Aditi - 2 in Tamil Fiction Stories by Ganes Kumar books and stories PDF | அதிதி அத்தியாயம் - 2

Featured Books
Categories
Share

அதிதி அத்தியாயம் - 2

மே 14,1975

இரவு பதினொன்று மணியளவு மோகன்ராஜாவின் வீடே அமைதி காடாக இருக்கிறது அந்த நிசப்தத்தை உடைக்கும் வண்ணம் ஓர் சப்தம் மல்லிகா ஹாலில் இருக்கும் மீன்தொட்டியை கீழே போட்டு உடைக்கிறாள்.

சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் தனது போட்டோவை எடுத்து கீழே போடுகிறாள்.

மோகன் ராஜா தன் பொறுமையை இழுந்து மல்லிகாவின் கையை பிடித்து இழுக்கிறான்.

"என்னடி ஆச்சு உனக்கு"மோகள்.

மல்லிகா எதும் பேசாமல் மோகனை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

"ஏன் இப்படி மென்டல் பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் உடைச்சிகிட்டு இருக்க..."மோகன்.

"என்னால என்ன பண்ண முடியும். இதுதான பண்ண முடியும்… உடைக்கிறது அழுகுறது அது மட்டும் தான என்னால் முடியும்" மல்லிகா.

"இப்ப உனக்கு என்ன பிரச்சனை டாக்டர் கிட்ட இன்னைக்கு செக்கப்க்கு போனியா..." மோகன் மல்லிகாவின் கண்ணத்தில் கைவத்தவாறு அவளை நெருங்குகிறான்.

"கிட்ட வராத...." தள்ளிப் போ மல்லிகா அவனைந் தள்ளி கத்துகிறாள்.

"கத்தாத உன் உடம்புக்கு நல்லது இல்ல " மோகன்

"இப்படி வது சொல்லி சொல்லி என்ன சீக்காளி ஆக்கிடு.. இன்னும் கொஞ்ச நாள்ல என்ன கொன்னுட்டு இந்த நோய காரணமா சொல்லிடு..அதுக்கப்பறம் என் பையன ஏதா ஆனாதை ஆசிரமத்துல் சேர்த்துட்டு உன் இஷ்டம் போல இந்த வீட்டுக்கு யார யார கூட்டிட்டு வரனுமோ அவங்கள் எல்லாம் கூட்டிகிட்டுவந்துக்கோ..."மல்லிகா

"என்ன ஏதோதோ உளறுர...."மோகன்

"நானா ... சரி ஏன் இவ்வளோ லேட்டு" மல்லிகா

"ஆஃபீஸ்ல ஒரு மீட்டிங்..." மோகன்

"ஆ: பீஸ்ல இருந்து அஞ்சு மணிக்கே கிளம்பிட்டதா சொன்னாங்க.."மல்லிகா

"ஆஃ பீஸ்க்கு போன் போட்டியா...." மோகன் கோபத்துடன் மல்லிகாவை கேட்கிறான்

"இவ்வளவு நேரம் எங்க இருந்த..." மல்லிகா

மோகன் என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக இருக்கிறான்.

"இப்ப எல்லாம் சட்டைய துவைக்குறப்ப சட்டையில் இருந்து கண்ட பெர்ஃப்யூம் வாசனை வருது. உனக்குதா அந்த பழக்கமே கிடையாதே.." மல்லிகா

"மல்லிகா ப்ளீஸ் மெதுவா பேசு சத்தம் போடாத.." மோகன் தன் குரலை தாழ்த்துகிறான்.

"மீட்டுங்கூ...பொய் பேசக்கூட கத்துக்கிட்டைல, இது எவ்வளவு நாளா நடந்துட்டிருக்கு எல்லாம். அந்த தேவிடியாசிரிக்கி வந்ததுள இருந்துதான் "மல்லிகா

"டோன்ட் டாக் லைக் ஸ்டுப்பிட்..இரு யாரசொல்ற" மோகன்



"அதுதான் பிஸ்னஸ் பார்ட்னர்னு சொல்லிட்டு கூட ஒருத்திய வச்சிகிட்டு எல்லா இடமும்
உரசிகிட்டே திரியிரைல அவளதான்..." மல்லிகா பேசிமுடிப்பதற்குள் அவள்
கண்ணத்தில் மோகனின் கை பாய்கிறது.

