ஆ Present பண்ணனும் ஆசைப்பட்டேன். அதுவும் Surprise ஆ.

சாதாரண Surprise ஆ பாவி, நான் பயந்தே போயிட்டேன். என்னமா Build up கொடுத்தடா.. யப்பா.. எனக்கு BP Raise ஆயிட்டு.

ஆனா, இப்ப உன்கிட்ட ஒரு Important Matter சொல்லனும்.

எ..ன்..ன ர..வி, திரும்ப முதல்லேயிருந்து ஆரம்பிக்கிற..

அதெல்லாம் ஒண்ணுமில்லை, முதல்ல வா நல்ல Restaurant போயி Lunch சாப்பிடலாம். இன்னைக்கு Full ம் உன்னோட Day தான். செமயா Happy யா Enjoy பண்ணலாம். உனக்கு ஓகே தானே? என் கூட Time spend பண்றதுக்கு?

என்னடா இப்படி கேட்டுட்ட? எனக்காக உன் Office கூட போகாம, இன்னிக்கு எனக்காக இவ்ளோ Arrangements பண்ணி, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?. என்னோட B'day எப்பவும் நான் இந்த மாதிரி Thrilling ஆ Happy யா Celebrate பண்ணதே கிடையாது. Infact இன்னைக்கு என்னோட B'day னு எனக்கு நினைப்பே இல்லை. ஆனா நீ எல்லாத்தையும் மாத்திட்ட.. Thanks டா. இன்னைக்கு உன்னோட தான் நான் Time Spend பண்ணுவேன். எங்க போகலாம் சொல்லு?

அப்பனா Lunch முடிச்சிட்டு Brooklyn Mall போகலாம் ஒகே யா?

Double okay.
Lunch லாம் முடிச்சிட்டு, Mall வந்து கொஞ்சம் Shopping பண்ணிட்டு.. Food Court ல உட்கார்ந்து Mill Shake Cake Order பண்ணிட்டு Relaxed ஆ உட்கார்ந்திருந்தப்ப எனக்கு என் மனசில இதுதான் சரியான Time, நாம மலர் கிட்ட Propose பண்ணிடலாம் னு தோன்றியது.

மலரும் ரொம்ப சந்தோஷமா அப்பப்ப என் கையை பிடிச்சுகிட்டு, பேசிகிட்டே சின்ன பிள்ளை போல எல்லாத்தையும் ரசிச்சு கிட்டு ஜாலியாக Enjoy பண்ணிகிட்டிருந்தாள். அவள் Body Language லேருந்தே தெரிந்தது அவள் ரொம்ப நாளைக்கப்பறம் சந்தோஷமாக இருக்கிறாள் என்று. மலரை பார்க்க பார்க்க எனக்கு பரவசமாக இருந்தது.
என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மலரிடம்

மலர் உன் கிட்ட ஒண்ணு சொல்லணும் என்றேன்.

என்ன சொல்லு, இன்னைக்கு நான் உன்னால ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த Day யை என் Life ல மறக்கவே முடியாது. எல்லாமே உன்னால் தான் ரவி, சரி ஏதோ சொல்லனும்னு சொன்ன.
நான் மலரின் கைகளை என் கையில் பிடித்து கொண்டு அவள் அழகான பெரிய கண்களை பார்க்க.. மலர் என்னை பார்த்து புன்னகைத்து கொண்டே இருந்தாள்.

மலர் நானும் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். B coz of You.
உன் கூட இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இது என் Life Fullஆ வரனும் னு நான் ஆசைப்படுகிறேன்.
ஆமா மலர் I Love You, உன்னை Marriage பண்ணிக்கனும்னு ஆசைப்படுகிறேன்.

டேய் ரவி, என்ன இது? நல்லா யோசிச்சு தான் பேசறியா? நான் உன்னை விட வயசில பெரியவ.. சித்தி முறை இன்னும்..

