Aditi Chapter - 1 in Tamil Fiction Stories by Ganes Kumar books and stories PDF | அதிதி அத்தியாயம் - 1

Featured Books
  • उजाले की ओर –संस्मरण

    मनुष्य का स्वभाव है कि वह सोचता बहुत है। सोचना गलत नहीं है ल...

  • You Are My Choice - 40

    आकाश श्रेया के बेड के पास एक डेस्क पे बैठा। "यू शुड रेस्ट। ह...

  • True Love

    Hello everyone this is a short story so, please give me rati...

  • मुक्त - भाग 3

    --------मुक्त -----(3)        खुशक हवा का चलना शुरू था... आज...

  • Krick और Nakchadi - 1

    ये एक ऐसी प्रेम कहानी है जो साथ, समर्पण और त्याग की मसाल काय...

Categories
Share

அதிதி அத்தியாயம் - 1

டிசம்பர் 7 ,2031

சென்னை கடந்த ஐந்து வருடங்களில் பார்த்திடாத மழையை அந்த இரண்டு நாட்களில் பார்த்திருந்தது....தமிழகத்தின் மற்ற மாவட் டங்கள் அனைத்தும் சென்னையின் நிலையை பற்றி அறிய தங்கள் தொலைக்காட்சி முன் உட்கார ஆரம்பித்தனர்....

இதுவரை அவ்வளவு மழை வெள்ளத்தை நேரில் கண்டிடாது ஆச்சிரியத்துடன் கண்டு களிக்கும் இளைஞர்கள்....தேனீர் கடையில் வாயில் பில்டர் சிகரெட்டை கவ்வியவாறு காற்றில் புகையை ஊதி தள்ளிக்கொண்டு "இயற்கை மதிக்கா மனிதர்களுக்கு இயற்கையின் பதில் தான் இது "என அன்று தன் நேரத்தை கழிக்க பேசுபொருளாக அதை பயன்படுத்திக்கொள்ளும் தேனீர் கடை வாசகர்கள்...அங்கு வேலைசெய்துக்கொண்டிருக்கும் தங்களது மைந்தன்களுக்கு மகள்களுக்கு மைந்தன் வழி மகள் வழி உறவுகளுக்கும் ஒன்றும்
ஆகி விடக்கூடாது என பதறி அடித்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்கள்...இப்படி அந்த நகரம் தன்னை மட்டுமின்றி தன்னை சுற்றி உள்ளோரையும் அன்று தத்தளிக்க வைத்துக்கொண்டிருந்தது...

தரமணியில் தண்ணீர் கால் முட்டி வரை ஓட ஆரம்பித்தது...கீழே ஓடிக்கொன்டு இருக்கும் தண்ணீரில் பாம்பு பல்லி முதலிய ஊர்வனவுடன் உடைந்த கண்ணாடி ஊசியான ராடு முதலியனவும் கலந்து பலரது கால்களை பதம்பார்த்தது...மின்சாரக்கம்பி தண்ணீரில் அறுந்து விழுந்து ஏற்படும் உயிர்சேதத்தை தடுக்க...அன்று மாலை ஆறு மணி அளவில் பாதுகாப்பின் பொருட்டு மின்சாரமானது துண்டிக்கப்பட்டது...
சென்னையின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியது தரமணியும் உட்பட....

அன்று அந்த தரமணியில் போராடிக்கொண்டிருந்த இரு குடும்பங்கள் மட்டுமே நம் கதையை இனி அலங்கரிக்கபோகிறவர்கள்...பிரணவ்-ப்ரியா, ரகு- ஜனனி தம்பதியினர்...


தரமணி அவ்வையார் தெருவின் முகப்பில் திரும்பியவுடன் முதல் இரண்டு வீடுகளாக தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் வீடுகள் அவர்களுடையதுதான்...முதல் வீடாக இருப்பது பிரணவுடையது தான்...

பிரணவ் ஒரு பிரபல ஐ. டி கம்பெனியில் வேலை செய்துகொண்டிருப்பவன்...விருதுநகரில் பிறந்து தோரனைக்காக மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் படித்து வேலையில்லா பட்டதாரி என்று சமூகத்தின் பார்வையில் பட்டிட விரும்பாமல் அவனுக்கு சம்பந்தம் இல்லாத ஐ.டியில் வேலை செய்துகொண்டு சென்னைக்கு புலம்பெயர்ந்த பலருள் ஒருவன்...யாரேனும் அதனைப்பற்றி அவனை கிண்டல் செய்தால் அவனது பதிலோ

"என் ப்ரியா... என் ப்ரியாவ எனக்கு கொடுத்தது இந்த ஐ. டி வேலை தான் மாப்ள...அதுக்கு மேல எனக்கு என்ன வேணும்..."