"அடி உன்னால் எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடி. என்ன கொன்னு போட்டுரு இதையெல்லாம் பாத்துட்டு இருக்கிறதுக்கு நா நிம்மதியா செத்து போயிருவேன்" மோகன் மல்லிகாவை அடிக்க கை ஓங்க ஹாலின் ஓரத்தில் சுவற்றை பிடித்தவாறு கண்ணில்
பயத்துடன் தன் தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரகுவை பார்க்கிறான்.

மோகன் ரகுவின் அருகில் சென்று அவன் கண்ணத்தில் முத்தமிட்டு

"என்ன ரகு தூக்கம் வரலையா... ஒன்னுமில்ல அம்மா அப்பா சும்மா பேசிட்டு இருக்கோம் ஓ....சத்தமா பேசிட்டோமா.. சாரி சாரி போ ரூமக்கு போய் தூங்கு.. நாளைக்கு ஸ்கூலுக்கு போகனும்ல நாங்க இனி மெதுவா பேசுறோம் பொய் தூங்கு... குட் நைட்...."மோகன் சொல்ல ரகு தன் அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொள்கிறான் ஹாலில் தன் அம்மா கத்துவதும் தந்தை அவளை அடிக்கும் சத்தமும் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது அதை கேட்டவாறு தன் கண்ணை மூடுகிறான்.


ஜூன் 2,1975

ரகு பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான் மதியம் இரண்டு மணி அளவில் அவனை பள்ளியில் இருந்து அழைக்க லால் பகதூர் வந்திருந்தார்.....ரகு தன் பள்ளிப்பையை எடுத்துக்கொண்டு லாலுடன் தங்களது ஹிந்துஸ்தான் அம்பாஸிடெரில் கிளம்பலானார்...ரகுவிற்கோ ஒருபுறம் பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்வது சந்தோஷமாக இருந்தாலும் மற்றொரு புறம் ஏன் வீட்டிற்கு செல்கிறோம் என்ற குழப்பமும் இருந்தது...அதை லாலிடம் கேட்கவும் செய்தான்...

"ஏன் என்ன மதியமே ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு கூப்பிட்டு போற..."ரகு தன் மழலை குரலில் கேட்க லாலோ அவனது கேள்விக்கு ஏதும் செவிசாய்க்காமல் சாலையை பார்த்தவாறு வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தான்...சொல்லப்போனால் அவனிடம் அதற்கான பதில் இருந்தது ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை.

லாலிடம் இருந்து பதில் வராமல் இருக்க ரகு தன் கவனத்தை கண்ணாடி வழியாக வெளியே செல்லும் சாலையின் அழகினில் தன் கவனத்தை திருப்புகிறான்...எதிர் திசையில் வெற்றிலை எச்சியை தொதப்பிக்கொண்டு சைக்களில் சென்று கொண்டிருக்கும் மித வயதுடையவர்,சாலையோரத்தில் வெயிலில் உட்கார்ந்துக்கொண்டு பூச்சரம் விற்றுக்கொண்டிருக்கும் ஒரு முதிய பெண்மணி,குதிரையின் மேல் உட்கார்ந்துக்கொண்டிருக்கும் ஓர் மனிதரின் சிலை....அந்த சிலையை கவனித்தபொழுதுதான் ரகுவிற்கு தோன்றியது கார் வீட்டை நோக்கி செல்லவில்லை என்று....லால் தன்னை வேறு எங்கோ அழைத்து செல்கிறார் என்று.ரகுவிற்கு மனதினுள் ஓர் பயம் வருகிறது இருந்தாலும் லாலிடம் ஏதும் கேட்காமல் வண்டி செல்லும் சாலை வழியை பார்த்தவாறு காரின் கதவில் தலை சாய்கிறான்.

கார் நர்மதா மருத்தவமனையின் வெளியே வந்து நிற்கிறது....லால் ரகுவை மருத்தவமனையின் உள்ளே அழைத்து செல்கிறான்...

"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்க...."ரகு லாலிடம் கேட்கிறான்...லால் கண்ணில் இருந்து கண்ணீர் துளிர்விடுகிறது...லால் ரகுவிடம் ஏதும் பேசாமல் அவனை உள்ளே அழைத்து சென்றுவிடுகிறார்.