இரு சித்தி.. எல்லாம் யோசிச்சு தான் நான் பேசறேன். கொஞ்சம் என்னை பேசவிடு.
அன்னைக்கு உன்னை முதன் முதல்ல நான் அந்த Function ல பார்த்தப்பவே Decide ஆயிட்டேன். நீ தான் என் Life Partner னு. உன்னய Love பண்ணி உன் சம்மதத்தோடு Marriage பண்ணிக்கனும்னு அன்னைக்கே ஆசைப்பட்டேன்.
மலரின் கண்கள் விரிய உதடுகள் துடிக்க ஏதோ சொல்லதற்கு try பண்ணாலும் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவித்து நான் சொல்லுவதை மறுக்கவும் முடியாமல் நான் சொல்வதை கண் கலங்க என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தாள்.

என் Love வை உன் கிட்ட Propose பண்றதுக்கு எத்தனையோ தடவை Try பண்ணேன். சரியான சந்தர்ப்பமும் கூடிவரலை. ஆனால் சித்தி இப்ப உன்னோட B'day அன்னைக்கு என் மனசில இருக்கிறதை வெளிப்படையா சொல்றேன். நான் உன்னை மனசார லவ் பண்றேன். உன்னை கல்யாணம் பண்ணி கிட்டு உன்னோட வாழனும் னு ஆசைப்படறேன். இதுல எந்த Problem வந்தாலும் Face பண்ண நான் தயாரா இருக்கேன். முதல்ல இதுல உன்னோட விருப்பம் என்னங்கிறது எனக்கு தெரியனும். சொல்லு..

மலர் கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசவில்லை. தன் வலது கையால் வாயை மூடி மௌனமாக இருந்தவள், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர, நான் பதறிப் போய் ப்ளீஸ் சித்தி.. உன் மனசில என்ன இருக்குனு சொல்லு. அது எதுவா இருந்தாலும் பரவாயில்லை. நான் எதுக்கும் தயாரா தான் வந்திருக்கேன். But ப்ளீஸ் அழாத. அதுவும் இன்னைக்கு உன்னோட B'day அன்னைக்கி.. வேண்டாமே.

என்னை நிமிர்ந்து பார்த்தவள், வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு ரவி, இதை உன்னோட proposal யை நான் ஒரு விதத்தில எப்பவோ எதிர் பார்த்தேன். எங்க என் கிட்ட சொல்லிடுவாயோனு பயந்தும் இருந்தேன். ஏன்னா நான் உனக்கு Correct Match கிடையாது. எவ்வளவோ Reasons இருக்கலாம்.. வயசு Diffence, சித்தி முறை.. But Main ஆ என்னோட Past Life பத்தி உனக்கு தெரியாது. நீ தெரிஞ்சக்கவும் வேணாம். நானே அதை நினைச்சி தினமும் மனசுக்குள்ளே அழுதுகிட்டு இருக்கேன்.

ஆனா உன்னய லவ்வரா கல்யாணம் பண்ணிக்க நான்.. நான் என்ன நான், என்ன மாதிரி பொண்ணுங்க கொடுத்து வச்சிருக்கணும். என்னோட ஃப்ரண்ட்ஸ் நிறைய பேருக்கு உன்னய ரொம்ப பிடிக்கும். என் காது படவே Comments பண்ணியிருக்காங்க. அவ்வளவு Handsome நீ, Sweet in Nature, பழகுற விதம் எல்லாமே சூப்பர். உன்னை போய் யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா? ஆனா நான் வேண்டாம் னு சொல்றேன்னா எவ்வளவு பெரிய Strong Reason இருக்கும்.

சரி மலர் அது என்னன்னு எனக்கு சொல்லேன். என்னால Solve பண்ண முடிஞ்சா கண்டிப்பா நான் Solve பண்றேன்.

சில பிரச்சினைகளை Solve பண்ண முடியாது ரவி.. அது அப்படித்தான். நடந்தது நடந்ததுதான்.

சித்தி உனக்கு ரொம்ப பெரிசா Solve பண்ண முடியாதுனு தோணுற Problem எனக்கு சின்னதா தோணலாம் இல்லை Easy யா கூட Solve பண்ணிடலாம். ஆனா அதை நீ என்ன னு சொன்னால் தானே எனக்கு தெரியவரும்.