ஆம்...ப்ரியா அவனுக்கு அறிமுகமானது தரமணியில் தான்...ப்ரியா தரமணி இ.எஸ்.ஐ மருத்தவமனையில் டாக்டராக பணி புரிகிறாள்...பிரணவ்வின் நண்பன் பிரபாவின் பிறந்தநாள் பார்ட்டியில்தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர்...காதல் வயப்பட்டுக்கொள்ள ஆரம்பித்தனர் அன்று முதல் இன்று இந்த பிளாட்டினுள் இந்த வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கும் வரை...

ப்ரணவ் எட்டி வீட்டின் ஜன்னல் வழியாக பார்க்கிறான்...

"ஏய்...ப்ரியா...இங்க வா....."ப்ரியாவை அழைக்கிறான்...

ப்ரியா கேண்டிலை எடுத்துக்கொண்டு வருகிறாள்.

"அங்க ஏதோ நெளியுது பாரு....தண்ணில...இட் சீம்ஸ் லைக் ஸ்னேக்"வீட்டு வாசலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கைகாண்பித்து

"எனக்கு சரியா தெரியல...
அதுக்கு என்ன பிரணவ் பண்ண முடியும்...அதுங்க இல்லாத இடத்துலையா நாம வாழுறோம்..."ப்ரியா


"ரிடிக்குலஸ் கவர்மெண்ட்....ஒரு டிஸாஸ்டர்க்கு எப்படி ப்ரீகாசனா இருக்கணும்னு கூட தெரியாது...இட்ஸ் நாட் தி பர்ஸ்ட் டைம் ப்ரியா...அந்த கேண்டில இப்படி கீழ வை..."ப்ரியா கேண்டிலை இருவருக்கும் நடுவில் வைக்கிறாள்.

"ப்ளேமிங் அதர்ஸ் இஸ் நாட் தி சொல்லுஷன் பார் தி பிராப்ளம்...உனக்கு எனக்கும் தெரியுமேடா இங்க நாம லேண்ட் வாங்குறப்ப...இங்க ஏற்கனவே ஃப்லட் வந்துருக்குன்னு ஏன் நாம அத கன்ஸிடர் பண்ணல...எல்லாரும் இந்த மாதிரியே வாங்கிட்டு போனா...தண்ணி எந்த வழியா வெளியேற...."

பிரணவ் பண்ட் பையில் இருக்கும் மொபைலை எடுத்து ஆன் செய்கிறான்.

"டேய்...மொபைல் சார்ஜ் வேஸ்ட் பண்ணாத..கரண்ட் எப்ப வரும்னு தெரியாத இந்த நேரத்துல யாரா நம்மள காண்டாக்ட்
பண்ணலாம்ல..."

"உனக்கு எனக்கு யாருடீ கால் பண்ண போறா...ப்ரியா என் ப்ரண்ட் வீடு இங்க கோடம்பாக்கத்துல இருக்கு அவன்ட கேட்டு பாக்கவா...இப்ப கூட தண்ணி அவ்வளவா இல்ல...பேசாம நாம அங்க போயிடலாமா..."

"டேய்...ப்ளீஸ்..அதெல்லா வேண்டாம்...ஐ. ஆல்ரெடி ஃபேஸ்ட் திஸ் சிச்சுவெஸன்...இங்க இருக்குற வீடு,செர்ட்டிவிக்கெட்ஸ்,இதெல்லா விட்டுட்டு போறது அதுவும் அடுத்த ஏரியால வெள்ளம் எந்த நிலைமைல இருக்குனு தெரியாம...வெளியே போறது எனக்கு சரியா படல..."

ப்ரணவ் யோசிக்கிறான்....

"சொன்னா கேளு....எத்தனையோ பேரு நம்மள விட மோசாமான நிலைமைல இருக்காங்க அவங்கள விட நம்ம உசுரு ஒன்னும் ஸ்பெஷல் இல்ல....என்ன நடக்கனும்னு இருக்கோ அதுதான் நடக்கும்...நா சொல்றத கேளு அதுதான் சரி..."

"நா சொல்லி நீ கேட்கவா போற...சரி படுப்போம்...தூக்கம் வருது...அந்த கேண்டில் வேற எதுக்கு வீணா எரிஞ்சுட்டு இருக்கு...அத அமத்து....சும்மா சொல்ல கூடாது கேண்டில் லைட்ல யூ லுக் சோ அடோரபில்...."

"அப்படியா...."ப்ரியா நாணுகிறாள்.

"இப்படி வெட்கப்படுறப்பக்கூடவும் தான்..."

"போடா..."

"கேண்டில் லைட்ல பாக்க வேற மாதிரி இருக்க...அப்படியே உன்ன..."
பிரணவ் ப்ரியாவின் கால்களைப்பிடித்து தன் அருகில் இழுக்கிறான்.