லால் முதல் ப்ளோரிற்கு ரகுவை அழைத்து வந்து விடுகிறார்...அங்கு மோகன் உட்பட அவனது குடும்பத்தினர் அனைவரும் ஐ. சி.யூவின் வெளியே அழுதுகொண்டிருக்கின்றனர்...ரகுவை பார்த்தவுடன் அவர்களது அழுகுரல் அதிகமாகிறது...ரகுவிற்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை...சேரில் சாய்ந்துக்கொண்டிருக்கும் மோகனின் அருகில் செல்கிறான்.மோகன் அவனை கட்டிப்பிடித்து கொண்டு அழ ஆரம்பிக்கிறான்...மோகனின் கண்ணீர் ரகுவின் சட்டைகாலரை நெனைக்கிறது....தனக்கு நினைவு தெளிந்து முதல் முதலாக தன் தந்தையின் கண்ணீரை இப்பொழுதுதான் ரகு பார்க்கிறான்..ரகுவிற்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

தன் தந்தை தன்னை கட்டிப்பிடித்து காதறிக்கொண்டிருப்பதை தாண்டி அந்த அழுதுகொண்டிருக்கும் கூட்டத்தில் யாரோ ஒருத்தியின் குரல் மட்டும் ரகுவின் செவிக்கு எட்டுகிறது.

"பாவி மவ...இப்படி பண்றதுக்கு முன்னாடி இந்த புள்ள முகத்த கொஞ்சம் நினைச்சு பாத்துருந்தா இந்த முடிவ எடுத்துருப்பாளா... இப்படி நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போய்ட்டாளே..."இந்த வாக்கியத்தை கூறிவிட்டு தனது மூக்கினை சீந்திக்கொள்ளும் அந்த ஒருத்தியின் குரலை கேட்டப்பின் கிட்டத்தட்ட ரகுவிற்கு அனைத்தும் புரிய வருகிறது...அதற்குள் ஐ. சி.யூ வின் கதவு திறக்க படுகிறது...வெள்ளைத்துணியை அணிந்துள்ள சிலர் ஒரு ஸ்ட்ரச்சரில் வெள்ளைத்துணியால் மூடப்பட்ட ஓர் உடலை கொண்டு வருகின்றனர்...அனைவரும் சத்தம் போட்டு அழ ஆரம்பிக்கின்றனர்.மோகனின் அப்பா முகத்தில் இருக்கும் துணியை எடுத்து மல்லிகாவின் முகத்தை பார்க்கிறார்.ரகுவிற்கு அதைப்பார்த்தவுடன் கண்ணீர் முற்றிக்கொண்டு வருகிறது...

"மா..."ரகு மோகனிடம் இருந்து விலகி தன் தாயின் அருகே செல்கிறான்.

"வேண்டா ரகு... வேண்டாம்பா...பாக்க வேண்டாம்"மோகன் ரகுவை இறுக்கப்பிடித்து அவன் முகத்தை தன் பக்கம் திருப்பியவாறு அழுக ஆரம்பிக்கிறான்.மல்லிகாவை ஸ்ட்ரேட்ச்சரில் மார்ச்சரிக்கு எடுத்து செல்கின்றனர்.ரகு தன் முழு பலத்தை பயன்படுத்தி மோகனிடம் இருந்து விடுபட்டு மல்லிகாவை அருகில் சென்று பார்த்துவிட முயற்சிக்கிறான் ஆனால் மோகன் அவனை இறுக்கமாக பிடித்துக்கொள்கிறான்.

அடுத்த அரை மணி நேரம் அழுது பின் உடம்பில் தெம்பில்லாது தன் அத்தை ஷர்மியின் மடியில் தலை வைத்து தேம்ப ஆரம்பித்தான் ரகு..அப்பொழுது அவள் தான் அவனிடம் புலம்பினாள் மல்லிகா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாள் என்று...ரகுவிற்கு தன் தாய் இப்பொழுது இல்லை இனி யார் எனக்கு சாப்பாடு ஊட்டுவார், தினமும் இரவு கொஞ்சுவார்,தான் இனி யார் மீது கால் போட்டுக்கொண்டு தூங்குவேன் என நினைக்கும் பொழுது அழுகை வருகிறது...பயத்தில் தன் சித்தியின் மடியில் முகம் புதைத்து கொள்கிறான் அவளது கதகதப்பு ஒன்று மட்டும் இப்பொழுது ரகுவிற்கு
ஆறுதலாக இருக்கிறது....

