Sivavin Malare Mounama.. Part 3 in Tamil Love Stories by Siva books and stories PDF | சிவாவின் மலரே மௌனமா.. Part 3

The Author
Featured Books
Categories
Share

சிவாவின் மலரே மௌனமா.. Part 3


Hi, நான் உங்கள் சிவா..
முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.

மலர் அவள் மறையும் முன் என்னை திரும்பி பார்த்தவள்.. கைகளால் Bye என்று எனக்கு மட்டுமே தெரியும் படி தலையாட்டியபடியே கைகளால் சைகை செய்து மறைந்தாள்.
நான் சிலை போல அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.

அவள் போனதுக்கப்பறம் எனக்கு ஒரு வகையான Mixed Feelings ஆக இருந்தது. ஒரு பக்கம் என் மனதில் உள்ளதை மலருக்கு ஏதோ கொஞ்சம் தெரியப்படுத்தி விட்டோம், என் மனதில் அவள் இருக்கிறாள் என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்ற சந்தோஷம், இன்னொரு பக்கம் அவள் பிடி கொடுத்து பேசாதது வருத்தம்.. இது எல்லாமே என்னை போட்டு வதைத்தாலும்.. கடைசியில் மலர் வந்து என் கையை பிடித்து Feelings டன் பேசியது எனக்கு ஏதோ பாசிட்டிவாக பட்டது. இதையேதான் நந்தா விடம் மலரைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவனும் இதேதான் அபிப்ராயபட்டான். மறுபடியும் நந்தா என்னை Remaind பண்ணான்.

டேய், நான் சொல்றதை கேளு.. இன்னமும் Delay பண்ணாம நான் சொன்ன மாதிரி மலரை எங்காவது வெளியே நல்ல இடமா பார்த்து கூட்டிட்டு போயி அழகா propose பண்ணு.. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.

சரிடா.. எனக்கும் அதான் Correct னு தோணுது.

ஓகேடா All the Best.

ஒரு நாலு நாள் கழித்து, ஒரு நாள் காலை மணி 9 போல இருக்கும். அன்றைக்கு மலர் B'day, அன்று காலையிலிருந்து எனக்கு மலர் நினைப்பாகவே இருக்க, இருப்பு கொள்ளாமல் என் Car யை எடுத்து கொண்டு மலர் work பண்ணும் University Office போய் விட்டேன். முன்னேற்பாடாக நந்நா Help டன் சிலது செய்து வைத்திருந்தேன்.

Car Park பண்ணிவிட்டு மலர் work பண்ணும் Cabin க்கே நான் போக, வழியில் மலரின் ஃப்ரண்ட் கவிதா.. தானே வந்து introduce பண்ணிக்கொள்ள.. எனக்கு Strike ஆனது.. கவியை அந்த Marriage Function ல் Meet பண்ணது.. கவிதாவிடம் மலரை வெளியே Just Outing கூட்டிட்டு போறேன், இன்னைக்கு அவ B'day ல. But மலருக்கு B'day க்காகத்தான்னு தெரிய வேண்டாம் என்று சொல்ல.. அவள் த்ரில் ஆகி.. ஆமாம் ரவி, மலர் எப்பவும் தன் B'day யை Celebrate பண்ணமாட்டாள், பெருசா Importance ம் கொடுக்க மாட்டா. நாங்க Wishes சொன்னாலும் அவ்வளவா ஒண்ணும் கண்டுக்கமாட்டாள். நிறைய பேருக்கு மலர் B'day இன்னைக்கு னு தெரியாது. நீ இப்ப Surprise ஆ அவளை வெளியே கூட்டிட்டு போ.. பாவம் அவ, நான் இங்கே எல்லாம் பார்த்துக்கிறேன்.

கவியே என்னை மலரிடம் கூட்டிச் சென்றாள்... மலர் இன்னைக்கு light Blue sandal colour Chudi Top, Black Leggings ல் தலைமுடியை தூக்கி வாரி pony tail போட்டு Simple Makeup ல்.. முகம் பொலிவாக Red lipstick ல் அழகாக இருக்க.. அவளை அப்படி அழகாய் பார்க்கிற போது எனக்கு வேர்த்து விறுவிறுத்து ஏதோ நெஞ்சு அடைத்தது போல இருந்தது. கொஞ்ச நேரத்தில் தெளிந்து அவளை நான் பார்க்க..திடீரென அவள் Office ல் என்னைப் பார்த்ததும் மலரால் நம்ப முடியவில்லை. Monitor முன் உட்கார்ந்து ஏதோ பார்த்து கொண்டிருந்தவள்.. நிமிர்ந்து என்னை பார்த்தவள்.. முதலில் திடுக்கிட்டாலும் பின் முகம் மலர்ந்து .. என்ன ரவி இங்கே.. ஏதாவது Work ஆ? Any Problem? என்று கேட்க..