ப்ரியா சிணுங்கிக்கொண்டு தள்ளி நகர்கிறாள்...பிரணவ் அவளை பிடிக்கிறான் ப்ரியா நகள அவளது கைப்பட்டு கேண்டில் அணைந்து சரிந்து பெட்டின் அடியில் உருண்டு விடுகிறது..

"ச்....இனி இத வேற தேடனும்....ஒண்ணுக்கு ரெண்டு வேல..."ப்ரியா.

"அதெல்லா நாளைக்கு காலைல பாத்துக்கலாம்..
இப்ப அத விட முக்கியமான வேலை ரொம்ப இருக்கு...."பிரணவ் ப்ரியாவை கட்டி தழுவியவாறு பெட்டில் சாய்கிறான்....

தரமணியின் அந்த இரவு அங்கு வாழும் மக்களுக்கு வெகுநீளமானதாக இருந்தது....அடுத்த நாள் காலை என்ன நிகழுமோ என்ற பயத்தில் இந்த இரவினை தூங்கி கடக்கும் சாரார் ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் தண்ணீரிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கோள்ள அவற்றுடன் மல்லுக்கட்டி
கொண்டிருப்போர் இந்த வகையில் ரகுவும் ஜனனியும் இரண்டாம் வகையே...

ரகு கையில் வாளியைப்பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல கால் ஊன்றி தன் வீட்டினுள் வரும் தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருக்கிறான்....

"ஏய்...நீ போ...நீ எங்க வர...நீ உள்ள போ...போய் அந்த டார்ச்லைட்ட எடுத்துட்டு வா..."தன் கணவனிற்கு உதவ தன் பங்கிற்கு வாளியை தூக்கி கொண்டு வரும் ஜனனியைப்பார்த்து கடிக்கிறான்...

ரகு-ஜனனி கடந்த ஆறு மாதத்திற்கு முன் மகனிடம் இருந்து பிரிந்து இங்கு குடிவந்த தம்பதியினர்...ரகுவிற்கும் ஜனனியிற்கும் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும்...இங்கு வந்தது முதல் அவர்களது வாழ்வே மாறி விட்டது...எதிர்வீட்டு சேசு மாமாவின் குழந்தைக்கு தன் சேரில் உக்கார்ந்தவாறு பந்து வீசுவது...அவளுக்கு முறுக்கு சுட்டுத்தருவது என அவளை பாசமுடன் பாரத்துக்கொள்வார்கள்...சேசுவும் இவர்களுக்கு காஸ் கனெக்ஷன்,வீட்டு சாமான் வாங்கிவருவது என தன்னால் முயன்ற உதவியை பண்ணுவார்...இன்று அவர் இருந்திருந்தால் இப்படி இவர்கள் தண்ணீர் இரைக்கும் நிலைமைக்கு வர வேண்டிய கட்டாயம் இருந்திருக்காது...ஆனால் அவரோ கனமழை என அறிவித்த உடனே...தன் மகனை அழைத்து கொண்டு விழுப்புரம் சென்றுவிட்டாரே..

"மாமா... பாத்து..."ஜனனி பதட்டத்துடன்.

"நீ எதுக்கு வெளிய வர...உள்ள போ..."ரகு கத்துகிறான்.

"வொவ்... வொவ்..."வீட்டின் முற்றத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ஊசலின் கீழே படுத்தவாறு மணி தன் பங்கிற்கு கத்துகிறது...

"ஏய்...மணி....உஷ்..."ஜனனி மணியை அதட்டுகிறாள்...அப்பொழுது அவளது முகத்தில் மழை நீர் தெறிக்கிறது.

மழைநீர் தெறிக்கும் திசையில் தனது டாரச்லைட்டை திருப்புகிறாள்....பெட்ரூமின்
உள்ள மேல்ஜன்னல் வழியாக கிழக்கு திசையை நோக்கி அடிக்கும் காற்றால் மழைநீர் வீட்டினுள்
அடித்து பெட்ரூமில் உள்ள துணிகளை ஈரமாக்கி கொண்டிருப்பதை பார்க்கிறாள் வீட்டின் முற்றத்தில் கால் துடைக்க வைத்திருக்கும் கோணிப்பையை எடுத்துக்கொண்டு பெட்டின் மேல் ஒற்றைக்காலை ஊன்றி ஏறுகிறாள்...


ரகு தன் மொத்த பலத்தினை பயன்படுத்தி தண்ணீரை வாரி வெளியில் ஊற்றுகிறான்...அவனது கை வலி எடுக்க ஆரம்பிக்கிறது..மூச்சு இளைக்க ஆரம்பித்து தனக்கு அறுபது வயது என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது...வாளியை கீழே வைக்கிறான்...உட்காருகிறான் சுவற்றில்... எனினும் அவனை ஏதோ தடுக்கிறது மீண்டும் வாளியை எடுத்து தண்ணீரை வாரி இறைக்கிறான்.