ரவி சிலதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

அப்ப சித்தி இப்படியே நீ மனசுக்குள்ளே வச்சி வச்சி புழுங்கி உன்னோட லைஃப் யை நாசனம் பண்ணிக்க போறியா?
ப்ளீஸ் மலர், சரி உன்னோட Well-wishers ஆ கேட்கிறேன், உன் மேல அக்கறையில கேட்கிறேன். ப்ளீஸ்..

என்னோட கஷ்ட்டம் என்னோடயே போகட்டும். ரவி நீ ரொம்ப நல்லவன். சொல்லபோனா நீ அழகா Hero மாதிரி சூப்பரா இருக்க. உனக்கு நல்ல அழகான பொண்ணு என்னைவிட எல்லாவிதத்திலும் Best ஆன பொண்ணு கிடைப்பா. நான் உனக்கு Suit ஆகவே மாட்டேன்.

சித்தி இப்ப பிரச்சினை நான் சூப்பரா இருக்கேன், So, எனக்கு நல்ல பொண்ணு இல்ல ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாளாங்கிறதை பத்தி இல்லை. நீ என்னய லவ் பண்றியா இல்லையா? அதான்.

ரவி நான் எப்படி சொல்லி உனக்கு புரிய வைக்கிறது னு தெரியலை. உன்னய எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் இந்த மாதிரி நீ எனக்காக இறங்கி வந்து என்னோட B'day யை என்னால என் லைஃப் ல மறக்கவே முடியாத அளவுக்கு Celebrate பண்ண வச்சி, எனக்காக பார்த்து பார்த்து பண்ற உன்ன, நான் Marriage பண்ணிகிட்டா எப்படியெல்லாம் நீ என்னை தாங்குவ?னு எனக்கு தெரியாமல் இல்லை. உன்னய எப்படி எனக்கு பிடிக்காம போகும்.? யோசிச்சியா? இன்னும் சொல்லப் போனால் I like you even Love you, But Marriage னு வரும்போது உனக்கு னு நான் உண்மையா இருக்கனும். எந்த வித களங்கமில்லாம.. Love ங்கிறது வேற, Life ங்கிறது வேற. நான் உனக்கு Match ஆகவே மாட்டேன். நீ எங்கோ கோபுரத்தில இருக்க. நான் கீழே எங்கேயோ பாதாளத்தில இருக்கேன். ஏன்னா என்னோட Past Life அப்படி. அதனால நான் மட்டுமே அந்த கஷ்டத்தை அனுபவிச்சிக்கிறேன். என்னோட கஷ்ட்டம் என்னோடயே போகட்டும். என் கஷ்ட்டம் உனக்கு வேணாம்.அதை நீ தயவுசெய்து தெரிஞ்சக்கவும் வேணாம். நீ ரொம்ப நல்லவன்டா. என் மனசார சொல்றேன், உனக்கு ஒரு நல்ல லைஃப் கண்டிப்பா அமையும். என்னை Marriage பண்ணி கிட்டு உன் லைஃப் யை நரகமாக்கிகாதே. இவ்வளவு தான் சொல்லமுடியும். புரிஞ்சுக்கோ ப்ளீஸ்.

Okay.. மலர் இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோ..
நான் உண்மையா உன்னை லவ் பண்றேன். உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அதுவும் உன் னோட சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைபடறேன். இதுல எந்த வித மாற்றமும் இல்லை. உன்னோட மனசு எப்ப மாறுதோ அப்ப வரை நான் Wait பண்றேன்.

ரவி சொன்னா கேளு ப்ளீஸ்..

சரி சித்தி உன்னய Open ஆ கேட்கிறேன். Past ல யாரையாவது லவ் பண்ணி.. Love Failure? அப்படி ஏதாவது...

ச்சீ சீ அதெல்லாம் இல்லடா..

இல்லை உன்ன யாராவது ஏமாற்றி... மோசம் போன..

ரவி அதெல்லாம் கிடையாது.. நான் யாரையும் லவ் பண்ணலை என்னை யாரும் ஏமாத்தலை.. சில பெண்களுக்கு வெளியே சொல்ல முடியாத மனசு சார்ந்த சில Problems இருக்கும். அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியாது.