ஒண்ணும் இல்லை.. இப்பவே நீ என் கூட கிளம்பி வா.. கொஞ்சம் வெளியே போகனும். உன் கூட personal ஆ பேசனும்.

ரவி.. இல்லை இங்கே நிறைய Work இருக்கு, திடீர்னு Permission கேட்டா கிடைக்காது.. இன்னொரு நாள்..

No Problem.. யார் கிட்ட Permission கேட்கனும் சொல்லு நானே போய் கேட்கிறேன்.

ஐயோ அதெல்லாம் தேவையில்லை.. நான் பார்த்துக்கிறேன்.. But Pending Work நிறைய அதான்.

மலர் இப்ப உன்னால என் கூட வெளியே வரமுடியுமா? முடியாதா?

டேய் என்னடா இப்படி படுத்துற.. பக்கத்தில் இருந்த கவிதா வை மலர் கூப்பிட்டு ஏதோ சொல்ல.. உடனே கவி, அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீ முதல்ல கிளம்பு என்று க்ரீன் சிக்னல் கொடுத்து மலருக்கு தெரியாமல் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே தம்ஸ்அப் செய்து, கையை ஆட்டி சைகையால் கூட்டிட்டு போ.. என்று அனுப்பி வைத்தாள். அப்பவும் மலர் தன் B'day இன்னைக்கு தான் என்று என்னிடம் Reveal பண்ணவே இல்லை. எனக்கும் தெரியாது என நினைத்து விட்டாள் போல. நானும் கண்டுக்கவே இல்லை. எல்லாமே Surprise ஆ இருக்கட்டும்..

காரிடர் ல் நாங்கள் இருவரும் நடந்து வரும் போது மலர் கையில் இருந்த Box பார்த்து.. நான் என்ன இது என்று கேட்க..

இதுவா Lunch Box...

அதை அப்படியே ஓரமா தூக்கி போட்டுட்டு வா...‌

ஏண்டா?

இப்ப நம்ம அப்படியே வெளியே போயிட்டு நல்ல காஃபி சாப்பிட்டுட்டு then நல்ல Hotel போய் Launch முடிச்சிட்டு அப்பறமா உன்னை இங்க வந்து Drop பண்றேன்.

என்னடா திடீர்னு treat ? ஏதாவது SPL ஆ?

ம்.. ஒண்ணுமில்லை.. எனக்கு twins பிறந்திருக்கு... அதுக்கு தான் உனக்கு treat வைக்கலாம்னு.. பேசாம என் கூட வா.. அங்க போயி எல்லாம் சொல்றேன்.

நான் சொன்னதை கேட்டு மலருக்கு சிரிப்பு தாங்க முடியாமல் கையால் வாயை மூடி சிரித்து கொண்டே இருந்தாள்.

அந்த சிரிப்பு காரிலும் தொடர்ந்தது.
நடு நடுவே என்னடா.. ரவி.. இப்படி twins.. எப்ப உனக்கு marriage ஆச்சு? Pregnancy..? என்று விட்டு.. விட்டு.. சிரிப்புக்கு நடுவே பேச புறையேறி, கண்களில் தண்ணீர் வரும் வரை சிரித்து கொண்டே இருந்தாள்.

நான் உடனே, இப்ப Hospital தான் போறோம். எல்லாம் உனக்கு அங்க விளக்கமா தெரிய வரும்.

இன்னும் சிரிப்பு அதிகமாக, இந்த தடவை கைகளால் தன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு சிரித்து சிரித்து கண்களில் கண்ணீர் வடிய..‌ துடைத்துக் கொண்டு, கண்களால் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.
எல்லாம் முடிந்து, ஆனா ரவி இந்த மாதிரி நான் வாய் விட்டு சிரிச்சு எத்தனை யோ வருஷமாயிட்டு.. யப்பா என்னால முடியலைடா.. First உனக்கு Thanks ரவி.. என்னமோ இன்னைக்கு எனக்கு ரொம்ப Pleasant ஆ சந்தோஷமா இருக்கு. சரி..‌ இப்பவாவது சொல்லு எங்க போறோம்னு..

கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ.. அங்கே போனவுடன் எல்லாமே தன்னால உனக்கு தெரியவரும் அப்ப வரைக்கும் Suspence..

டேய் என்னடா.. என்னய kidnapping ஏதும் பண்ணலைல?

ஆமாம் அது ஒண்ணு தான் குறைச்சல்.. அதோ நம்ம போக வேண்டிய Cafe வந்துட்டு.. கீழே இறங்கு, நான் Car யை Park பண்ணிட்டு வரேன்.

Coffee cafe உள்ளே மலரை கூட்டிப் போய், நான் Reserve பண்ணியிருந்த table க்கு போய் உட்கார்ந்து Coffee Order பண்ணோம்.

இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டே காஃபி குடித்து முடிக்க.. மலர் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தாள். அடிக்கடி கன்னத்தில் குழி விழ சிரித்து கொண்டே இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க எனக்கு அவள் அற்புதமாகவும் மிகவும் அழகாக தெரிந்தாள். காதில் இருபக்கமும் ஜிமிக்கி கள் அசைந்தாட கண்கள் விரிய மலர் பேசுவதை பார்க்க, பார்க்க மிகவும் ரம்மியமாக இருந்தது. எனக்கும் அவள் Positive Energy தொற்றிக்கொள்ள நானும் ஹேப்பியாக Feel ஆனேன். இதற்குள் Bearer எங்கள் அருகில் வர, அவரிடம் ஓகே சொல்லி விட்டு.. Bill என்றேன்.

என் Pocket லிருந்து மறைத்து வைத்திருந்த சின்ன Gift Box யை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டு மலர் கண்களை நேருக்கு நேராக பார்த்து, சீரியஸாக..

மலர் உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்.

அதுவரை சிரித்து, சிரித்து பேசிக்கொண்டிருந்தவள், என் செய்கையை பார்த்ததும் சட்டென்று அவள் பெரிய கண்கள் இன்னும் பெரியதாக, அதிர்ச்சி யாகி, ஒன்றும் புரியாமல் என் கையில் இருந்த அழகாக Wrap பண்ணியிருந்த Gift Box பார்த்துவுடன் நான் ஏதோ Serious ஆக பண்ணப்போகிறேன் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. வாயடைத்து போய், உதடுகள் குவிய.. கண்களில் கரு விழிகள் அங்குமிங்கும் ஆட.. ஒன்றும் புரியாமல் என்னையே என் கண்களையே சின்ன கலவரத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

நானும் விடாமல் மலர் I want to Say Something.. என்று Gap விட..

அவள் Tension இன்னும் அதிகமாக, மலரின் Heart Beat வேகமாக அடிக்க தொடங்கியது. நான் Gift யை எடுத்து அதன் மேல் ஒரு Red Rose Bud யை வைத்து மலர் கையில் கொடுத்து..

மலர் அது வந்து.. இன்னைக்கு உன் கிட்ட முக்கியமா இதை சொல்லியே ஆகனும். இன்னைக்கு விட்டா நான் அப்பறம் எப்பவும் சொல்ல முடியாது. என் மனசில இருக்கிறதை உன் கிட்ட சொல்லனும்னு ஆசைப்படுகிறேன். Please Accept it.

மலரால் ஒண்றும் பேசமுடியாமல் திகைத்து போய் என்னையே பார்க்க..

நான் அவளை பார்த்து புன்னகைத்து மேலும் Build up கொடுத்து, இன்னைக்கு உன் கூட இப்படி வெளியே வந்து Enjoy பண்றது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதான் Correct Situation and Time. So நான் என் மனசிலிருக்கிறதை சொல்லிடறேன்
என்று Gift Box யை Open பண்ணி மலரிடம் Rose டன் சேர்த்து கொடுக்க, ஒண்றும் புரியாமல் வாங்கி Gift Box ல் இருந்த Platinum Chain யை பார்த்து இன்னும் குழம்பிய போது..

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com