ஜனனி கோணிப்பையை போடும் முன் ஜன்னல் வழியாக டார்ச் அடித்து பார்க்கிறாள்...எங்கும் தண்ணீர் சாலையின் மேடு பள்ளம் எது என்று தெரியாவண்ணம் நிரம்பியிருக்கும் தண்ணீரையும் விடாது பெய்துக்கொண்டிருக்கும் அடைமழையையும்...நிலைமை கையை மீறி போவதை உணர்கிறாள்...தங்களால் இனியும் இந்த இடத்தில் இருக்க முடியாது நாளை முதல் வேலையாக அன்பிற்கு கால் செய்து அவனை வரச்செய்து இங்கிருந்து தங்களை அழைத்துப்போக சொல்ல வேண்டும்...அன்பு அழைத்தால் வருவானா..ஏன் வரமாட்டான் பெற்ற தாய் தந்தை இத்தகைய சூழலில் அழைத்தால் வர இயலாது என அவனால் சொல்ல முடியுமா....ஒரு வேளை ரகு அவரது பிடிவாதத்தால் வர இயலாது என கூறிவிட்டால்...அன்பு இப்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறானோ அவனும் தங்களை போன்ற நிலையில் இருந்தால்..ஜனனியின் இதயம் பதைபதைக்கிறது.

அன்புவை பற்றி நினைத்தவாறே கீழிறங்குகிறாள்.ஒரு காலை பெட்டில் வைத்தவாறு மற்றோரு காலை தரையில் வைக்கிறாள் தரையில் காலை ஊன்றி மற்றோரு காலை தரையில் வைக்க முயல்கிறாள்.. கால் தரையில் உள்ள தண்ணீரில் வழுக்கி ஜனனி நிலைதடுமாறுகிறாள்...ஜனனி எதையேனும் உதவிக்கு பிடிக்க முயல்கிறாள் ஆனால் அவளது கைக்கு எட்டவில்லை...நிலைதடுமாறி பீரோவின் முன்புறத்தில் தன் பின் தலை மோத விழுகிறாள்...அவளது தலையில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது...அவள் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டிருப்பதை உணர்கிறாள்...எப்படியேனும் நினைவு
ு தப்பும் முன் ஒரு குரலிட்டு கணவரை அழைத்து விட வேண்டும் என பார்க்கிறாள் ஆனால் அவளால் அது இயலவில்லை...

ரகு வாசலில் நின்றுகொண்டிருக்கிறார் அப்பொழுது வீட்டுனுள் ஏதோ கீழே விழுகும் சத்தம் அவரது செவிகளுக்கு கேட்கிறது...

"ஜனனி....அது என்னதுன்னு பாரு..."

பதில் சத்தம் ஏதும் வராததால்...

"ஜனனி...ஜனனி..."ரகு வீட்டினுள் எட்டிபார்கிறார்...பெட்ரூமில் இருந்து டார்ச்லைட்
ஒலி வெளியே வந்து கொண்டிருப்பதை பார்க்கிறார்...அவருக்கு முன் மணி பெட்ரூமை நோக்கி ஓடுகிறது..

மணி சத்தம் போட ஆரம்பிக்கிறது...ரகு பெட்ரூமின் உள் எட்டி பார்க்கிறார்...டார்ச்லைட் வாசலை நோக்கி அடித்துக்கொண்டு இருக்கிறது...பெட்டின் கீழ் பார்க்கிறார்...ஜனனி சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள்...அதிர்ச்சியில் ஒரு நிமிடம் ரகுவின் இதயம் துடிக்க மறந்து விடுகிறது.

"ஏய்...ஜனனி....ஏய்...கண்ண திறடி...அய்யோ.."ரகு குனிந்து அழுகிறான்...அவளது தலையில் இருந்து ரத்தம் வருவதை பார்க்கிறார்...ரகுவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை...கீழே சிந்தியிருக்கும் ரத்தத்தை தடவி பார்த்து தேம்பி தேம்பி அழுகிறான்...கத்துகிறான்.

"சேசு,சிவா...யாரா வாங்களேன்....நா என்னடி பண்னுவேன் முண்ட நீ இல்லாம..அய்யோ..."ரகு திடீரென எழுந்து ஓடுகிறான் வீட்டின் வெளியில் பெட்ரூம் வாசலில் கீழ் கிடக்கும் டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு...மணி அவனை பின்தொடர்ந்து குலைத்தவாறு வீட்டின் முற்றம் வரை செல்கிறது...


"ஹெல்ப்....ஹெல்ப்...யாராவது வாங்களேன்... சேசு...சிவா..."ரகு தனது முழு சக்தியை பயன்படுத்தி கத்தியவாறு தண்ணீரில்
இறங்குகிறான். டார்ச்லைட்டின் உதவியுடன் எதிர்வீட்டை நோக்கி ஓடுகிறான்...அவரது காலில் ஏதோ இடிக்கிறது இருந்தாலும் அவர் அதையெல்லாம் கண்டுகொண்டபாடில்லை..சேசுவின் வீட்டைநோக்கி நகர்கிறான்.