அடுத்த அடுத்த நாட்களில் அவனுக்கு எல்லாவுமாய் இருந்த தாய் வெறும் நினைவாய் மட்டும் மாறலானாள்...நாட்கள் நாட்கள் செல்ல வந்திருந்த உற்றார் உறவினர் அனைவரும் தங்கள் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தனர்...ஒரு வாரம் ரகு பள்ளிக்கோ மோகன் ஆஃபீஸுக்கோ போகவில்லை...ஒரு சிவப்பு சுடிதார் அணிந்த பெண் தான் அவர் வீட்டிற்கு வந்து மோகனிடம் சில கோப்புகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றாள்... ரகு முதல் முதலாக அவள் முகத்தை அன்று தான் பார்த்தான்...

மோகன் யாரிடமும் சரியாக பேசவில்லை இரண்டு நாட்களாக ஒரு வேலை தான் சாப்பிட்டான்...வேலைக்காரி சரோஜா தான் ரகுவினை பார்த்துக்கொண்டாள்...

மல்லிகா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மருத்துவமனையின் மூலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட இன்ஸ்பக்டர் மோகனை கைது செய்ய ஆனால் மோகன் தன் நண்பர்களை பயன்படுத்தி மல்லிகாவின் சடங்குகள் போலீசார் எந்த இடையூறும் தன்னை செய்ய கூடாது என கேட்டுகொண்டான் அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்...இப்பொழுது அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் மோகனை கைது செய்து அழைத்து சென்றனர்...ஷர்மியும் அவளது அப்பாவும் அன்று மதியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று "மல்லிகாவுக்கு கொஞ்சம் மன நிலை குறைபாடு உள்ளவள் என்றும் மாப்பிள்ளை அவளை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாகவே பார்த்துக்கொண்டார் என்றும் அவள் சாவுக்கும் மப்பிள்ளைக்கும் அவளது தற்கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனஎழுத்திக்கொடுத்தும் அவள் கவுன்சலிங் சென்றிருந்த ஆதாரங்களை சமர்ப்பித்தும் மோகனை வெளியே அழைத்து வந்தனர்....


மல்லிகாவின் மறைவு மோகனை பெருமளவு பாதித்து இருந்தது...மோகனால் தனது தொழில் உடல்நிலை ரகு என எவற்றின் மேலும் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை...ஜூலி தான் அவளுக்காக அவனது ஆஃபீஸ் வேலைகளை பாரத்துக்கொண்டாள்...

"மிஸ்டர் மோகன் எனக்கு தெரிஞ்ச ஒரு கேரள நம்பூதிரி இருக்காரு எல்லா நம்ம நேரம் தான் உங்களுக்கு என் பையனுக்கும் ஒரே ராசி தான் உங்க ராசிக்கு இப்ப ஏழரை சனி உக்கிரமா நடந்துட்டு இருக்கு...எல்லா விஷயத்திலும் அடி மேல அடி விழுந்துகிட்டு இருக்கும்...ஒரு பூஜை பண்ணா சரி ஆயுடும்...என் பையனுக்கு இப்படி தான் வந்துட்டு இருந்துச்சு எங்கம்மா தவறி போய்ட்டாங்க எனக்கு சொல்லுக்கிற மாறி வருமானம் இல்ல...அவன் வண்டில கீழ விழுந்துட்டான்...அவர கூப்பிட்டு வீட்டுல பூஜை போட்டதுல இருந்து எல்லா இப்ப நல்லா போய்ட்டு இருக்கு...நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.. "என்ற மோகனின் நண்பனின் அறிவுரைப்படி கேரளா நம்பூதிரியை அழைத்து தன் வீட்டில் யாகம் நடத்தினான் அவரது அறிவுறுத்தலின்படி மோகன் தற்கொலை செய்துகொண்ட மல்லிகாவின் ஆத்மா சாந்தியடைய அவளது அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக மோகனும் ரகுவும் வாரணாசிக்கு புறப்பட்டனர் ரயிலில்...தன் நினைவுக்கு தெரிந்து தன் தந்தையுடன் தன் அம்மா இல்லாது ரகு பயணம் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுதான்...