சித்தி நீயே சொல்ற.. இது மனசு சம்பந்தப்பட்ட problem னு. உன் மனசை நல்லா புரிஞ்சிகிட்ட, உன்னய உயிருக்கு உயிராய் லவ் பண்ற என்கிட்ட சொல்ல கூடாதா?

நான் சொன்னதை கேட்டு நெகிழ்ந்து போன மலர் அப்படியே என்னை தன் பக்கத்தில் இழுத்து.. அந்த Food Court ல் இருந்த கொஞ்ச பேரையும் கண்டு கொள்ளாமல் என் நெற்றியில் முத்தமிட்டு, என் வலது கையை தன் இரு கைகளால் இறுக்கி பிடித்து முத்தமிட்டே படியே.. நீ Great டா.. உன்னை கல்யாணம் பண்ணிக்க அதிர்ஷ்டம் பண்ணியிருக்கனும். ஆனா அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. உண்மைய சொல்லட்டுமா? என்னோட Past problem தெரிஞ்சி எங்க நீ என்னய விட்டு விலகிடுவியோ? போயிடுவியோ? உன்னோட இந்த பரிவு, intimacy எங்க எனக்கு கிடைக்காம போயிடுமோனு பயமா இருக்கு.

என்னய பத்தி அப்படியா நினைக்கிற? இத்தனை நாள் பழக்கத்தில என்னய புரிஞ்சிகிட்டது அவ்வளவு தானா?

இல்லடா... அப்படி இல்லை..

உன் மேல உயிரா இருக்கேன். அதனால்தான் உனக்கு Help பண்ணலாம்னு உன் கஷ்ட்டத்தை Solve பண்ணலாம்னு உன் கிட்ட மன்றாடிகிட்டிருக்கேன்.

ப்ளீஸ்.. வேணாம் ரவி.. நாம இப்படியே இருந்துடுவோமே.. எனக்கு இது போதும்.. இதுக்கு மேல நான் ரொம்ப ஆசைபடலை. என் லைஃப் ல எனக்கு அவ்வளவாக Close ஃப்ரண்ட்ஸ் யாரும் கிடையாது. யார்கிட்டேயும் அவ்வளவா Attachmentம் கிடையாது. நான் பார்த்த வரைக்கும் Maximum எல்லா Gentsம் என்னை பார்த்த பார்வையே வேற.. தனியா இருக்கிறதுனால ரொம்ப Advantage எடுத்துக்க பார்த்தாங்க.. தினமும் என் வாழ்க்கை போராட்டம் தான். ரொம்ப நாள் கழிச்சு என் லைஃப்ல நீ ஒரு தென்றல் மாதிரி வந்திருக்க.. முதன் முதலா என் மனசை பார்த்தது நீ மட்டும் தான். எப்பவுமே நீ என் கண்ணை மட்டும் தான் பார்த்து பேசுவ. ஒரு தடவை கூட உன் பார்வை கீழே இறங்கினது கிடையாது. You are Such a Gem. இதை நான் இப்படியே வச்சிக்கனும் னு பார்க்கிறேன். என் கஷ்ட்டம் என்னோடயே போகட்டும்டா. ப்ளீஸ்..

என்ன சித்தி.. இது.. என்னய பிடிச்சிருக்கு னு சொல்ற. ஆனா என்னய Marriage பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற.. இப்ப இருக்கிற உன்னோட இந்த சந்தோஷம் எப்பவுமே உனக்கு நிரந்தரமா இருக்கனும் னு தான் நான் ஆசைப்படுகிறேன்.

இல்ல ரவி உனக்கு என் நிலைமை புரியாது.. உன்னய.. உன் ஃப்யூர் லவ் வை இழக்க தயாரா நான் இல்ல. இதை இந்த பேச்சை இதோட விட்டுடு ப்ளீஸ்..

நான் நிராசையுடன் மலரின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். என் பார்வையின் தீட்சண்யத்தை மலர் தாங்க முடியாமல் கண்ணீரோடு தலையை குனிந்து கொண்டாள். ஆனால் என் கைகளை விடவில்லை.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com