தெருவின் முனை வரை வந்த பின் தான் அவர் நினைவில் தட்டுகிறது சேசு ஊரில் இல்லை என்பது அவருக்கு அந்த நிலைமையில் என்ன செய்வது என விளங்கவில்லை நடுத்தெருவில் முட்டியளவு தண்ணீரில் வெறித்துக்கொண்டிருக்கிறார்...பிரணவ்வின் வீட்டிலிருந்து வரும் கேண்டில் வெளிச்சம் ஜன்னல் வழியாக தெரிகிறது...அவர்களது வீட்டை நோக்கி நகர்கிறார்...அவரது கால்களில் நடக்க நடக்க பளு கூடிக்கொண்டிருப்பது போல் அவருக்கு தெரிகிறது...

வீட்டின் வாசற்படி அருகே பள்ளம் தெரியாமல் கால் வைத்து இடறி விழுகிறார்...மூக்கு கண்ணாடி தண்ணீரில் செல்கிறது....ரகு எப்படியோ தட்டி தடுமாறி எழுகிறார்.காலை இழுத்துக்கொண்டு அவர்கள் வீட்டின் கதவருகே சென்று கதவை தட்டுகிறார்..

"தம்பி....தம்பி....ப்ளீஸ் கதவ திறங்க...."ரகு

பிரணவ் ப்ரியாவை கட்டி தழுவியவாறு பெட்டில் சாய்கிறான்.....அவளது காதுமடல் கழுத்து என அவள் மேல் பரவலாகிறான்...ப்ரியாவும் தன்னை மறந்து மெய் மறக்கிறாள்..அவனுடன் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்....திடீரென கதவு பலமாக தட்டப்படும் சத்தம் கேட்கிறது...இருவரும் திகைப்புற்று பார்க்கின்றனர்...ப்ரியா பிரணவ்வை தள்ளுகிறாள்.

"பிரணவ் என்னனு பாரேன்..."ப்ரியா

"நீ இரு...."

பிரணவ் முன் செல்ல ப்ரியா தன் ட்ரஸ்ஸை சரி செய்து கொண்டு மொபைலில் லைட்டை ஆன் செய்தவாறு அவன் பின் செல்கிறாள்.

பிரணவ் கதவை திறக்கிறான்.

"தம்பி....தம்பி...என் பொண்....பொண்டாட்டி கீழ விழுந்து அடிப்பட்டு ரத்தம் வருத்துப்பா...என்ன பண்ணனு எனக்கு தெரில...ப்ளீஸ்...எதாவது.."

"தாத்தா தெளிவா சொல்லுங்க..."பிரணவ்

"என் வைஃப் தண்ணில கால் வச்சு வழுக்கி கீழ விழுந்துட்டாப்பா...தலையில இருந்து ரத்தம் வருது பேச்சு மூச்சுமில்லாம கிடக்கா இந்த மழைல என்ன பண்ணனு எனக்கு தெரியல...கொஞ்சம் வந்து பாருப்பா...உனக்கு புண்ணியமா போகும்...தயவுசெஞ்சு.."

"தாத்தா வாங்க....பிரணவ் என்னோட பேக்ல பர்ஸ்ட் எய்ட் கிட் இருக்கும்...அத எடுத்துட்டு நீ வா..."ப்ரியா ப்ரண்விடம் சொல்லிவிட்டு ரகுவுடன் வேகமாக செல்கிறாள்...

ப்ரியா வேகமாக செல்கிறாள்...ரகு அவளுக்கு பின்னால் வர முடியாமல் நடந்து வந்துகொண்டிருக்கிறார்.

ப்ரியா பெட்ரூமில் சரிந்து கிடக்கும் ஜனனியைப்பார்க்கிறாள்..

தன் கையால் பின்மண்டையில் ரத்தமொழுகும் இடத்தை அடைத்தவாறு...ஜனனியின் நாடியை பிடிக்கிறாள்

"அவங்க இன்னும் உயிரோட தான் இருக்காங்க.."பின்னால் ஓடிவந்து கொண்டிருக்கும் ரகுவிடம்.

"தாத்தா கொஞ்சம் இங்க வாங்க...நா கை வச்சிருக்க இடத்த நல்லா புடிச்சிக்கோங்க
..."ப்ரியா சொல்லவிட்டு கை எடுக்க ரகு அந்த இடத்தில் கை வைக்கிறார்..

ப்ரியா தன் மொபைலை எடுத்து பாத்திமாவிற்கு கால் செய்கிறாள்...