ரகுவும் மோகனும் மல்லிகாவின் ஆஸ்தியை கங்கை ஆற்றங்கரையில் வைத்து அதற்குரிய சடங்கினை செய்தனர்...புரோகிதர் சொல்ல மோகனும் செய்ததைப்போலவே அவரைப்பார்த்து ரகுவும் செய்தான்.பின் மல்லிகாவின் ஆஸ்தியை கங்கையில் கரைத்தனர்....ரகுவிற்கு கங்கை ஆற்றங்கரையில் நின்று திரும்பிப்பார்க்கும் பொழுது மிகவும் பிரம்மிப்பாக இருந்தது அங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்பொழுது தங்களைப்போல் இங்கு

எவ்வளவு பேர் இங்கு வந்திருக்கின்றனர் என்று..மோகன் பின் ரகுவை அழைத்துக்கொண்டு ராம்நகர் கோட்டைக்கு,ருச்சிகா களைக்கூடம்,காசி விஸ்வநாத கோவில் என அனைத்தையும் கண்டுகளித்தான்... சொல்லப்போனால் நீண்ட வருடங்களுக்கு கோப்புகள் கான்ட்ராக்ட்டுகள் வேலைப்பளு என எதுவும் இன்றி நிம்மதியாக கழித்த நாட்கள் அதுதான்...இந்த மகிழ்ச்சிக்கு ஓர் வழியில் ரகு காரணம் என்றால் மற்ற்றொரு வகையில் ஜூலியும் காரணம்....அவள் தான் நீங்கள் போய் ஒரு மாதமோ இரு மாதமோ கூட விடுப்பு எடுத்துக்கொண்டு சென்று உங்கள் மனதை ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்...அதுவரை இந்த பிசினஸ் மண்ணாங்கட்டி எல்லா நா பாத்துக்குறேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டாள்.மல்லிகா இருந்திருந்தால் இந்த தருணம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கும் பொழுதுதான் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

மோகனுக்கு பொதுவாக இந்த கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இப்பொழுது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அவனை இவ்வாறு மாற்றிவிட்டன. மோகனும் ரகுவும் இரண்டு நாட்கள் வாரணாசி பயணத்தை முடித்துக்கொண்டு ரயிலில் வீடு நோக்கி புறப்பட்டனர்...ரயில் பயணத்தில் மோகன் பல விஷயங்களை யோசித்துக்கொண்டு வந்தான்...கங்கை புனிதத்தன்மை உடையது அதில் நீராடினால் பாவம் நீங்கும் என்றும் அது ஹோலி ரிவர் என்றும் கூறி என்னைபோன்றவர்கள் வெகு தூரத்தில் இருந்து பயணம் மேற்கொண்டு இங்கு வருகின்றனர்....பல வெளிநாட்டவர் கூட இங்கு புகைப்படம் எடுப்பதையும் ஆசையுடன் ஆற்றில் நீராடுவதையும் பார்க்க முடிகிறது....ஆனால் சிறுது தூரம் தள்ளி வந்து பார்த்தால் மனித கழிவுகளும் மிருக கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் அல்லவா மிதந்து கொண்டிருக்கிறது...ஒருவேளை நமக்கு தூரத்தில் இருப்பதால் கங்கை புண்ணிய நதியாக திகழ்கிறதா அல்ல பக்கத்தில அவர்களுக்கு அதன் மதிப்பு புரியவில்லையா என்று மோகன் பல சிந்தனைகளை தன் மனதினுள் போட்டுக்கொண்டு வருகிறான்.இந்த பயணத்தில் தான் முதல் முதலாக ரகு ஜுலியின்
குரலைக்கேட்டான்...ஜன்னலின் வழியாக வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டு வந்த ரகுவிடம் தன் மொபைலை நீட்டி ஜுலி ஆன்டி லையனில் இருக்கிறார்கள் எனக்கொடுத்து பேச சொன்னான்...ஆனால் அவனுக்கு ஜுலி என்றால் யாரென்று தெரியவில்லை இருந்தாலும் மொபைலில் பேசலானான்.... அந்த வாரணாசி பயனம் மோகனின் மனத்தில் ஓர் அளவற்ற அமைதியை உருவாக்கியிருந்தது ஒரு அறுபது வயதில் ரகுவிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு வாழ்க்கையில் மீண்டும் இப்படி ஓர் பயனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று...இறுதியில் அவன் மீண்டும் சென்னைக்கு திரும்பும்பொழுது அவன் மீண்டும் தனது வாழ்க்கையை புத்துணர்ச்சியுடன் வாழ தயாராயிருந்தான்....மிச்சமிருக்கும் வாழ்க்கையை தனக்காகவும் தன் மகன் ரகுவிற்காகவும் வாழவேண்டும் என.