அருண் ஹாஸ்பிடலில் ரிசப்ஷனில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பாத்திமா தன் கைப்பையில் மொபைல் ரிங்காகும் சப்தத்தைக்கேட்டு மொபைலை எடுத்து பார்க்கிறாள்...தன் தோழி ப்ரியாவின் பெயரை பார்த்தவுடன் வேகமாக மொபைலை எடுக்கிறாள்...

"ஹே... ப்ரியா...ஆர் யூ சேஃப்..."பாத்திமா

"யா..."ப்ரியா

"இவ்வளவு நேரம் உன்ன பத்தி தான் நெனச்சிட்டே இருந்தேன்...அங்க மழை எப்படி.."பாத்திமா

"பாத்திமா....திஸ் இஸ் அர்ஜெண்ட்...உடனே என் வீட்டு அட்ரெஸ்க்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்க...."ப்ரியா

பிரணவ் பர்ஸ்ட் எய்ட் கிட்டை எடுத்துக்கொண்டு வருகிறான்.

"ஆமா... என் நெய்பர்க்கு...இட்ஸ் வெரி அர்ஜண்ட்..ஆமா...க்ரிஷ் கிட்ட கேளு... ஓகே.."ப்ரியா போனை கட் செய்துவிட்டு கிட்டை பிரணவ்விடம் இருந்து வாங்கி ஜனனியின் தலையில் கட்டு போடுகிறாள் பிரணவ்வின் உதவியுடன்..

ப்ரியாவின் மொபைல் ரிங் ஆகிறது அவள் எடுக்கிறாள்

"ப்ரியா...க்ரிஷ் வான்ட்ஸ் டு டாக் டு யூ...ஹி இஸ் ஆன் கால்...ஹோல்ட் ஆன் பார் எ மினுட்..."பாத்திமா

"ப்ரியா...ஆம்புலன்ஸ் கேட்டியாமே..."க்ரிஷ்

"ஆமா.. க்ரிஷ்...மை.."ப்ரியா

"ப்ரியா வாட்டர் லெவல் இஸ் கீப் ரைசிங் ஆன் யுவர் சர்ரௌன்டிங் ஏரியாஸ்...இந்த சூழ்நிலைல ஆம்புலன்ஸ் அனுப்ப சாத்தியம் இல்ல..."க்ரிஷ்

"ஒரு உயிர் இங்க போராடிட்டு இருக்கு க்ரிஷ்..நாம உயிர காப்பாத்தாத டாக்டர் படிச்சோன்னு நினைக்குறேன்..."ப்ரியா

"அதான் நானும் சொல்றேன் பிரியா...பிராக்டிக்கலா அந்த உயிர காப்பாத்துற டைம்க்கு அங்க வரமுடியாது...அதுவும் இந்த டைமிங்ல...இந்த சர்கம்ஸ்டென்ஸ்ல...நம்ம ஆம்புலன்ஸ் மட்டுமில்ல எந்த ஆம்புலன்ஸ் வரவும் ரொம்ப டிலே ஆகும் பிரியா...யூ ஹவ் டு ஃபைண்ட் அன் அல்டர்நேட்டிவ் சாய்ஸ்..."க்ரிஷ்

ப்ரியா போனை கீழே வைக்கிறாள்...ஊஞ்சலில் உட்கார்ந்தவாறு என்ன செய்வதென யோசிக்கிறாள்...

"ப்ரியா என்னாச்சு..."பிரணவ்

"ஒண்ணுமில்ல...ஆம்புலன்ஸ் வர டிலே ஆகுமாம்.."ப்ரியா

"இப்ப என்ன பண்ண.."ப்ரணவ்

"தெரியல..."ப்ரியா

ப்ரியாவிற்கு சட்டென ஒரு யோசனை வருகிறது.

"பிரணவ் நம்ம கார் எடுத்துட்டு வா..."ப்ரியா

"ஏய்ய்..என்ன விளையாடுரையா...இந்த தண்ணில நம்ம கார எடுத்துட்டு அதுவும் என்னோட ட்ரைவிங்ல..."பிரணவ்

"முடியும்...நெனச்சா..ப்ளீஸ் பிரணவ்...ஷி இஸ் டையிங் நௌவ்.."ப்ரியா

"எனக்கு இது ரிஸ்கா படுது..நீ என்ன சொன்னாலும் நா சம்மதிக்க மாட்டேன்..."பிரணவ்

ரகு ரூமின் உள் இருந்து வெளியே வருகிறார்..

"என்னமா பண்ண..."ரகு

ப்ரியா என்ன சொல்வதென தினருகிறாள்...பிரணவ் அழுது அரன்று
போய் கிடக்கும் ரகுவின் முகத்தினை பார்க்கிறான்..

"தாத்தா அது..."ப்ரியா சொல்ல வருகிறாள்

"ப்ரியா...நீ போய் என் கார எடுத்துட்டு வா...கார் கீ ஷெலஃப்ல இருக்கும்...நா பாட்டிய தூக்கிட்டு வரேன்..."

ப்ரியா ஆச்சிரியத்துடன் ப்ரணவ்வை பார்க்கிறாள்.


"ப்ரியா...லெட்ஸ் பீ குவிக்..."பிரணவ் பெட்ரூம் நோக்கி ஓட...ப்ரியா காரை நோக்கி விரைகிறாள்.

ப்ரியா கார் கீயை எடுத்துக்கொண்டு கார் அருகில் வந்து கார் கதவை திறக்கிறாள்...தண்ணீர் காரினுள் செல்கிறது ப்ரியா காரினை எடுத்துக்கொண்டு ரகுவின் வீட்டின் முன் நிறுத்துகிறாள்...

பிரணவ் ஜனனியை கையில் தாங்கிக்கொண்டு வந்து பின் சீட்டில் படுக்க வைத்துவிட்டு ட்ரைவர் சீட்டில் வந்து ஏறுகிறான்...ப்ரியா முன் சீட்டிற்கு
மாறி கொள்கிறாள்...ரகு பின் சீட்டில் உட்காருகிறார்...கார் வைப்பரை போட்டவாறு புறப்பட ஆரம்பிக்கிறது...மணி கரையில் நின்றவாறு அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருக்கிறது.

கார் செல்ல ஆரம்பிக்கிறது...ப்ரியா பாத்திமாக்கு கால் செய்து தாங்கள் வந்து கொண்டிருப்பதை தெரிவிக்கிறாள்.

ரகு ஜனனியின் முகத்தை கவலையுடன் பார்க்கிறார்...மழைப்பெய்ய ஆரம்பிப்பதற்கு முன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்த ஜனனி அவளுக்கா இந்த நிலைமை என நினைக்கும்பொழுது அவருக்கு துக்கம் நெஞ்சை அடைக்கிறது...இந்த நேரத்தில் நாம் மனம் தளரிவிட கூடாது என தனக்கு தானே கூறியவாறு பெருகி வரும் அழுகையை அடக்கியவாறு கண்ணை மூடுகிறார்.

"என்னோட இருண்டு போன வாழ்க்கைல...எங்கோ எரியிற ஒரு துளி வெளிச்சம் ஜனனி..."


டிசம்பர் 16,1969

வீடு முழுவதும் இத்தாலி மார்பில்,பர்மா தேக்குகள்,போஹிமியன் கிளாஸ்களால் கட்டப்பட்டுள்ளது மோகன் ராஜாவின் வீடு..அன்று மோகன் ராஜா தன் மகனுக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்திருந்தார்..அன்றைய மதிப்பில் அவரது சொத்து மதிப்பு சுமார் முப்பது கோடி...விழா பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..சென்னை மாகானத்தின் அனைத்து கோடீஸ்வரர்களும் அங்கு கூடியிருந்தனர்...அன்றைய தொழில் துறை அமைச்சர் விருந்தினராக பங்கேற்றிருந்தார்...அத்தகைய சந்தோஷமான விழாவில் மோகன் ராஜாவின் மனைவி மல்லிகாவின் மனதில் மட்டும் ஓர் துயரம் ஓர் ஓரத்தில் அரித்துக்கொண்டிருந்தது...டாக்டர் கூறிய " இனி மல்லிகாவால் குழந்தை பெற்றெடுக்க முடியாது குழந்தையை வெளியெடுக்கும் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளாள் தவிர்க்க முடியாத அந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று அவளுக்கு கர்பப்பையை நீக்க வேண்டியதாயிற்று.."என்ற வார்த்தைகள் தான் அதற்கு காரணமாக இருந்தது..

ஒன்பது மணிக்கு சரியாக தொழிற்துறை அமைச்சர் வர அவர் தன் கரங்களால் குழ்ந்தையை தூக்கி அவன் செவியருகில் தன் வாய்வைத்து...

"ரகுவரன்...ரகுவரன்...ரகுவரன்..."

மூன்று முறை அழைக்க கூட்டம் கரகோஷம் எழுப்புகிறது...

அன்று நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பி மோகனும் மல்லிகாவும் ரகுவை உறங்க வைத்துவிட்டு தங்கள் ரூமிற்கு செல்ல மணி நள்ளிரவு இரண்டாகிவிட்டது.

"ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க..."மல்லிகா சிரித்தவாறு தன் பெட்டில் வந்து படுக்கும் கணவரிடம்

"இருக்காதா பின்ன ஒரே கல்லுல ரெண்டு
மாங்கா...மினிஸ்டர் கூடையும் கொஞ்சம் கிலோஸ் ஆகியாச்சு...என்னோட பையனுக்கும் பெயர் வக்கிர பங்க்ஷன் நடத்தியாச்சு...ஒருத்தன் சந்தோஷப்பட இத்தனை காரணங்கள் போதாதா.."மோகன்

"மெதுவா...முழிச்சிட போறான்..."மல்லிகா

"ஏன் நீ சந்தோஷமா இல்லையா..."மோகன்

"சந்தோஷமாத்தான் இருக்கேன்..."மல்லிகா

"ஆனா பாத்தா அப்படி தெரியலையே..அதையேதா யோசிச்சிட்டு இருக்கியா..."மோகன்

"இல்லையே..."மல்லிகா

"நடிக்காத.."மோகன்

மல்லிகா என்ன சொல்வெதென தெரியாமல் பார்க்கிறாள்.

"ஏய்...இதுல நீயோ நானோ வருத்தப்படுறதுக்கு எதுவும் இல்ல...உன்னால இனி அம்மாவாக முடியாது தேவையில்லை நீ எனக்கு
ஏற்கனவே ஒரு சிங்கக்குட்டிய பெத்து கொடுத்துட்ட அது போதும் எனக்கு...நீ இதலா பத்தி யோசிச்சு உன் மனச குழப்பிக்காத..."மோகன்.

"ம்ம்ம்...."மல்லிகா மோகனின் கரங்களில் சாய்ந்து கொள்கிறாள்.

"இந்த உலகத்துல இனி நாம் வாழப்போற
வாழ்க்கைய அவனுக்கானதா மாத்தனும்...அவனுக்கான உலகத்த அவனுக்கு அமைச்சுத்தரனும்... அதே நேரம் இந்த உலகப்பத்தின புரிதலையும் உலக அனுபவத்தையும் அவனுக்கு தரணும்..."மோகன்

"உங்க பையன் மேல இருக்க பாசத்துல என்ன மறந்துடாதிங்க..."மல்லிகா

"அப்டிலா மறப்பேனா...ஒரு இருபது வருஷம்...
அதுக்கப்பறம் கம்பெனிய என் பையன் கிட்ட ஒப்படைச்சுட்டு அடுத்து என் பொண்டாட்டி கூட அவ பேச்ச கேட்டுட்டு நாள் பூராவும் அவளோட வாழுற வாழ்க்கைய ஆரம்பிச்சிடலாம்னு இருக்கேன்.."மோகன்

"அதுலா இல்ல...என் பையன் அவன் மனசுக்கு என்ன புடிக்குதோ அந்த வேலைய தான் செய்வான்...கோடிஷ்வரன்ங்கிறதுனால அவ பையனும் அதே வேலையதான் செய்யனும்ங்கிறதுலாம் தப்பு.."மல்லிகா

"ஒரு வேலை என் மகனுக்கு இந்த வேலை புடிச்சிருந்தா..சரி விடு என்னமோ அவன் சந்தோஷமா இருக்கணும்...அதுதான் நமக்கு முக்கியம்..நீ நான் ரகு இது தான் இனி நம்ம உலகம்..."மோகன்

ப்ரணவ் பிரேக் போட ரகு வண்டியின் முன் சீட்டில் இடிக்கிறார்...ரகு கண்ணைத்திறந்து பார்க்கிறார்...


டிசம்பர் 14,2031

ப்ரணவ் பிரேக் போட ரகு வண்டியின் முன் சீட்டில் இடிக்கிறார் ரகு கண்ணைத்திறந்து பார்க்கிறார். தன் மடியில் சுயநினைவின்றி. கிடக்கும் ஜனனியைப்பார்க்கிறார் .

பரியா "ப்ரணவ் பாத்து ஓட்டு"

ப்ரணவ் 'ச்ச்...' ப்ரியாவை முறைக்கிறான்.

சீட்டின் முனியில் இருக்கும் ஜனனியை இழுத்து நன்றாக படுக்கவைத்தவாறு ரகு யோசித்து பார்க்கிறார் சிறிது நேரம் முன்பு அவர் இதுபோல் அன்பு வீட்டிற்கு செல்லலாமா என ஜனனி கேட்ட கேள்விக்கு தான் எரித்து விழுத்ததை... இப்பொழுது ஜனனி சுயநினைவு திரும்பப்பெற்று தன்னிடம்
வந்து எங்கு செல்லவேன்றுமென்று கூறினாலும் அவன் இசைந்து செல்வேனே ஒருவேளை அப்பொழுதே அவள் கூறிய பொழுது அவள் ஆசைக்கு இணங்கி நடந்திருந்தால் இப்பொழுது இந்த நிலையில் ஜனனி இருந்திருக்க மாட்டாளே நொந்து கொள்கிறானர். தன்னைத்தானே நொந்து கொள்கிறார்.


"அதுதான் வாழ்க்கை அடுத்த நிமிடத்திற்கு சொந்தமில்லாதது....இந்த நிமிடத்தில் ஒரு மனிதருக்கு சக மனிதரிடத்தில் பெருகும் வெறுப்பு ,கோபம் ,அன்பு என எவையும் அடுத்த நிமிடத்திற்கு சொந்தமில்லாதது".